Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 11

11

” வைசாலி இந்த ‘கஸ்டமர் கேர் சர்வீஸ் ‘  நமது கார் சென்டரில் நிச்சயம் இருக்க வேண்டுமா …? ” என்றான் கரண் .

ஆரம்பத்திலிருந்தே இந்த திட்டத்தில் உடன்பாடில்லை அவனுக்கு .

” ஏன் கரண் , இதில் என்ன பிரச்சினை உங்களுக்கு ..? ” வைசாலியின் உதடுகள் இந்த கேள்வியை உதிர்த்தாலும் நெஞ்சம் நிலையின்றி தவித்துக் கொண்டிருந்த்து .




” நம்மிடம் கார் சர்வீஸ் செய்பவர்களின் கார்கள் இடையில் எங்கே நின்றாலும் நாம் போய் அவர்களுக்கு சர்வீஸ் செய்வது நல்ல திட்டம்தான் .இதனால் நமக்கு வாடிக்கையாளர்கள் பெருகுவாரகள்தான் .ஆனால் இது பிராக்ட்டிகலாக கடினம் சிஸ்டர் .எங்காவது அத்துவானக் காட்டிற்குள் வண்டியை நிறுத்தி விட்டு கூப்படுவார்கள் .நாம் ஓடவேண்டும் .முடியுமா நம்மால் ..? “

” அந்த மாதிரி கஷ்டமான விசயங்களை நாம் செய்வதனால்தான் வாடிக்கையாளர்களிடம் நம் மதிப்பு உயரும் .மேலும் இதற்கான தொகையை போக்குவரத்து செலவு உட்பட நாம்தான் வசூலித்து விட போகிறோமே கரண் .ஒரு  ‘டைமிங் பெல்ட்  ‘ அறுந்து கார் ஓடாதபோது சாதாரணமாக நாம் வசூலிப்பது ஆயிரம் ருபாய் .ஆனால் நடுவழியில் இந்த பிரச்சினையால் நின்றிருக்கும் காருக்கு நாம் வசூலிக்க போவது  இரண்டாயிரம் .நமது மெக்கானிக்கிற்கு பைக் பெட்ரோல் செலவு நூறு ருபாய் ஆகும் . அவ்வளவுதான் .அது போன்ற இக்கட்டான நிலையில் இந்த அதிக பண செலவு அவர்களுக்கு பெரியதாக தெரியாது ” கரணிற்கு விளக்கம் அளித்துவிட்டு …தனது போனை பார்த்துக் கொண்டாள் வைசாலி .

” இன்னமும் போன் பண்ணவில்லையே …” மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள் .

” இப்படி ஓட மெக்கானிக்குகள் தயாராக இருக்க மாட்டார்கள் வைசாலி …? ” கரண் குறைபட்டான்.

” அப்படியெனில் சர்வீஸ் சார்ஜ் என ஒரு அமௌன்ட் பில்லோடு சேர்த்து போடுவோம் .அதனை அந்த மெக்கானிக்குகளுக்கே கொடுத்து விடலாம் .”

மீண்டும் போனை பார்த்தாள் .

” ம் இந்த யோசனை பரவாயில்லை .முயற்சித்துதான் பார்க்க வேண்டும் ..” கரண் .

” என்ன சிஸ்டர் இன்னைக்கு கொஞ்சம் டல்லாக தெரிகிறீர்கள் …? ” கிண்டலாக கேட்டபடி அருகே வந்து அமர்ந்தான் சுரேஷ்.

” நானா ..?அப்படி ஒன்றும் இல்லையே ….” என மறுத்தாள் வைசாலி .

” ஏன்டா கரண் , சிஸ்டர் இன்று கொஞ்சம் மூட் அவுட்டில் இருக்கிறார்களே .அது தெரியாமல் நீ ஏன்டா அவர்களை கேள்வி கேட்டு வதைத்துக் கொண்டிருக்கிறாய் …? “

” அப்படியா சிஸ்டர் ….? ஆனால் …ஏன் …? “

” அதெல்லாம் ஒன்றுமில்லை …” என்ற அவளது மறுப்பை அலட.சியம் செய்து…




” இன்று நம் மனோ சார் வருகிறாரே .வைசாலியின் மனது இங்கே இருக்குமா என்ன …? ” குறும்பாக கேட்டவனை கோபம் போல் பார்த்தாள் .

” அட டா ..இது எனக்கு மறந்து போனதே …என்ன வைசாலி ,சார் இன்று வருகிறார் .நீங்கள் என்னவென்றால் ஏர்போர்ட் போகாமல் இங்கே உட்கார்ந்து பிஸினஸ் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் …” சுரேஷ் விட்ட கேலியை கரண் தொடர்ந்தான் .

அதுதான் வரவேண்டாமென்று கூறிவிட்டானே …மனதிற்குள் மனோகரனை  வைதபடி …” அது …இல்லை ..எனக்கு வேறு வேலை இருக்கிறது .நான் வருகிறேன் . ” என எழுந்து கையசைத்து விட்டு வெளியேறினாள் .

வெளியே வந்து ஸ்கூட்டியை எடுத்த போது போன் .ஆவலோடு எடுத்து பார்த்தவள் அம்ருதாவின் நம்பரை பார்த்ததும் எரிச்சலடைந்தாள் .இன்னமும் பத்தே நாட்கள்தான் .அதன்பிறகு இவளிடமிருந்து விடுதலையாகிவிடலாம் .

கார் கேர் சென்டர் முழுமையாக வேலை முடிந்து ஆரம்பிக்க மேலும் ஒரு மாதங்கள் ஆகும் என்பதால் அது வரை வைசாலி தொடர்ந்து அம்ருதாவிடமே வேலை பார்க்க வேண்டியதானது . உடனே வேலையை விட்டு நின்றுவிட்டு வந்து கார் சென்டரின் துவக்க வேலைகளை  பார்த்துக் கொள்ளுமாறும் , அதற்கென ஒரு சம்பளம் தந்து விடுவதாகவும. மனோகரன் சொல்லியிருந்தாலும் , அந்த சம்பளத்தில் சுரேஷ் , கரணிற்கு உடன்பாடில்லை .

தொழிலே ஆரம்பிக்காமல் சம்பளம் எப்படி …? என்பது அவர்கள் எண்ணமாக இருந்த்து .அம்ருதாவும் வேறொரு நல்ல மேக்கப் உமன் கிடைக்கும் வரை…ஒரு மாத்த்திற்கு  தொடர்ந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ள , வைசாலியால் மறுக்க முடியவில்லை .எனவே   அம்ருதாவிடமும் …இங்கேயுமாக அலைந்து கொண்டிருந்தாள் .இன்னமும் பத்து நாட்களில் கார் கேர் சென்டர் வேலைகள் முடிந்து ஆரம்பிக்கும் நிலையிலிருந்த்து .

ஒரு பிரபல அரசியல்வாதியை திறப்புவிழா சிறப்பு விருந்தனராக ஏற்பாடு செய்திருந்தான் மனோகரன் .சைனாவில் உட்கார்ந்து கொண்டு இங்கே எல்லாவற்றையும் எப்படி இவனால் செய்ய முடிகிறது…? வைசாலியால் வியக்காமல் இருக்க முடியவில்லை .

கேட்டால் வளர்ந்து விட்ட விஞ்ஞானத்தில் இது பெரிய விசயமா ..என்பான் .இல்லை …உன்னிடமிருந்து கற்றதுதான் ..என்பான் .இவள் புரியாமல் விழிக்கும் போது ….

,”நீ அங்கிருந்து கொண்டு இங்கே என்னை ஆட்டி வைக்கிறாயே …அது போலத்தான் .”.என்பான் .வைசாலியால் பதில் பேச முடியாமல் போகும் .

அவளின் மௌனத்தை “போனில் பாதி நேரம் நான் மட்டுமே தனியாக பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது “என கிண்டல் செய்வான் .

அன்று …அப்படி போனில் மனோகரன் முத்தமிட்ட பின் வைசாலிக்கு மிகவும் கூச்சமாகி போனது . மறுநாள் போன் ஒலித்த போது எடுக்கவே மிகவும். யோசித்தாள் .மூன்று முறை ரிங் போய் முடித்த பின் நான்காவது முறை மெல்ல எடுத்தாள் .ஹலோ சொல்லாமல் காதில் வைத்தபடி இருந்தாள் .

” வைசாலி …ஆர் யு ஓ.கே …? என்னம்மா …ஏதாவது பிரச்சனையா …? ” மனோகரன் பதறிவிட்டான் .

” இ…இல்லை …ஐ..ஆம் ஆல்ரைட் ….” திணறினாள் .




” நோ…உன்னோட வாய்ஸ் சரியில்லை .எனிதிங் ராங் …? “

” இல்லைப்பா ..நா..நான் ..எனக்கு ஒன்றுமில்லை …அது …வந்து ..உங்களுடன் பேச கொஞ்சம் …கூச்சமாக ….” வார்த்தைகளுக்காக தடுமாறினாள் .

” என்ன …! கூச்சமா …? பதிலுக்கு பதில் என்ன வாயடிக்கிறாய் …? இப்போது இந்த திடீர் கூச்சம் ஏன் வந்த்து ..? என்ன விசயம்டா சாலி ..? ம் …சொல்லுடா ..தெரியாமல்தானே கேட்கிறேன் ” கிண்டலை தொடர்ந்தான் .

” மனு …இனி இப்படியெல்லாம் செய்தால் நான் உங்களுடன் பேச மாட்டேன் …போங்க …” ஊடலாய் சிணுங்கினாள் .

” எப்படி செய்தால் ….? என்னடா ..இன்று உன் பேச்சு ஒன்றுமே புரிய மாட்டேனென்கிறதே …..”

” மனு …ப்ளீஸ் …” இப்போது அவளது கூச்சத்தை உணர்ந்தவன் ..” சரி ..பிழைத்து போ …” என தொழில் பற்றிய பேச்சுக்கு மாறினான் .

கார்களின் உள் அலங்காரம் பற்றிய தனது ஐடியாக்களை அவனிடம் கூறியவள் ” இவையெல்லாம் ரொம்ப எக்ஸ்பென்சிவ் என்பதால் , நம்ம கஸ்டமருக்கு பிடிக்குமோ …என கரண் சந்தேகப்படுகிறார் ” என்றாள்.

” இல்லை …நமது கஸ்டமர்கள் அதிகமாக ஹை சொசைட்டிதான்  .அதனால் உனது ஐடியா நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் .நான் கரணிடம் பேசுகிறேன் “

” ஹை சொசைட்டி மட்டுமில்லாமல் மிடில் கிளாஸ் மக்களுக்கும் சர்வீஸ் வேண்டுமென்று சொன்னேனே ..மனோ ..யோசித்தீர்களா …? “

” அது …யோசிப்போம்மா ….அரசியல்வாதிகள் , நடிகர்கள் …என வசதியானவர்களை குறி வைத்துதான் இந்த தொழிலை ஆரம்பித்திருக்கிறோம் .இவர்களென்றால் லாபம் உறுதியென கொள்ளலாம்.முதலில் இவர்களிடம் நின்றுகொள்வோம் .ஒரு வருடம் போகட்டும் .பிறகு ..நீ சொன்னது போல் செய்யலாம் .அல்லது அவர்களுக்கு தனி யூனிட் போடலாம் …”

” மெர்சிடஸ் பென்ஸ் போல மாருதி 800 , இன்டிகாவும் கூட கார்கள்தான் மனோ …”

” ஏய் …நான் மறுக்கவில்லையே  …கொஞ்சம் நாள் போகட்டுமென்றுதான் சொல்கிறேன் டியர் …”

” ம் …சரி …”

” அப்புறம் சாலி …நீ ஏதோ ..என்னவோ வாங்குவது ரொம்ப எளிதாயில்லை என்று சொன்னாயே …கொடுப்பது எளிதாயிருக்கிறதா என சோதித்து பார்க்கிறாயா …? ” கலாட்டாவில் இறங்கினான் .

இவ்வளவு நேரம் தீவிரமாக தொழில் பேசியவன் இவனா …என்றிருந்த்து வைசாலிக்கு .




” போச்சு ….ஆப்சென்ட் ஆயாச்சா …? ஹலோ …இங்கே இவ்வளவு நேரம் நான்ஸ்டாப்பாக ஒரு அம்மா மைக் பிடித்துக் கொண்டிருந்தார்களே ..அவர்களை எங்கே காணோம் …? “

” ஹலோ …இவ்வளவு நேரமாக தீவிரமாக தொழில் பேசிக்கொண்டிருந்தாரே ஒரு பிஸினஸ் மேன் .அவரை எங்கே காணோம் .. ? இப்போது ஒரு விடலைப் பையன் என்னிடம் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான் …”

” ஹா…ஹா …சாலி …நீ தேறிவிட்டாய் .”

மனோகரனுக்கும் , தனக்கும் நடந்த போன் உரையாடல்களை மனதிற்குள் ஓடவிட்டபடி வண்டியில் போய் கொண்டிருந்தாள் வைசாலி .அவசரமென உடனே வருமாறு அழைத்திருந்தாள் அம்ருதா .

கோலத்திற்கு புள்ளி வைப்பதிலிருந்து ….அம்ருதாவிற்கு மேக்கப் போடுவது வரை எந்த நேரமும் மனதிற்குள் கலகலபேச்சும் , நிறைந்த புன்னகையுமாக மனோகரனே வலம் வந்து கொண்டிருந்தான் .

இதோ இந்த டிராபிக் இரைச்சல்களையும் மீறி , நேற்றைய அவனது பேச்சு ஒரு ஓரமாக மனதினுள் நீரூற்றாய் தேனென வழிந்து கொண்டுதானிருக்கிறது .அதுவே சதா காதினுள்ளும் ஒலித்துக் கொண்டிருப்பதாய் ஒரு பிரமை வைசாலிக்கு .இப்படியே இன்னும் கொஞ்சநாள் போனாள் எனக்கு பைத்தியம்தான் பிடிக்க போகிறது .தனக்குள் எண்ணி சிரித்துக்கொண்டாள் வைசாலி .அப்போது ….

அதோ அங்கே பைக்கில் போவது யார் …? குவிந்திருக்கும் வாகனங்களுக்கிடையே , கண்களை கூர்மையாக்கி பார்த்தாள் .அவளது சந்தேகம் சரிதான் .அது பக்கத்து வீட்டு சேகர்தான் .பின்னால் யாரோ ஒரு பெண் .இந்த நாகரீக காலத்தில் பைக்கில்  பின்னால் உட்கார்ந்து போகும் பெண்ணையெல்லாம் சந்தேகம் கொண்டு பார்க்க கூடாதுதான் .

ஆனால் இந்த பெண் பின்னால் உட்கார்ந்து சென்ற தோரணை சந்தேகம் கொள்ளவே தோன்றியது .அவ்வளவு நெருக்கம் .விஜயாவின் நினைவு பரிதாபத்தோடு வைசாலி நினைவுக்கு வந்த்து.

பாவம் .அப்பாவி கிராமத்து பெண் .இவனை மிக நல்ல கணவன் என்று நம்பி காதலித்துக் கொண்டிருக்கிறாள் துயரத்தோடு நினைத்தபடி தனது வண்டியை வேகமாக்கி விரைந்தாள் .

அம்ருதா அவசரமாக வெளியே எங்கேயோ கிளம்பிக்கொண்டிருந்தாள் .

” வந்துவிட்டாயா …? வா ..என்னோடு காரிலேயே வந்துவிடு …” காரில் ஏறினாள் .

” எங்கே மேடம் …? “

” என் பங்களாவுக்கு ….” என்றவளின் கண்கள் ஜொலித்தன .

” அங்கே நான் எதற்கு …? வரவில்லை …”

” ஏய் வைசாலி …முக்கியமென்றுதானே கூப்பிடுகிறேன் .இதற்கு முன் இப்படி உன்னை அழைத்திருக்கிறேனா …? அங்கே எனக்கு மேக்கப் போட வேண்டும் .அதனால்தான் ..வா “

உண்மைதான் இது போல் வெளியிடங்களுக்கு முன்பு எபபோதும் அவளை அம்ருதா அழைத்ததில்லை .

” சரி நீங்கள் காரில் போங்கள் .நான் என் ஸ்கூட்டியில் பின்னாலேயே வருகிறேன் .” அரை மனதோடு கிளம்பினாள் .

” இன்று அவர் இங்கு வருகிறார் .அவரை இம்ப்ரெஷ் பண்ண வேண்டும் . நீ எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாதவள் போல் மேக்கப் போட்டுவிடு ” அங்கே போனதும் அம்ருதா சொன்ன போது , அதனை வைசாலியால் மறுக்க முடியவில்லை .அவள் விருப்பம் போல் மேக்கப் போட்டுவிட்டு ” நான் வருகிறேன் மேடம் ” என்றாள் .




” வைசாலி உள்ளேயிருந்து தண்ணீர் ஜக்கை மட்டும் இங்கே கொண்டு வந்து வைத்துவிட்டு போயேன் ” சோபாவில் ஒரு மாதிரி போஸில் படுத்துக் கொண்டு கூறினாள் அம்ருதா .

கண்களை அவளிடமிருந்து திருப்பிக் கொண்ட வைசாலி  ,  உள்ளே ப்ரிட்ஜில் இருந்த தண்ணீரை ஜக்கில் ஊற்றிக் கொண்டு வந்த போது , அங்கே அம்ருதாவும் , ஓர் ஆணும் நடு ஹாலில் அணைத்தபடி ஒரு இதழ் முத்தத்தில் ஆழ்ந்திருந்தனர் .

சை ….சட்டென உடலெல்லாம் அருவெறுத்து விட நகர எண்ணிய வைசாலி , அந்த ஆண் இப்போது நிமிரவும் கண்கள் இருள , பாதாளத்திற்குள் உருள்வது போல் உணர்ந்தாள் .

ஏனெனில் அந்த ஆண் …மனோகரன் .சந்தேகமன்றி அவளுடைய மனோகரனேதான் .

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!