kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 20

20

 

அந்த ஜான் பீட்டர் டீக்கான  உடைகளில் நாகரீகமாக இருந்தான். போன வருடம்தான் கல்லூரி முடித்து வந்த இளைஞன் போல் இளமையாக தெரிந்தான். உயர்ரக சிகரட்டை புகைத்தபடி அலட்சியமாக நின்றிருந்தான்.

 

எவ்வளவு கொடுப்பீங்க சார்? ” வர வைக்கப்பட்ட பவ்யம் அவன் குரலில்.

 

” உனக்கு எவ்வளவு வேண்டும் ? ” 

 




” முப்பதுநாற்பதுஒரு அம்பது லட்சம் கொடுத்துருங்க சார் . நான் எங்கேயாவது வடநாட்டுப் பக்கம் ஓடி போய் பிழைத்துக் கொள்கிறேன் ” 

 

ஜான்பீட்டர் இது அதிகம் .நான் உனக்கு ஐந்து  லட்ச ரூபாய் கொடுத்து விடுகிறேன் .அது போக மும்பையில் ஒரு வேலையும் வாங்கிக் கொடுக்கிறேன். இனி இந்த பக்கமே வராமல் அங்கேயே செட்டிலாகி விடு ” 

 

ஐந்து லட்சமா ? உன் உயிரின் விலை வெறும் அஞ்சு லட்சம் தானா ? ஹலோ சார் கொலைக் குற்றத்திற்கு தண்டனை தூக்கு தெரியுமா ? ” ஜான் பீட்டரிடம் மரியாதை குறைந்திருந்த்து.

 

” ஜான் பீட்டர் நான் இப்போது நினைத்தாலும் அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு நீ தான் கொலைகாரன் என்று தகுந்த சாட்சியோடு உன்னையே ஜெயிலுக்கு அனுப்பி வைக்க முடியும் .ஆனால் அது வேண்டாம் என்று பார்க்கிறேன் .கொடுக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு ஓடிப் போய்விடு ” 

 

யோவ் என்ன  மிரட்டுறியா

நீ ரொம்பவும் கெஞ்சி கேட்டுக் கொண்டதால்தான் இத்தனை நாட்களாக யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருந்தேன் .இனியும் அப்படி இருக்க போவது இல்லை .இப்போதே எங்கள் குப்பத்தில் போய் உன்னையும் உன் குடும்ப லட்சணத்தையும் எல்லோருக்கும் தெரியப்படுத்தப் போகிறேன். முக்கியமாக உன்னைப்பற்றி  உன் பெண்டாட்டியிடம் புட்டுப்புட்டு வைக்கப் போகிறேன்.

 பிறகு நீ இந்த முதலாளி பந்தா எல்லாம் விட்டுவிட்டு ஜெயிலில் களிதான் சாப்பிட போகவேண்டும் ” சவால் விட்டுவிட்டு திரும்பிய ஜான்பீட்டர் அலறினான்.

 




” யாரிடம் என்ன பேச போகிறாய் ? ” கேட்டபடி மெல்ல அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் மிருதுளா.

 

” நீநீமது….ராபேபே ….பேய்  ” அலறியபடி பின்னால் நகர்ந்தான் ஜான் பீட்டர்.

 

மிருதுளா அந்த சிகப்பு நிற சேலையை கட்டிக் கொண்டிருந்தாள். அதனை மதுரா போல் ஒற்றை முந்தியாக போட்டிருந்தாள் .அந்த சேலையும் அவளது தலை முடியும் கடற்காற்றில் படபடவென அங்குமிங்கும் அலைந்தன .அவள் கண்கள் இமைக்காமல் நேர் பார்வையாக இருந்தன.

 

” மிருதுளா நீ ஏன் இங்கே வந்தாய்  ? ” வேகமாக அவள் முன் வந்து நின்ற மகிபாலனின் மார்பில் கை வைத்து அவனை தள்ளிவிட்டாள் மிருதுளா. அவன் கீழே உருண்டு விழுந்து மிருதுளாவின் அசகாய சக்தியை நம்ப முடியாமல் பார்த்தான்.

 

மிருதுளா கண்களை இமைக்காமல் பார்த்தபடி ஜான் பீட்டரை நெருங்கினாள் .அவன் கையெடுத்துக் கும்பிட்டான் .”  மேடம் மதுரா மேடம் நான் இல்லை மேடம் .நான் உங்களை ஒன்றும் செய்யவில்லை எல்லாவற்றிற்கும் காரணம் அவர்தான் .அவர் உங்களை கொன்று தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு காரில் ஏற்றுவதை பார்த்தேன். அதை சொல்லித்தான் அவரை மிரட்டி கொண்டிருந்தேன்.நான் உங்களை கொல்லவில்லை மேடம் ” 

 

மிருதுளா இமை அசைக்கவில்லை .அதே நேர்கோட்டு பார்வையுடன் அவனைப் பார்த்தபடியே இன்னமும் நடந்து வந்து கொண்டே இருந்தாள். ஜான்பீட்டர் பதட்டத்துடன் இப்போது தனது இரு கன்னங்களிலும் டப் டப் என்று அடித்துக் கொண்டான் ”  தப்புதான் மேடம் .தப்புதான் நீங்கள் அப்பழுக்கு இல்லாதவர். என்




மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையை எனக்கு சாதகமாக்கி உங்களையும் என்னையும் சேர்த்து எங்கள் குப்பத்தில் தப்பு தப்பான கதைகளை பரப்பி விட்டது நான்தான் .அதனையே உங்கள் குடும்பத்தாரும் நம்பும்படி செய்ததும் என் வேலைதான் .அதற்கு என்னை மன்னித்து விடுங்கள் ” 

 

” முட்டாள் நீ அவளைப் பற்றி தப்பாக சொன்னால் நாங்கள் நம்பி விடுவோமாமதுரா நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்த பெண். அவள் மனமும் எண்ணமும் தூய்மையானவை என்று எனக்கு நன்றாக தெரியும் .உன்னுடைய பழிச் சொற்களை நான் இதோ இன்றுவரை நம்பவில்லை ” மகிபாலன் ஆவேசத்துடன் கத்தினான்.

 

மிருதுளா இப்போது மகிபாலனை திரும்பிப் பார்த்தாள். இமைக்காமல் நிலைகுத்தி நின்ற அவளுடைய கண்களில் சிறிய சலனம். கண்ணாடி பரப்பாக  மின்னின அவளது கண்கள்.

 

மகி ”  மகிபாலனை நோக்கி இருகைகளையும் நீட்டினாள் .அவன் அவள் கைகளைப் பற்றி இழுத்து அவளை அணைத்துக் கொண்டான் .ஐஸ்கட்டி போல் குளிர்ந்து விரைத்து நின்ற அவள் தேகத்தில் கவலை கொண்டான்.

மெல்ல அவள் தலையை வருடினான்.

 

”  காம் டவுன்காம் டவுன் ”  அவள் காதில்  மெல்ல சொன்னான். மிருதுளா அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

 

மிருது…. குட்டிஆர் யூ ஓகே ? ” அவனுடைய அழைத்தலில் மிருதுளாவின் தேகம் விரைத்தது .அப்போது அவளுக்கு பின்புறம் பார்த்த மகிபாலன் ”  டேய் துரோகி ” என்ற கத்தலோடு மிருதுளாவையும் அணைத்து  சேர்த்து கீழே குனியஅந்த பெரிய சுத்தியலை ஓங்கியபடி வந்த ஜான் பீட்டரின் குறி தப்பி கப்பலின் தரையில் விழுந்தது. மீண்டும் அவன் அந்த கனமான சுத்தியலை தூக்கிக்கொண்டு திரும்பியபோது அலறினான்.

 




ஒளிர் மின்னலாய் மிருதுளா அவன் முன் நின்றிருந்தாள். கொத்தாக அவன் சட்டையை பற்றி அப்படியே அவனை உயரே தூக்கினாள் .”  என்னை விட்டுவிடு ” அவன் கத்தியபடி இருக்க ஒருவித வெறியில் அவனை உயரமாக தூக்கியவள் அப்படியே எறிந்தாள். ஜான் பீட்டர் கீழே சூழ்ந்திருந்த கடல் நீருக்குள் மூழ்கி காணாமல் போனான்.

 

” மிருதுமிருதுளா உனக்கு என்ன ஆயிற்றுஏன் இப்படி செய்கிறாய்  ? ” மகிபாலன் அவள் கன்னத்தில் மாறி மாறி தட்டி பயனின்றி இறுதியாக சப்பென்று கன்னத்தில் அறைந்தான் .மிருதுளாவின் கண்கள் இமைத்தன. படபடவென அடித்துக் கொண்டன .மகிபாலனை பார்த்துக்கொண்டிருக்கும் போதே கண்கள் சொருகி மயக்கம் ஆனாள.

 

மகிபாலன் தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் சட்டென அடித்தான் .மீண்டும் கண்களை திறந்தவள் அச்சத்துடன் சுற்றி பார்த்தாள் ”  இது எந்த இடம்நான் எப்படி இங்கே வந்தேன் அத்தான் ? ” 

 

அவளுடைய அத்தானை இன்பமாக கவனித்தபடி அவளை அணைத்துக் கொண்டான் மகிபாலன்.” இது நம் கப்பல்தான் குட்டி . நீ ஜான் பீட்டரை தேடிக்கொண்டு இங்கே வந்தாய் ” 

 

” ஆமாம் நான் அவனைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் .அவனை எங்கே ? ” 

 

” அங்கே கடலுக்குள்உன் அக்காவிற்கு அவன் செய்த தீங்குக்கு அதுதான் அவனுக்கு சரியான தண்டனை ” 

 

” அவன் தான் அக்காவை கொன்றுவிட்டானா  அத்தான் ? ”  மகிபாலன் வேதனையுடன் அவளை பார்த்தான்.இல்லை  என மெல்ல தலையசைத்தான்.

 




” இல்லை உன் அக்கா அவனுக்கு கொடுத்த சில அதிகப்படி சலுகைகளை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கதை கட்டி விட்டுக்கொண்டிருந்தான் .அது மட்டும் தான் அவன் செய்த தவறு ” 

 

” அப்படியானால் மதுராவை கொன்றது யார்சொல்லுங்கள் அத்தான் .எனக்கு இன்று இது நிச்சயம் தெரியவேண்டும் ” 

 

மகிபாலன் மெல்ல அவளை விட்டு விலகி எழுந்தான் . ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்றான் பிறகு திரும்பி ” நான்தான்  ” என்றான்.

 

மிருதுளா பிரமை பிடித்தவள் போல் அப்படியே அமர்ந்துவிட்டாள் .நம்பமுடியாமல் அவனை பார்த்தாள்.

 

” எனக்கு வேறு வழி தெரியவில்லை குட்டி .சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது. நீ கொஞ்சம் அமைதியாக இரு நான் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்கிறேன் ” 

 

” நானும் உனக்கு உதவி செய்கிறேன் மகிபாலா ”  சொன்னபடி வந்தவர் கலிவரதன்.

 

” மாமா நீங்களாநீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் ? ” 

 

” மிருதுளா ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு போனதைப் பார்த்ததாக வாட்ச்மேன் சொன்னான் .பதட்டத்துடன் அவளைத் தேடி சில இடங்களுக்கு அலைந்துவிட்டு ஒரு சந்தேகத்தில் இங்கே வந்தேன் .நான் வருவதற்குள் நிறைய விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன போல ” 

 

” ஜான்பீட்டரை  விடுங்கள் மாமா .அவனுக்கு கிடைத்திருக்க வேண்டிய தண்டனை தான் அது .கடலிலேயே பிறந்து வளர்ந்தவன். தப்ப வேண்டும் என்ற விதி இருந்தால் தப்பி கரை சேரட்டும் இல்லை என்றால் அவன் தவறுகளுக்கு தண்டனையாக கடலுக்கடியில் முழுகட்டும் ” 

 

 ” அப்பா எனக்கு மதுராவை பற்றி சொல்லுங்கள் ” 

 

” என்னால்தான் மதுரா இறந்தாள் என்று மிருதுளாவிடம் சொல்லிவிட்டேன் மாமா ” மகிபாலன் முந்திக் கொள்ள கலிவரதன் ” அதைத்தான் குட்டியிடம் தெளிவாக விளக்கப் போகிறேன் ” என்றபடி அவள் முன் அமர்ந்தார்.

 




  ” குட்டி நம்முடைய முதல் கோட்டியா கப்பல் கட்டி முடித்ததும் அதனைக் கொண்டாட ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தோம் .உனக்கு ஞாபகம் வருகிறதாஅன்று கூட இதோ இந்த  சேலைதான் நீ கட்டிக்கொண்டிருந்தாய் .” அவளது சேலையை எடுத்துக்காட்டி கலிவரதன் சொல்ல  மிருதுளாவின் மூளையில் ஏதோ பிறளல் . ஏதோ போன ஜென்மம் போல் இருந்த சில சம்பவங்களை அவள் மூளை தோண்டி வெளியே எடுக்க துவங்கியது.

 

 

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!