Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -12

அத்தியாயம்-12

 

ஆனந்தை கல்யாணம் பண்ண உனக்கு முழு சம்மதமா?”

“இதில் என்ன சந்தேகம் எனக்காக இத்தனை வருடம் காத்துகிட்டு இருக்கிறவர். அவரை பிடிக்கலேன்னு எப்படி சொல்ல முடியும்?”

மனதை கல்லாக்கிக்கொண்டு பொய் சொன்னாள். நாம் படும் வேதனையை இவனிடம் சொல்லி இவனையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்றது மனம்.




அதற்குமேல் அவளிடம் அவன் எதுவும் பேசவில்லை.

“அவ்வளவுதானே அப்ப நான் கிளம்பட்டா..” என்றாள் மெல்லிய குரலில்.

“கடைசியாக ஒன்னே ஒன்னு கேட்கணும் நீ என்னை காதலிச்சது உண்மைதானே?”

“இ…இல்லை…சத்தியமாக இல்லை.” என்றாள் குரல் நடுக்கத்தோடு.

“பொய்…முற்றிலும் பொய்…”

“உங்ககிட்ட பொய் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை…”

“ஆனா நான் உண்மையை சொல்லன்னுமில்லையா? என்னுடைய மொத்த கனவுமே நான் ஒரு ‘ஐஏஎஸ்’ ஆகணும் என்பதுதான். அதற்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? கிடைத்த வேலையில் என் முழு கவனத்தையும் செலுத்த முடியாமல் பல உயிர்களை பலிகொடுத்தேன்.”

என்றவன் அவளை வலுக்கட்டாயமாக அமரவைத்து நடந்த விஷயத்தை சொல்லத்தொடங்கினான்.

“சங்கராயில் என்னுடைய ஏரியா. அங்க நான் துணைக்கலெக்டராக இருக்கும் போது திடீரென்று ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு எங்க வீட்டு கதவை யாரோ தட்டினாங்கள். யாரென்று திறந்து பார்த்தப்போ வெளியிலே வாட்ச்மேன் நின்னுட்டு இருந்தார்.  என்ன ஏதுன்னு விசாரிச்சேன். உங்களுக்கு யாரோ போன் பண்ணிகிட்டு இருக்காங்கன்னு  சொன்னார். உடனே நான் பங்களா ஆபீஸ் போனேன் திரும்பவும் கால் வந்தது.  அப்பதான் அந்த ஊர் விஏஓ தான் எனக்கு கால் பண்ணினார் என்று தெரிந்தது.

இந்தநேரத்துக்கு எதுக்கு கால்பண்றார் என்று குழப்பத்தோடு விவரம் கேட்டேன். ஊருக்குள்ளே  ஏதாவது பிரச்சனையா இருக்கும்னு என்னுடைய மனசுக்குப் பட்டது. ஆனா அவருடைய குரலில் பதட்டம் தென்பட்டது. அப்படின்னா ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருக்குன்னு புரிஞ்சுகிட்டேன் பதற்றப்படாமல் சொல்லுங்க என்றேன்.

“சார்  தண்ணியோட வேகம் அதிகமா இருக்கு அதனால நீங்க உடனே ஏதாவது பண்ணனும்…” என்று அந்த விஏஓ என்னிடம் அழுது கொண்டிருந்தார். என்ன பண்றதுன்னு புரியல? ஆனா விபரீதமாக எதுவும் இருக்காது என் மனசு சொன்னதால, ‘கவலைப்படாதீங்க ஏதும் பிரச்சினை வராது வந்தா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என்னுடைய அறைக்கு வந்து படுத்தேன். அதுக்கு அப்புறம் அந்த விஷயத்தை மறந்தே போனேன் அதைப்பற்றி ரொம்ப சீரியஸா எதையும் நான் யோசிக்கல காரணம் எனக்கு அதைவிட ஒரு பெரிய விஷயம் நடந்தேறியிருந்தது. அதோடு தாக்கத்தால் வேற எதுலயும் என்னுடைய சிந்தனையை செலுத்த முடியல .




அது என்னன்னா எங்க அக்காவோட  இழப்புதான். அந்த டென்ஷன்ல இருந்ததால என்னால இதுல ரொம்ப தீவிரமா இறங்க முடியல. திரும்பவும் கால் வந்துருச்சு மக்களெல்லாம் மரத்து மேல ஏறி நிற்கிறதா அதே ஆள் திரும்ப கால்பண்ணினார். குடிசை எல்லாம் தண்ணீரில் மிதக்குதுன்னு சொன்னார். குழந்தை குட்டிகளோட பெண்களெல்லாம் தண்ணில தவிச்சுகிட்டு இருப்பதா சொன்னார். அப்பதான் எனக்கு பகீரென்று இருந்தது ரொம்ப அலட்சியமாக அந்த விஷயத்தை கையாண்டு இருக்கிறோம். ஐயோ இந்த ஊர் மக்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது அப்டின்னு கன்றிபோட் அனுப்புறேன்னு சொன்னேன். ஆனா கன்றிபோட் எல்லாம் சரியா வராது ஸ்பீட் போட் அனுப்புங்கன்னு சொன்னார்.

விங்கமண்டருக்கு கால் பண்ணினேன் அவர் என்னுடைய விஷயத்தை கேட்டுவிட்டு சாரி எனக்கு அதற்கான பவர் இல்லை நான் கலைகுண்டா ஹெட்கோட்ரஸ் ஸ்டேஷன் கமாண்டர் நம்பர் தரேன்னு அவர்கிட்ட பேச சொன்னார். நான் அவர்கிட்ட பேசினேன். அவர்கிட்ட உதவி கேட்டேன். எலிகாப்டர் சர்வீஸ் அனுப்புவதா பிராமிஸ் பண்ணினார். உடனே சற்று நேரத்தில் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் சர்வீஸ் ரெடி பண்ணி அனுப்பி வைத்தார்கள். அதவச்சி நிறைய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். அப்படியும் ஒரு சில உயிர் சேதங்களை தவிர்க்க முடியவில்லை. அது என்னுடைய அலட்சியத்தால் வந்ததுதான் குழந்தை தாய் என்று நிறைய பேர் இறந்துட்டாங்கள். 10க்கும் மேற்பட்டோர் அந்த வெள்ளத்தில் மரணம் அடைந்துவிட்டனர். அந்த சம்பவம் என் மனசை ரொம்ப பாதித்தது. அந்த உயிர்சேதத்துக்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்னு எனக்குள்ள ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. நான் உடனே முயற்சி எடுத்திருந்தால் அந்த வெள்ள சேதத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி இருக்கலாம். அந்த உயிர்கள் மரணத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் நான் கடமை தவறிட்டேன்னு மனசுக்கு தோணுச்சு உடனே என்னுடைய வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்.

அரசாங்கம் என்னை திரும்பவும் கூப்பிட்டாங்க  எனக்கு இருக்கிற குற்ற உணர்வோடு திரும்பவும்  டூட்டியில் வந்து ஜாயின்ட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு அந்த ஊரை விட்டு வந்திட்டேன்.  காசு பணம் போயிருந்தால் திரும்ப சம்பாதித்து விடலாம் அத்தனை உயிர்களையும் பறிகொடுத்துவிட்ட பிறகு  என்னுடைய நேர்மை மேல எனக்கு நம்பிக்கை இல்லை. இதுதான் நடந்தது அந்த ஊர்ல இருக்க எனக்கு பிடிக்கல அக்காவோட மரணம் ரொம்ப பாதித்தது. வேலையை விட்டுவிட்டேன் கோபத்துல எங்கப்பா என் கிட்ட பேசவே இல்லை. அம்மா என் மேல் ரொம்ப கோபமா இருந்தாங்கள். அவங்களும் எங்கிட்ட பேசவே இல்லை. எல்லாத்துக்குமே ஒரு வடிகால் வேணுமில்லையா? அதனால மொத்தமாக அந்த ஊரவிட்டு டெல்லிக்கு போனேன். நெலமை இப்படி இருக்கும்போதுதான் டெல்லியில் உங்க அத்தை பையன் ஆனந்தை சந்தித்தேன்.




ஒரு ஆக்ஸிடெண்ட்ல தான் ரெண்டு பெரும் சந்தித்தோம். ரோட்டை கிராஸ் பண்ணின ஒருத்தர் மேல் காரை மோதி விட்டார் ஆனந்த். அவர் ஒரு டாக்டர்னு தெரியாம அவர் கூட சண்டை போட்டேன். அடிபட்ட அந்த உயிருக்கு நீங்கதான் கேரன்டி நீங்கதான் அந்த அந்த உயிரை மீட்டுக்கொடுக்கனுன்னு அவரை மிரட்டினேன். நானே ஒரு டாக்டர். டாக்டர் என்ற முறையில் இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் நானே பண்ணுறேன். என்றவர் அடிபட்ட அந்த ஆள தன்னுடைய காரில் தூக்கிப் போட்டுட்டு போனார்.  கூட நானும் போனேன். அதன் பிறகுதான் அவருடைய நல்ல மனசு புரிஞ்சுகிட்டேன். அடிப்பட்ட உயிரையும் காப்பாற்றி கொடுத்து அவருடைய  வாழ்வாதாரத்துக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தார் ஆனந்த். அன்றையிலிருந்து  ரெண்டு பேரும் பிரண்ட்டாயிட்டோம். அடிக்கடி பேச ஆரம்பிச்சோம். தங்கியிருக்கிற இடத்துக்கு தேடி போய் பேசினேன். அவரும் என்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டு என் மேல ரொம்ப அன்பா பழகினார். இப்படிப்பட்ட ஒரு பழக்கம்தான்  நீங்க இங்க  இருக்க வேணாம். என்னுடைய சொந்த ஊருக்கு வாங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்னு என்னை இங்க கூட்டிட்டு வந்தார் நான் இங்கே வந்து ஆறு மாதங்கள் ஆகிறது.

அவருக்கு உதவியாய் இருக்கிறேன்னு சொல்றத விட எனக்கு உதவியாய் அவர் இருக்குறார். என்னுடைய மனசு எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்று அவருடைய வீட்டிலேயே எனக்கு ஒரு தனி அறை கொடுத்திருக்கிறார். நான் என்னைப்பத்தின வாழ்க்கை வரலாறும் எழுதிட்டு இருக்கேன். என்னால திரும்பவும் வேலையில் சேர முடியும் ஆனால் மனசாட்சி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

அதனால கொஞ்ச நாள் இப்படியே இருந்துட்டு  ஒரு ‘ஐஏஎஸ்’ அகாடமி வைக்கலாம்னு இருக்கேன் அதான் என்னுடைய பியூச்சர் பிளான்.” என்று தன்னுடைய வேலை போன காரணத்தையும் தனது எதிர்காலத்தைப் பற்றியும் சுபாஷினியிடம் சொல்லி முடித்தான் முரளிதரன்.

 


What’s your Reaction?
+1
8
+1
24
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!