Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 10

10

 

தன் கையிலிருந்த அந்த ” பாரதியும் – சில ஆய்வுகளும் ” புத்தகத்தை ஏதோ அபூர்வ பொருள் போல் பத்திரமாக தடவிப் பார்த்தபடியருந்த மணிபாரதியை புன்னகையுடன் நோக்கியபடியிருந்தாள் கண்ணம்மா .

” பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தன் கணவரின் படைப்புகளை தன் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறுசிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். “சுதேச கீதங்கள்” என்ற இரு பாகங்களுக்குமேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை. பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது. அதிலும் செல்லம்மாள் வாங்கின கடன் 2,400போக மீதம் 1,600 மாதம் 200என எட்டு தவணையாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர். 




செல்லம்மா பாரதி எனக்  கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு என்  கையில் வாங்கி தொட்டு பார்த்த  போது இனம்புரியாத உணர்வு எனக்குள்….”

உணர்ச்சி வசப்பட்டு குரல் கரகரக்க பேசிய முத்துராமனை இமை சிமிட்டாமல் பார்த்தபடியிருந்தான் மணிபாரதி .

” இந்த அளவு உயர்ந்த கவிஞனா அங்கிள் அவர் …? சாரி எனக்கு இதெல்லாம் தெரியாது …”

” ம்கும் …இந்த வார்த்தையைத்தான் நிறைய பேரிடமிருந்து கேட்கிறேன் . அவர் தெய்வபிறவி தம்பி .மற்றவர்க்கு எப்படியோ …எனக்கு தெய்வம் அவர் .எனது வாழ்வின் கடினமான காலகட்டங்களையெல்லாம் நான் அவரது கவிதைகளின் துணை கொண்டேதான் கடந்திருக்கிறேன் .எனக்கு அவர் மீதான அபிமானத்தின் அளவு எப்படியென்றால் ….”

” பாரதி என்ற பெயரை யாரிடம் கண்டாலும் …அவர்களிடம் ஒருவித மயக்கம் கொள்வது ….” குறும்பாக முடித்தான் மணிபாரதி .

” ஆமாம் …ஆனால் இதனை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை …” சிறு கூச்சத்துடன் கூறினார் முத்துராமன் .

” நீங்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் தம்பி .இதுதான் எனது முதல் புத்தகம் .என் கவிஞனின் சில கவிதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு எனது பாணியில் விளக்கமும் சொல்லியிருக்கிறேன் .படித்துவிட்டு சொல்லுங்கள் ….” சொல்லியபடியே தனது கையெழுத்தை போட்டு முத்துராமன் நீட்டிய ” பாரதியும் – சில விளக்கங்களும் ” புத்தகத்தை ஒரு வித விழித்தலுடன் வாங்கியவனை சுவாரசியமாக வேடிக்கை பார்த்தாள் கண்ணம்மா .




” பாவம்பா அவரை விட்டுடுங்க .காபி எடுத்துக்கோங்க சார் …” தனக்கு காபி நீட்டிய கண்ணம்மாவை பார்த்தான் மணிபாரதி .

அவள் அதற்குள் கூந்தலை காயவைத்து கொண்டையாக்கி , காட்டன் புடவையில் பள்ளிக்கு கிளம்ப தோதாக நின்றிருந்தாள் .

” ம் …டீச்சரம்மாவா மாறியாச்சா …? ” பார்வையால் அவளை துளைத்தபடி கேட்டவனுக்கு பதிலளிக்காமல் உள்ளே போய்விட்டாள் .

” காலையில் விழித்ததுமே உங்களை பார்க்க வேண்டுமென அடம்பிடித்தாள் மேடம் .அதுதான் அழைத்து வர வேண்டியதாயிற்று ” அடுப்படிக்குள் இருந்த கண்ணம்மாவிற்கும் , நித்திகாவிற்கும் சேர்த்து தலையை சாய்த்து சத்தமாக சொன்னான்.

அடுப்படி மேடை மீதமர்ந்து தான் சுட்டு போட்ட தோசைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த நித்திகாவின் தலையை வாஞ்சையாய் வருடினாள் கண்ணம்மா .

” எங்கள் கூடவே ஸ்கூலுக்கு வாங்க மிஸ் …” நித்திகாவின் கெஞ்சலை மறுக்க முடியாமல் தலையாட்டினாள் .

மூவருமாக வெளியேறினர் .

” அப்பாவுக்கு அதீத ஆர்வம் .உங்களால் முடியாதென்றால் வேண்டாம் சார் .அதை கொடுத்து விடுங்கள் ” தன் கையிலிருந்த முத்துராமனின் புத்தகத்தை பார்த்தபடியிருந்த மணிபாரதியிடமிருந்து அதை வாங்க இழுத்தாள் .

விடாமல் புத்தகத்தை பற்றியவன் ” இருக்கட்டும் மேடம் .படித்துத்தான் பார்க்கிறேனே .இது எனக்கு புதிய அனுபவம் ….” என்றபோது அவனது விழிகள் அவள் கண்களுக்குள் இருந்த்து .

சுர்ரென்ற விநோத உணர்வு கையை தாக்க வேகமாக கையை இழுத்துக்கொண்டு பின்னால் சாய்ந்து கொண்டாள் .

ஒருவரோடொருவர் ஆர்வமாக பேசியபடி உணவுண்டு கொண்டிருந்த மாணவிகளை சந்தோசமாக பார்த்திருந்தாள் .பத்து நாட்களுக்கு முன் இவர்கள் ஐவரும் ஒருவருக்கொருவர் விரோதிகள் என சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது .ஒரு சிறு புரிதல்தான் அவர்களுக்கிடையேயான நட்பு வெளிப்பட தேவையாயிருந்திருந்த்து .

அவர்கள் செய்த தவறுகளை ஏனம்மா முதலிலேயே சொல்லவில்லை …? என்ற கேள்விக்கு நித்திகா அளித்த பதில் இன்னமும் அவள் உள்ளத்திற்குள் விருப்பத்துடனோ …வெறுப்புடனோ …இன்னதென்று கண்டறிய முடியா ஒரு வகை உறுத்தலை கொடுத்தபடி கன்ன்று கொண்டிருந்த்து .




” உங்களுக்குத்தான் ஒருவரை பற்றி ஒருவர் கம்ப்ளைன்ட் பண்ணினால் பிடிக்காதே மிஸ் .உங்களுக்கு பிடிக்காத்தை செய்ய பிடிக்காமல்தான் அவர்களை பற்றி எதுவும் சொல்லவில்லை …”

” என்ன …? எனக்காகவா …? அப்படி என்ன நான் உனக்கு முக்கியம் ….? “

” முக்கியம்தான் மிஸ் .நீங்கள் முதன் முதலில் எங்கள் வகுப்பற்குள் நுழைந்த போதிலிருந்து …நீங்கள் எனக்கு முக்கியம் மிஸ் .ஏனென்று கேட்காதீர்கள் .எனக்கு பதில் சொல்ல தெரியாது .அன்று நீங்கள் ஒரு மஞ்சள் கலர் காட்டன் சேலையில் காதோரம் மஞ்சள் ரோஜா வைத்துக்கொண்டு வகுப்பறைக்கிள் நுழைந்தீர்கள் .சங்கரி மேடம் புது மிஸ் என உங்களை அறிமுகப்படுத்தினார் .அன்றிலிருந்தே உங்கள் மீது எனக்கு ஒரு ஆவல் .சும்மாவாது உங்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கும் ….

அன்று என்னை வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பிய போது உங்களுக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டதோ …என்றுதான் கவலைப்பட்டேன் .பிறகு நாம் இருவரும் நல்ல ப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டோம் .சந்தோசமாக இருந்த்து . உங்களுக்கு கோபமூட்டக் கூடாது என்றுதான் அந்த பிள்ளைகளின் சீண்டல்களைநெல்லாம் பொறுத்துக் கொண்டேன் .அன்று விழாவின் போது நெட்டை குச்சி …உடம்பு வளையலை …இவளெல்லாம் டான்ஸ் ஆட வந்துட்டான்னு ரொம்ப கிண்டல் பண்ணாங்க .

பல்லை கடிச்சு பொறுத்துட்டு வீட்டுக்கு வந்தால் பாட்டியும் அதையே சொல்லி கிண்டல் பண்றாங்க .என்னால் கோபத்தை பொறுக்க முடியலை .என்ன செய்யுறேன்னு தெரியாமல் கையில் கிடைத்ததை வீசிட்டேன் .அது பாட்டி மேல் விழும்னு நினைக்கலை .பாட்டி ரத்தம் வடிய விழும்போது இனிமேல் நீங்கள் என்னிடம் பேச மாட்டீர்களோ என்ற பயம்தான் எனக்கு இருந்த்து .என் மேல் கோபமில்லையே மிஸ் .நான் தெரியாமல் செய்துட்டேன் ….”

தலை சாய்த்து பாவமாய் கேட்டவளிடம் என்ன சொல்ல முடியும் …? பேசாமலேயே தலையசைத்தாள் .வாய் திறந்தால் பாகாய் உருகிக் கொண்டிருக்கும் மனச்சாயல் குரலில் வெளிப்பட்டு விடலாம் .அன்றிலிருந்து நித்திகாவிற்கெனவே தினமும் அவர்கள் வீட்டிற்கு கணக்கு சொல்லிக் கொடுக்க போய் கொண்டிருந்தாள் .

” இந்த கணக்குகளையெல்லாம் போடுங்கள் ….” போர்டில் எழுதி விட்டு மாணவர்களிடம் திரும்பியவள் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த நித்திகாவின் முக பாவத்தில் புருவம் உயர்த்தினாள் .

முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பதை போன்ற ஒரு வித அவஸ்தையில் அமர்ந்திருந்த அவள் முகத்தை கண்டதுமே , ஒரு பெண்ணாய் அவளது நிலையை புரிந்து கொண்டாள் .

” என்னம்மா பீரியட்ஸா …? ” கண்களால் அவளை வகுப்பறைக்கு வெளியே அழைத்து வந்து கேட்க,.

” ஆமாம் மிஸ்…இப்போதுதான் .ரொம்ப வலிக்குது .நான் நாப்கின் கொண்டு வரலை .”




” சரி …வா .என்னிடம் இருக்கிறது ….” தன்னிடமிருந்த நாப்கினை கொடுத்தாள் .

” மதியம் ஏதோ மீட்டிங்தான் இருக்கிறது நித்தி .நீ வீட்டிற்கு போய் படுத்து ரெஸ்ட் எடேன் ….”

” அப்பாவும் , பாட்டியும் இன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு காலையில் பேசிட்டு இருந்தாங்க மிஸ் .இப்போது நான் திடீர்னு போய் நின்றால் என்ன சொல்வாங்களோ …? ” நித்திகாவிற்கு இன்னமும் அப்பா , பாட்டி மேலிருந்த சிறு பயம் போகவில்லை .

” அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க .நீ வா .நானே உன்னை கூட்டிப் போய்விடுகிறேன் ….” தனது வீடு …தன் அப்பா , பாட்டி என்ற ஒட்டுதலின்றி கொஞ்சம் விலகுதலுடனேயே இருக்கும் நித்திகாவின் மனநிலையை மாற்றவே கண்ணம்மா அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல நினைத்தாள் .

சங்கரியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நித்திகாவை தனது ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு கண்ணம்மா மணிபாரதி வீட்டிற்கு வந்தாள் .

” என்ன நித்தி ….அப்பாவிற்கு ஏதோ முக்கிய வேலையென்றாய் .அவர் உள்ளேதான் இருக்கறார் போல …? ” மணிபாரதியின் காரை பார்த்தபடி கேட்டாள் .
” தெரியலையே மிஸ் …” என்றபடி வாசல் படியேறிய நித்திகா விழித்தபடி நின்றாள் . அவள் பின்னாலேயே எட்டிப் பார்த்த கண்ணம்மாவும் திகைத்தாள் .

உள்ளே சோபாக்களை அடைத்தபடி பட்டும் , வைரமும் ஜொலிக்க அமர்ந்திருந்த இரண்டு பெண்களிடையே பளீரென்ற டிசைனர் சேலையுடன் , வைரங்களை சுமந்து கொண்டு ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள் .




 

” சம்பந்தம் செய்வதென்று முடிவு செய்துவிட்டோம் .இனி நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலென்ன …? நாங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தாலென்ன …? பெண் பார்க்க வருவதற்கு பதிலாக நாங்கள் மாப்பிள்ளை பார்க்க வந்துவிட்டோம் ….பொண்ணை நல்லா பார்த்துக்கோங்க மாப்பிள்ளை …” தனியாக இருந்த சோபாவில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் கூற …அவர் பேச்சை ஏற்று …

மணிபாரதி …அந்த பெண்ணை கூர்மையான பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் .

 

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!