Serial Stories காதல் இளவரசி

காதல் இளவரசி – 19

19TH CHAPTER

 

திடுமென்று தன் முன் நீட்டப்பட்ட துப்பாக்கியைக் கண்டதும் துணுக்குற்றாள் என்னது இது ? கொலை செய்யப் போறீங்களா ஏன் உங்களைப் பற்றி எல்லாமே எனக்குத் தெரிஞ்சிடுச்சின்னா ?!

என்னைப் பத்தி நல்லாவே யோசிக்கமாட்டியா ? உத்ரா……..

பின்னே விருந்துக்குன்னு கூட்டிட்டு வந்திட்டு இப்படி துப்பாக்கியை நீட்டுனா ? நான் என்ன நினைக்கிறது ? துப்பாக்கியை வைச்சு தோசையா சுட முடியும்

ம்… சரி இந்த துப்பாக்கி விஷயத்திற்கு அப்பறமா வரலாம் துப்பாக்கியை எடுத்து நீட்டுறேனே கொஞ்சம் கூட பயப்படாம துளி கூட பதட்டப்படாம இருக்கியே ? அப்படின்னா




பரத் எனக்கு உள்ளே ஒண்ணு வைச்சு வெளியே ஒண்ணு பேசத் தெரியாது. என் குடும்பம் எனக்கு எத்தனை முக்கியமோ அந்தளவுக்கு இப்போ நீங்களும் எனக்கு முக்கியமா தெரியறீங்க, கையிலே லவ் லட்டர் வச்சிட்டு எப்பத் தர்றதுன்னு யோசிக்கிறது, காதலிக்கிறேன் பேர்வழின்னு கட்டிலில் விழுந்து கனவு காணும் ரகம் நானில்லை, எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு என்னோட விருப்பத்தை வெளிப்படையா சொல்ல நான் வெட்கப்படவும் இல்லை, மனசிலே உங்க மேல விருப்பத்தை வைச்சிட்டு அதை சொல்லாம இரட்டை மனசோட வாழுறதைவிடவும் உள்ளதை வெளிப்படையா சொல்றது எவ்வளவோ நல்லது. குறையில்லாத மனிதன் யாருமில்லை, உங்களை நான் எல்லாக் குறைகளோடும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனா நீங்க எனக்கு உண்மையா இருக்கும் போது மட்டும். இங்கே வர்றவரைக்கும் என் மனசிலே குழப்பம் இருந்தது உண்மைதான் எதுவாக இருந்தாலும் உங்க மேல உள்ள அன்பை சொல்லிடறதுன்னுதான் வந்தேன். துப்பாக்கியில்லை இந்த உயரமான இடத்திலே இருந்து கீழே தள்ளிவிட்டாக்கூட என்னால உங்களை வெறுக்க முடியாது. இது காதலான்னு எனக்குத் தெரியலை, ஆனா கண்டிப்பா கண்மூடித்தனமான அன்பு இல்லை.

பரத்துன்னா இதுவரையில் எல்லாருக்கும் தெரிந்தது, பணக்காரன் எதையும் எல்லாத்தையும் விலைக்கு வாங்குற தெம்பு உள்ளவன், ஆனா அன்புக்கு ஏங்கிறவன்னு யாருக்கும் தெரியாது ?! தனிமை தனிமைன்னு நிறைய தனிமையில் வாடியாச்சு, தன் வரையில் எந்த பிரச்சனையும் முதல் சம்சாரம் வழியிலே வந்திடக் கூடாதுன்னு பெட்டிபெட்டியா பணம் வீடுன்னு தனியா அனுப்பிட்டாரு. நானே படிச்சேன் வளர்ந்தேன் என் வழியிலே போனேன் ஆனா மனசார யாரையும் கெடுக்கலை உத்ரா. நீரஜா ரொம்ப நல்லப் பொண்ணு, நல்ல தோழியும் கூட, எந்த எல்லையும் தாண்டி எதைப்பற்றியும் பேசலாம். அந்தளவுக்கு எங்க நட்பு அடர்த்தியானது. நான் உங்களை விரும்பறேன்னு சொன்ன என் மறுப்பைக் கூட ரொம்ப ஈஸியா எடுத்துக்கிட்டா, ஆனா மறுநாள் தற்கொலை பண்ணிக்கிட்டான்னு சொல்லும்போது, என்னால நம்ப முடியலை, அதுக்கு நான்தான் காரணமின்னு என்னால ஏற்றுக்கொள்ளவும் முடியலை, ஏன்னா அவ கண்லே அன்னிக்கு வலியை நான் பார்க்கலை. ஒருநாள் நிச்சயம் உண்மை வெளியே வரும்.

எனக்கு புரியுது பரத் நான் உங்களை நம்பறேன், அது இருக்கட்டும் இப்போ சொல்லுங்க எதுக்கு துப்பாக்கியை எடுத்துட்டு வந்தீங்க ?!

நீ படிச்சிருக்கியான்னு தெரியலை கடல் கொள்ளையர்கள் தங்கள் கூட்டத்திலே தப்பு செய்தவர்களுக்குத் தண்டனையா ஒரு துப்பாக்கியைக் கையில் கொடுத்துட்டு அதில் ஒரே தோட்டாவோட மட்டும் தரப்படும். அப்படித் தரப்படும் தோட்டாவினால் அவனால ஏதும் பண்ண முடியாது. பசி தாசம் பட்டினின்னு வேறு வழயின்றி அந்த ஒரே தோட்டாவால தற்கொலை செய்து கொள்வான். அப்படித்தான் இந்தத் துப்பாக்கியும் இதில் ஒரே தோட்டாதான் நீ என்னைத் தண்டிக்கணுமின்னாலும் இந்த தோட்டாவைப் பயன்படுத்தலாம், அப்படியில்லைன்னா உன் மறுப்பினால் மனம் வெறுத்து நான் இறக்கணும். ஆனா இப்போ இதற்கு வேலையில்லை இந்த இதயத்திலே அன்பு எனக்கு இருக்குதுன்னு புரிஞ்சிப் போச்சு




அன்பை ஏத்துக்கிறது பெரிய விஷயம் இல்லை பரத், அதை சரியாய் பயன்படுத்தனும் அன்பு கண்ணாடிப் பாத்திரம் மாதிரி நான் உங்களுக்கு அதைக் கொடுத்து இருக்கிறேன் உடைச்சிடக் கூடாது ஏன்னா ?

நீ என்ன சொல்றீயோ இனிமே அதுதான் எனக்கு வேதவாக்கு உன் மனசை பத்மினி ரொம்ப அழகா சொல்லிட்டா புரியலையா முதல்நாள் விருந்துக்கு கூட்டிட்டு வந்தப்பவே பத்மினி உன் மனசுலே எனக்குன்னு ஒரு இடமிருக்குன்னு சொன்னா அந்த சந்தோஷத்திலே நான் அவளுக்கு நன்றி சொல்லப்போய் நீ… வந்து தப்பா புரிஞ்சிகிட்டே…

பத்மினின்னு சொன்னதும் நினைவுக்கு வருது, எனக்கு நீங்க சப்போர்ட் பண்ணதுக்கு கோவிச்சிகிட்டா இந்த விஷயத்தை அவளுக்கு சொல்லனும். ஒளிவு மறைவில்லாத உன்னதமான அன்போட வேணும் போகலாம் பரத் இப்போ உடனே எனக்கு பத்மினியைப் பார்க்கணும் போலயிருக்கு,

உன்பேச்சுக்கு இனி மறுப்பேச்சேயில்லை உத்ரா போகலாம் பத்மினியின் நிலையினை அறியாமல் இருவரும் தங்கள் காதல் முகிழ்த்ததை பத்மினியிடம் சொல்லச் சந்தோஷமாய் கிளம்பினார்கள். தன் கைகளுக்குள் உத்ராவின் கைகளை இணைத்துக்கெண்டான் அவன். பரத்தை நம்ப வேண்டாம் என்ற ப்ரியனின் சொற்கள் காரணமில்லாமல் மனதிற்குள் ஒருமுறை எழுந்து அமர்ந்தது.

எத்தனை நேரம் கண்மூடி இருந்தாலோ தான் எங்கிருக்கிறோம் என்று உணரும் போதே கைகள் கட்டப்பட்டு இருந்ததை உணர்ந்தாள் அது என்ன இடம் தன்னைச் சுற்றிலும் பிளாஸ்டிக் கவரால் யார் கட்டியது எங்கோ ஒரு மூலையில் மெல்லிய வெளிச்சம் அதை நோக்கி நகர்ந்தாள் இது எந்த இடம். ஏதோ ஒரு வஸ்து பிளாஸ்டிக் கவரைக் கிழித்திருக்க வேண்டும் மேலும் ஒட்டிக்கொண்டு இருந்த கவரை பிரித்தெடுத்தாள். அது ஒரு சுரங்கப்பாதையைப் போன்று இருந்தது. சுவாசிக்க எந்தத் தடையும் இல்லாமல் இருக்க, ப்ரியனின் செயல்கள் ஒவ்வொன்றும் நினைவிற்கு வந்தது. கடவுளே இதெல்லாம் அவனின் ஏற்பாடாகத்தான் இருக்கும். ஆனால் இங்கிருந்து எப்படித் தப்பிப்பது. திகைப்பாய் இருக்கும்போதே அவள் இருந்த இடத்திற்கு நேர் மேலாக மிகப்பெரிய சுறா மீன் ஒன்று வாயைப் பிளந்தபடி வந்து கொண்டிருந்தது. பயத்தில் இதயம் எம்பிக் குதித்தது பத்மினிக்கு….




.

 

What’s your Reaction?
+1
8
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!