Serial Stories

விளக்கேற்றும் வேளையிலே -16

16

கருதில் குத்திய சோளமாய் 
என் உயிர் கருக்குகிறாய் ….

 

 




?ஷியாமி்ன் கண்கள் கலங்கியிருந்தன ” நான் புரிந்து கொண்டேன் அமுதா .உண்மையான அன்பின் முன்னால் சொத்து , பணம் , சுயகௌரவம் எல்லாமே மண்டியிடத்தான் வேண்டுமென புரிந்து கொண்டேன் .நிச்சயம் சந்தனா மேல் நான் வைத்திருப்பது உண்மையான அன்பு .அதனால் தன்மானம் , சுயகௌரவம் என்ற பிதற்றலையெல்லாம் விட்டுவிட்டு அமிர்தன் அண்ணா எனக்கு வைத்துக்கொடுக்கும் தொழிலை நன்கு நடத்த போகிறேன் .சந்தனாவை திருமணம் செய்து கொள்ள போகிறேன் “

” அண்ணா நான் அமுதாவிடம் பந்தயம் கட்டினேன் . தன்மானம் , சுயகௌரவம் …இதையெல்லாம் விட்டு விட்டு எந்த ஆணும் ஒரு ் பெண்ணின் பின்னால் காதலை காரணம் காட்டி வர மாட்டானென்றேன் .ஆனால் அதை பொய்யென்று உங்களை வைத்தே அமுதா நிரூபித்து விட்டாள் .இவ்வளவு சொத்து , கௌரவம் எல்லோவற்றையும் விட்டு நீங்கள் அமுதா பின்னால் போக துணிந்தீர்களே .உங்களுடையது போலவே எனது காதலும் உண்மையானதுதான் அண்ணா .

” அத்தை அமிர்தனண்ணாவும் , அமுதாவும் பங்கு்களை எழுதிக் கொடுத்தால் மட்டும் நானும் , சந்தனாவும் அதை வாங்கி விடுவோமா …? இவை உங்களுக்குத்தான் தேவை .எல்லா பங்குகளையும் நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் .நாங்கள் எல்லோரும் போகிறோம் .ஆனால் எங்கள் திருமணத்தை உங்களால் தடுக்க முடியாது .வா சந்தனா ….” என அவன் கைகளை நீட்ட , சற்றும் தயக்கமின்றி சந்தனா அவன் கைகளை கோர்த்துக் கொண்டாள் .

இவ்வளவு பிரச்சினை நடந்த்தால் வீட்டிலிருந்த உறவினர்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டிருந்தனர் .

சந்தனாவின் கையை பிடித்தபடி ஷியாம் வெளியேற , ” நாளை நல்ல நாள்தான் சௌந்தர்யா .நாளையே எஎல்லா பங்குகளையும்  உன் பெயரில் மாற்றி விடுகிறேன் ்என் பங்குகளையும் சேர்த்து …” என்றபடி சிவராமன் எழ தன்னை திரும்பியே பார்க்காமல் போன மகளையும் , பார்க்கவே பிடிக்காமல் திரும்பி நின்ற அப்பாவையும் பார்த்து தன் முட்டாள்தனம் புரிந்து  “அப்பா ….” என கதறியபடி அவர் கால்களில் விழுந்தாள் சௌந்தர்யா .




” வேண்டாம்பா எனக்கு இந்த பணம் , சொத்து எதுவும் வேண்டாம் ்எனக்கு நீங்கள் எல்லோரும்தான் வேண்டும் ்சொந்தங்கள் வேண்டும் .என்னை மன்னித்து விடுங்கள் ” அவளை எழுப்பி கண்களை துடைத்து அணைத்துக கொண்டார் சிவராமன் .

” சொந்தங்கள் தரும் பாதுகாப்பை விட பணம் பாதுகாப்பை தந்து விடாது சௌந்தர்யா .இதனை நீ புரிந்து கொண்டால் போதும் “

” புரிந்து கொண்டேன் அப்பா .அடுத்த முகூர்த்தத்திலேயே ஷியாம் , சந்தனா திருமணத்தை முடித்து விடலாம் “

ரூமிற்கு வெளியே நின்றிருந்த ஜோடிகள் உள்ளே வந்தனர் .

” அட …என்ன அருமையான குடும்பம் .எல்லோரும் இருங்க … சுத்தி போடுறேன் …” உப்பும் , வத்தலும் எடுத்தபடி வந்தாள் சொர்ணா .அமிர்தன் நகர்ந்து அமுதாவின் தோள்களை அணைத்தபடி நிற்க ” சரிப்பா உன் பொண்டாட்டியை நாங்க யாரும் கூட்டிட்டு போயிட மாட்டோம ” என கேலி செய்தபடி சொர்ணா திருஷ்டி கழிக்க துவங்கினாள் .

” லட்டு மாதிரி கையில் கிடைத்த பங்குகளை ஈஸியாக தூக்கி கொடுக்கிறானே ….இவனையெல்லாம் நம்பி கல்யாணம் பண்ண முடியுமா …? என் அப்பா சொல்கிற மாப்பிள்ளைக்கு சரி சொல்லிட போறேன் .அவர் பெரிய எஸ்டேட் ஓனராம் …” வர்ஷா மைதிலியிடம் கிசுகிசுத்தாள் .

” அது சரி …புளிக்கிற திராட்சை நமக்கெதுக்குடி …மழை நிற்கிற மாதிரி இருக்கு .வா …நாம் நம்ம வீட்டை பார்த்து போவோம் ” என்றாள் மைதிலி .

மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக் கொண்டிருந்த மழையுடன் ” போதும் நின்றுவிடு , என் பெற்றோர் மறைவிற்கு பின் இன்றுதான் என் வாழ்க்கை மலர்ந்துள்ளது .இப்போதேனும் உன் கொடூரத்தை நிறுத்திக் கொள் ” என மனதோடு பேசிக்கொண்டிருந்தாள் அமுதா .

” ஏய் அமுதா இங்கே என்ன பண்ற ..? ” சந்தனா அவள் பின்னால் வந்து நின்றாள் .

” இதோ இந்த மழையிடம் நிற்க சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் சந்தனா .இப்போது இதை பார்த்தால் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா ..? “

நிற்க துடித்த மழை 
நிலவினை நனைக்க எண்ணி 
தயங்கி தயங்கி 
சாரலாகி ..தூறலாகி ..துளியாகி 
கரைகிறது …என் மனதினை போல் …

என கவிதை சொன்னாள் .




” ஆஹா கவிதை ..கவிதை ..அத்தான் பார்த்துக்கோங்க உங்க அம்மு எப்படி கவிதை மழை பொழிகிறாளென்று …” என்ற சந்தனாவின் குரலில் …அத்தானா …? என திரும்பி பார்க்க , இடுப்பில் கைகளை தாங்கி நின்றபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அமிர்தன் .

தெறிக்கும் சாரல் குளிர் மறைந்து , வெம்மை பரவியது அமுதாவினுள் .பார்க்கிற பார்வையை பார் …என அவனை செல்லமாக முறைத்தாள் .

” கவிதையா ..? கொஞ்ச நேரம் முன்னால் என்னை கலங்கடித்து விட்டு ..இப்போது ஏகாந்தமாக கவிதை பாடுகிறாளா …? இவளை …” உதட்டினை மடித்து அவன் ஒற்றை விரலை ஆட்ட …

” என்னண்ணா …என்ன பண்ண போகிறீர்கள் …? ” என்றபடி  ஷியாம் வந்தான் .

” ஷியாம் மச்சான் …உங்களுக்குக்காக பேச போய் இப்போது நீங்களே எனக்கு எதிரியா …? ” அமுதாவின் முறைப்பு ஷியாம் பக்கம் திரும்பியது .

” சேச்சே எதிரியா ..? நான் உன் நண்பேன்மா .சும்மா என் அண்ணனுக்கு ஒன்றிரண்டு பாய்ண்ட் எடுத்துக் கொடுக்கலாம்னு வந்தேன் .ஏன் அண்ணா அப்படி திடீரென்று  வீட்டை விட்டு போவதாக அமுதா சொன்னாள் .கேட்டீர்களா …? ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு தூண்டிவிட்டான் ஷியாம் .

” அதை கேட்கத்தானடா வந்தேன் ” என்ற அமிர்தன் அமுதாவை நெருங்கி அவளது நீள பின்னலை இழுத்து தன் கைகளில் சுற்றிக்கொண்டு ” அப்படி போயிடுவியா நீ ..? ” என உலுக்கினான் .இந்த உலுக்கல் இப்போது போய்விடுவதாக சொன்னதற்கு இல்லை .அப்போது வீட்டை விட்டு போனதற்கு என உணர்ந்தாள் அமுதா .

” ஆ…ஆ…வலிக்குது அத்தான் ..விடுங்கள் ….” என்றவள் .” சந்தனா …உன் மச்சான் தன்மானம் …சுயகௌரவம் என ஏதேதோ சொன்னாரே …? அது விபரம் கேட்டாயா ..? என அவளை தூண்டினாள் .

இப்போது முறைப்பது சந்தனாவின் முறையாயிற்று .” யோவ் மச்சான் என்னய்யா இது …? ஏதேதோ சொன்னாயாமே ..? ” என அவள் ஷியாமின் சட்டையை பிடித்து இழுத்து உலுக்க அவன் …

” சந்து ப்ளீஸ் நாம் இப்போது தனியாக இல்லை .கொஞ்சம் மரியாதையாக பேசினால் நன்றாக இருக்கும் …” ஷியாம் குரலை குறைத்து குழைய ….

” உனக்கென்னய்யா மரியாதை …? ” என மேலும் எகிற ஆரம்பித்தவளின் வாயை பொத்தி ஜாடை காட்டினான் ஷியாம் .

அங்கே பின்னலை இழுத்து பிடித்தபடியிருந்த அமிர்தனும் , அவனை தடுக்க முயற்சித்த அமுதாவும் ஒருவரையொருவர் பார்த்தபடி அப்படியே சிலையாய் நின்றிருந்தனர் .

சத்தமில்லாமல் அவர்கள் இருவரின் அருகில் சென்றவர்கள் , ” ஆ ” என ஒன்று போல் கத்த , திடுக்கிட்டு திரும்பிய அமுதாவும் , அமிர்தனும் தாங்களும் அலறி மீண்டும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர் .




” சுத்தம் …” என தன் தலையில் தட்டிக்கொண்ட ஷியாம் ” அண்ணா இது உங்களுக்கே கொஞ்சம் ஒவராக தெரியவில்லை …? ” என்றான் .

” ஏய் நாங்க புருசன் ..பொண்டாட்டிடா …உங்களை யார் இங்கே இருக்க சொன்னது ..? முதலில் இடத்தை காலி பண்ணுங்க ” என்றவன் சந்தனாவின் கைகளோடு தன் கைகளை கோர்க்க முயன்ற ஷியாமின் கைகளை தட்டி விட்டான் .

” ஏய் ..தனியாக தள்ளி போடா …சந்தனா நீ உன் அம்மாவிடம் போ ” என்றான் .ஷியாம் நொந்து போய் சந்தனாவை பார்வையால் விழுங்கியபடி நடந்தான் .இந்த இடைவெளியில் அமிர்தனிடமிருந்து நழுவிய அமுதா வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

மீண்டுமொரு முறை சந்தனாவையும் , ஷியாமையும் ” ஏய் …தள்ளிப் போய் ஒழுங்காக அவரவர் அறைகளில் படுத்து தூங்குங்க ” என எச்சரித்து அனுப்பிவிட்டு அமுதாவின் பின்னாலேயே அறையினுள் நுழைந்த அமிர்தன் கதவை சார்த்தி தாளிட்ட கையோடு உள்ளே நகர முயன்ற அமுதாவை இழுத்து .இறுக்கமாக அணைத்தான் .

இன்னமும் கொஞ்சம் விழுந்து  கொண்டிருந்த மழை அனுப்பிய குளிர் காற்று அவர்கள் இருவருக்கிடையே நுழைய சிறிதும் இடம் கிடைக்காது தோற்று அவர்களை சுற்றி படர்ந்த்து .அது தந்த கூதலில் உடல் சிலிர்த்து கணவனும் , மனைவியும் மேலும் பிணைந்து கொண்டனர் .

” ரொம்ப குளிருது ..இல்ல …? ” கேட்டபடி முரட்டுத்தனமாக அமுதாவை இறுக்கி தழுவினான் அமிர்தன் .வழக்கமாக அவனது  முரட்டுத்தனத்தை வெறுக்கும் அமுதாவினால் இந்த வேகத்தை வெறுக்க முடியவில்லை .” ம் …எனக்கு ஒண்ணும் குளிரலை …என்னை விடுங்க …எனக்கு கேட்க நிறைய கேள்வி இருக்கு ….” ஊடலாய் சிணுங்கினாள் .

” கேளு கண்ணம்மா உன் கேள்விகளையெல்லாம் ஒவ்வொன்றாக கேளு .ஆனால் இப்போது இல்லை நாளை காலை …அதன் பிறகு காலம் முழுவதும் கேட்டுக்கொண்டே இரு ,நான் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கிறேன் ….இப்போது வேறு முக்கியமான வேலை இருக்கிறது செல்லம் ….” என்றபடி அவள் இதழ்களை தன் இதழ்களால் மூடினான் .

சிறு மூச்சு வாங்கலுடன் தன்னை விடுவித்துக் கொண்டவள் ” அப்பா …என்ன முரட்டுத்தனம் …” செல்ல கோபத்துடன் அவனை தள்ளினாள் .தள்ளிய வேகத்தில் மீண்டும் அவளை அணுகியவனின் கையில் சிக்காமல் நகர்ந்தபடி …

” சிறு பெண்ணென்று கூட  நினைக்காமல் அப்போதெல்லாம் என்னை காயப்படுத்திக் கொண்டே இருந்தீர்களே ..ஏன் அத்தான் …?  ” கேட்டவளின் கண்களில் சிறு வேதனை தெரிய தன் வேகம் குறைந்தவனாக அவளை பற்றியிழுத்து கட்டிலில் தன்னருகே அமர வைத்துக்கொண்டான் .

” அது ..எனக்கே தெரியவில்லை அம்மு .ஒருவேளை கலை அத்தை ..உன் அம்மா மேல் இருந்த வெறுப்பை உன் மீது காட்டினேனோ …? இல்லை என்னையறியாமல் உன்னை விரும்பி விடுவேனோ என்ற பயம் காரணமோ …? “

” அம்மா மீது அந்த அளவு ….என்ன வெறுப்பு அத்தான் ? என்னை விரும்பி விடக் கூடாது என்பதில் ஏன் அவ்வளவு கவனம் ….? “




” உன் அம்மாவும் நானும் நல்ல ப்ரெண்ட்ஸ் தெரியுமா ..? அவர்களுக்கு நான்தான் விளையாட்டு தோழன் .வெளியே எங்கே போனாலும் என்னை அழைத்துக் கொண்டுதான் போவார்கள் .அவர்களுக்கும் , சேதுராமன் அங்க்கிளுக்கும் திருமணமென்று நம் வீட்டில் நிச்சயித்து இருந்தார்கள் .எனக்கு அப்போது எட்டு வயது .சேதுராமன் அங்க்கிளுக்கும் என்னை மிகவும் பிடிக்கும் .” உன் அப்பனெல்லாம் தொழிலுக்கு ஆக மாட்டான் .நீதான்டா என் வாரிசு ..” என அவர் அப்போது அடிக்கடி சொல்வார் .எப்போது பார்த்தாலும் தொழில் , பணமென்று …என்ன பேச்சு மாமா இது ..? என அத்தை அவரிடம் முகம் சுளிப்பார்கள் .

” ஏன் அப்போது உனக்கு பணம் வேண்டாமா ..? “

” வேண்டும்தான் ஆனால் தேவைக்கு மட்டும். .இப்படி பேயாய் திரிந்து அளவில்லாமல் சேர்க்கும் அளவு இல்லை ” என்பார்கள் உன் அம்மா .

ஆனால் சேதுராமன் அங்கிளுக்கு அப்போது பணம் சம்பாதிப்பதில் அவ்வளவு வெறியிருந்த்து .இருவருக்கும் திருமணம் செய்விப்பதாக பேச்சிருந்தாலும் அப்பொதெல்லாம் அவ்வளவ்வு எளிதாக இளம்வயதினர் தனிமையில் பேசி விட முடியாது .அதனால் என்னை பார்க்க வரும் சாக்கில்தான் அத்தையை பார்க்க வருவார் .இருவருக்கும் தனிமை அனுமதிக்க படாததால் வீட்டின் ஹாலில் என்னை இடையில் வைத்து பேசிக்கொள்வார்கள் .

ஆனால் காதல் வசனமென்று இருவரும் எதுவும் பேசியதாக எனக்கு அப்போது என் வயதிற்கேற்ற விபரம் வரை தோணவில்லை .சேதுராமன் அங்க்கிள் தன் தொழில் சாதனைகளை சொல்ல அத்தை உம் கொட்டிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள் .சில நேரம் இருவரும் சண்டை போட்டுக் கொள்வார்கள .காரணம் எனக்கு புரியவில்லை .ஆனால் அத்தை முதலிலிருந்தே அங்க்கிள் மீது அதிருப்தியிலேயே இருந்திருக்கிறார் என அவர் வீட்டை விட்டு வெளியேறியதும்தான் தெரிந்த்து .

உன் தந்தை நம் கம்பெனியில் மேனேஜராக சேர்ந்தார் .அவரை எப்போது எப்படி அத்தைக்கு பிடித்ததோ …தெரியாது .எனக்்கென்னவோ அத்தைக்கும் , அங்கிளுக்கும் இடையேயிருந்த சிறு வேறுபாட்டை தனக்கு சாதகமாக உன் தந்தை மாற்றிக் கொண்டார் என அப்போது மட்டுமல்ல ..இப்போதும் தோன்றுகிறது .” முகம் சுளித்தபடி கூறினான் .

” அதனால்தான் என் அம்மா , அப்பா பேச்சை எடுத்தாலே என்னை காயப்படுத்திக் கொண்டே இருந்தீர்களா …?ஆனால் நீங்கள் நினைப்பது போல் இல்லை அத்தான் .என் தாய் , தந்தையுடன் நான் பதினைந்து வருடங்கள் வாழந்திருக்கிறேன் .முதல் பத்து வருடங்களை தள்ளி விட்டாலும் இறுதி ஐந்து வருடங்கள் எனக்கு ஓரளவு விபரம் புரிகிற வயதுதான் .இது பிடிக்காததால் அது ….என ஏற்றுக்கொண்ட தலைவிதியே என்ற வாழ்வில்லை அவர்களுடையது …ஆத்மார்த்தமான அன்பும் , காதலுமாக பிணைந்து வாழ்ந்தார்கள் .”

” என்னவோ …போ …எனக்கு அதை பேசவோ ..நினைக்கவோ விருப்பமில்லை .மழை நின்று விட்டது போலவே ….” எழுந்து போய் ஜன்னல் வழியாக வெளியே பார்க்க தொடங்கினான் அமிர்தன் .

அவனது வேதனை புரிந்து அவனருகே சென்றவள் வெளியே பார்த்து ” ஆமாம் மழை நிற்க தொடங்கிவிட்டது ” என்றாள் .

கொஞ்சம் அவன் மூடை மாற்ற எண்ணி ” இந்த இடைவிடாத மழை எவ்வளவு விரயங்களை ,மனித பலிகளை தந்துவிட்டது பார்த்தீர்களா அத்தான் …? ஏரியில் வீடு கட்டினால் இப்படித்தான் ஆகும் ” சிறு வருத்தமும் இழையோட கேட்டாள் .




” இல்லை …அப்படியில்லை ஏரியில்தான் சென்னையே கட்டப்பட்டிருக்கிறது …” வெளியே பார்த்தபடி கேறினான் .
” என்னது ..? நிஜம்மாகவா ..அத்தான் …? “

” ம் …நூறு வருடம் முன்பு ஏரியாக இருந்த இடத்தில்தான் இப்போதைய தென்சென்னையே உருவாகியிருக்கிறது .தியாகராய நகர் , பனகல்பார்க் , நுங்கம்பாக்கம் ,வள்ளிவர்கோட்டம் …எல்லாமே ஏரிதான் …”

” ஓ…ஆனால் அதெல்லாம் வெள்ளத்தால் முழுகலையே …? “

” அதெல்லாம் கட்டுறப்பவே ஒழுங்காக பாதாளசாக்கடை , மழைநீர்கால்வாய்னு சரியான முறையில் கட்டினாங்க ..இப்போ புதிதாக கட்டுகிற இடத்தில் இதையெல்லாம் முறையாக செய்வதில்லை .அதுதான் இந்த பேரழிவிற்கு காரணம் “

” ஓ…இந்த வெள்ளத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் அத்தான் ” மெல்ல அவன் தோள்களில் தன் முகத்தை வைத்தவள்  பின்னிருந்து அவனை அணைத்துக கொண்டாள்  .

” நிச்சயமாக நமது கம்பெனி சார்பாக ஒன்றிரண்டு ஏரியாவை தத்தெடுத்துக் கொண்டு சரி செய்யலாமென்றிருக்கறேன் .நாளையே அந்த ஏற்பாடுகளை நாம் இருவரும் சேர்ந்தே செய்யலாம் “

” ம் …அத்தான் என் அம்மா ..அப்பா பற்றி 




நான் சொல்வது நிஜம்தான் அத்தான் .அவர்களுடையது உண்மையான காதல்தான் நம்முடையது போல ” என்றாள் .

அமுதாவின் அணைப்பிற்கு பதில் கொடுக்கவில்லை அவன் .சன்னல் கம்பிகளை இறுக பற்றியிருந்தான் .” அன்று என்ன நடந்த்து தெரியுமா ….? உன் அம்மா வீட்டை விட்டு போவதற்கு , சந்தேகம் வராமலிருக்க என்னை கருவியாக உபயோகித்துக் கொண்டார்கள் …”

” என்னத்தான் சொல்கிறீர்கள் …? ” அமுதா அதிர்ச்சியாக கேட்டாள்

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!