Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 9

9

 

 

 

” நித்தியை எங்கே …? “

” அவள் அறையில் …”

நித்தியின் நடவடிக்கை நார்மலாக  இல்லையென கவலையுடன் மணிபாரதி  நடுராத்திரி வந்து நின்றபோது முத்துராமன் யோசிக்கவே இல்லை .

” நீ போய் பார்த்துவிட்டு வாம்மா ” அனுப்பிவிட்டார் .

கண்கள் அரை குறையாய் சொருகியிருக்க படுக்கையில் உருண்டபடியிருந்தாள் நித்திகா .




” அம்மா எப்படி இருக்கிறார்கள் …காயம் பலமா …? “

” மூன்று தையல் .டாக்டர் தூக்கத்திற்கு ஊசி போட்டிருப்பதால் தூங்குகிறார்கள் …”

கட்டிலில் அமர்ந்து நித்திகாவின் கைகளை பற்றிக்கொண்டாள் கண்ணம்மா .

” நீ இங்கே ஆடினதைத்தான் பார்த்தேனே .அதே லட்சணத்தில்தானே அங்கேயும் ஆடியிருப்பாய்னு அம்மா சும்மா விளையாட்டாகத்தான் சொன்னார்கள் .டீப்பாய் மேல் இருந்த அந்த சின்ன வெங்கல பொம்மையை எடுத்து அம்மா மேல் வீசிவிட்டாள் …”

” எப்போதும் இப்படி கோப்படுவாளா ….? “

”  அவள் கோபம் உனக்கு தெரியுமே கண்ணம்மா .ஆனால் அம்மாவையே கை நீட்டியது இப்போதுதான் .அம்மா எப்போதுமே அவளை கொஞ்சம் குறைவாகத்தான் பேசுவார்கள் .கோபம் வந்தாலும் நித்திகா அதை அடக்கிக்கொண்டு போய்விடுவாள் …இன்றுதான் இப்படி ….”

” அவள் கொஞ்சம் மனதளவில் வீக்கான பெண்ணாயிற்றே .நீங்கள் உங்கள் அம்மாவிடம் விளக்கவில்லையா …? ” புரண்டு கொண்டிருந்த நித்திகாவின் கைகளை அழுத்தி பற்றினாள் .

” இது எப்போதும் நடப்பதுதான் கண்ணம்மா  .என் மனைவி இறந்த்திலிருந்தே அம்மாவிற்கு நித்திகாவை பார்த்துக் கொள்வதில் சலிப்பு .அதனை அடிக்கடி செயலில் , வார்த்தைகளில் காட்டுவார்கள் .வழக்கமாக நித்தி அழுவதோடு அந்த பிரச்சினை முடிந்துவிடும் .இன்று ….”

இதையெல்லாம் நீ அனுமதித்து கொண்டிருந்தாயா …? கண்ணம்மா அவனை முறைக்க …

” அம்மாவும் …மகளும் எதிரெதிராக நிற்கும் போது நானென்ன செய்வேன் கண்ணம்மா ….? ” மணிபாரதியின் குரலில் இயலாமை இருந்த்து .

” பிறகென்ன நடந்த்து …? “

” ரத்தத்தை பார்த்ததும் நித்தி அலறி மயங்கிவிட்டாள் .டாக்டர் வந்து அம்மாவை பார்த்து ,அம்மாவிற்கும் , தித்திக்கும் சேர்த்தே தூக்க ஊசி போட்டார் .ஏனென்றால் நித்தி தனை மறந்து இடையிடையே அலறி மயங்கிக் கொண்டிருந்தாள்….”




உடலை முறுக்கி கண்ணம்மாவின் கைகளை மீறி உருண்ட நித்திகா ” மிஸ் ….மிஸ் ….” என முனக …

” இப்படித்தான்  புலம்பினாள் .அதுதான் இந்த ராத்திரி நேரத்தில் வேறு வழியில்லாமல் உன்னை தேடி வர வேண்டியதாகிவிட்டது ….”

” நித்தி ….” மெல்ல அழைத்தாள் .

” மிஸ! …மிஸ் …என்னை விட்டு போயிடாதீங்க மிஸ் …” தூக்கத்தில் கத்திய நித்திகாவை பார்த்து திகைத்தவள் அவளை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டாள் .

” நித்தி இங்கே பார் .நான் கண்ணம்மா மிஸ் .எங்கேயும் போகமாட்டேன் .உன் பக்கத்திலேயேதான் இருப்பேன் ….” சத்தமாக அவள் மனதில் பதியும்படி சொன்னாள் .

அரைக்கண் விழித்து அவளை பார்த்த நித்திகா அவள் மடியில் படுத்தபடி அவள் இடுப்பை கட்டிக்கொண்டாள் .

” நான் தெரியாமல் பண்ணிட்டேன் மிஸ் .இனி இப்படி  பண்ணமாட்டேன் .என்னை விட்டு போயிடாதீங்க மிஸ் ….”
” இல்லை போக மாட்டேன் .தூங்கு …” அவள் தலையை வருடி சமாதினப்படுத்தியபடி தலை நிமிர்த்தி மணிபாரதியை நோக்கி தான் பார்த்துக்கொள்வதாக தலையசைத்தாள் .கண்ணில் ததும்பிய கண்ணீரை மறைத்தபடி அவன் வெளியேறினான் .

இரண்டு மணிநேரமானது நித்திகா சமாதானமாகி உறங்க …

” யாரையும் கை நீட்டினால் நான் உன்னுடன் பேசமாட்டேனென சொல்லியிருந்தேன் .ஏதோ வேகத்தில் உங்கள் அம்மாவை அடித்து விட்டு பாவம் குழந்தை பயந்து கொண்டே இருந்திருக்கிறாள் ….”

புரிகிறது என்பது போல் தலையாட்டியவன் …

” வா உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் ….” எழுந்தான் .

” உள்ளே வாங்க தம்பி …” வாசலோடு கிளம்ப போனவனை வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்தார் முத்துராமன் .




” தீடீரென இவ்வளவு கோபமென்றால் …நான் நாளை பள்ளியில் விசாரிக்கிறேன் . நித்தியின் மனதை சங்கடப்படுத்தும் விசயமெதுவும் அங்கே நடந்திருக்கலாம் ….”

” ப்ளீஸ் கண்ணம்மா …ஏதாவது செய் .எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது …”

” மனதை அலட்டாதீர்கள் தம்பி .எல்லாம் நல்லபடியாக நடக்கும் .இதை குடித்து விட்டு போய் நிம்மதியாக தூங்குங்கள் .நாளைய பொழுது நிச்சயம் உங்களுக்கு இனிமையாகத்தான் இருக்கும் …” இதமான சூட்டுடன் முத்துராமன் நீட்டிய பால் தம்ளரை ஆச்சரியமாக பார்த்தான் .

” உங்களுக்கு ஏன் சிரம்ம் …? ” கூச்சத்துடன் மறுத்தான் .

” என்ன சிரம்ம் …? என் மகளென்றால் செய்ய மாட்டேனா …? ” புன்னகைத்தார் .

இதுதான் என் அப்பா …பார்த்தாயா ….பெருமிதமாய் அவனை பார்த்தாள் கண்ணம்மா .

” எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போதே எங்கள் அம்மா இறந்துவிட்டார்கள் .அன்றிலிருந்தே எனக்கு அம்மாவாகவும்  மாறிவிட்டார் என் அப்பா ….” நெகிழ்வுடன் தந்தையின் கையை பற்றி கன்னத்தில் வைத்துக்கொண்டாள் .

தாயாக மாறி நிற்கும் உன் தந்தையை அறிமுகப் படுத்தத்தான் என்னை இங்கே வரச் சொன்னாயா …? பார்வையால் அவன் கேட்ட கேள்விக்கு ஆமோதிப்பு தலையசைப்பை தந்தாள் .

” ஆனால் இதையே எல்லா தகப்பனிடமும் எதிர்பார்க்க முடியாது கண்ணம்மா ….” முத்துராமன் கூறினார்்

” உண்மைதான் .ஆனால் நான் இனி முயற்சிக்கிறேன் அங்கிள் ..

” அருமையான பானம் . இந்த நேரத்தில் உண்மையிலேயே எனக்கு மிக தேவையாக இருந்த்து .இனி போய் படுத்தால் நிச்சயம் நிம்மதியாக தூங்கிவிடுவேன் . மிகுந்த நன்றி உங்களுக்கும் , கண்ணம்மாவிற்கும் ….” எழுந்து கை கூப்பிவிட்டு வெளியேறினான் .

மறுநாள் பள்ளியில் கண்ணம்மாவின் தீவிர விசாரணையில் , நான்கு மாணவிகள் ஆரம்பத்திலிருந்தே நித்திகாவிடம் வம்பிழுத்தபடியே இருந்த்து தெரிய வந்த்து .அவர்களால் ஏற்பட்ட மனழுத்தத்தையே நித்திகா கோபமாக செயல்களில் காட்டி வந்திருந்தாள் .

தலைமையாசிரியை சங்கரியின் ஒப்புதலுடன் அந்த நான்கு மாணவிகளையும் தனியே சந்தித்து பேசினாள் கண்ணம்மா .நித்திகா மக்கு , முரடு என்பதை தவிர அவளை வெறுப்பதற்கான வேறு காரணங்களை சொல்ல முடியாமல் தடுமாறினர் அவர்கள் .

அவர்களே அறியாமல் அவர்களின் அடிமனதில் நித்திகாவின் மேல் ஏற்பட்டிருந்த பொறாமையே …எல்லாவற்றிற்கும் காரணமென உணர்ந்தவள் …நிதானமாக பேசினாள் .




” பாருங்க பொண்ணுங்களா ..நீங்கள் அனைவருமே நன்றாக படிக்க கூடிய பொண்ணுங்க .ஆனால் அந்த படிப்பு உண்டாக்கிய அறிவு உங்களிடம் ஏட்டளவில் மட்டுமே இருப்பது எனக்கு கவலையளிக்கிறது .அடுத்த வருடம் பத்தாவது வகுப்பில் நமது பள்ளியின் சாதனைக்கு உங்களையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறோம் .நீங்களோ உங்கள் சக தோழியை காயப்படுத்துவதில் குறியாக இருக்கிறீர்கள் .நித்திகா படிப்பில் , விளையாட்டில் ,நடனத்தில் உங்களை விட தகுதி குறைந்தவளாக இருக்கலாம் .ஆனால் பொறுமையில் , நற்குணத்தில் உங்கள் எல்லோரையும் விட மிக உயர்ந்தவள் .உங்கள் அனைவருக்கும் நித்திகாவின் அப்பாவை தெரியுமென நினைக்கிறேன் .அவள் மட்டும் உங்களை பற்றி ஒரு வார்த்தை அவள் அப்பாவிடம் கூறியிருந்தால் நீங்கள் யாருமே இன்று இந்த பள்ளியிலேயே படித்து கொண்டிருக்க முடியாது “

சிறிது நிறுத்தி அந்த மாணவிகளின் முக பயத்தை கூர்மையாக கவனித்துவிட்டு தொடர்ந்தாள் .

” நான் இவர்களை பற்றி அப்பாவிடம் சொன்னால் அப்பா கோப்ப்படுவார் .என் தோழிகளின் படிப்பே கெட்டுவிடுமே மிஸ் .பாவம் அவர்கள் …என்கிறாள் அவள் …”

மீண்டும் சிறிது நிறுத்தினாள் .ஒரு மாணவி அழவே ஆரம்பித்து விட்டாள் .

” இப்படி ஒரு அருமையான தோழியைத்தான் நீங்கள் புண்படுத்தியிருக்கிறீர்கள் ….இதை பற்றி உங்கள் பெற்றோர்களை வரவழைத்து பேசினால் ….”

” இல்லை மிஸ் …வேண்டாம் மிஸ் ….நாங்கள் இனி இப்படி செய்யமாட்டோம் மிஸ் ….,” அழுகை குரலுடன் நால்வரும் கோரஸாக சொல்ல …கண்ணம்மா அடுத்த அறையிலிருந்த நித்திகாவை அழைத்தாள் .

சிறு மிரட்சி பார்வையுடன் வந்த நித்திகாவிடம் நான்கு பேரும் மாறி மாறி சாரி சொல்லினனர் .கை குலுக்கி நன்றி சொல்லி ” இனி நாம் திக் ப்ரெண்ட்ஸ் ” என சொல்லி ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர் .

” இந்த பிரச்சினை ரொம்ப பெரியதாக போகிறதென நினைத்துக் கொண்டிருந்தேன் கண்ணம்மா .மிக எளிதாக ஒரு மணிநேரத்தில் முடித்து வைத்துவிட்டீர்கள் .ரொம்ப நன்றிம்மா ….” சங்கரி கண்ணம்மாவை பாராட்டினாள் .

” என்ன மேடம் இப்போதெல்லாம் தினமும் கார் சவாரிதான் போல. காலையிலும் காரில் வந்து இறங்கியது போலிருந்த்து . ம் …புளியங்கொம்புதான் …விடாதீங்க. பிடிச்சிக்கோங்க ….” காரிடாரில் நடந்து கொண்டிருந்த கண்ணம்மாவை கடப்பது போல் ஒரு நிமிடம் நின்று நெருப்பு சொற்களை வாரியிறைத்து போனான் தனசேகர் .

முதலில் சுருசுருவென மனதில் எரிச்சல் வந்தாலும் , அன்று காலையும் காரில் வந்து இறங்கிய காரணம் நினைவு வந்த்தும் கண்ணம்மாவின் மனதில் ஒரு இதம் தோன்றியது .

அன்று காலை குளித்துவிட்டு வெளியே வந்தவளை காலிங்பெல் அழைக்க போய் திறந்தவள் ” குட்மார்னிங் …,” என ஒன்று போல் கூறியபடி வாசலில் நின்ற அப்பாவையும் , மகளையும் ஆச்சரியமாக பார்த்தாள் .




 

” மிஸ் …சாரி ….” என்றபடி உடனேயே அவள் இடையை கட்டியபடி மேலே சாய்ந்து கொண்ட நித்திகாவிடம் ” எதற்குடா சாரி …? ” எனக் கேட்டபடி நிமிர்ந்தவள் …

அப்போதுதான் தலைகுளித்து ஈரம் சொட்ட விரிந்த கூந்தலுடன் காட்டன் நைட்டியுடன் நின்ற கண்ணம்மாவின் எளிய தோற்றத்தை ரசனையுடன் பார்த்திருந்த மணிபாரதியின் பார்வையில் தடுமாறினாள் .

What’s your Reaction?
+1
3
+1
2
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!