Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 11

11

 

 

ஹாய் கைலாஷ் ”  ஜீவிதாவின் வரவேற்பில் இவனை மறந்தே போனேனே …என்ற குற்றவுணர்வும் இருந்த்து .

” வணக்கங்க டாக்டரம்மா …” பவ்யமாய் கைலாஷ் சொன்ன வணக்கத்தில் கொஞ்சம் கோபமும் இருந்த்து .




” என்னை ஞாபகம் இருக்குங்களா …? என் பெயர் கைலாஷ் …நான் எம் .பி.பி .எஸ் படித்த டாக்டர் .எனக்கு சென்னையில் பெரிய க்ளினிக் இருக்கு .நான் …” மேலே பேசிக்கொண டு போனவனை ” சும்மாயிரு கைலாஷ் …” தோளில் விளையாட்டாக தட்டினாள் .

” ஒரு போன் , ஒரு மெசேஸ் …எதுவும் கிடையாது .போன் பண்ணினால் எடுப்பதில்லை .மெசேஜுக்கு ரிப்ளை இல்லை .ஏன் ஜீவிதா …? என்ன காரணம் ….? “

” இதோ …இதுதான் …” கைகளால் அந்த இடத்தை சுற்றி காட்டினாள் .” என் க்ளினிக் …” பெருமையாக சொன்னாள்.

” இதனை உருவாக்கும் வேலையில் பிஸியாக இருந்து விட்டேன் .பேசக் கூட முடியவில்லை சாரிப்பா ….” என்றவளை கூர்ந்து பார்த்தான் .

” பர்ஸ்ட் கிளாஸில் பாஸான ஒரு யுனிவர்சிடி மெடல் டாக்டர் இது போலொரு பட்டிக்காட்டில் க்ளினிக் வைக்க மாட்டாள் .நீ என்னோடு படித்த ஜீவிதாதானா ..? “

” என் ஊரை பட்டிக்காடுன்னு சொல்ற …கொன்னுடுவேன் …” விரலாட்டி எச்சரித்தாள் .

” நான்கு வருடமாக நீ வெறுத்த  ஊர் , இந்தப் பக்கம் திரும்ப கூட பிடித்தமில்லாமல் இருந்த ஊர் …திடீரென ஏன் இவ்வளவு பிடித்து போனது ஜீவிதா …? “

” ஏனென்றால் என் வேர்கள் இங்கேதான் இருக்கின்றன கைலாஷ் .அவற்றை பிடுங்க முடியாது …”




” பெண்கள் பிடுங்கி நடப்படும் செடிகள் தான் ஜீவிதா “

” என் வேர்கள் பிடுங்க முடியாமல் இங்கே ஆழ ஊன்றிவிட்டன கைலாஷ் .பெரும் புயல் , பூகம்பத்தினால் கூட அவற்றை அசைக்க முடியாது …”

உறுதியாக தன் நிலைப்பாட்டில் இருந்தவளை பார்த்தபடி இருந்த கைலாஷ் , பெருமூச்சொன்றுடன் தோள் குலுக்கிக் கொண டான் .” உன் திறமை இந்த குறுவட்டத்திற்குள் சுருங்கி விடக் கூடாது . இதை ஒரு நண்பனின் வேண்டுகோளாக நினைவில் வைத்துக்கொள் “

” நிச்சயம் நண்பனே .வா என் க்ளினிக்கை பார்த்து விட்டு வீட்டிற்கு போகலாம் …”

ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்த அன்னைக்கு உடன் படித்த நண்பனென கைலாஷை அறிமுகப் படுத்தினாள் .

” கூடப் படித்தவர்னா இவரும் டாக்டரா …? ” எதற்கும் இருக்கட்டுமென திரும்ப ஒரு முறை விசாரித்துக் கொண டாள் சௌதாமினி .

சென்னையில் கைலாஷிற்கு இருந்த சொத்துக்களையும் , அவன. அப்பா , அம்மாவின் க்ளினிக்கையும் தெரிந்து கொண்ட பிறகு சௌதாமினியிடம்  கைலாஷிற்கான விருந்தோம்பலில் ஒரு மரியாதை கூடியதை கூடியதை உள்ளுற எரிச்தலுடன் பார்த்தாள் ஜீவிதா .

இந்த அம்மா திருந்த மாட்டார்கள் …முகத்தை தாயிடமிருந்து கைலாஷ் புறம் திருப்பினாள் .

” அப்புறம் சொல்லு கைலாஷ் , எப்படி கரெக்டா என் க்ளினிக் வாசலில் வந்து நின்றாய் …? “




” எல்லா நட்பும் , எல்லாவற்றையும் மறைப்பதில்லை ஜீவிதா “

” ம் …ஜெயந்தி வேலையாக்கும் .உங்கள் இரண்டு பேரையும் இன்ட்ரடியூஸ் பண்ணி வைத்ததே நான்தான் .இப்போது என்னை ஒதுக்கிவிட்டு நீங்கள் நட்பை கொண்டாடுகிறீர்களாக்கும் …”

” ஒதுங்கி ..ஒதுங்கி போகிறவளை என்ன செய்ய …? ஜெயந்தி என் போனை அட்டென்ட் பண்ணுகிறாள் .என் மெசேஜிற்கு பதில் சொல்கிறாள் ….”

” ஓ.கே கைலாஷ் ஐ ஆம் வெரி சாரி …இனி உன்னுடன் பேசுகிறேன் ….உன் மெசேஜை பார்க்கிறேன் . வா சாப்பிடலாம் ….”

சபாபதியும் வந்து விட மூவருமாக சாப்பிட அமர   சௌதாமினி வெகுநாட்கள் கழித்து முகம் ஒளிர பரிமாறினாள் .தங்கையும் , தங்கை மகனும் வீட்டை விட்டு போனதற்கு மனைவிதான் காரணமென்பதால் , அன்றிலிருந்து சபாபதி மனைவியிடம் பேசுவதில்லை . சௌதாமினியும் பலவகையில் கணவனோடு சுமூகமாக முயன்று விட்டு முடியாமல் நின்றுவிட்டாள் .

இன்று தனது மனத்தாங்கல்களை மறந்து கணவனிடம் யாருக்கோ சொல்வதான பாவனையில் கைலாஷை பற்றி , அவர்கள் குடும்ப வளம் பற்றி பரிமாறியபடி  மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தாள் .சௌதாமினியிடம் முகம் கொடுத்து பேச சபாபதி க்கு விருப்பமில்லையென்றாலும் , அ வளது பேச்சு தனது மகளை பற்றியதாயிருக்கவே தனது வீம்பை மறந்து மனைவியின் பேச்சை கவனித்தார் .கவனித்த வகையில் கைலாஷின் குடும்ப வளமும் , பாரம்பரியமும் அவரை கவரவ்வே ,தானாகவே கைலாஷிடம் குடும்ப விபரங்கள் கேட்க தொமங்கினார் .




கைலாஷ் உற்சாகமாக தங்கள் தொழில் , குடும்பம் ,உறவுகள் குறித்து விவரித்து கொண்டிருக்க ,ஜிவிதாவிறகு மூச்சு முட்டுவது போலிருந்த்து .தட்டிலிருந்த சாப்பாடு உள்ளே இறங்குவேனா …என தொண்டைக்குழிக்குள்ளேயே அடம் பிடித்துக் கொண்டிருந்த்து .சலிப்புடன் பாதி சாப்பாட்டில் எழுந்தவளை கூட கவனிக்காமல் மூவரும் தங்கள் பேச்சில் தீவிரமாயிருந்தனர்.இல்லை …சௌதாமினி கவனித்துக் கொண்டுதானிருந்தாள். மகளை ….மகளின் தவிப்பை .ஆனால் பார்க்காத்து போலொரு பாவனை காட்டினாள் .

கை கழுவ எழுந்து போனவளை …போடி போ …எங்கே போயிடுவ …அங்க இங்கே சுத்தி கடைசியில என் எண்ணத்திற்குத்தான் நீ வரணும் …மனதிற்குள் மகளிடம் பேசிக் கொண்டாள் .

” ஒருநாள் உங்க அம்மா , அப்பாவை வரச் சொல்லுங்க தம்பி.பேசிடலாம் …” கை கழுவி விட்டு வந்த போது காதில் விழுந்த இந்த வார்த்தைகளில் விதிர் விதிர்த்து போய் நின்றாள் ஜீவிதா .

அம்மா தந்த ஜூஸை கைலாஷிடம் கொண்டு போய் கொடுத்தவள் , மெல்ல கேட்டாள்  ,” என்ன விசயம் கைலாஷ் ..? ” உறவுகளை விட சில போதுகள் நட்புகள் நன்மையளிப்பதாய் தோன்றும் . இப்போது ஜீவிதாவிற்கு அப்படித்தான் தோன்றியது .

” எது …? என்ன விசயம் …? ” கைலாஷ் நிதானமாக ஜூஸை உறிஞ்சனான் .

” அ…அதுதான் ..அப்பா …ஏதோ ….சொல்லி …உங்க அப்பாவை வரச் சொல்லி …எதற்காக ….? ” திணறினாள் .

” சும்மாதான் …அறிமுக படுத்திக் கொள்ளத்தான் ….”

” ஓ…” ஜீவிதாவின் சுவாசம் கொஞ்சம் சீரானது .

” நீ எதற்காகன்னு நினைத்தாய் …? “

” நா …நான் …இல்லையே .நான் ஒண்ணும் நினைக்கலையே …” திரும்ப திணறியவளை உற்று பார்த்தான் .

” இவன் எதறகடா வந்தான் …? இப்படி உயிரை வாங்குகிறானே …அப்படின்னு நினைக்கிறாய் இல்லை …? “




” சீச்சி அப்படி ஒண்ணும் இல்லை .உனக்கு அங்கே சென்னையில் …உங்க க்ளினிக்கில் நிறைய வேலை இருக்கும் , என்ன …இங்கே ஒரு நாளோ …இரண்டு நாளோ தங்க போகிறாய் ….அதை போய் நான் தொல்லைன்னு நினைப்பேனா …? ” வாழைப்பழத்தில் ஊசி சொருகும் நாசுக்கு ஜீவிதாவிடம் .

ஆனால் அதை உணரும் பக்குவம்தான் கைலாஷிடம் இல்லை . ” அப்படி ஒன்றுமில்லை ஜீவிதா .நான் கொஞ்ச நாட்கள் இங்கேதான் தங்க போகிறேன் …”

” கொஞ்ச நாட்கள்னா …”

” எனக்கு சில விசயங்கள் தெளிவாகும் வரை …” தெளிவாக கூறிவிட்டு எழுந்தான் .

” ஆன்ட்டி நான் எந்த ரூமில் தங்கிக்கட்டும் …? ” சௌதாமினியிடம் கேட்டான் .அவள் சந்தோசமாக அவனுக்கு காட்டிய ரூமுக்குள் போனான் .ஜீவிதா திகைத்து நின்றாள் .

——————

” நம்ம லெதர் பேக்டரிக்கும் , சிமெண்ட் பேக்டரிக்கும் தொழிலாளிகளுக்கான  மாதாந்திர மருத்துவ பரிசோதனை வருதுடா பாப்பு .நீ நாளை வருகிறாயா …? ” சபாபதி கேட்க ஜீவிதா தலையாட்டினாள் .அவர்கள் தொழிற்சாலை தொழிலாளிகளுக்கென மாதா மாதம் இலவச மருத்துவ பராமரிப்பை கம்பெனி செலவில் வழங்குவது அவர்கள் பழக்கம் .முன்பு வேறு டாக்டரை அழைத்து வந்து பார்த்துக் கொண்டிருந்தனர் .இப்போது சபாபதி அந்த பொறுப்பை மகளிடமே கொடுக்க எண்ணினார் .

” சரிப்பா …தினம் ஒரு பேக்டரியாய்  பார்த்துவிடலாம் …”

” நமக்கு லெதர் பாக்டரி மட்டும்தானே .இந்த சிமெண்ட் பேக்டரி எங்கிருந்து வந்த்து …? ” சௌதாமினி கொண்டு வந்து ” தட் ” டென வைத்த பஜ்ஜி தட்டில் ஆவி பறந்த்தற்கான காரணம் பலகார சூடா …அவள் மனச்சூடா …தெரியவில்லை .




ஆனால் அவள் அறிவுறுத்திய பிறகுதான் , தங்கள் கை விட்டு போன சொத்தை பற்றிய பிரக்ஞ்னை அப்பாவிற்கும் , மகளுக்கும் வந்த்து .முப்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் சொத்தென புழங்கி வந்த்து ,நான்கு வருடங்களான பிறகும் தன்னிடம் இல்லையென ஒத்துக்கொள்ள முடியவில்லை .ஜீவிதாவிற்கே மனம் கொஞ்சம் கலங்கிய போது , இத்தனை வருடங்களாக அந்த சொத்துக்களை அனுபவித்து ஆண்டு வந்த சபாபதிக்கோ மிக கடினமாக இருந்த்து இந்த அறிவுறுத்தல் .

” வாயை மூடிட்டு போடி .எனக்கு தெரியும் ” மனைவியிடம் எரிந்து விழுந்தார் .

” நம் பேக்டரி மட்டும்தானேப்பா நாம் பார்க்க முடியும் ” ஜீவிதா முணுமுணுத்தாள் .

” இல்லைடா பாப்பு .சிவா நேற்றே என்னிடம் சொல்லிவிட்டான் .சிமெண்ட் பேக்டரிக்கும் உன்னைத்தான் வர சொல்லியருக்கறான் …”

” அவர் சொன்னதற்காக நான் போக முடியுமா அப்பா …? “

” போகத்தான் வேண்டும் .ஏனென்றால் அந்த பேக்டரி தொழிலாளிகளும் நம் பொறுப்புதானே .அவர்களும் நம்மிடம் பல வருடங்களாக வேலை பார்ப்பவர்கள் . உன்னை சிறு வயதிலிருந்தே பார்த்து வருபவர்கள் ்இப்போது நீயே அவர்களுக்கான சிகிச்சையை செய்தால் சந்தோசப்படுவார்கள் தானே …? “




ஜீவிதாவிற்கு அன்று அவளிடம் மூச்சு திணறலென சிகிச்சைக்கு வந்த தொழிலாளியின் நினைவு வந்த்து .இது போல் எத்தனை பேரை அலட்சியமாக அங்கே வேலை செய்ய வைத்திருக்கிறானோ …? உடனடியாக அங்கே போய் அதை பார்த்து சரி செய்ய ஙேண்டிமென தோன்றிவிட்டது அவளுக்கு .

” சரிப்பா நானே போகிறேன் …” என அவள் முடிவெடுத்த போது ….

” அது அவ்வளவு அவசியமா ஜீவிதா …? ” எனக் கேட்டபடி வந்து அமர்ந்தான் கைலாஷ் .

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
கவிமொழி.மு
3 years ago

கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.அடுத்த பகுதியை சீக்கிரம் பதிவிடுங்கள் பிரண்ட்..

ஆயிஷா.கே.
3 years ago

கதை சுவாரஸ்யமாக போய்க் கொண்டிக்கையில் பிரேக் போட்டுவிட்டீர்கள்.. ஆனால் மிக சிறிய பாகம் போல தோன்றுகிறது

1
1
2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!