Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 20 (Final )

20

 

 

 

” உனக்கு தெரிந்தவர்தானாமே .உட்கார்ந்து பேசிக்கொண்டிரு .காபி கொண்டு வருகிறேன் ….” மீனாட்சி உள்ளே போய்விட்டார் .

” போய் சொல்லுன்னியே …இப்போ இங்கே …சொல்லட்டுமா …? ” மீனாட்சி போன திசையில் கை காட்டி கேட்டான் .

” வேண்டாம் ….வேண்டாம் .எதுவானாலும் நாம் பிறகு பேசலாம் .இப்போது போய்விடு …”

” முடியாது .எனக்கு இப்போதே பேச வேண்டும் …” கால் மேல் கால் போட்டுக்கொண்டான் .

” உனக்கு என்னதான் வேணும் …? ”

” கேட்டதெல்லாம் தருவாயா …? ” அவன் கண்கள் மேனி மீது படிந்த விதத்தில் அருவெறுப்படைந்தவள் ….எழுந்து ஆத்திரத்துடன் ….

” வெளியே போடா நாயே …” பற்களை கடித்தாள் .




” சரி …சரி …அதெல்லாம் வேண்டாம் .நீ பத்தினயாகவே இருந்து விட்டு போ .எனக்கு பணம் மொத்தமாக ஒரு பத்துலடசம் கொடுத்துவிடு .நான் ஒரேடியாக போய்விடுகிறேன ….”

” பத்துலட்சமா ….அவ்வளவு பணம் என்னிடம் ஏது …? “

” ஏன் …கவிதை பேசி பேசி மயக்கி வைத்திருக்கிறாயே , உன் புருசனிடம் கேட்டு வாங்கி கொடு .உனக்கென்றால் லட்சங்களை சாதாரணமாக தூக்கி கொடுப்பான் …வந்த்தும்  கேள் …”

” இல்லை முடியாது . அவர் இங்கில்லாத்து உனக்கு எப்படி தெரியும் …? “

” எல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறேன் .இப்போது வீட்டில் நீங்கள் மூன்று பேர் பெண்களாகத்தான் இருக்கிறீர்கள் .வாட்ச்மேன் கூட கிடையாது .ஒழுங்காக பணம் வாங்கி தர ஒத்துக்கொண்டு அட்வான்சாக ஒரு லட்சம் இப்போதே கொண்டு வந்து கொடு .சத்தமில்லாமல் பேய்விடுவேன் .இல்லாவிட்டால் உன் மாமியாரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன் ….”

கண்ணம்மா அதிர்ந்து போய் நிற்க …

” எதை சொல்ல போகிறாய் …? ” மீனாட்சி கேட்டபடி வந்து நிற்க ….

இருவருமே அதிர்ந்தனர் .

” சொல்லுடா ….என்னவோ சொல்லனும் என்றாயே …”

” என்ன ” டா” வா ….” மீனாட்சியை முறைத்தான் .

” டேய் நாயே உனக்கெல்லாம் என்னடா மரியாதை .நீயெல்லாம் தெருவோட போக வேண்டியவன் .உன்னை நான் என் வீட்டிற்குள் விட்டதே தவறு இதில் மரியாதை வேறு வேண்டுமா …?! “




” ஏய் ..கிழவி … உன்னை ….” துடித்தபடி எழுந்தவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள் மீனாட்சி .

” என்னடா சொல்வாய் …? முறையாக கல்யாணம் பேசி , என் மருமகளுக்கு தாலி கட்டினாயே அதையா …? திருமணம் முடிந்த்தும் மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் நிறைய பேர் செத்து போனார்களே அதையா ..? அந்த தீ விபத்தில் உன் தந்தையும் இறந்த்தை காரணமாக வைத்து நீயும் , உன் அம்மாவுமாக இவளை ஒதுக்கி வைத்தீர்களே அதையா ..? இப்போது இவளை இங்கே பார்த்துவிட்டு இவளை மிரட்டி பணம் பிடுங்கிக் கொண்டிருக்கிறாயா ..அதையா …? சொல்லுடா நாயே …” மீண்டும் அறைந்தாள் .

ராமச்சந்திரன் அதிர்ச்சியில் அப்படியே சாய்ந்து விட , ” ஏன்டி செருப்பால் அடிப்பேன்னு சும்மாதான் சொல்வாயா …? செய்ய மாட்டாயா ….? ” கண்ணம்மாவை பார்த்து கேட்டார் .

கண்களை மறைத்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்தவள் வேகமாக வாசலுக்கு ஓடி அங்கிருந்த செருப்பை எடுத்து வந்து அவன் தலையில் இரண்டு அடி வைத்தாள் .

இப்போது சுதாரித்து கொண்டவன் வேகமாக எழுந்து இரு பெண்களையும் சோபாவில் தள்ளினான் .பேன்ட் பாக்கெட்டிலிருந்து சிறு கத்தியை எடுத்து நீட்டினான்

” என்னடி பொட்டச்சிங்களுக்கு அவ்வளவு திமிர் …? அந்த சின்ன குட்டியை எங்கே …!? அவளையும் கூப்பிடு .இருக்கிற பணம் , நகையையெல்லாம் என்னிடம் கொடுத்துவிட்டு மூன்று பேரும் சத்தமில்லாமல் இருக்கனும் . போலீஸ் , கீலீஸ்னு ஏதாவது போனீங்க உன் மருமகள் முதல் கல்யாண போட்டோவை ப்ரிண்ட் போட்டு ஊர் பூராவும் ஒட்டுவேன் …எங்கேடி அவள் …ஏய் நித்திகா ….” மாடியை பார்த்து கத்த …

” நான் சொல்லாமல் அவள் மாடி ரூமை விட்டு வரமாட்டாள் ராமச்சந்திரன் ….” நிதானமாக சொன்னபடி வந்து நின்றான் மணிபாரதி .

ராம்சந்திரனின் கை கத்தி நடுங்க தொடங்கியது .

” உனக்கெல்லாம் ராமச்சந்திரன்னு யாருடா பெயர் வைத்தது …? ” கேட்டபடி அருகே வந்தவன் அவனை புரட்டி எடுத்துவிட்டான் .




சோபாவில் சாய்ந்தபடி மீனாட்சி நிதானமாக பார்த்துக் கொண்டிருக்க கண்ணம்தாவிற்குத்தான் அவனை கொலையே செய்து விடுவானோ என்ற பயம் வந்துவிட்டது .

” அத்தை போதும் அத்தை …அவரை நிறுத்துங்கள் ….”

” அவனை கொன்னுட மாட்டான் .பயப்படாதே …” சாதாரணமாக சொன்னாள் .ஆனாலும் கண்ணம்மா பயந்து போய் இருவருக்குமிடையே விழுந்து அவனை தள்ளினாள் .

” பெண்கள் மட்டும் இருக்கும் நேரம் வீட்டில் நுழைந்து திருட பார்த்தான் என்று இவன் மேல் கேஸ் போட்டு ஐந்து வருடமாவது உள்ளே தள்ளுங்கள் …,” சொல்லி வைத்தது போல் வந்த போலீசிடம் அவனை தள்ளினான் .

அவர்கள் போன பின்பு மாடியிலிருந்து இறங்கி வந்த நித்திகா ” அம்மா உங்களுக்கு ஒன்றுமில்லையே …” என கண்ணம்மாவை அணைத்துக் கொண்டாள் .

” மன்னித்துவிடுங்கள் .நான் முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும் ….” தலைகுனிந்தாள் கண்ணம்மா .

” என. பையன் கண்மூடித்தனமாக விரும்புகிறானென்பதற்காக யாரென்று விசாரிக்காமலேயே தலையாட்டி விடுவேனா …? என்றைக்கு அவன் உன்னை கை காட்டினானோ அன்றே உங்கள் பூர்வீகம் வரை விசாரித்து விட்டுத்தான் உன் வீட்டிற்கே வந்தேன் ….”

” எப்படி அத்தை என்னை பற்றி தெரிந்தும் எங்கள் திருமணத்திற்கு சம்மதித்தீர்கள் …? நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களோ என்ற பயத்தில்தான் நான் என் முன் கதை எதையும் சொல்லவில்லை …”

,” என்ன …ராசியில்லாதவள் ….அபசகுனம் பிடித்தவளென்று சொல்வேனென்று நினைத்தாயோ …? “

அப்படி சொல்லக்கூடியவர்கள் தானே என்பது போல் பார்க்க தலையாட்டிக் கொண்டார் .

” அப்படித்தான் சொல்ல வேண்டுமென்ற முடிவோடுதான் அன்று உன்னை பார்க்க வந்தேன் .ஆனால் உன்னை பார்த்த பிறகு …ஜாதகம் கொடுங்களேன்னு உன் அப்பாவிடம் கேட்கத்தான் தோன்றியது …”

” ஆமாம் அம்மா எனக்கும் .முதல் நாளே கல்யாணம் செய்து கொள்வோமா என்றுதான் இவளிடம் கேட்க தோன்றியது …” மணிபாரதி இடை புக …மீனாட்சி தலையிலடித்தாள் .

” டேய் ஆம்பளைடா நீ …இப்படியா வெட்கமில்லாமல் வழிவாய் …? “

” என்ன கழுதைக்கு பொண்டாட்டிகிட்ட வெட்கப்படனும் …? ” முணுமுணுத்த கணவனை காதலாக பார்த்தாள் .

” நீங்கள் ஊருக்கு போகிறேன் என்றீர்களே .போகவில்லையா …? “




” இந்த ப்ராடை பிடிக்கத்தானே நான் ஊருக்கு போவதாக செய்தி பரப்பினேன் .வாட்ச்மேனுக்கும் லீவ் கொடுத்து அனுப்பினேன் .அவனை என் கையாலேயே அடிக்கனும்டா என்று அம்மா சொன்னார்கள் .அவனை நம் வீட்டிற்கு வர வைப்பதற்காகத்தான் இதையெல்லாம் செய்தேன் …தானாக வந்து மாட்டினான் “

மாமியாரை பாசமும் , மரியாதையுமாக பார்த்தாள் .

” சும்மா மொச்சை கொட்டை கண்ணை உருட்டி பார்க்காதே .இப்படி மிரட்டிட்டு இருந்திருக்கிறான் .எங்களிடம் சொல்ல மாட்டாயா …? ” அதட்டினார் .

” உங்களையெல்லாம் பிரிய வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் சொல்லவில்லை அத்தை …” தழுதழுத்தபடி மீனாட்சியின் மடியில் தலை வைத்துக்கொண்டாள் .

” உங்களை நாங்கள் விட்டுவிடுவோமா அம்மா …? ” நித்திகா பின்னிருந்து அவள் கழுத்தை கட்டிக்கொண்டாள் .

” மூன்று பொண்ணுங்களிடமும் மாட்டிக்கொண்டு நான் விழிக்கிறேன் . எளிதாக நீங்கள் மூவரும் சேர்ந்து கொள்கிறீர்கள் ்என்னை தனியாக விட்டு விடுவிடுகிறீர்கள் …” மனைவியை தனியாக அணைக்க முடியாமல் மூவரையும் சேர்த்து அணைத்து   மணிபாரதி புலம்ப ….அவன் தலையில் கொட்டி மீனாட்சி ” அடங்குடா …” என்க ….

பாரதியின் கண்ணம்மா நிறைவாய் சிரிக்கிறாள் .




 

     — நிறைவு —

 

What’s your Reaction?
+1
6
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!