Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 17

17

 

 

 

சௌதாமினி தன் வாழ்நாளிலேயே அன்றுதான் மிகவும் சந்தோசமாக இருந்தாள் .முகத்தை உயர்த்தியபடி ஒரு மாதிரி கீழ்ப்பார்வையில் சசிகலாவை பார்த்தாள் .

” என்ன விசயம் ….? “

” பா…பாப்புவை எங்க வீட்டுக்கு வரச் சொல்லனும் …”

” எதற்கு …? “




” சுகன்யாவிற்கு உடம்பு சரியில்லை .ரொம்ப கஷ்டப்படுகிறாள் .அதுதான் ….”

” ஓ…நீங்கள் டாக்டரம்மாவை பார்க்க வந்தீர்களா …? அவுங்க இப்போ பிஸியாக இருக்கிறார்களே …” வராண்டா சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள் சௌதாமினி .

சசிகலா முகம் கன்ற நின்று கொண்டிருந்த போது ,காலிங் பெல் சத்தத்திற்கு அப்போதுதான் இறங்கி வந்த ஜீவிதா வாசலில் சசிகலாவை பார்த்து வியந்தாள் .

” வாங்க சித்தி .என்ன விசயம் …? “

” எங்க வீட்டுக்கு வரமுடியுமா பாப்பு …? “

” யாருக்கும் உடம்பு சரியில்லையா சித்தி ….” ஜீவிதாவின் மருத்துவ மூளை உடனடியாக உணர்ந்து கொண்டது .உடனேயே கிளம்புவதற்கான ஆயத்தங்களிலும் இறங்கிய ஓரகத்தியின் மகளை கண் கலங்க பார்த்தவள் …

” சுகன்யா …அனத்திக் கொண்டிருக்கிறாள் …நீ ஒரு நிமிடம் வந்து பார்க்கிறாயா பாப்பு ….” இறைஞ்சலாய் கேட்டாள் .




” டாக்டரம்மா ….” அதிகாரமாய் அவளின் அழைப்பை திருத்தினாள் சௌதாமினி .

” வந்து பாருங்கள் டாக்டரம்மா ….” குரல் நடுங்க தலை குனிந்தாள் சசிகலா .

” அம்மா  வாயை மூடுங்க .நீங்க முதலில் உள்ளே வாங்க சித்தி .பைவ் மினிட்ஸ் .நான் டிரஸ் மாத்திடுறேன் ….” சௌதாமினியின் முறைப்பை தாண்டி சசிகலாவின் கையை பிடித்திழுத்து வந்து உள்ளே சோபவில் அமர்த்தியவள் …சுடிதாரோடு பக்கத்து அறைக்குள் போனாள் .

” சுகன்யாவிற்கு உடம்பு என்ன செய்கிறது சித்தி …? ” நைட்டியை மாற்றியபடியே உள்ளறையிலிருந்து குரல் கொடுத்தாள் .

” காய்ச்சல் …உடமபெல்லாம் வலிக்கிறதுன்னு கத்தி கட்டிலில்  உருளுகிறாள் ….” தன்னை திமிர் பார்வை பார்த்துக் கொண்டிருந்த சௌதாமினி பக்கம் திரும்பாமல் சொன்னாள் சசிகலா .

” கடவுள் இருக்கிறார்னு நம்பத்தான் வேண்டியிருக்குது . எட்டி மிதிச்சுட்டு போனவங்களெல்லாரும் திரும்பி வந்து கை கூப்பி வாசலில் நிற்கிறார்கள் …” சௌதாமினி தன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தாள் .

” அம்மா புனிதமானது இந்த தொழில் .இதனை உங்கள் பழி வாங்கும் வேலைக்கு பயன்படுத்தாதீர்கள் .பேசாமல் உள்ளே போய் படுங்க .வாங்க சித்தி …” சசிகலாவின் கையை பிடித்தபடி தன் மெடிக்கல் கிட்டுடன் வெளியேறினாள் ஜீவிதா .

சசிகலா சொன்னது போலவே சுகன்யா கட்டில் மேல் அங்குமிங்குமாக உருண்டு கொண டுதான் இருந்தாள் .” ஆ…அம்மா …எரியுதே ….தாங்க முடியலையே ….” என கத்திக்கொண்டிருந்தாள் .

” சுகன்யா என்னம்மா என்ன ஆச்சு …? ” ஜீவிதா அவள் கையை பற்ற அது கொதித்தது .




” இவளை நேராக பிடிங்க சித்தி …” என்க சுகன்யா சசிகலவின் பிடிக்கு கட்டுப்படாமல் திமிறி உருண்டாள் .

” ஹெவி பீவர் இருக்குது .முதலில் அதை குறைக்க இன்ஜெக்‌ஷன் போடனும் .பாலாவை எங்கே …அவரைக் கூப்பிடுங்க .இவளை அசைய விடாமல் பிடிக்கனும் “

” அவன் பாக்டரி போயிருக்கிறான் .நான் வருகிறேன் ….” என வந்தாள் நீலவேணி .இருவருமாக கஷ்டப்பட்டி சுகன்யாவை பிடிக்க , அவளை செக் செய்த ஜீவிதா …காய்ச்சலின் அளவுக்கு அதிர்ந்தாள் .

” எத்தனை நாளாக இந்த காய்ச்சல் இருக்கிறது …?கவனிக்காமல்   நீங்கள் எல்லோரும் என்ன செய்கிறீர்கள் …? ” உடனடியாக காய்ச்சல் குறைய மருந்தை சிரிஞ்சில் ஏற்றினாள் .

” எனக்கு தெரியலை பாப்பு .அம்மாவும் , மகளும் இன்னைக்கு காலையில்தான் உடம்பு சரியில்லையென்று என்னிடமே சொன்னார்கள் .நான் அப்போதே உன்னை க்ளினிக்கில் போய் பார்க்க சொன்னேன் .இவர்கள் இரண்டு பேரும்தான் உன்னை பார்க்க மனமில்லாமல் நாளை காலை டவுனில் கொண்டு போய் காட்டிக் கொள்கிறோமென்று விட்டார்கள் .இப்போது …இந்த ராத்திரியில் ….உடம்பு ரொம்ப முடியாமல் போகவும் உன்னிடம் ஓடி வந்திருக்கிறார்கள் ….” எனக்கு ஒன்றும் தெரியாது என ஒதுங்கக் கொண்ட நீலவேணியை எரிச்சலாக பார்த்தாள் .

” ஒரே வீட்டில் இருந்து கொண்டு …எனக்கு தெரியாதென்கிறீர்களே அத்தை …? அவள் இடுப்பை திருப்பி காட்டுங்கள் .ஊசி போட வேண்டும் …”

சுகன்யாவின் இடுப்பு சேலையை நெகிழ்த்திய நீலவேணி …” கடவுளே ….என்ன இது …? ” அலறினாள் .எட்டிப் பார்த்த ஜீவிதாவும் அதிர்ந்தாள் .  ” சிவ ….சிவா ….” தன்ச்சையாக கடவுளை அழைத்தாள. .

சுகன்யாவின் இடுப்பில் , அடி வயிற்றில் , தொடையில் என எல்லா இடமும் …புண்கள் .சிறிதும் …பெரிதுமாக …ரத்தம் வடிந்தும் , சீழ் கோர்த்தும் …குதறிப் போய் அருவெறுப்பு தோன்றும் அளவு இருந்தன .




சுகன்யாவின் அதிக காய்ச்சலின் காரணம் இப்போது ஜீவிதாவிற்கு புரிந்த்து .அவசரமாக ஊசியை அவளுக்கு போட்டவள் , தொடர்ந்து அந்த காயங்களை சுத்தம் செய்வதில் இறங்கினாள் .

” சுடுதண்ணீ கொண்டு வாங்க அத்தை …” நீலவேணியை அனுப்பினாள் .

” இது எத்தனை நாளாக இருக்கறது …? ” சசிகலவிடம் கேட்டாள் .
” ஒரு வாரமாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் .நான் நாட்டு மருந்து போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பாப்பு …”

” கிழித்தீர்கள் ….இதோ ….இங்கே பக்கத்தில் இருக்கிறேன் .சன்னல் கதவை திறந்து கூப்பிட டால் கூட வந்துவிடுவேன் .நாட்டு மருந்து போட்டேனென்கறீர்களே ….” சசிகலா மௌனமானாலும் அந்த அமைதியின் பின்னால் உன் அம்மா அப்படி உன்னைக் கூப்பிட விடுவாளாக்கும் இருந்த்து .

சுடு தண்ணீரில் மருந்து கலந்து காட்டனை வைத்து புண்களை சுத்தம் செய்தாள் .சுகன்யா எரிச்சலில் அலறினாள் .

” நீங்களாவது என்னிடம் சொல்லியிருக்கலாமே அத்தை “

” எனக்கே தெரியாதே பாப்பு .நானும் இப்போதுதான் பார்க்கிறேன் ….” சொன்னவளை விநோதமாக பார்த்தாள்.

” உங்கள் மகனும் இதையே சொல்வாரா …? ஒரு மாதமாக பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது .கேட டால் எனக்கு தெரியாது என்பாரா …? நல்ல குடும்பம் ….” ஜீவிதாவின் கேள்விக்கு பதில் சொல்வார் இல்லை .

ஊசிக்கு தூக்கம் வந்துவிட்டாலும் , தூக்கத்திலும் வலியும் , எரிச்சலுமாக அனர்த்திய சுகன்யாவை முன்று பெண்களுமாகபக்குவமாக பார்த்து திருப்பி ஆராய்ந்து உடலின் மறைவுப் பகுதியெங்கும் பரவியிருந்த புண்களுக்கு மருந்திட்டனர் .

டெட்டால் கலந்த நீரினால் அவள் உடல் முழுவதும் துடைத்து விட்ட ஜீவிதா , லேசான காட்டன் நைட்டி ஒன்றை அவளுக்கு அணிவித்தாள் .நல்ல சுத்தமான படுக்கை விரிப்பை மாற்றியவள் , புண்கள் சீக்கிரம் ஆறவென்று இன்னொரு ஊசி போட்டாள் .இப்போது அனத்தல் குறைந்து சீரான மூச்சுடன் சுகன்யா உறங்க ஆரம்பித்தாள் .முழுதாக  மூன்றுமணி நேரம்ஆனது எல்லாவற்றையும் முடிப்பதற்கு .சௌதாமினி ஐந்து முறை மகளை அழைத்துவிட்டாள் .

” இனி போன் பண்ணாதீர்கள் அம்மா .வேலை முடிந்த்தும் நானே வருவேன் ்போனை ஆப் செய்ய போகிறேன் ….” சொல்லிவிட்டு போனை அணைத்து வைத்தாள் .

” இதை குடி பாப்பு …” தன் கைகளை கழுவி துடைத்துக் கொண்டிருந்தவளிடம் பால் டம்ளரை நீட்டினாள் நீலவேணி .




தொடர்ந்த வேலையால் ஜீவிதாவிற்கு அப்போது அது தேவையாயிருக்க வாங்கிக் கொண்டாள் .” உங்களுக்கு அத்தை …? “

” இதோ இருக்கிறதும்மா ….” சசிகலா தனக்கும் , நீலவேணிக்கும் கொண்டு வந்தாள் .” உட்கார்ந்து குடிம்மா …” ஜீவிதாவின் தோள்களை அழுத்தி சோபாவில் அமர வைத்தாள் .

” இது என்னம்மா …? பயப்பட ஒன்றுமில்லையே பாப்பு ….? ” கவலையாய் கேட்டாள் .

” இது அக்கி வகையை சேர்ந்த ஒரு வகை வைரஸ் தாக்குதல் .மு   தலிலேயே கவனித்திருந்தால் லேசாக குணப்படுத்தியிருக்கலாம் .இப்போது முற்ற விட்டு விட்டீர்கள் .மூன்று மாதங்களாவது ரெகுலர் ட்ரீட்மென்ட் எடுத்து வர வேண்டும் .நான் தினமும் இரவு வந்து பார்க்கிறேன் .நீங்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை புண்களை சுத்தம் செய்து நான் கொடுத்திருக்கும் மருந்தை பூசி வாருங்கள்.சாப்பாட்டில் உப்பு , காரத்தை குறைத்து கொடுங்கள் .மோர் , இளநீர் அதிகம் கொடுங்கள் .அவள் உடலையும் , அவள் இருக்கும் இடத்தையும் எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருங்கள்   .ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும் “

” சரிம்மா ….”

” இனியாவது வீட்டுப்பெண் எப்படி இருக்கிறாள் …? ஆரோக்யமாக இருக்கிறாளா … என அடிக்கடி கவனியுங்கள் .”

இருவரும் தலை குனிந்து கொண்டார்கள் .ஜீவிதாவின் பார்வை இப்போது மெல்ல அந்த வீட்டை சுற்றி வந்த்து .பணத்தை கொட்டி நவீனமாக்கப்பட்டிருந்த்து வீடு .பளிங்கும் , கண்ணாடியுமாக திரும்பிய இடமெல்லாம் இருந்த்து .வெளிப்படையாக பார்த்தால் அந்த வீடு ஒரு நவ நாகரீகமான பங்களா .ஆனால் அதில் ஏதோ …ஒரு குறை .எங்கேயோ ஒரு நெருடல் வீடு முழுவதும் தெரிந்த்து .

கலைநயத்துடன் இருந்த அந்த வீட்டை ரசிக்க முடியாமல் ஏதோ ஓர் பிழை அங்கே நிரம்பியிருந்த்து .என்ன பிரச்சனை இங்கே ….யோசித்த ஜீவிதாவின் காதில் குழந்தையின் அழுகுரல் கேட்டது .” குட்டி முழிச்சிட்டா ….” சசிகலா வேகதாக எழுந்து போக , அந்தக் குழந்தையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் ஜீவிதா வேகதாக வெளியேறிவிட்டாள் .




”   ஏன்டி போனோமா …ஒரு ஊசியை போட்டோமோ …வந்தோமான்னு இல்லாமல் …இவ்வளவு நேரம் அங்கே என்னடி செய்தாய் .போனை வேறு ஆப் செய்து வைத்துக்கொண்டாய் …? உன்னை விடாமல் உட்கார வைத்து என்னென்ன பேசினார்கள் …? ” சௌதாமினியின் தொண தொணப்பில் எரிச்சலடைந்தாள் .

” ஒண்ணும் பேசலைம்மா .சுகன்யாவிற்கு ரொம்ப உடம்பு சரியில்லை …அதுதான் லேட்டாகிவிட்டது …” படியேறி அவள்  அறைக்கு வந்து உடையை மாற்றிய போது , தங்கள் வீட்டிற்கும் , சித்தப்பா வீட்டிற்குமுள்ள வித்தியாசம் அவள் மனதில் உறைத்தது .அது ….சுத்தம் .சாதாரண சிமெண்டும் , செங்கலுமாக இருக்கும் தன் வீட்டின் பளபளப்பு , அங்கே அந்த கிரானைட்டிலும் , கண்ணாடியிலும் இல்லையெனபதை உணர்ந்தாள் .

அந்த விலையுயர்ந்த சாமான்கள் எல்லாம் , தகுந்த சுத்தமின்றியே தங்களது பளபளப்பு குறைந்து சாதாரணமாக இருந்தன .ஏன் …ஒன்றுக்கு …மூன்று பெண்கள் இருக்கின்றனர் .பற்றாத்தற்கு வேலைக்கார்ர்கள் வேறு .இருந்தும் வீட்டை ஏன் அப்படி போட்டு வைத்திருக்கின்றனர் .விழியை சுழட்டி தங்கள் வீட்டை பார்த்தாள் .தொடர்ந்த சுத்தத்தினால் பளபளத்துக் கொண்டிருந்த சிகப்பு சிமெண்ட் தரையும் ,மினுமனுத்துக் கொண்டிருந்த தேக்கு மர சன்னல்களும் …

அம்மான்னா அம்மாதான் …முதல் முறையாக தன் தாயை பாராட்டிக் கொண்டாள் .ஆனால் உடனேயே அதை உடைத்தாள் சௌதாமினி .




” அந்த சுகன்யாவிற்கு என்ன பாப்பு …? ” அங்கே குடித்துவிட்டேன் என்றவளை அலட்சியப்படுத்தி , இங்கேயும் குடி என பால் தம்ளரை அவள் கையில் திணித்தபடி கேட்டாள் சௌதாமினி .

” அவளுக்கு அக்கி வந்திருக்கும்மா .உடம்பெல்லாம் புண்ணாக இருக்கறது ….”

” ம் …இருக்கும் …இருக்கும் .பண்ணிய பாவத்தின் பலன் .அதுதான் உடல் முழுவதும் பொத்து வடிகிறது …” காலம் பாராமல் தன் பழியை தீர்க்க பேசின அன்னையை வெறித்தாள் ஜீவிதா .பால் தம்ளரை அவள் கையில் திணித்து வெளியே போங்கள் என தள்ளினாள் .

படுக்கையில் சரிந்தவளின் நினைவுகளில் சிவபாலன் வந்தான் .அத்தையும் , சித்தியும் அதிகளவு படிக்காதவர்கள் .உடலை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இருக்காது .இவன் படித்தவன்தானே மனைவியின் உடலை கவனிக்க ஙேண்டாமா …நாளை அவனிடம் கேட்க வேண்டும் நினைத்தபடி விழி சொக்க தூங்கிப் போனாள் .

” அர்த்த ராத்திரியில் பேக்டரியில் உங்களுக்கு என்ன வேலை …? வீட்டில் மனைவியும் , குழந்தையும் இருக்கிறார்களே .அவர்களை கவனிக்க மாட்டீர்களா …? ” மறுநாள் ஜீவிதா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை வெறித்தான் சிவபாலன் .

அந்தப் பார்வைக்கு புரியாமல விழித்தாள் ஜீவிதா .

What’s your Reaction?
+1
7
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

3 Comments
Inline Feedbacks
View all comments
Aieshak
3 years ago

கதையை நன்றாக கொண்டு செல்கிறீர்கள்.. பாராட்டுக்கள் மா.
கதை புனைகிறவள் என்கிறதாலே கடந்த பகுதியில் நான் அவ்வாறு பின்னூட்டமிட்டது தங்களுக்கு பிடிக்கவில்லை போலும்.. பரவாயில்லை.. நான் தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்

Rajalakshmi puducherry
Rajalakshmi puducherry
3 years ago

Athu antha nathiyoram novel supper mam next part Plz

2
1
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

எனக்கு முன்பே புரிந்து போயிற்று.. நான் நினைத்தது போலத்தான் கதை நகர்கிறது.. அந்த ஒரே ஒரு முடிச்சு தான் .. அது அவிழும் போது கதை தெளிந்துவிடும்.. பாராட்டுக்கள் மா
@பத்மா கிரகதுரை..

3
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!