Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 7

  7

 

 கை கோர்க்கும் அருகாமையில் நடந்தும்
எங்கோ கூவும் குயிலில்தான் உனை
உணர முடிகிறது ,
முள் …குத்துகிறதென்றே சாதித்து
இறுதிசொல் வரை எனை ஒதுக்குகிறாய் ,
நாளை எழுதப்போகும் கடிதத்தில்
எனை பொதித்து வைக்க
அதோ அந்த மஞ்சள் மலரை
எடுத்துக்கொள்கிறேன் ,
உடனே சட்டையில் சொருகிக் கொள்ள
சிகப்பு மலர் தேடுகிறாய் ,
தராமல் ஏமாற்றி காதருகே
சொருகிக்கொள்கிறேன் ,
தவறென்றே சொல்லிக்கொண்டிராமல்
சுண்டுவிரல் நகக்கீறலாய்
லேசாக எரிந்துகொண்டாவது
அருகிலேயே தங்கிவிடு ,
நட்சத்திரங்களை தடவியபடி
நிலவருகே கிடந்துவிட்டு போகிறேன் .




வ்வளவு பரபரப்பாக , பளிச்சென்று …ஆரவாரமாக ஒரு பெண் இருக்க முடியுமா …? சந்திரனால் நம்ப முடியவில்லை .அவன் அறிந்த அவனது அம்மா , தங்கை ….மற்றஉறவினப் பெண்களெல்லோரும் அமைதியானவர்கள் . அதிர்ந்து பேசாதவர்கள் .மென்மையானவர்கள் .

இவளும் மென்மையானவள்தான் .இதோ இந்த வெளேரென்ற கைகளில் மென்மையில்லையென்று சொல்ல முடியுமா …? பூச்சென்டை நினைவுறுத்துகிறதே அந்தகைகள் .வழுவழுவென்று மாசு மருவற்ற …அந்த கைகளில் பதிந்த தனது பார்வையை அவன் மீட்க முடியாமலிருக்க,

” என்ன அண்ணா நான் சொல்வது சரிதானே …? ” என அவனிடம் கேட்டாள் சாம்பவி .

என்ன சரி …? எதைக்கேட்கிறாள் ….அவன் எங்கே இதையெல்லாம் பார்த்தான் ……? கஷ்டப்பட்டு அந்த கைகளிலிருந்து பார்வையை திருப்பிக் கொண்டு விழித்தான்சந்திரன் .

” என்னடி உன் அண்ணன் இதுதான் பூலோகமா ….விழி விழிக்கிறார் …? ” விசமமாக கேட்ட சஹானா , நான் உன்னைக் கண்டு கொண்டேனென சந்திரனுக்கு விழியால்செய்தி சொன்னாள் .

” ஹிஹி …என்னம்மா சொன்னாய் …இல்லை கேட்டாய் …? ” அசட்டு சிரிப்புடன் கேட்ட அண்ணனை உற்றுப் பார்த்தாள் சாம்பவி .

” எந்த உலகத்திலிருக்கிறீர்கள் ….? “

” இதோ ..இங்கேதானே உங்கள் பக்கத்தில்தானே இருந்தேன் .வேறு எங்கேயும் போகவில்லையே …” படபடப்புடன் எதையோ மறைப்பது போன்ற சந்திரனின்பேச்சு சாம்பவியை எரிச்சலாக்கியது .

நேர்மாறாக சஹானாவை குளிர்ச்சியாக்கியது . ” உற்சாகமான அவள்.

அவர் இங்கேயேதான் இதோ இந்த சோபாவிலேயேதான் நம் அருகிலேயேதான் இருந்தார் …” ராகம் போல் இழுத்து கூறினாள் .

” அதற்கு நீ ஏன் இந்த இழு இழுக்கிறாய் ….? “

” நான் இல்லடி ..உன் அண்ணன்தான் இழுத்துக் கொண்டேயிருக்கிறார் ….” சந்திரனை குறிப்பாய் பார்த்தபடி சொன்னாள் சஹானா .

இவள் இப்போது எதை கூறுகிறாள் …? சந்திரனுக்கு வியர்த்தது .




” என்ன …எதை இழுக்கிறேன் …? ” எப்போதும் இவள் முன்பு இப்படி குளறும்படியாகவே நிலைமை வந்து விடுகிறதே …இப்போது எதைக் குறித்து கூறுகிறாள் …?

” மனதிலிருப்பதைத்தான் ….உடனே சொல்லாமல் …இழுத்துக் கொண்டே …” தனது குறும்பை தொடர்ந்து கொண்டே சென்றாள் .

” என்னண்ணா …? ” சாம்பவி சந்திரனின் தோள்களை உலுக்க , அவன் அம்மா கூப்பிடுவது போல் தெரிகிறதே …என்றபடி அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றான் .

விட்டால் போதும் என அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்ட சந்திரனுக்கு , தள்ளி வந்த்தும் இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே இருந்நிருக்கலாமோ …என்ற எண்ணம்தோன்ற தொடங்கி விட்டது .அதை மாற்ற காரை எடுத்துக் கொண்டு , செங்கல் கம்பெனிக்கு கிளம்பினான் .

, ” இந்த  பூரி சாப்பிட்டு பாருங்கள் .எங்க அம்மா செய்த்து .துளி எண்ணெய் இருக்காது …,” சஹானாவின் தட்டில் பூரியை வைக்க முயன்றவனை தடுத்தாள் அவள் .

” பூரி ஆயில் .நான் சாப்பிட மாட.டேன்….” முகம் சுளித்தாள் அவள்.

” இது எனக்கு ரொம்ப பிடித்த டிபன் தெரியுமா …? “

” சோ …அதனால் எனக்கும் பிடிக்க வேண்டுமா …? ” மூஞ்சியில் அடிப்பது போல் வந்த்து இந்த கேள்வி .

அவள் அப்படித்தான் இருந்தாள் .எதற்காகவும் யாருக்காகவும் எனது கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேனென்று .இந்த இயல்பும் சந்திரனுக்கு புதிதுதான்.அவனது அம்மாவோ …தங்கையோ ..அவன்றிந்த பெண்கள் எல்லோரும் கணவனுக்காக , சகோதரனுக்காக என தங்களது தேவைகளை விட்டுக் கொடுப்பவர்களாகவேஇருந்தனர் .

ஏன் தங்களது சிறு சிறு ஆசைகளை மறைத்துக்கூட வைத்துக் கொள்வார்கள் .ஆனால் இவள் ….நிமிர்ந்த முகமும் , நேரான பார்வையும் , பட்டென்ற பேச்சுமாக இருக்கும்சஹானாவின் உருவத்தை மனதினுள் கொண்டு வந்தபடி காரை பெட்ரோல் பங்க்கினுள் திருப்பினான் .




” எவ்வளவு சார் போடனும் …? “

” பத்து லிட்டர் ….” சொன்னபடி திரும்பியவன் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்ததும் ஆச்சரியமானான் .

” ஹலோ …நீங்களா …? என்ன திடீர்னு வேலையை மாத்திட்டீங்க …? “

” அது ….அந்த வேலை எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்த்து .அதனால்தான் ….” டேங்க்கை மூடியபடி சொன்னாள் மாலினி .

உன்னைப் பார்த்தால் என் மனது அலை பாய்கிறது .அதனால்தான் நான் உன் கம்பெனிக்கு வேலைக்கு வரவில்லை மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் .

செங்கல் தூக்கும் வேலையை விட இந்த வேலை எதில் உயர்ந்துவிட்டது …? ” மென்மையான அவள் கரங்கள் பிடிக்க முடியாமல் பிடிததிருந்த அந்த பெடரோல் டியூபைபார்த்தபடி கேட்டான் .

மௌனமாக ஒரு புன்னகையோடு ” நீங்கள் நகருங்கள் சார் . அடுத்த கார் காத்திருக்கிறது .வேலை நேரத்தில் பேசினால் முதலாளி சத்தம் போடுவார் …” என்றார் .

” நீங்கள் படித்திருப்பதாக சுசீலாக்கா சொன்னார்களே …”காரை நகற்றியபடி கேட்டான் .

” ஆமாம் …பி.காம் ….”

” சரி இன்று வேலை முடிந்த்தும் கம்பெனிக்கு வந்து என்னை பாருங்கள் …”

ஒரே ஒரு நாள் வேலை செய்த என்னை இவன் மறந்திருப்பானென நினைத்தேனே …..ஞாபகம் வைத்திருக்கிறானே ….அடுத்த காருக்கு பெட்ரோல் போட்டபடிதிருப்தியானாள் மாலினி .காரை சுற்றி கொண்டு வந்து அவளருகே நிறுத்தியவன் …

” உங்கள் பெயர் என்ன ….? ” எனக் கேட்டுவிட்டு கொஞ்சம் அதிருப்தியை விதைத்து விட்டு போனான் .

” தற்கு அப்படி பார்க்கிறீர்கள் ….? ” குட்டை கூந்தலை தலையை அசைத்து பின்புறம் தள்ளியபடி அவனை பார்தநு கேட்டாள் சஹானா . பின்னால் நன்கு சாய்ந்து அமர்ந்துகால் மேல் கால் போட்டுக் கொண்டாள் .

” போன தடவை பார்த்ததற்கு இந்த தடவை இன்னமும் துறுதுறுப்பு அதிகமாகி உள்ளது உனக்கு …..” அவளை அளந்தபடி சொன்னான் சந்திரன் .

” வேறு என்னவோ சொல்லப் போகிறீர்களென்று நினைத்தேன் ….? ,” இப்போதாவது சொல்லிவிடு என்ற எதிர்பார்ப்பு சஹானாவின் விழிகளில் .

” என்ன எதிர்பார்த்தாய் ….? “

” ஏன் உங்களுக்கு தெரியாதா …? “




” எனக்கெப்படி தெரியும் …? ” அலட்சியமாக குலுக்கிய அவன் தோள்களை பற்றி அழுத்த வேண்டும் போல் வந்த்து சஹானாவிற்கு .

அலட்சியமாக தோள்களையா குலுக்குகிறாய் …..? இருடா …உன்னை பார்த்துக் கொள்கிறேன் .ஒரு நாள் நீயாகவே வந்து என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா ..எனறு என்னிடம் உன்னை கெஞ்ச வைக்கிறேன் …..சந்திரனின் முகத்தில. பார்வையை பதித்தபடி ,நினைத்தாள் சஹானா …..

அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி , அவளது எண்ண ஓட்டத்தை சந்திரன் அறிய முயன்றான் .

” சார் காபி ….” என்றபடி காபி டிரேயை இடையில் வைத்தாள் மாலினி .

” ஏய் உள்ளே வரும். போது கதவை தட்டிவிட்டு வர மாட்டாயா …? ” சந்திரன் மேலிருந்த எரிச்சலை மாலினி மீது காட்டினாள் சஹானா .

” சஹானா நானதானே அவளை காபி கொண்டு வர சொன்னேன் .கொண்டு வந்திருக்கிறாள் .காரணமில்லாமல் அவளை ஏன் கோபித்து கொள்கறாய் …? ” சந்திரன் கேட்டான் .

” முதலாளி அறைக்குள் வரும்போது கதவை தட்டி அனுமதி வாங்கிக் கொண்டு வர வேண்டுமென்று உங்கள் வேலையாட்களுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கவில்லையா …? “

” சாரி மேடம் .இனி ஜாக்கிரதையாக இருக்கிறேன் ” இடையிட்டு இருவரின் சண்டையையும் நிறுத்திவிட்டு மாலினி வெளியே போய்விட்டாள் .

” யாரிவள் …? போன தடவை நான் உங்கள் கம்பெனிக்கு வந்த போது இங்கே இல்லையே …”

” ம் ..நியூ அப்பாயின்மென்ட் .அக்கௌன்ட் வேலை பார்க்கிறாள் …”

” ஏன் அந்த சோமநாதன் என்ன ஆனார் …? இவளை வேலைக்கு சேர்த்த விபரம் என்னிடம் சொல்லவில்லையே ….”

அழகாக கத்தரித்து விட்டிருந்த புருவங்களை மேலும் வில்லாக்கியபடி கேட்டாள் சஹானா .

எனது கம்பெனி விசயங்களை உன்னிடம் நான் ஏன் கூறவேண்டும் …? “

தனது இருக்கையிலிருந்து எழுந்த சஹானா சந்திரனின் முன் வந்து டேபிளில் தனது இரு கைகளையும் ஊன்றிக்கொண்டு அவன் விழிகளுக்குள் பார்த்து ” சொல்ல மாட்டீர்களா …? ” என்றாள் கொஞ்சலாக .

” எதை ….? ” அவள் விழிகளை சந்திக்கும் தைரியமற்று கண்களை அலைய விட்டபடி கேட்டான் .

” உங்களை …உங்கள் மனதில் உள்ளதை ….”




காலி காபி கப்பை எடுக்கும் எண்ணத்துடன் அறைக்கு வந்த மாலினி உள்ளே நுழையும் முன்பே ஜன்னல் வழியாக அவர.கள் இருவரையும் பார்த்துவிட்டு , ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள் .பின் கண்களை துடைத்துக் கொண்டு வெறுமையான மனதுடன் அகன்றாள் .

” நீ சரியாக உட்கார்ந்து கொள்ள வேண்ணுமென்பதுதான் இப்போது என் மனதில் உள்ளது …” சந்திரனின் பதில் சிறிது சினம் தோன்ற மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்த சஹானா …

என்னை அலைக்கழிக்கிறாயா …? இருடா …உனக்கு இருக்கு ….என எண்ணியபடி பார்வையை அவனிடமிருந்து திருப்பிக்கொண்டாள்.

” ய் உனக்கென்னடி பைத்தியமா …? எதற்காக கிடைத்த வேலையை வேண்டாமென்கிறாய் …? ” சாம்பவி கேட்டாள் .

” எனக்கு சிங்கப்பூர் போக இஷ்டமில்லை சாம்பவி …”

” பொய் சொல்லாதே …இது போன்ற சவாலான வேலைகள் உனக்கு மிகவும் பிடிக்கும் .எனக்கு தெரியும் .இதனை எதற்காக வேண்டாமென்கிறாய் …? உன் அம்மா சொல்லிதான் எனக்கு இந்த விபரம் தெரியும் . என்னிடமும் நீ இது விபரம் சொல்லக்கூட இல்லை …”

” போகாத ஒன்றிற்கு உன்னடம் எதற்கடி விளக்கம் கொடுக்க வேண்டும் …? “

” அதுதான் ஏன் என்று கேட்கிறேன் ..? “

” உன்னை பார்க்காமல் என்னால் இருக்க முடியாதுடி .நீயும் என்னுடன் வருவதாக இருந்தால் சொல்லு .நான் இந்த வேலையை ஒதநுக்கொள்கிறேன் ….,”

” உனக்கு லூசுதான்டி நான் வெளியூர் வேலைகளுக்கே வர மாட்டேனென்று தெரியும் .நீ வெளிநாட்டு வேலைக்கு என்னை கூப்பிடுகிறாயே …”

அதன்பிறகு இரண்டு நாட்கள் சஹானாவை அந்த வேலையை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினாள் சாம்பவி . அவ்வளவு நல்ல வேலை அது .

” என்னை வைத்து இவ்வளவு நல்ல வேலையை மறுக்கிறாயேடி .எனக்கு கவலையாக இருக்கிறது “

” எனது ஒரு யோசனையை நீ ஒத்துக்கொண்டால் நான் அந்த வேலைக்காக சிங்கப்பூர் போகிறேன் .ஒத்துக் கொள்கிறாயா …? “

” உன்னுடன் கூடவே சிங்கப்பூர் வருவதை தவிர என்ன சொன்னாலும் ஒத்துக்கொள்கிறேன் ” தோழிக்கு வாக்கு கொடுத்தாள் சாம்பவி .




” சிங்கப்பூர் வேண்டாம் .என்னுடன் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிடு …,”

” திரும்பவும் உளறுகறாய் ..அப்படி நான் வரமாட்டேனென்று உனக்கு தெரியும் …”

” வரவேண்டிய கட்டாயம் வந்துவிட்டல் …”

” அப்படி என்னடி கட்டாயம் …..? “

” என் அண்ணனை நீ திருமணம் செய்து கொண்டால் …என் வீட்டில் தானே நீ தங்கியாக வேண்டும் ” தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்துவிட்டாள் சஹானா . 

,” திரிம்பவும் உளறல் …” எழுந்து செல்ல போன சாம்பவியின் கைகளை பிடித்து இழுத்து அமர்த்தியவள் ….

” உளறலில்லை சம்பா …நிஜமாக கேட்கிறேன் என் அண்ணன் ரிஷிதரனை நீ திருமணம் செய்து கொண்டு எங்கள் வீட்டில் எனக்கு அண்ணியாக இருக்க வேண்டும் ….”

சஹானா மிக நல்ல மூடில் இருக்கும் போது மட்டும் , சாம்பவியை ” சம்பா ” என்று அழைப்பாள் .

சாம்பவிக்கு தலை சுற்றுவது போலிருந்த்து .இவள் உணர்ந்நுதான் பேசுகிறாளா ….? இது எப்படி சரியாக வரும் ….?

தலையை பற்றி குனிந்தவள் ” ப்ளீஸ் சஹி …நான் யோசிக்க வேண்டும் ” என்றாள் .

என்னவோ இதிலேயே சாம்பவியின் சம்மதம் கிடைத்தாற் போல் மகிழ்ந்த சஹானா உடனே இந்த செய்தியை சாம்பவியின் அப்பா , அம்மா ….அவளுடைய அப்பா , அம்மா …அனைவரிடமும் பரப்பினாள் .




சந்திரன் அன்று இரவு வீடு திரும்பிய போது மாணிக்கவாசகமும் , மரகதவல்லியும் …சாம்பவியை , ரிஷிதரனுக்கு திருமணம் முடிக்க போவதை செய்தியாக சொன்னார்கள் .

பாப்பு இது சரியாக வருமாடா …? ” ஏனோ ஒரு உறுத்தல் உள்ளே ஓட கேட்டான் சந்திரன் .

அப்போ சரியாகவராதாண்ணா ….? ஏண்ணா …? ” எனக் கேட்ட தங்கையின் குரலில் ஒரு ஏக்கம் இருந்த்தோ என அவனுக்கு தோன்றவிட ….

உனக்கு பிடித்திருந்தால் ஓ.கேதான்டா பாப்பு ….” என்றுவிட்டான் .

ஒரே மாதத்தி
ஒரே மாதத்தில் ரிஷிதரன் –  சாம்பவி திருமணத்தை நடத்திக் காட்டினாள் சஹானா .

” உன் அண்ணன் சாம்பவியை திருமணம் செய்ய சம்மதிப்பாரா ….? ” சந்திரன் சஹானாவிடம் கேட்டான் .

” ஏன் அப்படி கேட்கிறீர்கள் ….? “

” அவர் அல்ட்ரா மாடர்னாக இருக்கிறாரே …சாம்பவி கொஞ்சம் அடக்கமான பெண் .இருவருக்குள்ளும் ஒத்து போகுமோ …என பயமாக இருக்கிறது …”

” என் அண்ணன் புத்திசாலி .தன் மனைவியை தனக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்வார் …என்னைப் போல …” பொருள் பொதித்து சொன்னாள் .

” உன்னைப் போல …என்றால் …உன் போல் மாடர்னாகவா …? “

உஷ் …உன்னோடு முடியலைடா …என மனதினுள் நினைத்தபடி …” அவருக்கேற்றாற் போல் மாடர்னாக …நான் சொன்னது …அண்ணனும் என்னைப் போன்ற குணமுடையவரென்று ….”

அதுதானே எனக்கு நெருடலாக இருக்கிறது என நினைத்தபடி ” கணவனுக்கு ஏற்றபடி மனைவி மாறிக்கொள்வதில் எந்த தவறும் இருப்பதில்லை ….” என்றான் கணவன் ..மனைவியில் சற்று அழுத்தம் கொடுத்து .

இவன் நான் நினைக்கும் அளவு தத்தி இல்லையோ …? என முதன்முறையாக நினைக்க தொடங்கினாள் சஹானா .




What’s your Reaction?
+1
26
+1
23
+1
2
+1
1
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!