Serial Stories கன்னம் வைத்த கள்வனே

கன்னம் வைத்த கள்வனே – 81

கன்னம் வைத்த கள்வனே III

81

பரிவு போல் காட்டி நீ செய்த பரிபாலங்களில்
பனி தூவி உயிர் வேகிறது ,
உடல் புகுந்த வாதையொன்று
மூளை தாக்கி மூச்சடைக்கிறது ,
தூக்கணாங்குருவி கூடென
என் இதயம் கை பிடித்து
ஆட்டுகிறாயேடா … ராட்ச்சா …




நெற்றிப்பொட்டை பிடித்தபடி தடுமாறி நின்றவளின் தோள்களை பிடித்து உலுக்கினான் .

” மயங்கி விழுந்து தொலையாதே.உன்னை தூக்கி போக என்னால் முடியாது .இறங்கு ….” இரக்கமின்றி கூறிவிட்டு நகர்ந்தான் .

கை கால் நடுங்கியதால் மெல்ல நகர்ந்து அவன் கை பற்றிக் கொள்ளலாமென நீண்ட ஜோதியின் கைகளில் அவனது முழுக்கை  சட்டையின் நுனி மட்டும் பட்டு நகர்ந்த்து .அந்த தொட்ட இடத்தைக்  கூட அவன் அலடசியமாக தட்டி விட்டுக் கொண்டே நடந்தான் .

சற்று நேரம் முன்பு வரை சொர்க்கம் போல் தோன்றிய அந்த இடம் இப்போது எண்ணெய் சட்டி கொதிக்கும் நரகத்தை காட்டியது  ஜோதிக்கு .சுற்றுப்புறம் இருண்டாற் போலிருந்த்து .இரவாகி விட்டதா என்ன …?

திணறி திணறி நாசி வெளியிட்ட மூச்சுடன் பதற்ற பாத்த்துடன்
மெல்ல ஹர்சவர்த்தனை பின் தொடர்ந்தாள் .அப்படித்தான் அவன் பின்னால் போவதாகத்தான் நினைத்தாள் .ஆனால் அவன் முன்பே எங்கோ தள்ளி தூரமாக இறங்கிக் கொண்டிருந்தான் .கலங்கிய கண்களுக்கு மங்கலாக தெரிந்தான் .

உயரமான அந்த இரும்பு ஏணியின் கடைசி படி வரை தெம்பாக இறங்க முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை .அங்கிருந்தவர்கள் அந்த படிகளுக்கு பழக்கமானவர்கள் போலும் .சாதாரணமாக இறங்கினர் .அந்த ஷ்ரத்தா கூட …துள்ளலாய் துடிப்பாய் அவளுக்கு முன்  இறங்கினாள் .ஓரக்கண்ணால் எனது தடுமாற்றத்தை ரசிக்கிறாளோ என்ற சந்தேகம் ஜோதிக்கு வந்த்து .




அனைவரின் கண் முன் நழுவி விழுந்து அசிங்கப்பட்டு விடக்கூடாதென்ற வீராப்புடன் மிக கவனமாகவே படிகளில் பாதம் பதித்து இறங்கினாள் .ஆனாலும் …

இறுதி படிகளை நெருங்குகையில் ஷ்ரத்தா ஹர்சவர்த்தனை மிக  நெருங்கி ஏதோ கிசுகிசுக்க , அவன் புன்னகை போல் ஒன்றை இதழுக்கு கொண்டு வர , இருவருமாக என்னைத்தான் ஏதோ கிண்டலிக்கின்றனரா ….ஜோதியின் கவனம் சிதற அவள் பாதம் பிறழ்ந்து கீழே சரிய தொடங்கினாள் .

கீழே ஏணிப்படி அருகே நின்ற இருவர் அவளை தாங்க கை நீட்ட , அந்நிய ஆண்களின் ஸ்பரிசத்திற்கு கூசி ஜோதி தன் உடலை குறுக்க , இமையசையும் பொழுதில் அவர்களை தள்ளிவிட்டு ஹர்சவர்த்தன் முன் வந்து அவளது இடை பற்றி தன் மேல் தாங்கிக் கொண்டான் .

அநாதரவான அச்சூழலில் அவனது அந்த தொடுதல் ஜோதிக்கு பெரு ஆறுதலாக இருக்க , நெகிழ்வாய் அவள் ஹர்சவர்த்தனை பார்க்க , அவனோ அதனை உணராது அவள் இடை பற்றி அழுத்தி தூக்கி தரை மீது சக்கென இறக்கியிருந்தான் .

” கண்ணை பின்னால் வைத்துக் கொண்டு இறங்கினாயா …? “

எரிச்சலான அவனது குரல் ஜோதியை பாதிக்க , கோபத்துடன் அவர்களை தாண்டி முன்னால் நடந்தாள் .அவள் பாதங்களுக்கு கீழ் கடல் நீர் சளப் சளப்பென சத்தமிட்டது .

அத்தனை பேர் எதிரில் என்ன அலடசியம …? பின்னாலேயே வரட்டும் …நினைத்தபடி முந்திக்கொண்டு  தண்ணீரை தாண்டி மணல்வெளிக்கு  நடந்தவள் திகைத்தாள் .அவளுடன் வந்தவர்கள் அனைவரும் அவளுக்கு முன்னால் போய் கொண்டிருந்தனர் . ஹர்சவர்த்தனும்…

இவர்களுக்கெல்லாம் இந்த கடற்கரை மணல் நடை பழக்கம் போலும் .சாதாரணம் போல் எளிதாக நடந்தனர் .கால் செருப்புக்குள் மணல் சிக்க , பாதங்கள் உள்ளே புதைந்து வெளியே வருகையில் மணலை சிதறடிக்க என இந்த கடலோர நடை ஜோதிக்கு கடினமாக இருந்த்து .அவளது வேகத்தை முடக்கியது .




கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்வெளிகளாக இருக்க இங்கே மனிதர்கள் வசிக்கிறார்களா இல்லையா ….ஜோதிக்கு சந்தேகம் வந்த்து .சந்தேகம் தெளிவிப்பவன் அருகிலில்லை .முன்னால் நடந்தபடி உடன் வந்து கொண்டந்தவர்களில் ஒருவரின் ஏதோ ஓர் விளக்கத்திற்கு ” அச்சா ” சொல்லிக் கொண்டிருந்தான் .

காற்று அள்ளிக் கொண்டு வந்து அவள் காதில் போட்ட அந்த ” அச்சா  ”  ஜோதியினுள் வேதியல் மாற்றங்கள் சிலவற்றை விதைத்துக் கொண்டிருந்த்து .

இவனுக்கு இந்த ” அச்சா ” எல்லோரிடமுந்தானா ….?  தொழில் விளக்கத்திற்கும் இதேதானா ….?  எப்போதும் …எதிலும் …இதையே சொல்கிறானே …அவனுக்கே அலுக்காது ….எண்ணமிட்டபடியே நடந்து வந்து கொண்டிருந்தவள் திடுமென முன் போனவர்கள் அருகே வரவும் எண்ணவோட்டத்தை நிறுத்தினாள் .

அவர்கள் வரவில்லை ….தானே அவர்களை நெருங்கியிருப்பதை உணர்ந்தாள் .அவர்கள் பேசியபடியே நின்றிருக்க ஜோதி அவர்களை நெருங்கி வந்திருந்தாள்  .ஹர்சவர்த்தனின் முதுகை பார்த்தவாறே நடந்து வந்தவள் சுற்றுப்புறத்தையே கவனிக்காமல் இருந்திருந்திருக்கிறாள் .

அவர்களை அணுகாமல் நான்கெட்டு தள்ளியே நின்று கொண்டாள் .அவளது அந்த விலகலை அவர்கள் யாரும் கவனிக்கவில்லை .ஏதோ முக்கிய பேச்சில் இருந்தனர் .ஆங்கிலமும் , மலையாளமும் , இந்தியும் இன்னமும் ஏதோ ஒரு புதிய மொழியுமாக அவர்கள் உரையாடல்கள் இருந்தன .ஒரு வார்த்தை கூட தன் தாய்மொழி இல்லா அவ்விடம் ஜோதிக்கு அந்நிய நாட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் உணர்வை தந்த்து .

அவளுக்கு ஹர்சவர்த்தனோடு நிறைய பேச வேண்டியதிருந்த்து .திடுமென மாறிவிட்ட அவனது இயல்புக்கு காரணம் கேட்க வேண்டயதிருந்த்து . போட்டில் அவன் குறிப்பிட்ட பெண்ணை பற்றி அறிந்து கொள்ள வேண்டியதிருந்த்து .ஆனால் இவன் எப்போதும் இப்படி சுற்றிலும் பத்து பேரை வைத்துக் கொண்டு சாம்ராஜ்ய ராஜாவாக வலம் வந்தானானால் அவனருகே எப்படி நெருங்குவது …?

உண்மையிலேயே அத்தனை வேலைகள் தானா …அல்லது எனது கேள்வகளுக்கு பயந்து தன்னை சுற்றி இப்படி வளையமிட்டுக் கொண்டிருக்கிறானா …? ஜோதி அவன் முகத்தையே பார்த்தபடி நின்றிருக்க ஹரசவர்த்தன் சறிது கூட தலையை இவள் புறம் திருப்பவில்லை . ஆனால் அவனருகே இருந்த ஷ்ரத்தா பார்வையை சிறிதும் இவளை விட்டு திருப்பவில்லை .




ஒரு வகை இகழ்ச்சியோடு தன்னை பார்த்தபடி இருந்தவளின் பார்வையை பார்த்ததும் ஜோதியின் மனம் கொதித்தது .இவள் அவனுக்கு செகரட்டரியாம் …டிரஸ்ஸை பாரு .பத்து ஆண் பிள்ளைகள் உடன் வேலை பார்க்கும் போது போட்டுக் கொள்கிற மாதிரியா டிரஸ் பண்ணியிருக்கிறாள் .கேட் வாக் போகிறவள் மாதிரி ஒரு டிரஸ் .நடையும் கூட அப்படித்தான் நடக்கிறாள் …தலுக்கி ….குலுக்கி .சரியான மேனா மினுக்கி .

காரணமறியாமல் அவளை மனதிற்குள் கரித்துக் கொட்டிவிட்டு பார்வையை சுற்றிப்புறத்திற்கு மாற்றியவள் ஆச்சரியமானாள் .இப்போது அங்கே சில வீடுகள் இருந்தன .இல்லை குடில்கள் .மரக்குடில்கள் ….அவர்ளது நடையில் இந்த குடியிருப்பு பகுதி வந்திருந்த்து .

சரிதான் இங்கே இந்த ராட்ச்சனுடன் கூடவே சில மனிதர்களும் வசிக்கிறார்கள் போல ..நக்கலாக நினைத்துக் கொண்டாள் .

ஆனால் இந்த குடில்கள் மனிதர்களின் வசிப்பிடம்தானா ….? ஜோதியின் சந்தேகத்திற்கு காரணம் இருந்த்து . அந்த குடில்கள் மரப் படிக்கட்டுகள் கட்டி உயரமாக உயர்த்தி அமைக்கப்பட்டிருந்தன . நீள நீளமான மரக்கட்டைகளை வைத்து கட்டப்பட்டிருந்தன .அதோ அங்கே பேசிக்கொண்டு நிற்கிறானே ராட்ச்சன் …அவனை போல உயரமானவர்கள் தானே குதித்து குதித்து இது போன்ற உயர வீடுகளில் ஏற முடியும் ….? உதடு பிதுக்கிக் கொண்டவள் …   அவை எந்த மரங்களாக இருக்கும் ….? யோசித்தாள் .

ஜோதியின் ஆர்க்கிடெக்ட் மனது ஆவலுடன் அந்த வீடுகளை ஆராய்ந்த்து .இவ்வளவு மரக்கட்டைகளையும் இவர்கள்  கடல் தாண்டி கொொண்ட வந்த னரா ? அது கொஞ்சம் கடினமான தேே.  அப்படியானால் இங்கே மரம் அறுக்கும் தொழிற்சாலை ஒன்று இருக்க வேண்டும் .மரங்கள் இதோ சுற்றியிருக்கும் இந்த காடுகளிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் .

ஜோதியின் விழிகள் சுற்றி சுழன்று அந்த தீவினை சுற்றி அடர்ந்திருந்த காடுகளை ஆராய்ந்தன .என்னென்ன வகை மரங்கள் அங்கே இருக்கும் ….? அவற்றில் எவையெவை கட்டிடம் கட்ட உபயோகமாகும் ….?




” அதிக அளவில் இருப்பது படாக் மரங்கள் ….” அருகில் குரல் கேட்க திரும்பினாள் .

ஹர்சவர்த்தன் தான் .அவளது எண்ணத்தின் போக்கை அறிந்து பதில்  கொடுத்துக் கொண்டிருந்தான் .இதலொண்ணும் குறைச்சல் இல்லை .தேவையானதற்கு பதில் சொல்லமாட்டான் .தேவையில்லாத்தற்கு வாயை திறந்த கொண்டிருப்பான் .

ஜோதி லேசர் விழி கொண்டு அவனை துளைத்தாள் .அவனை சுற்றி நின்றிருந்தவர்கள் காணாமல் போயிருந்தனர் .

” ராஜ்ய பரிபாலனம் முடிந!ததா மகராஜா …? ” பவ்யமாக கேட டாள் .

” பரிபாலனம் …அப்படின்னா …? “

வெங்காயம் …இவனுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சிடுவேன் போல …ஜோதி தலையை தட்டிக்கொண்டாள் .

” முதலில் என் மொழியை நன்றாக படித்து விட்டு பிறகு என்னுடன் பேச வாருங்கள் .உலக வல்லரசு  நாடு மாதிரி இங்கே வகை வகையாய் மொழி பேசுகிறார்களே …என்ன தீவு இது …? “

” இந்த தீவில் இருக்கும் மக்கள் இங்கே பிழைக்க வந்தவர்கள் .வேறு வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள்  .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி .ஹிந்தி , மலையாளம் , பெங்காலி , தமிழ் …இவற்றோடு இங்கே காடுகளில் சில பழங்குடியினரும் வசிக்கிறார்கள்  .அவர்களுக்கென தனி தாய் மொழியும் உண்டு …”




” இந்த தீவின் பெயர் என்ன …? உங்கள் தாய்மொழி என்ன …? “

ஹர்சவர்த்தன் பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் நின்றான் .பிறகு மெல்ல இதழசைத்தான் .

” என் தாய்மொழி பெங்காலி …”

ஜோதியின் முகம் மெல்ல மாறியது .அவளது இமைகள் படபடக்க விழிகள் அங்குமிங்குமாக அலைந்தன .

ஹர்சவர்த்தன் அவள் விழிகளை    அதன் அதிர்வை   கூர்ந்து பார்த்தபடி சொன்னான் .

” இந்த தீவின் பெயர் ” மகரா ” .

அவனது ஆட்காட்டி விரல் அந்நேரம் அவள் புறம் திரும்பி சுட்டி நின்றது .

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
Sathiya
1 year ago

I want mayanathi onru remaining episodes. Where I read it? Pls help





Kapana
Kapana
1 year ago

Good

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!