Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 18

18

 

 

” புது பேக்டரி ஆரம்பிக்கிறோமில்லையா …? அதறகேற்றாற் போல் வேலை இருக்குமே …”

” எத்தனை வேலையிருக்கட்டுமே …அதறகாக வீட்டை கவனிக்காமல் விட வேண்டுமா …? “

” எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன் …”

” என்ன ஏறபாடு செய்தீர்கள் …? சுகன்யாவிற்கு ஒரு மாதமாக உடம்பு சரி இல்லாமல் இருக்கிறது .அது தெரியுமா உங்களுக்கு …? “




” அப்படியா ….எனக்கு தெரியாதே …”

” இது என்ன பதில் பாலா . இதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கிறதா …? “

” சுகன்யா என்னிடம் ஒன்றும் சொல்லவில்லை ஜீவா .அவள் சொல்லாமல் அவள் உடம்பை பற்றி எனக்கு எப்படி தெரியும் …? “

” அவள் உங்கள் மனைவி பாலா .அவள் சொல்லாமலேயே அவள் உடலை நீங்கள் கவனிக்க வேண்டாமா …? “

” இப்போது என்ன செய்ய வேண்டுமென்கிறீய் ….? “

” வீட்டிற்கு போங்க பாலா .சுகன்யா உடலை விசாரியுங்கள் …”

” ம்ப்ச் பிறகு போகிறேன் .இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது ….”

” நான் உங்களை பொறுப்பானவர் என்று நினைத்தேன் பாலா …” 
” சுகன்யாவை கவனித்துக் கொள்ள அவள் அம்மா இருக்கிறார்கள் ஜீவா .நானே கவனிக்க வேண்டிய வேலைகள் இங்கே நிறைய இருக்கிறது ….”

” சுகன்யாவும் நீங்களே கவனிக்க வேண்டியவள்தான் .அவள் உங்கள் மனைவி ….உங்கள் வாழ்க்கை …”

” போதும் நிறுத்துகிறாயா …? ” சிவபாலனின் வேகத்தில் பயந்து போனாள் .எதற்கு இத்தனை ரௌத்ரம் இவனுக்கு …?

பயத்தில் மிரள …மிரள விழித்துக் கொண்டிருந்தவளை பார்த்ததும் , பற்களை கடித்து தன் வேகத்தை அடக்கிக் கொண்டான் .” ஓ.கே .போகிறேன் ….” கைகளை உயர்த்தி ஒப்புக் கொடுத்தான் .பிறகு படபடவென நடந்து போனான் .

” மனைவியின் உடலை கூட கவனிக்காமல் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டுமா ஜீவிதா …? ” கேட்டபடி வந்தான் கைலாஷ் .

” ஒட்டுக் கேட டுக் கொண்டிருந்தாயா …? ” முறைத்தாள் .

” இல்லையே ..காற்றுவாக்கில் காதில் விழுந்த்து ….”

” பேக்டரியில் உனக்கென்ன வேலை கைலாஷ் ….? எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கிறது .க்ளினிக்கில் பேஷன்ட்ஸ் வெயிட் பண்ணிக் கொண்டிருப்பார்கள் . நீ போய் அவர்களை பார் ….” விரட்டினாள் .

” ம் ….உன்னை என் க்ளினிக்கில் வேலை பார்க்க கூப்பிட்டிருந்தேன் .இப்போது உன்னிடம் நான் வேலை பார்ப்பது போல் இருக்கிறது …” புலம்பியபடி போனான் .




அவன் சொல்வது உண்மைதான் .விடாமல் பின்னால் ஒட்டிக் கொண்டு வருபவனை இப்படித்தான் எதையாவது வேலையை  சொல்லி விரட்டிக் கொண்டிருந்தாள் ஜீவிதா .அங்கே எனக்கு வேலை செய்ய ஆயிரம் பேர் காத்துக் கொண்ணிருக்கிறார்கள் ்இங்கே நான் உனக்கு வேலை பார்த்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் …முணுமுணுத்தபடீயே என்றாலும் தான் சொன்ன வேலைகளை தட்டாமல் செய்பவனை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா .

” பாப்பு ….” பின்னால் கேட்ட அழைப்பிற்கு திரும்பியவள் திகைத்தாள் .கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தாள் சசிகலா .சொத்துக்களை பிரித்து பிறகு ஒருவர் இடத்திற்குள் இன்னொருவர் கால் வைப்பதில்லை என்பதனை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர்கள் சௌதாமினியும் , சசிகலாவும் .இப்போது தங்கள் இடம் தேடி வந்திருக்கிறாளென்றால் ….

” என்னாச்சு சித்தி … ? சுகன்யாவிற்கு ஏதாவது ….? ” பதறியவளை தடுத்தாள் .

” இல்லைம்மா .நேற்று நீ பார்த்து விட்டு போனதிலிருந்து அவளுக்கு எவ்வளவோ தேவலை .இன்று எரிச்சல் நன்றாக குறைந்திருக்கிறதென்றாள் .நன்றாக சாப்பிட்டாள் …”

” பிறகென்ன சித்தி .நான் இன்று இரவும் வந்து அவளை திரும்ப செக் பண்ணுகிறேன் …”

” நீ வருவாய் பாப்பு . அவள் உடம்பை குணப்படுத்துவாய் .ஆனால் மனதை ….அது அவள் உடம்பு புண்ணை விட ரணமாகிக் கிடக்கிறதே …அதை எப்படி சரி பண்ணுவது …? “

” என்ன சொலகிறீர்கள் சித்தி …? “

” என் மகள் …அவள் புருசனோடு வாழாமல் தனித்து இருக்கிறாளே …அதற்கு உன்னிடம் ட்ரீட்மென்ட் இருக்கிறதா …? “




” சித்தி ….” ஜீவிதா அதிர்ந்தாள் .

” ஆமாம் பாப்பு .சிவா சுகன்யாவை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை .அவளோடு சரியாக  பேசுவது கூட கிடையாது .எந்நேரமும் தொழில் தொழிலென்று வெளியேவே சுற்றுகிறான் .நீ …அவனிடம் கொஞ்சம் பேசேன் .அவன் மனைவியை , குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லேன் ….”

இது ஜீவிதாவே சற்று நேரம் முனபு செய்த்துதான் . ஆனாலும் அதனை பிறர் செய்ய சொல்லி கேட்ட போது …எனக்கென்ன இதுதான் வேலையா ….என்று கோப்பட தோன்றியது .அவர்கள் வாழவு அவர்கள் பொறுப்பு எனக் கத்த தோன்றியது .இது போல் எதுவும் நடந்து விடுமோ என்ற பயத்துடன் ” நான் பாலாவிடம் பேசுகிறேன் சித்தி …” என அவளை அனுப்பினாள் .

தனியாக அமர்ந்து தன்னைத்தானே கொஞ்சம் சமனப்படுத்திக் கொண்டாள் .மாலையில் நீலவேணிக்கு போன் செய்து விசாரித்த போது சிவபாலன் வீட்டிற்கே வரவில்லை என அறிந்தாள் . நிம்மதி போலொன்றை தனக்குள் உணர்ந்த்தில் மிரண்டு போய் அமர்ந்திருந்த போது சிவபாலன் உள்ளே வந்தான் .

” இதில் ஒரு கையெழுத்து போடு பாப்பு . லெதர் பேக்டரி லைசென்ஸ் ரினீவல் பண்ண வேண்டும் …” என வந்தான் .

” நீங்கள் வீட்டுக்கு போனீர்களா இல்லையா …?

” வீட்டிற்கா …இப்போது எதற்கு …நான் நைட் போகிறேன் .நீ கையெழுத்து போடு …இங்கே பார் பென்சிலால் மார்க் பண்ணியிருக்கிறேன்….” அவன் தன் முன்னால் வைத்த பேப்பர்களை ஆத்திரத்துடன் கீழே தள்ளினாள் .

” நான் என்ன சொல்கிறேன் ….நீங்கள் என்ன செய்கிறீர்கள் …? “

வரிசைப்படுத்தி அடுக்கி எடுத்து வந்த பேப்பர்கள் களைந்து பறந்து தரையில் கிடக்க , சிவபாலன் கோபமாக பார்த்தான் .

” ஏய் …உனக்கு என்னடி வேணும் …? ஏன் இப்படி படுத்துகிறாய் ….? ” கத்தினான் .

” நீங்கள் உடனே வீட்டிற்கு போய் சுகனயாவை பார்க்க வேண்டும் ….”

” முடியாது …போடி …” அலடசியமாக கையசைத்து விட்டு போய்விட்டான் .

.
அன்று மட்டும் அல்ல …தொடர்ந்து வந்த நாட்களிலும் அவன் சுன்யாவிடம் ஒரு வார்த்தை உடல் நலம் விசாரிக்கவில்லையென தினமும் செக்கப் பண்ண போகும் போது சுகன்யா மூலமே அறிந்து கொண்டாள் .




இப்போது இதற்கு தான்தான் காரணமோ என்ற உறுத்தல் ஜீவிதாவிற்கு வரத் துவங்கியது .இது வரை கணவனும் , மனைவியும் நன்றாகத்தானே பழகி வந்திருக்கிறார்கள் …குழந்தை உருவாகும் அளவு .இப்போது தன்னை பார்க்கவும் சுகன்யாவை தவிர்க்கிறானோ ….என்ற எண்ணம் ஜீவிதாவை உறுத்த தொடங்கியது .

சுகன்யா கருவுற்றிருந்த செய்தி அறிந்த நாள் தந்த அதிர்ச்சி இப்போது போல் ஜீவிதாவின் நினைவில் வந்த்து .

அன்று இருவரும் திருமணம் முடித்து வந்த்தை பார்த்ததும்  அதிர்ச்சியில்  இரண்டு நாட்களாக  வீட்டினுள் முடங்கி கிடந்தாள் .துளி தண்ணீர் கூட தொண்டையில் இற்ங்காமல் அப்படியே கிடந்திருப்பாள் .ஆனால் அதற்கு அவளை விடவில்லை சௌதாமினி .அதட்டி , விரட்டி எதையாவது வாயில் திணித்து , கொஞ்சி , பேசி ..சமாதானப்படுத்தி ….என ஏதேதோ செய்து மகளை மீட்டெடுக்க போராடினாள் அவள் .ஆனால் சகஜமாக முடியாமல்  ஜீவிதா தவிக்க , அரை உயிராய் கிடந்த மகளை மனதை கல்லாக்கிக் கொண்டு , ஹாஸ்டலில் போய் விட்டு விட்டு வந்தாள் .

அவளது யுக்தி பலித்து , அங்கே வெளியாட்கள் முகம் பார்த்து , பேசி …கல்லூரிக்கு போய் என …ஒரு மாதத்தில் ஜீவிதா கொஞ்சம் தேறியிருக்க , பாட்டிக்கு உடம்பு சரியில்லையென்ற தகவலுடன் வந்து நின்றார் சபாபதி .

சட்டென மனம் பதறினாலும், உடனே கிளம்பிய கால்கள் சிவபாலனை நினைத்ததும் தயங்கியது .

” இப்போது வேறு எதையும் நினைக்காதே பாப்பு .பாட்டி தனது கடைசி நேரத்தில் இருக்கிறார்கள் .உன்னை உடனே பார்க்க வேண்டுமென நினைக்கிறார்கள் .கிளம்புடா …”

அதன்பிறகு ஜீவிதா தயங்கவில்லை .உடனே கிளம்பிவிட்டாள் .வீட்டினுள் கார் நுழைந்த போது வீட்டின் உள்ளேயும் , வெளியேயும் நிறைந்தருந்த உறவினர் கூட்டம் அவள் வயிற்றில் புளியை கரைத்தது .எதற்கு இவ்வளவு கூட்டம் ….ஆதரவிற்காக அப்பாவின் கையை பற்ற ,அவர் கைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன .




வீட்டின் ஹாலில் கட்டில் போடப்பட்டு பாட்டி அதில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் .பொங்கிய அழுகையை அடக்கியபடி ஜீவிதா அவர்ருகில் அமர்ந்து பாட்டி கைகளை பற்றினாள் .அவளை பார்த்ததும் சௌந்தரத்தின் கண்களில் ஒளி வந்த்து .அவளை அருகே வரும்படி அழைத்தார் .அவர் உதடுகள் எதையோ முணுமுணுக்க , குனிந்து தன் காதினை அவர் வாயருகே வைத்தாள் .

” மன்னிச்சிடு பாப்பு …” தெளிவாக சொன்ன விநாடி பாட்டி உயிர் பிரிந்தது .சுற்றியிருந்தோர் கத்தி கதற துவங்க அழக்கூட தோன்றாமல் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் ஜீவிதா .பாட்டி கடைசியில் கேட்ட மன்னிப்பு அவள் மனதை மிகவும் பாதிக்க பொம்மை போல் எழுந்து அந்த இடத்திலிருந்து விலகினாள் .பின்வாசலில் வந்து உட்கார்ந்து கொண்டாள் .

” நீங்கதான் என்னை மன்னிக்கனும் பாட்டி .சுயநலத்தோடு நானதான் உங்களை பார்க்க கூட வரமாட்டேன்னு சொல்லிட்டிருந்தேன் ….சாரி பாட்டி …” தனியாக பேசிக் கொண்டிருந்த போதே அழுகையில் அவளுக்கு உதடு பிதுங்கியது .கேவத் தொடங்கினாள் .




” கட்டுப்படுத்திக்கோ ஜீவா …” அவள் தலை வருடப்பட்டது .சிவபாலன்தான் . வாசலின் மேல் படியில் அமர்ந்திருந்தான் .அவனை பார்த்ததும் தூண்டி விடப்பட்ட துக்கத்தில் அழுகை பொங்க , பாலா என கதறியபடி அவன் மடி சாய்ந்து விட்டாள் .

What’s your Reaction?
+1
7
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!