Author's Wall Coming Soon Serial Stories தித்திக்கும் தோட்டா

புதுமுகம் அறிமுகம்

ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

எனதல்லாத மற்றொருவரது கதை நமது தளத்தில் .இவர் நம் தள வாசகர்களுக்கு சிறுகதை மூலம் முன்பே அறிமுகமானவர்தான் . இப்போது ஒரு பரபரப்பான குறுநாவல் ஓன்றுடன் வந்துள்ளார் .” தித்திக்கும் தோட்டா ” பெயரே திக் திக்கையும் , தித்திப்பையும் ஒருங்கே தருகிறதுதானே ? கதையும் அப்படியே ராணுவமும் , தேசபற்றும் , இழைந்தோடும் காதலுமாக மிக அருமையான கோர்வையாக்கப்பட்டுள்ளது .அருமையான கதைக்கு நண்பருக்கு வாழ்த்துக்கள் .உங்கள் ஆதரவை தவறாமல் அவருக்கு கொடுங்கள் தோழமைகளே ….நாளை முதல் நாவல் நம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .இனி கதையாசிரியருடன் சில வார்த்தைகள் ….

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

நான் தமிழ்செல்வி .பிரதிலிபி போன்ற தளங்களில் சில சிறுகதைகள் எழுதியுள்ளேன் 

  இது எனது முதல் நாவல் . இதனை  குறு நாவலாக எழுதியுள்ளேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில்  புனையப்பட்டது.

          நான் வார்த்தைகளை கையாளுவதில் சிறிது கவனமாக இருக்கவே விரும்புகிறேன் நண்பர்களே. இந்த கதையை உண்மை சம்பவம் என்று கூறியுள்ளேன். உண்மை கதை என்று கூறவில்லை உண்மை சம்பவத்திற்கும் உண்மை கதைக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

          இதில் வரும் கதாபாத்திரங்கள்  நம் மத்தியில் நரம்பும் சதையுமாய் வாழ்ந்து செத்தவர்கள். இதன் உண்மை தன்மையை அறிய எங்கோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் நாம் செல்ல வேண்டியது இல்லை.  இதோ இப்பொழுது  ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் விளைந்த ஒரு மாவீரனின் வரலாறு.

          1962 ஆம் ஆண்டு இந்திய சீன யுத்தம் நடக்கும் நேரம் நாம் தோல்வி அடைந்தோம். இந்த யுத்தம் ஏன்? இதில் ஏன் தோல்வி அடைந்தோம்? இது எதனால் ஏற்பட்டது? இது போன்ற பல்வேறு தகவல்களை நான் நுட்பமாக சேகரிக்கும் போது தான் இந்த மாவீரனை கண்டேன்.

             ஆஹா!என் மண்ணே! என்ன உன் பெருமை?  நான் சத்தியம் செய்து சொல்லுவேன் இதுபோன்ற  மாவீரனை சுமக்கும்   திருவயிறு படைத்தவள் என் பாரதத்தாய் அன்றி வேறு எவர் உண்டு?

          வாசகர்களே! நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால்  இது கதையல்ல. அன்றைய சம்பவம் இன்றைய சரித்திரம். இதில் வரும் வார்த்தைகள் மட்டுமே எனக்கு சொந்தம்.  வாழ்க்கைக்கு சொந்தக்காரன்………..!!!!!!??????  “கதையை வாசித்து தான் பாருங்களேன்”

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!