Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 12

                                                               12

 

 

 

மொட்டு மொட்டாய் வெளேரென்று கூம்பாய் குவிந்திருந்த மல்லிகை பூக்களை இயந்திர கதியில் எடுத்து நாரில் தொடுத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா .

” ம் …பரவாயில்லை  நான் வந்த நேரம் நல்ல சகுனம்தான் ….” மீனாட்சியின் குரலை கேட்டதும் முதலில் ஆச்சரியமாகி பிறகு சோர்ந்தாள் .

இப்போது இவரா ….? இவரை எப்படி சமாளிக்க …? ஆனால் அம்மாவையே எப்படி தூதனுப்பினான் …? ம் ….அம்மாவை என்ன அந்த ஆண்டவனையே கூட தூதனுப்புவான் .பெருமூச்சுடன் நினைத்தவள் …




” வாங்கம்மா …” எழுந்தாள் .

” என்னம்மா  கண்ணம்மா தலையில் இருக்கவேண்டிய மலர்கள் தரையில் தவழுது ….? ” கிண்டல் போன்றோ …சாதாரணம் போன்ற கணிக்க முடியாத குரலில் கேட்டபடி அமர்ந்தார் மீனாடசி .

” உதிரிப் பூ வாங்கினேன் .தொடுத்துக் கொண்டிருந்தேன் …”

” ம் …அதைத்தான் நல்ல சகுனம்னு சொன்னேன் .உங்க தெருவுக்குள் நுழையும் போதே , எதிரே பால்கார்ர் போனார் .இந்த வீடா …அந்த வீடான்னு குழம்பிட்டு வாசலில் நின்ற போது தலை நிறைய பூவோடு ஒரு நிறை சுமங்கலி மாமி உங்கள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு போனார் .உள்ளே வந்தால் தரை முழுவதும் பூவை பரப்பி வைத்து நீ கட்டிக் கொண்டிருக்கிறாய் ….எல்லாமே நல்ல சகுனம்தான் ….”

” வாங்கம்மா .வணக்கம் .பக்கத்தில் பிள்ளையார் கோவிலுக்கு போயிருந்தேன் ்இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க ….” முத்துராமன் திருநீறை நீட்டினார் .

” இதோ அடுத்த நல்ல சகுனம் ….” மீனாட்சி மனநிறைவோடு திருநீறை அள்ளி நெற்றி நிறைய இட்டு கொண்டார் .

” எனக்கு சகுனம் , ஜோசியத்திலெல்லாம் நம்பிக்கை கிடையாதும்மா …”

” ஆனால் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டுங்க .உங்க பொண்ணு ஜாதகம் வேண்டுமே ….”

முத்துராமன் பதில் சொல்ல யோசித்தார் .

இப்படி அம்மாவையே அனுப்புவானென் கண்ணம்மா நினைக்கவில்லை .நித்திகாவிற்கும் , மணிபாரதிக்கும் அவள் மேல் இருக்கும் அபிப்ராயம் மீனாட்சிக்கு கிடையாது .வந்தாயா …வா …போகிறாயா …போ ….என்றுதான் அவளிடம் நடந்து கொள்வார் .அவரையே என்ன சொல்லி ஜாதகம் கேட்குமளவு கொண்டு வந்து விட்டிருப்பான் …நகம் கடித்தாள் .




அன்று கண்ணம்மா திருமணத்தை மறுத்த பின் மணிபாரதி அவள் கண்ணிலேயே படவில்லை .ஆனால் அப்பாவின் நண்பர்கள் , நித்திகா , சங்கரி என ஆனமட்டும் அவர்கள் திருமணத்திற்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தான் .

நித்திகாவிடம் ” நித்தி மிஸ் உன்னிடம் எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கனுமா …? வேண்டாமா …? ” என்ற செல்ல மிரட்டல் மட்டும் போதுமானதாயிருந்த்து .அவள் பசை போட்டது போல் வாயை ஒட்டிக்கொண்டாள் .

” நீங்களே எனக்கு அம்மாவாக வந்தால் நன்றாக இருக்கும் மிஸ் …” ஒரே ஒரு முறை மட்டும் சொல்லிவிட்டு இவள் பார்வையில் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொண்டாள் .ஆனால் அவ்வப்போது ஒரு ஏக்க பார்வையை மட்டும் அவள் மீது வீசியபடி இருந்தாள் .

அப்பாவின் நண்பர்களை சமாளிக்கும் பொறுப்பை அப்பாவிடமே தள்ளினாள் .சங்கரியிடம் சொந்த விசயம் பேச வேண்டாமென உறுதியாக மறுத்தாள் .இவர்கள் அனைவருமே மணிபாரதியையா ….வேண்டாமென்கிறாளா ….ஆச்சரியமாய் அதிசயித்தனர் .

அப்படி என்ன பெரிய இவன் அவன் …? இப்போது கூட அவன் திருமணத்திற்கு தயாரென்றால் ஒரு கூட்டமே பின்னால் தயாராக வருமாம் .வரமாட்டார்களா பின்னே …அதுதான் லட்சம் லட்சமாக சொத்து சேர்த்து வைத்தருக்கிறானே …மனதிற்குள் பொருமினாள் .இதற்கெல்லாம் நான் மயங்க மாட்டேன் .தலையை சிலுப்பிக் கொண்டாள் .

” பார்த்து தலை தனியாக கழண்டு விழுந்திட போகுது ….” மீனாட்சியின் குரலில் நிகழ்வுக்கு வந்தாள் .

” இப்போது உங்கள் மகள் ஜாதகம் வைத்திருக்கிறீர்களா …? இல்லையா …? ” அடப் பார்றா இந்தம்மாவிற்கு  அதிகாரத்தை .நான் கல்யாணமே வேண்டாமென்கிறேன் ….பேச வாய் திறக்கும் போது …

” இருக்கிறது அம்மா .எனக்குத்தான் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை .என் மனைவிக்கு உண்டு .அவள் எழுதி வைத்திருக்கிறாள் ….” கன கச்சிதமாக பதிலளித்த அப்பாவை முறைத்தாள் .

” பின்னே கொடுங்களேன் .இங்கே பக்கத்து ஊரில் நான் வழக்கமாக பார்க்கும் சுவாமிஜி ஒருவர் இருக்கிறார் .அவரிடம் போய் பொருத்தம் பார்த்துவிடலாம் …”




சம்மதித்தாற் போல் முத்துராமன் எழ , கண்ணம்மாவிற்கு திக்கென்றது .

” அப்பா …” எச்சரிக்கையாய் அழைத்தாள் .

“ஏறு பொழுதில் பார்த்திடுறது நல்லது ….வாங்க ” மீனாட்சியும் எழ , அவளிடம்

” நீங்கள் காரில் போய் உட்காருங்கள் அம்மா .நான் வருகிறேன் ” என்றுவிட்டு …

” கண்ணம்மா நான் இந்த கல்யாணத்தை முடித்துவிடலாம்னு நினைக்கிறேன் ….” உறுதி தெறிக்க சொன்னார் .

” அப்பா …ராமச்சந்திரனை மறந்திட்டீங்களாப்பா …? “

” அவன் கேட்ட மாதிரி நீ அவன் கூட போய் குடும்பம் நடத்த போகிறாயாம்மா …? “

” அப்பா ….” அலறினாள் .

” ஒரு மாதமாக நான் மணிபாரதியை பற்றி விசாரித்து கொண்டிருக்கிறேன்மா .இரண்டாம் தாரம் என்பதை தவிர அவனிடம் எந்த குறையும் இல்லை .என் மகளுக்கு மிக பொருத்தமான மாப்பிள்ளை அவன் .அவள் மனதிற்கு பிடித்தவனும் கூட ….” இதனை கண்ணம்மாவின் கண்களுக்குள் பார்த்தபடி அவர் கூற , அவள் அவசரமாக தலை குனிந்து கொண்டாள் .

” உன் முதல் வாழ்க்கையை போல் இது இருக்காது கண்ணம்மா .அப்போது செய்த தவறை நான் இப்போது செய்யவில்லை .நன்றாக விசாரித்துவிட்டேன் ….”

” என்னால் பழையதை மறக்க முடியாது அப்பா …”

” முடியும்மா …நிச்சயம் முடியும் .அப்பாவிற்காக முயற்சி செய்து பாரேன் …”

” சரிப்பா .முயற்சிக்கிறேன் .ஒரு நிபந்தனை .நீங்கள் அவர்களிடம் எனது பழைய வாழ்க்கையை சொல்லிவிட வேண்டும் .அதன் பிறகும் அவர்கள் திருமணத்திற்கு தயாராக இருந்தால் எனக்கும் சம்மதம் ….” மீனாட்சியின் குணத்தை நம்பியே கண்ணம்மா இப்படி சொன்னாள் .

முதலில் தயங்கிய முத்துராமனும் பிறகு ” அதுவும் சரிதான் …” என ஒத்துக்கொண்டார் .




” ஏன் வரவில்லையா ..? ” மீனாட்சி மீண்டும் உள்ளே வர…

” உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்மா …” முத்துராமன் ஆரம்பித்தார் .

” நல்லநேரம் முடிவதற்குள் ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும் .பேசுவதையெல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாமே …ஏன்மா நீயும் வாயேன் .அந்த சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கினாற் போலிருக்கும் …” என அழைத்தாள் .

மூவருமாக காரில் ஏறிய போது காரில் டிரைவர்க்கு பதிலாக மணிபாரதி அமர்ந்திருந்தான் .பின் சீட்டில் ஏறிய பிறகே அவனை பார்த்தவள் திகைத்தாள் .கிட்டதட்ட ஒரு மாத்ததிற்கு பிறகு அவனை பார்க்கிறாள் .ஏனோ திடீரென கண்கள் கலங்க ஆரம்பிக்க ்..முன்னால் திருமண சம்மத்த்திற்கு அம்மாவை அனுப்பி விட்டு பின்னாலேயே காத்திருந்து வந்திருக்கிறான் .ப்ராடு ….

அவள் கடைசியாக சொன்ன ” ப்ராடு ” முணுமுணுப்பாக வெளியே வந்துவிட , அவன் தலையை குனிந்து ” நன்றி ” என அதற்கு பதில் சொன்னான் .

” டேய் நீ எங்கேடா இங்கே …? டிரைவரை எங்கே …? ” மீனாட்சிக்கும் மகனை கண்டதும் திகைப்பு .

” அவருக்கு வேறு வேலை இருந்த்தும்மா .நான் வந்த காரை அவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு உங்களை வீட்டிற்கு அழைத்து போக நான் இருந்தேன் .இப்போது வீட்டிற்குத்தானே ….” நிதானமாக கார் கியரை மாற்றினான் .

” ஏன்டா மானத்தை வாங்குற …? ” முணுமுணுத்து தலையிலடித்துக் கொண்ட மீனாட்சி …

” சுவாமிஜியை பார்க்கனும் .போ ….” என்றாள் எரிச்சலுடன் .

அங்கே நான் உள்ளே வரப்போவதில்லை என கண்ணம்மா உறுதியாக மறுத்துவிட , அவளை முறைத்தபடி மீனாட்சி உள்ளே செல்ல , மணிபாரதியும் வெளியிலேயே தங்கிவிட்டான் .

காரில் ஸ்டியரிங்கை சுற்றி பார்த்தான் .கார் கண்ணாடியை ஏற்றி இறக்கினான் .ஹேண்ட் ப்ரேக்கை போட்டான் , எடுத்தான் ….முன்னால் ஆடிய பொம்மையை தள்ளி விளையாடினான் .

” இதற்கு முன் இவ்வளவு டென்சானாக நான் இருந்த்தில்லை ….” இரு கைகளையும் தேய்த்துக் கொண்டான் .

நேர்மாறாக அமைதியாக இருந்தாள் கண்ணம்மா .




 

” என்னங்க மேடம் ஜாதகம் பொருந்துமா …? உங்களுக்கு அந்த டென்சன் இல்லையா …? ” பின்னால் உட்கார்ந்திருந்தவளை திரும்பி சீண்டினான் .

அவன் பக்கமே திரும்பாமல் , அவன் சொற்கள் காதிலேயே விழாத்து போல் வெளியே வேடிக்கை பார்த்தாள் கண்ணம்மா .

” ம்….” என பெருமூச்சு விட்டவன் பிறகு முன்னால் திரும்பவே இல்லை .வசதியாக பின்புறம் பார்த்தபடி திரும்பி அமர்ந்து கொண்டு அவளையே பார்த்தபடி இருந்தான் .

கண்ணம்மாவின் போனில் மெசேஜ் வர எடுத்து பார்த்தவள் அதிர்ந்தாள் .வரிசையாக திருமண புகைப்படங்கள் .கண்ணம்மாவும் , ராமச்சந்திரனும் மணக்கோலத்தில் இருக்கும் படங்கள் .அடுத்தடுத்து வந்தபடி இருக்க , கைகள் நடுங்க அவற்றை டெலிட் சொய்தவள் , சிறிது நிறுத்தி யோசித்தாள் …

இப்போதே இந்த போட்டோக்களை இவனிடம் காட்டிவிட்டால் என்ன …?

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!