Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 12

12

 

 

” ம் ..நைஸ் பில்டிங் …” கார் உள்ளே வரும்போதே அந்த பேக்டரியை சிலாகித்தான் கைலாஷ் .




நானும் டாக்டர்தானே , நானும் வருகிறேன் …என பிடிவாதமாக அவளுடன் ஒட்டிக் கொண்டு வந்துள்ளான் அவன் .ஜீவிதாவிற்கென்னவோ …அவன் சிவபாலனை சந்திக்கவென்றே வந்திருப்பதாக தோன்றியது .மூன்று நாட்களாக அவளுடன் ஒட்டுப்புல்லாக ஒட்டிக்கொண்டிருப்பவன் கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் சிவபாலனை பற்றியதாகவே இருந்த்து .

ஆரம்பத்தில் அவன் சிவபாலனை பற்றிய சில விபரங்களை ஜெயந்தியின் மூலம் அறிந்திருக்கலாம் .இப்போது அவனுக்கு விபரங்களை சொல்லத்தான் சௌதாமினி இருக்கிறாளே ….மிகத் தெளிவாக அவள் சிவபாலனை பற்றி கைலாஷிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் .கைலாஷ் சிவபாலனை பற்றி பேசும் போதெல்லாம் சிறு இகழ்ச்சி அவன் பேச்சினூடே தென்பட்டுக் கொண்டிருந்த்து .இதனை அனுமதிக்கவும் முடியாமல் , தடுக்கவும் முடியாமல் ஜீவிதா தவித்துக் கொண்டிருந்தாள் .

” இவ்வளவு பெரிய தொழிலை எப்படி அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்தீர்கள் ஜீவிதா …? இது பெரிய அநியாயம் இல்லையா …? ” கைலாஷின் விழிகள் அந்த பேக்டரியை அளவெடுப்பது போல் சுற்றி வந்த்து .

” விட்டெல்லாம் கொடுக்கவில்லை .நியாயமான முறையில் பங்கிட்டு கொண்டிருக்கிறோம் …”




” நியாயம் ….? எது நியாயம் …? சொத்துக்களுக்காக …வசதி …வாய்ப்புகளுக்காக …திடீர் திருமணம் செய்வதா …? “

” இந்த பேச்சு இப்போது எதற்கு கைலாஷ் …? “

” ஒரு மனிதனை சந்திக்க வரும்போது , அவனது வாழ்வின் முன் நிகழ்வுகளை கொஞ்சமேனும் தெரிந்து கொள்வது என் பழக்கம் ஜீவிதா …”

” இந்த சந்திப்பு எந்த வகையில் உனக்கு முக்கியமாக இருக்கிறது …? “

” ஏனோ …என் நெருங்கிய தோழியின் வாழ்வில் எனக்கு அக்கறை இருக்க கூடாதா …? “

கைலாஷ் மிக கண்ணியமான ஆண் மகன் .இது நாள்வரை தப்பான பார்வையோ …தவறுதலான நடவடிக்கையோ அவனடத்தில் ஜீவிதா கண்டதில்லை .ஆளை அமுக்கிய சோகத்தில் ஜீவிதா தடுமாறிக் கொண்டு படிப்பில் திணறிக்கொண்டு இருந்த போது , அவளுக்கு படிப்பு சம்பந்தமான பல உதவிகள் செய்தவன் . தன்னை ஏமாற்றிய சிவபாலனின் முன்னால் தலை நிமிர்ந்து நிறக வேண்டுமென்ற வைராக்கியமும் , கைலாஷின் உதவியும் மட்டும் இல்லையென்றால் ஜீவிதாவால் அவளுக்கு விருப்பமில்லாத இந்த படிப்பினை இந்த அளவு சிறப்பாக முடித்திருக்கவே முடியாது .

உற்ற தோழனாய் தன் கல்லூரி காலங்களை எளிதாய் கடக்க உதவியவனை , ஓரளவுக்கு மேல் தவிர்க்க முடியாமல் தடுமாறினாள் ஜீவிதா .

” உள்ளே வாங்கம்மா …” கை கூப்பி வணங்கி வரவேற்றார் பேக்டரி மேனேஜர் .சிறு தலையசைப்புடன் அவர் வரவூற்பை ஏற்றபடி உள்ளே நுழைந்த ஜீவிதா பிரமித்தாள் .அவர்கள் பேக்டரியா இது ….?




” வாவ் …சூப்பர் .சிமெண்ட் பேக்டரி மாதிரி இல்லை . ஐ.டி கம்பெனி போல் உள்ளது .பேக்டரியை நன்றாக மெயின்டெய்ன் பண்ணியிருக்கிறீர்கள் ஜீவிதா …” கைலாஷ் பாராட்டினான் .

” ம்ஹூம் , இல்லை கைலாஷ் .எங்கள் முந்தைய பேக்டரி இப்படி இருக்காது .தலைகீழாக மாற்றி வைத்திருக்கிறார் பாலா …”

” ஓ…அப்படியா …ம் …யார் இந்த பாலா …இந்த பேக்டரியை மாற்றியவர் …மேனேஜரா …அவருக்கு இந்த அளவு இடம் கொடுத்திருக்கிறீர்களா என்ன …? “

” நான் சிவபாலனை சொன்னேன் …”

” ஓஹோ …அவரை அப்படித்தான் கூப்பிடுவாயா …? “

இதற்கு பதில் சொல்ல பிடிக்காமல் ஜீவிதா பேக்டரியை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் .

பிரம்மாண்டமான ஹாலில் இடுப்பளவு மறைக்கப்பட்ட கியுபிக்கிள்ஸ், அதில் ஒவ்வொருவரும் லேப்டாப்புடன் தலை குனிந்து அமர்ந்து வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர் . எங்கும் பேப்பர் கண்ணில் படவில்லை.இரண்டு. மூன்று அறைகள் நிர்வாகிகளுக்கு, அவை பாதியளவு கண்ணாடியாலான சுவர் கொண்டதாய் இருந்தன. அதில் ஒரு அறை தலைமை நிர்வாகி அறை. அங்கிருந்து அலுவலகம் முழுதையும் கண்காணிக்கலாம்.ஹாலின் கடைசியில் கண்ணாடியால் தடுக்கப்பட்ட பெரியளவு அறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல பெரிய, பெரிய மானிட்டர்கள். அதனை மூன்று பேர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆலையின் மொத்த நடவடிக்கையும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது.சுரங்கத்தில் இருந்து வருகிற சுண்ணாம்புக்கல் தரம் அறிவதிலிருந்து, கலவை விகிதாச்சாரம் சரி செய்வதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் அலுவலகத்தில் இருந்தே நடக்கிறது.




” முன்பு இருந்த ஆலையில் இது அத்தனையும் பிளாண்டில் நடைபெறும்… தலைமை நிர்வாகி அறை தனியாக இருக்கும் .. மற்றப் பிரிவுகளுக்கு தனித்தனி அறை. இண்டர்காமில் பேசிக் கொள்ளலாம், அல்லது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வந்து பேச வேண்டும். எல்லா அறைகளிலும் அறை முழுதும் பீரோ மற்றும் மேசை. மேசை நிறைய ஃபைல்கள், கத்தை கத்தையாக பேப்பர்கள். கம்யூட்டரோ …லேப்டாப்போ கிடையாது .மொத்தத்தில் ஏதோ ஒரு பழைய சாமான் குடோனுக்குள் நுழைந்த உணர்வை எங்கள் பேக்டரி கொடுக்கும் …”

ஜீவிதா அகன்ற விழிகளுடன் தங்கள் பேக்டரியில் நடந்திருந்த மாற்றங்களை வியந்தபடி கைலாஷிற்கு விளக்கிக் கொண்டிருந்தாள் .

” ம் …அந்த பாலா படித்தவர் .படித்த படிப்பை உபயோகித்து பேக்டரியை மாடர்னாக மாற்றிநிருக்கிறார் அவ்வளவுதானே ….” கைலாஷ் அலட்சியமாக தோள்களை குலுக்க ஜீவிதாவிற்கு எரிச்சல் வந்த்து .

” அவரை சிவா என்று கூப்பிடு …”

” ஏன் …? “

” இது …இப்படி அழைத்தால் அவருக்கு பிடிக்காது …”

” ஆனால் நீ அப்படித்தானே அழைக்கிறாய் ஜீவிதா …”

ஜீவிதா பல்லை கடித்தாள் .இவனை …” நான் வேறு …”

” அவரும் , நீயும் வேறா ஜீவிதா …? “

” ம்ப்ச் இப்போது உனக்கு என்ன வேண்டும் …? “

” வந்து இவ்வளவு நேரம் ஆயிற்றே .இன்னமும் பேக்டரி முதலாளியை காணோமே .எனக்கு அவரை பார்க்க வேண்டுமே …”

” இதோ வந்துவிட்டேன் டாக்டர் சார் …” குரல் கொடுத்தபடி பின்னாலிருந்து வந்தான் சிவபாலன் .




இரு ஆண்களும் ஒருவரையொருவர் அளவிட்டபடி ஒரு நிமிடம் நின்றனர் .பிறகு ” ஹாய் ” ” வெல்கம் ” என்ற முகமன்களுடன் கை குலுக்கி கொண்டனர் .

” எதிர்பார்த்து காத்திருந்து …கடைசியில் மூன்று நாட்களாகி இருக்கிறது உங்களை பார்க்க …”

” நானும் …உங்களை சந்திக்கும் நாளை எதிர்பார்த்தபடியே இருந்தேன் ….”

என்ன கண்றாவிக்கு இவர்கள் இரண்டு பேரும் சந்திக்க வேண்டுமாம் …? என்னவோ …நெடுநாள் பழகியவர்கள் போல இப்படி ஒரு குலுக்கல் என்னத்துக்காம் …? இன்னமும் குலுக்கியபடி இருந்த அவர்கள் கைகளை பார்த்தபடி பொருமினாள் ஜீவிதா .

” உங்களை எப்படி அழைக்கட்டும் …சிவா …? பாலா …? “

” இங்கே எல்லோருக்கும் …நண்பர்களுக்கும் நான் சிவாதான் .அப்படியே கூப்பிடுங்கள் …”

” ம் …ஆனால் ஜீவிதா உங்களை பாலா என்று அழைத்தாளே …? “

” சொந்தங்களின் அழைப்பு வேறுதானே கைலாஷ் .ஜீவிதா என் மாமா மகள் .உங்களுக்கு தெரியும்தானே …? “

” யெஸ் ஐ நோ .ஓ.கே லீவ் தேட் .ம் …அப்புறம் சொல்லுங்க உங்க பேமிலி பற்றி …மனைவி , குழந்தைகள் …இவர்களை பற்றி .உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதுதானே …? “

வினாடியில் ஒளி குன்றி பதிலின்றி இருந்த  இருவரின் முகத்தையும் ஊன்றி கவனித்தபடி இருந்தவன் ” ஏன் சிவா உங்களுக்கு எதுவும் லவ் பெயிலியரா …? ” பட்டென கேட்டான் .

” ஏ…ஏன் கேட்கிறீர்கள் ..? “

” இதோ ….இதை வைத்துத்தான் …” தன் தாடையை வருடி ஜாடை காட்டி சிவபாலனின் தாடியை பற்றி கேட்க சிவபாலனின் விழிகள் திடுக்கிட்டு ஜீவிதாவை நோக்கியது .

அவளும் அப்போது அவனைத்தான் …திடுக்கிடலுடன்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் .லவ் பெயிலியரா …அதற்குத்தான் இந்த தாடியா பாலா …? இ…இது எனக்கான தாடியா …? சந்தோசமோ …துக்கமோ ….என்னவென்று தெரியாதோர் உணர்வு ஜீவிதாவினுள் பரவியது .

அருகிலிருந்தவனை மறந்து ஒருவர் விழியை ஒருவர் கவ்வியபடி இருவரும் நின்றுவிட்டனர் .நீங்கள் என்னை காதலித்தீர்களா பாலா …வெளி சொல்ல முடியாத கேள்வியொன்று ஜீவிதாவின் மனதினுள் ஊமையாய் கன்ன்றது




இத்தனை நாட்களாக இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் , தாராளமாக , உற்சாகமாக தோழமை பூண்டு பழகியிருந்தாலும் காதலென்ற சொல்லை கூட அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டது கிடையாது .இருவருக்கும் திருமணமென பெரியோர்களல் பேசப்பட்டு வந்த போதும் , அதனை அவர்களுக்குள் பேசிக் கொண்டது கிடையாது .கண் கொத்தி பாம்பு போல் எந்நேரமும் சௌதாமினி கவனித்தபடியே இருந்த்தினாலோ என்னவோ , இருவருக்குமடையே வழிந்தோடிக் கொண்டிருந்த அன்பை …அதன் வீரியத்தை உணரவோ , ஒருவருக்கொருவர் உணர்த்தவோ இருவருமே முயன்றதில்லை .

அதனாலேயே சிவபாலன் திடீரென சுகன்யாவை மணம் முடித்து வந்து நின்ற போது , நான்தானே அவனை மனதில் நினைத்திருந்தேன் .அவன் நினைக்கவில்லையே …அதனால்தான் எளிதாக இன்னொருத்தியை திருமணம் செய்ய அவனால் முடிந்து விட்டது என நினைத்தாள் .அவன் வழியில் அவன் சரியாகத்தான் இருக்கிறான் .நான்தான் மனம் தடுமாறி என்னையே நோகடித்து கொண்டிருக்கிறேன் …இப்படியெல்லாம் தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டுதான் நாலு நெடிய வருடங்களை அவள் கடந்து வந்திருந்தாள் .ஆனால் இப்போது …கைலாஷின் கேள்விக்கு …பதிலின்றி சிவபாலன் நின்ற விதம் , ஜீவிதாவிற்கு ஏதேதோ இதங்களை அறிமுகம் செய்வித்தது .




இதோடு அன்று …சிவபாலனும் , நீலவேணியும் வீட்டை விட்டு வெளியேறிய நாளன்று நடந்த சம்பவங்கள் வேறு …இப்போது ஜீவிதாவனுள் தேன் துளிகளை விசிறியபடி இருந்தன . அன்றுணராத சிவபலனின் காதலை இன்று …இதோ ….இப்போது …கைலாஷின் ஒரு கேள்வியில் உணர்ந்த ஜீவிதா உடல் சிலிர்க்க சுற்றுப்புறம் மறந்து நின்றாள் .

What’s your Reaction?
+1
8
+1
5
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

இன்றைய பகுதி பதிவு வரவில்லை மா

ஆயிஷா. கே
ஆயிஷா. கே
3 years ago

சூப்பர் மா. நல்லா கோர்த்து விட்டிருக்கீங்கோ..

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!