Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 16

16

ப்ரியங்களை பிரதானப்படுத்தி வைத்து 
என் கடுத்தல்களை காயப்படுத்தி செல்கிறாய் .

 

 




            ” கொஞ்சம் அவசரப்பட்டு நடுவில் வந்துட்டேன் .மன்னிச்சுடுங்க சார் .உங்களுக்கு நன்றி சொல்லும் அவசரம் எனக்கு …” கை கூப்பியபடி நின்றவன் பாண்டியன் .சரளாவின் அண்ணன் .

” நன்றி சொல்ல நல்ல இடம் பார்த்தாய் .நான் ஸ்டியரிங்கை கொஞ்சம் திருப்பியிராவிட்டால் இந்நேரம் கார் டயருக்கடியில் நசுங்கிக் கிடந்திருப்பாய் ….”

” இப்போதான் சார் என்னை வெளியே விட்டாங்க .அரைமணி நேரம்தான் இருக்கும் .நான் வீட்டுக்கு கூட போகலை.முதலில் உங்களைத்தான் பார்க்கனும்னு நினைச்சேன்  .உங்க ஆபீஸ் போனேன் .நீங்க வெளியூருக்கு போயிருக்கிறதா சொன்னாங்க.என்ன செய்றதுன்னு யோசிச்சிட்டே நடந்து வந்துட்டிருக்கிறப்ப உங்க டிராவல்ஸ் பெயர் இந்த காரில் தெரிந்த்து .பக்கத்தில் கார் வரவும் தான் நீங்களே ஓட்டிட்டு வருவது தெருந்த்து .அதுதான் உடனே நடுவில் பாய்ந்து காரை நிறுத்தினேன் ”  .

அவனை அடையாளம் தெரியாததால் காரினுள் இருந்தபடி யாரிவன் என வேதிகா ஆராய்ந்து கொண்டிருக்கும் போது , அவனே திரும்பி இவளை பார்த்தான் .” மேடம் நீங்களும் இருக்கிறீர்களா …? உங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் .எனக்காக நீங்கள்தான் சாரிடம் நிறைய பேசினீர்களாம் .சரளா சொன்னாள் …”

” ஓ…சரளாவின் அண்ணனா நீங்க ..? உங்களை ஜெயில்ல இருந்து விட்டுட்டாங்களா …? எப்படி …? “

” எல்லாம் சாரால்தான் மேடம் .அவர்தான் …”

” சரி …சரி போதும் .இனியாவது ஒழுங்காக நடந்து கொள் .கநிரேசனிடமே உன்னை வேலைக்கு திரும்ப கூட்டிக் கொள்ள சொல்லியிருக்கிறேன் .அவனிடம் போய் முதலில் மன்னிப்பு கேள் .இது போன்ற நன்றி கெட்ட வேலையை இனிமேல் செய்யாதே …”

” நிச்சயம் சார் .ஒரே ஒரு நிமிடம் மனம் தடுமாறி தவறு செய்துவிட்டேன் .இந்த ஒரு வார ஜெயில் வாழ்க்கை எனக்கு நிறைய பாடங்களை சொல்லி தந்திருக்கிறது .இனி ஒரு முறை தப்பு செய்ய மாட்டேன் …” கலங்கி விட்ட கண்களை துடைத்து கொண்டவன் , மீண்டுமொரு முறை இருவருக்கும் வணங்கி நன்றி சொல்லிவிட்டு நடந்தான் .

” அவரை வெளியே விட சொல்லிட்டீங்களா …? ” ஆச்சரியமாக கேட்டாள் வேதிகா .

” ம் ….” காரை ஓட்டியபடி ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான் .

” ஏன் …? “

” எல்லாம் உனக்காகத்தான் .நீதான் அசோக வனத்து சீதை போல் ஒரு வாரமாக வீட்டில் சோக கீதம் வாசித்து கொண்டிருந்தாயே .பார்க்க சகிக்கலை .அதுதான் கதிரேசனிடம் சொல்லி கம்ப்ளைன்டை வாபஸ் வாங்க சொன்னேன் ….” எரிந்துதான்விழுந்தான் .

ஆனால் வேதிகாவிற்கு கோபம் வரவில்லை .மனம் நிறைந்த நேசத்துடன் அவனை பார்த்தாள் .” உங்களுக்கு துரோகம் செய்பவர்களை பிடிக்காதே ….”

” ஆமாம் பிடிக்காது.  .உனக்காக பிடிக்காத்தை எல்லாம் பிடித்ததாக்கி கொள்ள வேண்டியிருக்கிறது .” வேதிகா கணவனை விட்டு கண்களை எடுக்கவில்லை .

” ம்ப்ச் …இதெல்லாம் எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை .ஆனாலும் வேறு வழியன்றி இந்த ஒரு வார ஜெயில் வாசம் அவனை திருத்தியிருக்கும்னு நம்பித்தான் வெளியே வர வைத்திருக்கிறேன் . அவனை கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் திரும்பவும் என் ப்ரெண்டிடமே அவனுக்கு வேலை வாங்கி தந்திருக்கிறேன் .ஆனால் ஒன்று வேதா ..இனி ஒரு முறை அவன் தவறு செய்தானானால் அவன் விசயத்தில் நீ தலையிடக் கூடாது …”

” நிச்சயம் தலையிட மாட்டேன்…” வேதிகா உறுதியளித்தாள் அதன் பின்பே அமரேசனின் முகத்தில் இறுக்கம் குறைந்த்து .




” காரை பஜார் பக்கம் திருப்புங்களேன் …ஒரு புடவை எடுக்க வேண டும் ….”

” யாருக்கு …? “

” மௌனிகாவிற்கு .ஒரு பட்டு புடவை …”

” படிக்கிற பிள்ளைக்கு பட்டு சேலை எதுக்கு …? அவளை படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்த சொல்லு …”

” படிப்பிற்கும் , சேலைக்கும் சம்பந்தமில்லை .வயசுப்பிள்ளைக்கு ஆசை இருக்கத்தானே செய்யும் …”

” இது போன்ற அநாவசிய செலவுகளை நான் ஆதரிப்பதில்லை வேதா .  அவள் காலேஜ் படிப்பில் இருக்கிறாள் . படிப்பை விட்டு கவனத்தை சிதற வைக்க கூடாது . நாளை அவளது திருமணமென்று வரும் போது இது போன்ற ஆடம்பர செலவுகளை செய்யலாம் ”   கண்டிப்பாக பேசினான் .

கணவனின் சிக்கனம் வேதாவிற்கு தெரியும்தான் .அவர்கள் திருமணத்தின் போதே எந்த அளவு செலவை குறைக்க முடியுமோ …அந்த அளவு குறைத்து மிக சிக்கனமாகவே திருமணத்தை முடித்தான் .அவனது இந்த கட்டுப்பாடான குணத்தினால்தான் இது போன்ற தேவைகளுக்கு அவனிடம. கேட்க , திலகவதி யும் , மௌனிகாவும் பயந்தனர் போலும் .அந்த நேரத்தில் வேதிகாஙிற்கு வேறொன்று தோன்றியது .

” இவ்வளவு சிக்கனம் பார்க்கிறீர்களே.எனக்கு மட்டும் உடனே எப்படி அந்த நகைகளை வாங்கி வந்தீர்கள் …? கிட்டதட்ட நாற்பது பவுன் .”

” நான் சிக்கனவாதிதான் வேதா .கஞ்சன் இல்லை .என் மனைவியின் கௌரவம் மற்ற எல்லாவற்றையும் விட பெரிதில்லையா …? அந்த அளவு செலவு செய்வது எனக்கு கஷ்டமில்லை எனும் போது , உன் விசயத்தில் நான் செலவை சுருக்க நினைப்பேனா வேதா …? “

அப்பா இவனை மருமகனாக்க நினைத்ததில் தவறே இல்லையென்று தோன்றியது . இவனது வாழ்க்கை திட்டமிடல்தான் எத்தனை தெளிவாக இருக்கிறது .இவனை போன்ற ஒருவர் தொழிலிலோ , வாழ்விலே தோற்க்க்கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை .அப்பா  அனுபவஸ்தர் …அவர் எடுத்த முடிவு எவ்வளவு சரியாக இருக்கிறது ..

” இப்போதும் அம்மாவிடம் இவ்வளவு நகைகள் இருப்பது எனக்கு தெரியாது வேதா .தெரிந்திருந்தால் அம்மாவிடம் பேசி அந்த நகைகளையே உனக்கு வாங்கி தந்திருப்பேன் .”

” உங்கள் அம்மாவின் நகை விபரம் உங்களுக்கு தெரியாதா ..? “

” ம்ஹூம் .அம்மா அவர்கள நகையை யாரிடமும் இது வரை காட்டியதில்லை .அத்தைக்கும் தெரியாது .என்னிடமும் வாயை தறக்கவே மாட்டார்கள் “

” அத்தை ஏன் இப்படி இருக்கிறார்கள் …? ஒரு ஒட்டாத தன்மையோடு ..்எப்போதும் ஒதுங்கியே …”




” ஒரு சோம்பல்தான் . எப்போதும் ஒரு மந்த நிலை .எதையும் கண டு கொள்ளா தன்மை .வீட்டு வேலை செய்வதில் சோம்பேறித்தனம் .எந்நேரமும் டிவி ..இல்லை ..புத்தகம் …இப்படித்தான் இருப்பார்கள் ்அவர்கள் இயல்பே இதுதான் போலும் …”

இல்லை என்றது வேதிகாவின் மனம் .உங்கள் அம்மா அப்படி இல்லைங்க .நான் கண்டுபிடித்து அவர்கள் இயல்பை வெளிக் கொண்டு வருகிறேன் .தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டாள் .

முகம் நிரம்பிய பரவச ததும்பல்களோடு உள்ளே நுழைந்த தம்பதியை நிறைவாக பார்த்தனர் வீட்டினர் .கல்யாண வீட்டில் கொடுத்த தாம்பூல பையுடன் மங்கயர்கரசி அருகில் போய் அமர்ந்து கொண்ட வேதிகா அதை அவள் மடியில் வைத்தாள் .

” அத்தை …இன்றைக்கு என்ன நடந்த்து தெரியுமா …? ” என ஆரம்பித்தவள் அவர்கள் போனதிலிருந்து திரும்ப வந்த வரை எல்லாவற்றையும் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள் .முதலில் திகைத்த மங்கயர்கரசி பிறகு தடுமாறி …இறுதியாக வேதிகா பக்கமே திரும்பாது டிவி பக்கமே வலுக்கட்டாயமாக தலையை திருப்பிய படி அமர்ந்திருந்தாள். வேதிகா விடாது அவள் முகத்தை பற்றி  அடிக்கடி   தன்புறம் திருப்பியபடி தான் சொல்ல வந்த்தை சொல்லி முடித்தாள் .

” நாங்கள் கல்யாண வீட்டில் வயிறு புடைக்க சாப்பிட்டு விட்டு வந்துவிட்டோம் .நீங்கள் சாப்பிட்டீர்களா …? “

” ம் …ம் ..சரி …சரி .எந்திரிச்சு போ .நான் டிவி பார்க்கனும் …” தன்னருகில் இருந்தவளின் தோளை பிடித்து தள்ளிவிட்டு , டிவிக்குள் போய்விட்டாள் மங்கயர்கரசி .திலகவதி திருப்தி பார்வை பார்க்க , அமரேசன் அதிருப்தியாய் பார்த்தான் .

” அம்மாவிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாய் வேதா …? “

” எதையோ …அவர்கள் நம்மோடு சிரித்து பழகினால் நன்றாக இருக்கும்தானே …”

” இப்படி இருப்பதுதான் அம்மாவிற்கு பிடித்திருக்கிறதென்றால் அப்படியே விட்டு விடுவதுதானே நியாயம் …? “

” அப்படி அவர்கள் உங்களிடம் சொன்னார்களா …? ” வேதிகாவின் பதில் கேள்வியில் குழம்பினான் அமரேசன் .சொல்லவில்லையா …யோசிக்க தொடங்கினான் .

அப்பாடா ஒரு வழியாக புருசனை மண்டை குழம்ப வைத்தாயிற்று .இனி அடுத்து மாமியாரை …மங்கையர்கரசி தயாராக இரு இதோ வந்துவிட்டேன் …கைகளை தட்டிக் கொண்டாள் வேதிகா .

” எப்போ பார்த்தாலும் டிவி பார்த்துட்டே இருக்கியே மங்கை .மூளை குழம்பலையா உனக்கு …? “




மறுநாள் காலை குளித்து விட்டு பாதரூமிலிருந்து வெளியே வந்த மங்கையர்கரசியை பார்த்து , வெளியே காத்து நின்றிருந்த வேதிகா கேட்டாள் .

” என்னது மங்கையா …ஏய் யாரைடி சொல்ற …? “

” உன்னைத்தான் மங்கை. அமர்னு  உனக்கு ஒரு புள்ளை இருக்கிறானே , அவன் என்ன பண்றான் …? பொண்டாட்டி கூட ஒழுங்கா குடும்பம் நடத்தி குப்பை கொட்டுறானா …? அதை பற்றியெல்லாம்  என்றாவது பொறுப்பாக நினைத்து பார்த்திருக்கிறாயா …? “

” அடியேய் அலங்காரி .முதலில் என் பெயரை சொன்னாய் .இப்போது என் மகனின் பெயரை சொல்கிறாயா …? இங்கே வாடி ஊசி, நூல் வச்சி வாயை தைக்கிறேன் ….” மங்கையர்கரசி தனை மறந்து மருமகளின் கூந்தலை பிடித்து ஆட்டினாள் .

அவளிடமிருந்து விடுபட்டு  கொண்ட வேதிகா கட்டைவிரலை ஆட்டிக் காண்பித்துவிட்டு பின்வாசல் வழியாக வெளியே ஓட , தன் வயதை மறந்து பின்னாலேயே ஓடிய மங்கையர்கரசி மோதி நின்ற இடம் அம்ரேசனின் தோள்கள் .தன் மேல் மோதிய அன்னையை நிறுத்தி புரியா பாவனையுடன் அவள் முகம் பார்த்தான் அமரேசன் .

What’s your Reaction?
+1
2
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!