Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 26

26

 

 

 

சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று சுழியா என்ற குழப்பத்தில் இருந்தாள் சஸாக்கி அப்போது இரண்டு பெற்றுக் கொண்டேன் வருகிறது.. ஒன்றிற்கு இரண்டும், ஒன்றுக்கு மூன்றும் போட்டு விடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்..
“இதற்கு மூன்று சுழி “ண்”..” அவளருகே வந்து கீ போர்டை தட்டி சரிபடுத்தியவனை நிமிர்ந்து பார்த்தால் அவன் பாலகுமரன்..
“ஙே..” என்ற விழித்தலுடன் அவனை பார்த்து நிற்க, அவன், “லெட்டரை சீக்கிரம் முடித்து விட்டு எடுத்து வா..” எம்.டி அறையை கை காட்டி விட்டு உள்ளே போய் விட்டான்..




இவன் எதற்கு இங்கே வருகிறான்..? இவனுடைய ஆபிஸ் போல் தினமும் வந்து நிற்கிறானே..? இவனிடம் எதற்கு லெட்டரை காண்பிக்க வேண்டும்.. முடியாது என்று சொல்லிவிடலாமா..? இல்லை பேசாமல் இன்று லீவ் போட்டுவிட்டு போய்விடலாமா..? என்ற யோசனையை அடுத்து லீவே போட்டுவிடலாமென்ற முடிவிற்கு வந்து ஒரு பேப்பரை எடுத்து லீவ் அப்ளிகேசன் எழுதிக் கொண்டிருக்கும் போது..
“உள்ளே வந்து வேலையை ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் என்ன லீவ்..?” அப்போதுதான் ஆபிசிற்கு வந்த திவாகர் எரிச்சலாக கேட்டான்..
இவனுங்க ரெண்டு பேரும் உள்ளே வரும் போதே என்னை நோட்டம் விட்டுட்டே வருவானுங்களா.. கோபமாக அவனை பார்த்து..
“சூழ்நிலை..” என்றாள்..
“என்ன.. அப்படி என்ன சூழ்நிலை..?”
பதில் சொல்லாமல் அவனது அறைக்கதவை ஆட்காட்டி விரலால் காட்டினாள்..
“யார் பாலாவா..?” குரலை குறைத்து ரகசியமாக கேட்டான்..
“ம்..”
“இவனை..” பல்லைக் கடித்தவன்..
“நீங்க உட்கார்ந்து வேலையை பாருங்கள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்..” இரண்டு எட்டு வைத்தவன் நின்று திரும்பி..




“உள்ளேயிருந்து ஐயோ.. அம்மான்னு ஏதாவது சத்தம் வந்தால் கண்டுக்காதீங்க..” என்று விட்டு போனான்..
அவனது அந்த பாவனையில் பட்டென வந்து விட்ட சிரிப்பில் தெறித்து சிரித்தாள் சஸாக்கி.. ஒரே நிமிடத்தில் அந்த சிரிப்பை நிறுத்தி தன்னை அடக்கிக் கொண்டாள்.. சுற்றி பார்த்தாள் ஆபிசிலிருந்த அனைவரும் அவளையே பார்த்தபடி இருந்தனர்..
திடுமென எந்த இன்டர்வியூவோ, விபரங்களோ இல்லாமல் தங்கள் ஆபிஸ் வேலைக்கென வந்த அவளை ஏற்கெனவே ஏதா நடுக்காட்டு அதிசய மிருகமாகத்தான் அனைவரும் பார்த்து வந்தனர்.. அவள் அடிக்கடி கம்பெனி முதலாளியிடம் ப்ரீயாக பேசுவதுவேறு.. அவர்களுக்குள் ஒருவித பொறாமையை ஏற்படுத்தி இருந்தது..
இப்போது அவள் இப்படி சிரித்து சிரித்து பேசினால் வேறு வினையே வேண்டாம்.. என நினைத்தவள் தன் முகத்தை “உம்” மாக்கிக் கொண்டு.. கீ போர்டை தட்ட ஆரம்பித்தாள்..
பத்து நிமிடங்களுக்கு பிறகு எம்.டி அறைக்கதவு திறந்து உள்ளிருந்து பாலகுமரன் வந்தான்.. நேராக இவளது டேபிளுக்கு வந்து நின்றான்..
“கிராதகி..” என முணுமுணுத்தான் போய் விட்டான்..
திரும்பவும் பீறிட ஆரம்பித்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.. அடுத்த துணைக்கால் பிரச்சினையில் உழல ஆரம்பித்தாள் சஸாக்கி… என்றும் போல் இன்றும் திவாகரிடமிருந்து திட்டுக்கள்தான்.. ஆனாலும் ஏனோ ஒரு மென் புன்னகை அவள் முகத்தில் வடிந்தபடியே இருந்தது நாள் முழுவதும்..
“சஸிம்மா என்னடா இன்னைக்கு ரொம்ப சந்தோசமாக தெரிகிறாய்..?” கேட்ட அன்னையிடம் அன்றைய ஆபிஸ் விசயங்களை மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள்..
“திவாகர் அப்படி சொன்னப்ப எனக்கு ரொம்ப சிரிப்பு வந்தது ம்மா.. அப்புறம் பாலா வந்து பேசினப்பவும்.. ம்.. கிராதகி.. அது என்ன வேர்டு ம்மா.. அதற்கு என்ன மீனிங்..?”
மகளின் துள்ளலை பார்த்தபடி இருந்த தாய் புன்னகைத்தாள்..
“அது.. ஒரு திட்டும் வார்த்தை.. உச்சரிப்பதை பொறுத்து பொருள் மாறுபடலாம்.. ம்.. அழகி.. ராட்சசி.. அரக்கி.. தேவதை இப்படி எந்த பொருள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..”
“ஓ..” சஸாக்கியின் விழிகள் மின்னின்..




“பாலா எந்த அர்த்ததில் அந்த வார்த்தையை சொல்யிருப்பார் ம்மா..” தன் தோளில் சாய்ந்து கொண்டு மிழற்றலாய் கேட்கும் பெண்ணிற்கு என்ன பதில் சொல்லவென அன்னலட்சுமிக்கு தெரியவில்லை..
“குழந்தை அழுகிறான் சஸி.. போய் அவனை தூக்கிக் கொள்ளம்மா..” மெலிதாய் சிணுங்கிய குழந்தையை சொன்னவுடன் சஸாக்கி எழுந்து கொண்டாள்..
வேகமாக தொட்டில் அருகே போய் குழந்தையை தூக்கிக் கொண்டாள்.. கொஞ்சிக் கொண்டே மடியில் வைத்து பாலூட்ட ஆரம்பித்தாள்..
இரண்டு மாதத்தில் மகள் நிறைய மாறிவிட்டதாக அன்னலட்சுமிக்கு தோன்றியது… ஆராம்ப சிறு பிள்ளைத்தனம் போய், குடும்ப பொறுப்பிற்கு ஒரு குழந்தையின் தாயெனும் நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக பக்குவமாக மாறிக் கொண்டிருப்பது போல் தோன்றியது..
ஒரு பக்கம் அவளுக்கு இது மகிழ்வை தந்தாலும்.. இது போல் மாறியபின் தன் மகள் அவளது கணவனை பிரிந்திருப்பதை தாங்குவாளா.. இதுவரை எல்லா விதத்திலும் சிறுபிள்ளையாகவே இருந்துவிட்டாள்.. அதனால் கணவனுடனான தனது பிரிவை கூட அவள் இதுவரை உணரவில்லை.. தனது குழந்தையை பற்றிக் கூட தெளிவானதொரு முடிவு அவளுக்கு இதுவரை இருந்ததில்லை.. ஆனால் இப்போதோ.. தன்னை.. கணவனை.. தன் குழந்தையை அவள் உணர்ந்து கொள்கிறாள்.. இது அவளுக்கு நன்மையை தருமா.. தீமையை தருமா..? அன்னலட்சுமி பெருமூச்சு விட்டுக் கொள்கிறாள்..
அப்போது மண்டையில் இடிப்பது போல் கதவை தட்டும் சத்தம்.. காலிங்பெல் இருக்கும் போது யார் இப்படி காட்டான் மாதிரி கதவை தட்டிக்கொண்டு.. அன்னலட்சுமி “வர்றேன்.. வர்றேன்னு..” சத்தம் கொடுத்தபடி போய் கதவை திறக்க வெளியே சரண்யா நின்று கொண்டிருந்தாள்.
“வணக்கம் ஆன்ட்டி..” கை உயர்த்தி கும்பிட்டாள்..
எப்போதும் மேடம் என்று அழைப்பவள்.. இப்போது ஆன்ட்டி.. அன்னலட்சுமி யோசனையோடு.. “வாம்மா..” என வரவேற்றாள்..
“எப்படி இருக்கிறீர்கள் ஆன்ட்டி..?”




“நாங்கள் இங்கே இருப்பது உனக்கு எப்படிம்மா தெரியும்..?”
“தெரிந்து கொண்டேன் ஆன்ட்டி..”
சரண்யா வெகு சுவாதீனமாக வீட்டினுள் நுழைந்து ஒவ்வொரு அறையாக சுற்ற ஆரம்பித்தாள்.. பெட்ரூமினுள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சஸாக்கியை கண்டதும் புன்னகையோடு நின்றாள்..
“ஹாய் சஸாக்கி..” ஒரு மாதிரி ரகசியமாக குரலை இழுத்து அழைத்தாள்..
சஸாக்கியின் உடல் விரைத்தது.. அவள் மடியில் இருந்த குழந்தைக்கு அவளது உடல் அதிர்ச்சி பரவி குழந்தையும் அதிர்ந்து வாய் விட்டு அழ ஆரம்பித்தது..
திரும்பி சரண்யாவை பார்த்த சஸாக்கியின் முகம் முத்து முத்தாக வியர்வையை தாங்கியிருந்தது..
“எ.. என்ன..?”
“சும்மா.. உங்களை பார்த்து விட்டு போகலாம்னு வந்தேன்.. அச்சோ குழந்தை அழுறானே.. கொடுங்களேன்.”
அருகே வந்து குழந்தையை தூக்க முயல சஸாக்கி தனது மடியினுள் குழந்தையை பொத்திக் கொண்டு கத்தினாள்..
“நோ.. தரமாட்டேன்.. நீ குழந்தையை தொடாதே.. தள்ளிப்போ..”

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!