Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 8

8

 

 

 

“மனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள்  எதிர் கொள்கின்றன. மற்றவர்களை விட யார் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகமாகப் பணிபுரிகிறார்களோ அவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கிறோம். சுப்பிரமணிபாரதி தனது காலத்து-யுகத்து- கலை, இலக்கிய, தத்துவப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பெருமளவில் உதவியவர் என்பதனாலேயே அவரை மகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றுகிறோம் . வருடாவருடம் அவரது பெயரில் இயங்கி வரும் இந்த  பள்ளியில்  அவரது பிறந்தநாளை ஆர்வமாக கொண்டாடி  வருகிறோம்….”




தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமான குரலில் மைக் முன் நின்று பேசிக்கொண்டிருந்தவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா .

அவளே எழுதிக்கொடுத்த வரிகள்தாம் இவை .ஆனால் அவனே உணர்ந்த்து போல் என்ன அழகாக பேசுகிறான் …ஆச்சரியம் அடங்கவில்லை அவளுக்கு .

” மேடம்  பாரதியாரை பற்றி நான்கு வரி எழுதிக்கொடுங்களேன் …” முன்தினம் நித்திகாவின் டான்ஸ் ப்ராக்டிஸ்  முடித்துவிட்டு , ஹோம்ஒர்க்கிற்காக உட்கார்ந்திருந்த போது கேட்டான் .

பாரதியின் விழா முடியும் வரை …நித்திகாவின் டான்ஸ் ப்ராக்டிஸ்ஸிற்காக மட்டும் என்ற உறுதியுடன் தினமும் மணிபாரதியின் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாள் .கண்ணம்மா வரும் நேரம் மணிபாரதி வீட்டில் இருப.பதில்லை .அப்படியே இருந்தாலும் இவர்களிடம் ஒரு ஹாயுடன் மாடிக்கு போய் முடங்கிக்கொள்வான் .

இன்றென்னவோ அவனாகவே வந்து கேட்கிறான் .

” எதற்கு …? ” அவன் எதற்கு கேட்கிறானென தெரிந்திருந்தும் தெரியாத்து போல் கேட்டாள் .

” உங்கள் பள்ளி பாரதியார் விழாவில் பேசத்தான் .அன்று என்னையும் ஒரு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்களே …,”

” அப்படியா …? எனக்கு தெரியாதே …” சங்கரி விழாவிற்கான அழைப்பிதழை கண்ணம்மாவிடம் காட்டிய போதே அவளுக்கு தெரிந்திருந்த்து .தினமும் வீட்டிற்கு வருகிறேன் .ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லையே …மனத்தாங்கல் வந்த்து அவளுக்கு .

” அப்படியா ….? ” அவளை கூர்ந்தவன் …

” சாரிம்மா .நானே  சொல்லியிருக்க வேண்டும் .நான் வரும்போதெல்லாம் நீங்கள் இருவரும் மிகவும் பிஸியாக …அறைக்குள் போய் பூட்டிக்கொண்டு இருந்தீர்கள் .அதனால் …சொல்ல முடியாமல் போனது ….”




முதல் நாள் போல் அவன் முன்னாலேயே நடனமாடி மாட்டிக் கொள்ள கூடாதென , டான்ஸ் ப்ராக்டிஸின் போது கண்ணம்மா அறைக்கதவை ஞாபகமாக பூட்டி வைத்துவிடுவாள் .அதைத்தான் குறிப்பிடுகிறான் .அப்படி கதவை பூட்டிக்கொண்டது …

கோபமோ …என அவன் கண்களை பார்த்தால் அவை கேலியுடன் சிரித்துக்கொண்டுதான் இருந்தன .இவள் பார்த்ததும் அவன் கோபமில்லையென கண்களாலேயே சொல்ல , கண்ணம்மா தனது பார்வையை அவசரமாக திருப்பிக் கொண்டாள் .

” அந்த மகாகவியின் பெயரை வைத்துக்கொண்டு , அவரை பற்றி ஒன்றும் தெரியாதென வெளியில் சொல்லாதீர்கள் ….”

” எனக்கு மூன்றாவது படிக்கும் போதிலிருந்து தமிழ் வகுப்பென்றாலே வேப்பங்காய் மேடம் .எனது தமிழ் வாத்தியார் கூட என்னை இப்படித்தான் திட்டுவார் .உனக்கெல்லாம் அந்த மாபெரும் கவிஞனின் பெயரை வைத்ததே பாவம்டா என்பார் “

” ஐ….அப்பா நீங்களும் படிக்கும் போதிலிருந்தே இப்படித்தான் எல்லோர் கிட்டேயும் திட்டு வாங்குவீங்களா …? ” நித்திகா சந்தோசமாக இடையில் வந்தாள் .

” ஆஹா …நித்தி நீ இருப்பது தெரியாமல் வாயை விட்டுட்டேனே .என் இமேஜ் போச்சே ….” மணிபாரதி கையை உதறிக் கொள்ள இருவரும் சிரித்தனர் .

சிரிப்பினூடேயே அவன் ” ப்ளீஸ் கண்ணம்மா ….” என்க ,அவன் கண்களை சந்திக்காமல் தலையாட்டினாள் .எப்போதாவதுதான் அவள் பெயரை சொல்லுவான் .ஆனால் அப்போது அவன் அவள் பெயரை உச்சரிக்கும் விதம் ….கண்ணம்மாவின் இதய துடிப்பை அதிகரிக்க வைக்கும் .

குழந்தைகளின் குழு நடனத்திற்காக அவர்களின் கோபிகைகள் அலங்கார்த்தில் மும்முரமாக இருந்தாள் கண்ணம்மா .சிறப்பு விருந்தினரென மைக்கில் அறிவித்து பின்னாலேயே மணிபாரதியின் பெயரை சொன்னவுடனேயே மாணவி ஒருத்தியின் நெற்றிச்சுட்டியை சரி செய்து கொண்டிருந்த கண்ணம்மாவின் கைகளில் மெல்லிய நடுக்கம் வந்த்து .
உடனே வாசல் பக்கம் போகத்துடித்த கால்களை கட்டுப்படுத்தி தரையில் அழுந்த ஊன்றிக்கொண்டு ஏற்கெனவே லிப்ஸ்டிக் தடவிய மாணவியின் இதழ்களில் மேலும் சாயத்தை பூசத்தொடங்கினாள் .என்ன உடையில் வந்திருப்பான் ….?

” விழாவிற்கு எந்த டிரஸ் போட்டுக் கொள்ளட்டும் மேடம் …? “

இதையெதற்கு என்னிடம் கேட்கிறான் ….? அவளுக்கு புரியவில்லை …கேள்வியாய் நோக்கியவளை …

” ஏதாவது பிஸினஸ் மீட்டிங்கென்றால் புல்சூட் , தினமும் ஆபிஸிற்கு பார்மல்ஸ் , கேஷுவல்ஸ் ….இது போன்ற பள்ளி விழாக்களுக்கு …அதுவும் ஒரு கவிஞனின் பிறந்தநாள் விழாவிற்கு …என்ன போட்டுக்கொள்ளட்டும் …..? ,,”

கண்ணம்மாவிற்கு சிரிப்பு வந்த்து .சற்று முன்தான் நித்திகாவிறகு விழாவிற்கு அவள் போட வேண்டிய உடையை செலக்ட் செய்து கொடுத்திருந்தாள் .இப்போது இவனுக்குமா …?




” மிஸ் அப்பாவிற்கு ஒன்றும் தெரியாது .எனக்கு போலவே அவர்களுக்கும் செலக்ட் பண்ணி கொடுத்துவிடுங்கள் .எதையாவது போட்டுக்கொண்டு வந்து நின்றாரானால் எனக்குத்தான் பள்ளியில் என் தோழிகளுக்கிடையே அசிங்கமாக போய்விடும் ….” பெரிய அவமானம் போல் கவலைப்பட தொடங்கினாள் நித்திகா .

” என்ன நித்தி …பெரிய ஜவுளிக்கடை முதலாளி உன் அப்பா .அவருக்கு நான் டிரஸ் செலக்ட் பண்ண முடியுமா …? “

” அதனால்தாங்க மேடம் எனக்கு எந்த உடையை பார்த்தாலும் சந்தேகம் வருகிறது .தினமும் நிறைய வகை உடைகளை பார்த்து …பார்த்து ….எந்த உடையை பார்த்தாலும் பிடிப்பதில்லை .நீங்கள்தான் ஹெல்ப் பண்ணவேண்டும் .ஒரு சின்ன உதவிதானே …ப்ளீஸ் கண்ணம்மா ….”

அவன் கண்ணம்மாவில் இருந்து மீண்டு கொண்டு …”  இது ஒரு தமிழ் கவிஞனின் பிறந்தநாள் விழா சார் …” பூடமாக உரைத்துவிட்டு வந்திருந்தாள் .இப்போது ….மேடை பக்கம் நகர துடித்த கால்களை கட்டுப்படுத்திய போது ….

” மிஸ் …எதுக்கு மிஸ் இவ்வளவு லிப்ஸ்டிக் …? ” அந்த மாணவி பரிதாபமாக கேட்க , பதறி கைகளை உதறியபோது …மேடையில் மணிபாரதியின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது .

” இதில் சரி பண்ணிக்கோம்மா …” காட்டனை அந்த மாணவியிடம் கொடுத்துவிட்டு …மேடையின் ஓரம் அடைத்து  போட்டிருந்த கனத்த திரையை மெல்ல விலக்கி மேடையை பார்த்துக் கொண்டிருக்கிறாள் .மேடைக்கு பின்புறமிருந்த அறைக்குள்தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் அலங்காரம் நடந்து கொண்டிருந்த்தால் அவளால் எளிதாக அறையிலிருந்து வரவும் மேடையை பார்க்க முடிந்தது.

பலத்த கைதட்டல் அரங்கம் முழுவதும் நிறைய தூய வெண்ணிற வேட்டி ,சட்டையில் தமிழ் பாரம்பரியத்துடன் நின்றபடி தேர்ந்த மேடை பேச்சாளன் போல் பேசிய அவனை  பிரமிப்புடன்  பார்த்தபடியிருந்த கண்ணம்மா அவன் சட்டென பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்துவிட , தட்டிக்கொண்டிருந்த கைகளை கீழே போட்டுவிட்டு திரை மறைவுக்கு போய்விட்டாள் .

ஒரு விநாடிதான் . ….எப்படி …? என விழியால் அவளிடம் அதற்குள் கேட்டுவிட்டான் .உடல் சிலிர்க்க ஒப்பனை அறைக்குள் ஓடி வந்துவிட்டாள் .

தலையிலிருந்து இருபுறமும் வழிந்த தாவணியுடன் நொற்றிச்சுட்டி , ஒட்டியாணமென கஷ்டமான அலங்காரத்துடன் இருந்த நித்திகா …நடனம் முடிந்த்தும் மேடையின் பின்புறம் ஓடிவந்து ” எப்படி ஆடினேன் மிஸ் …? ” ஆவலாக கேட்டாள் .




” ரொம்ப அருமையாக , அழகாக ஆடினாய் செல்லம் …” பதில் சொன்னபடி பின்னால் வந்து நின்றான் மணிபாரதி .

அவன் இவ்வளவு நேரமாக முன்வரிசையில் அமர்ந்து நடனமாடிய மகளை செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான் .

” ஆமாம் நித்தி …ஒரு ஸ்டெப் கூட மறக்கலை .எல்லாமே கரெக்டாக பண்ணினாய் ….” உண்மையில் அந்த நடனகுழுவில் சுமாராக ஆடியது நித்திகாதான் .அதை மறைத்து குழந்தையை என்கரேஜ் பண்ண இப்படி சொன்னாள் கண்ணம்மா .கூடவே வேறு எதுவும் சொல்லிவிடாதே என மணிபாரதிக்கு ஜாடை காட்டினாள் .

” நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கோம்மா …” அவளை உள்ளே அனுப்பினாள் .

” நிறைய தவறுகள் .அதை அவளுக்கு சொல்ல வேண்டாமா மேடம் .அப்போதுதானே அவள் திருத்திக்கொள்வாள் ….”

” சொல்லிக் காட்ட வேண்டாம் சார் .சொல்லித் தர வேண்டும் .அதை நான் பார்த்துக் கொள்கிறேன் …” கண்ணம்மாவின் குரலில் எங்களிருவருக்குமிடையே வராதே என்ற லேசான அதிகார வேண்டுதல் இருந்த்து .

தோள்களை குலுக்கிக் கொண்ட மணிபாரதி எதையோ எதிர்பார்ப்பது போல் அவள் முகத்தை பார்த்தான் .அவள் மேடை அலங்காரத்தை பார்த்தாள் .

” ம் …நான் ஆணாக இருப்பதாலோ என்னவோ நிறைய நேரங்களில் ஒரு பெண்குழந்தையின் அப்பாவாக எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எனக்கு தெரிவதில்லை ….”

கண்ணம்மாவிற்கு முத்துகுமாரின் நினைவு வந்துவிட்டது .அப்பாவின் நினைவில் முகம் மென்மையாகி கனிந்த்து .

” டீச்சரம்மா இதற்காக எனக்கு ஒரு டியூசன் எடுங்களேன் …” கண்ணம்மாவின் முக மாறுதலை உறுத்தபடி கேட்டான் .




 

” நீங்கள் என் அப்பாவை சந்திக்க வேண்டும் .ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வாருங்களேன் …” அழைத்துவிட்டு அவன் முகத்தை பார்த்தவள் குழம்பினாள் .

என்ன பாவனை இது …?

” கடவுளே …கடைசியில் …வீட்டிற்கு அழைத்துவிட்டாய் ….” அவன் குரலில் உற்சாகமிருந்த்து .

புரியாமல் பார்த்தவளிடம் ” இந்த அழைப்பிற்காக , உன் உறவுகளை சந்திப்பதற்காக எத்தனை நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் தெரியுமா …?” என்றான் .

மணிபாரதியின் குரலிலேயே அவனது ஆர்வத்தை உணர்ந்த கண்ணம்மா …அவன் அன்று இரவே அவர்கள் வீட்டு அழைப்புமணியை அடித்தபடி வந்து நிற்பானென நினைக்கவில்லை

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!