mayanginen mannan inke Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே – 6

6

திருமலைராயனின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்த்து .விடிந்தால் அவனது திருமணம் .இத்தனை பெரிய வீடு இருக்கும் போது மண்டபமெல்லாம் தேவையில்லையென திருமண ஏற்பாடுகள் அவனது வீட்டிலேயே ஏறபாடு செய்யப்பட்டிருந்தன .

சஷடி மலர் பரபரப்பாக ஓடி …ஓடி கல்யாண  வேலைகளை செய்து கொண்டிருந்தாள் .அவள் முகம் அன்றலர்ந்த தாமரையாக இருந்தது .அவளது ஈடுபாடான  வேலைகள் இந்த திருமணத்தை நான் மிகவும் விரும்புகிறேன் என சொல்லிக் கொண்டிருந்தன .

” இப்படி சுத்தி நிற்காமல் எல்லோரும் அந்தப் பக்கம் தள்ளிப் போங்களேன் .எனக்கு மூச்சு முட்டுவது போலுள்ளது ….” சந்திராம்பிகை அவளது மணமகள் அறையில் அவளை சுற்றிக் கொண்டிருந்த அவள் சொந்தங்களிடம் கத்திக் கொண்டிருந்தாள் . அவளது முகத்தில் உச்சக்கட்ட டெனசன் இருந்த்து .




” ஏன் எல்லோரும் எங்கள் ராயரம்மாவை டிஸ்டர்ப் பண்றீங்க …? கொஞ்ச நேரம் எல்லோரும் வெளியே நில்லுங்களேன் …” பெரிய தாம்பாளத்தை கையில் தூக்கிக் கொண்டு உள்ளே வந்த சஷ்டி மலர் சுற்றியிருந்த மற்ற பெண்களை கிட்டதட்ட அறையை விட்டு விரட்டினாள் .சந்திராம்பிகை அவளை வெறித்தபடி நின்றாள் .

” இந்த பூ ஆரத்தை நானும் , சொப்னாவும்ஸ்பெசலாக  யோசித்து  உங்களுக்காகவே தயார் செய்தோம் ராயரம்மா .இதைத்தான் நீங்கள் நாளை காலை வைத்துக் கொள்ள வேண்டும் …” பூக்களோடு மணிகளும் சேர்ந்து கோர்த்த மாடர்ன் ஆரத்தை எடுத்து காண்பித்தாள் சஷ்டிமலர் .

” என்னை ஏன் இப்படி கூப்பிடுகிறாய் …? “

” எங்க ராயரை கட்டிக்கிட போற நீங்க ராயரம்மாதானே …? இப்படிக் கூப்பிட்டால் உங்களுக்கு பிடிக்கும்னு …” அவள் முகத்தருகே குனிந்து ரகசியமாக ” அவர் …திருதான் சொன்னார் ” என்றாள் .

” மரியாதையில்லாமல் அவரை பெயர் சொல்லிக் கூப்பிடுகிறாயே …? இதறகு என்ன அர்த்தம் ..? ” சந்திராம்பிகையின் குரலில் கோபக் குமிழிகள் .

” இதிலென்ன அர்த்தம் இருக்கிறது .அவர் …  திரு எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட் .அதனால் சுலபமாக பெயர் சொல்லிக் கூப்பிடுகிறேன் …”

” சொப்னாதானே உன் ப்ரெண்ட் .அவரோடு உனக்கு என்ன சிநேகம் …? “

சஷ்டி சந்திராம்பிகையின் முகத்தை உற்றுப் பார்த்தாள் .மெல்ல புன்னகைத்தாள்.

” ஹப்பா …எவ்வளவு பொஸசிவ்னெஸ் …? உங்களுக்கு அவர. மீது அவ்வளஙு லவ்வா ராயரம்மா …? ” கொஞ்சலாய் கேட்டு சந்திராம்பிகையின் கன்னத்தில் செல்லமாக குத்த வேறு செய்தாள் .

” முதலில் இந்த ராயரம்மாவை நிறுத்தி தொலை .என்னை தொடாமல் தள்ளி நின்று பேசு .என் கேள்விக்கு பதில் சொல்லு …”

” எந்த கேள்விக்கு …? ” கைகளை கட்டிக் கொண்டு நிதானமாக கேட்டாள் .

” உனக்கும் அவருக்கும் என்ன சிநேகம் …? ” சந்திராம்பிகை  ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தி கேட்க ,அவளது கேள்வியை கவனமாக தலை சாய்த்து கேட்டு முடித்து விட்டு மெல்ல தலையசைத்தாள் சஷ்டிமலர் .

” உங்களுக்கு கல்யாண டென்சன் நிறைய இருக்கிறது ராயரம்மா .இப்படி பூட்டிய அறைக்குள்ளேயே இருந்தீர்களானால் மூச்சு முட்டும் .இங்கே வாருங்கள் ….” தொடாதே என்ற சந்திராம்பிகையின் எரிச்சலை கண்டு கொள்ளாது , அவளது கை பற்றி அழைத்து போய் அந்த அறையின் பால்கனியில் நிறுத்தினாள் .




அறையின் ஏசியை ஆப் செய்து சன்னல்களை திறந்து விட்டாள் .சந்திராம்பிகைக்கு பால்கனியிலேயே ஒரு சேரை எடுத்து வந்து போட்டு அவளை அதில் அழுத்தி அமர வைத்தாள் .

” ஒரு அரை மணி நேரம் இந்த வெளிக் காற்றில் உட்காருங்கள்.மூச்சை இழுத்து விட்டு சுவாசியுங்கள் . பிறகு பாருங்கள் மனதில் இருக்கும் பயம் , குழப்பதெல்லாம் மறைந்து போகும் .சரியா …? ” செல்லமாக அவள கன்னத்தில் தட்டிவிட்டு அறையை விட்டு  வெளியேறினாள் .

அடுத்து அவள் போன இடம் திருமலைராயனின் அறை. நண்பர்கள் குழுமியிருந்த அவன் அறைக்குள் போகாமல் வெளியிலேயே நின்று பேச வேண்டுமென ஜாடை செய்தாள் .உடன் கூடியிருந்த நண்பர்களை தவிர்த்து விட்டு அவன் வெளியே வர , சஷ்டி தோட்டத்திற்கு நடந்தாள் .

வண்ண வண்ண மின் பூக்கள் அலங்காரமாய் பூத்து தொங்கிய தோட்டத்து செடிகளிடையே , சற்றே ஒதுக்குப்புறமான இடத்தில் நின்றிருந்தவள் , திருமலைராயன் அருகே வரவும் படபடப்பாக பேசினாள் .

” நான் கொடுத்த அகரிமென்டை பார்த்தீர்களா ராயரே …? “

” ம் .பார்த்தேன் .அந்த துறைமுக தொழிலிறகாக பாரின் கம்பெனியுடன் சந்திராம்பிகையின் அப்பா போட்டுக் கொண்ட அக்ரிமென்ட்தானே அது .சரியாக சொல்வதானால் ஒரு வருடத்தற்கு முன்பே இந்த தொழிலை அவர் திட்டமிட ஆரம்பித்து விட்டார் .அவருக்கும் அந்த இந்தோனேசிய கம்பெனிக்குமிடையே செய்து கொண்ட ஆரம்ப கால தொழில் ஒப்பந்தம் அது .அது எப்படி உனக்கு கிடைத்தது மலர் …? “

” கஷ்டப்பட்டு நிறைய வேலைகள் செய்து வாங்கினேன் ராயர் .உங்களுக்காக …உங்கள் அம்மாவிற்காக …என் தோழி சொப்னாவிற்காக …”

திருமலைராயன் அருகிலிருந்த வேப்பமரத்தில் வழிந்த மின் தோரணங்களை பார்த்தபடி இருந்தான் .” உனக்கு எங்கள் குடும்பத்தின் மீது ரொம்ப அக்கறை மலர் …”

” நிச்சயமாக ராயரே .என்னுடைய வேண்டுகோளெல்லாம் இதுதான் .சந்திராம்பிகை மேடத்தை நீங்கள் கல்யாணம் செய்து கொள்வது மிகவும் நல்ல விசயம் .ஆனால் அவர் அப்பாவிடம் இது போல் தொழில் அது ..இதுவென எதிலும் மாட்டிக் கொள்ளாதீர்கள் …”

” இந்த திருமணத்தின் ஆரம்பமே தொழில் தொடரபுகள்தான் மலர் “

” முதல் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் ராயரே .ஆனால் திருமணமென வந்த பிறகு , உங்கள் இருவரை பற்றிய விசயங்களை பற்றி மட்டுமே நீங்கள் யோசிக்க வேண்டும் .அதுதான் அநாவசியமான பிரச்சனைகள் வராமல் இருக்க வழி வகுக்கும் “

” இப்போது என்ன அநாவசிய பிரச்சனைகள் வந்து விட்டது என்கிறாய. …? ” திருமலைராயனின் பார்வை கூர்மையாக , தனது இலக்கு சரியாக தைத்து விட்டதை திருப்தியாக உணர்ந்த சஷ்டி …கட்டை விரல் நகம் கடித்துக் கொண்டாள் .

” அ …அது …வ..வந்து …” திணறினாள் .

” உன் கணிப்புகள் ஓரளவு சரியாகவே இருக்கின்றன மலர்அலி .சொல்ல வருவதை தெளிவாகவே சொல்லு “

” அ…வ…இ..இப்போது கொஞ்ச நேரம் முனபு அ..அவுங்க …சந்திராம்பிகை மேடம் என்னிடம் நம் இருவருக்குமிடையே என்ன சி …சிநேகமென்று கேட்டார்கள் …”

திருமலைராயனின் முகம் மாறியது .

” அப்படியா கேட்டாள் …? ஏன் சந்திராவின் புத்தி இப்படி போகிறது …? “

” அதை விடுங்க .அவுங்க வேறு ஏதாவது நினைப்பில் இதை சொல்லியிருக்கராம் .அது இப்போது முக்கியமில்லை .நீங்கள் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக அவர்களிடம் பழகுங்கள் .இதை உங்களிடம் சொல்லத்தான் கூப்பிட்டேன் .கல்யாண வேலைகள் நிறைய இருக்கிறது .வருகிறேன் …” சொல்லிவிட்டு வேகமாக திரும்பயவளின் காலில் சிறு கல் இடற , கால் பிரண்டு தடுமாறினாள் .

திருமலைராயன் ச்ட்டென அவளை தாங்கிப் பிடித்தான் .” திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணுடன்…மணந்து மனைவியாக்கி கொண்டவளுடன் …ஜாக்கிரதையாக பழகும் நிரபந்தம் இருந்தால் , அந்த வாழ்வு சரியாக வருமா மலர் …? “




சஷ்டி மலர் திருமலைராயனின் வலிய கரங்களில் தொய்ந்து கிடக்க , அவனது முகம் அவள் முகத்திறகு வெகு அருகாமை இருந்த்து .நேருக்கு நேர் அவள் விழிகளை பார்த்தபடி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன் .

சஷ்டியால் அவன் விழிகளை நேராக சந்திக்க முடியவில்லை .கண்களை இறுக மூடிக் கொண்டாள் .” எ..எது சரி …எ …எது தவறு …? ” அவள் இதழ்கள் முணுமுணுத்தன .

” அந்த நிலக்கரி இறக்குமதி தொழிலில் சந்திராம்பகையின் தந்தை மிக உறுதியாக இருக்கிறார் மலர் .திருமணம் முடிந்த்தும் அதில் நான் கையெழுத்திட்டே ஆக வேண்டுமென வறபுறுத்திக் கொண்டருக்கிறார. இப்போது நான் என்ன செய்ய …? ” திருமலைராயன் தன் கைகளில் கிடந்தவளிடம் கேள்விகள் கேட்க , சஷ்டி தலையை உலுக்கி தன் பிரமையிலிருந்து வெளியே வந்தாள் .

” இதென்ன திருமண ஒப்பந்தமா …? தொழில் ஒப்பந்தமா …? இதற்கு நீங்கள் சம்மதிக்கவே செய்யாதீர்கள் திரு …? ” அவன் தோள்களை பற்றி நேராக நின்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளின் குரலில் உண்மையான கோபமே இருந்த்து .

” எதறகு …? தொழிலிற்கா …? திருமணத்திற்கா …? ” புருவம் உயர்த்திக் கேட்டவனின் கேள்வியில் சஷ்டிக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது .

” சொல்லு மலர் .நான் எதனை நிறுத்த ஙேண்டும் …? சந்திராம்பிகையின் தந்தையுடனான தொழிலையா …? சந்திராம்பிகையுடனான திருமணத்தையா …? “

சஷ்டி மலர் விழித்தாள் .இவனென்ன இப்படி கேட்கிறான் …? இதறகு என்ன பதில் சொல்வது …?

” இதையெல்லாம் என்னிடம் ஏன் கேடகிறீர்கள் சார் …? எனக்கென்ன தெரியும் …? “

” தாண்டவராயரின் ரகசிய தொழில் ஒப்பந்த்ததையே எடுத்து வருமளவு புத்திசாலி நீ .இந்த இக்கட்டிலிருந்து விடுபடவும் எனக்கு வழி காட்ட மாட்டாயா மலர் ..? “

” க…கல்யாணம் உங்கள் சொந்த விசயம் சார் .அதில் என்னால் தலையிட முடியாது .நீங்களேதான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் …” சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் நடந்தாள்

வாசல்படி ஏறும் முன் மெல்ல நிமிர்ந்து பார்க்க , அங்கே அவள் அமர வைத்திருந்த இடத்திலேயே சந்திராம்பிகை அமர்ந்திருந்தாள் .நிச்சயம் அவள்  இங்கே நடந்த் எல்லாவற்றையும் பார்த்திருப்பாள் .திருப்தியாக தலையசைத்திக் கொண்ட சஷ்டியினுள் வினை முடித்த திருப்தி பரவியது .

அடுத்து அவள் போன இடம் தாண்டவராயர் தங்கியிருந்த அறை.

” நாளை முதல் நீங்கள் இந்த வீட்டின் சம்பந்தி ஐயாவாகி விடுவீர்கள் .  சம்பந்தி ஆகி விட்டால் நினைத்திருக்கும் எல்லா வேலைகளுக்கும் மாப்பிள்ளையின் சம்மத்ததை  எதிர்பார்க்க முடியுமா சார் …? அதனால்  இன்றே சந்திராம்பிகை மேடத்தின் அப்பாவாக இருக்கும் போதே …இங்கே ஏதும் தேவைகள் இருந்தால் நிறைவேற்றிக் கொள்ளுங்கள் .நாளையானால் எல்லாம் நடப்பது கடினம் …”

கிண்டல் போல் செய்ய வேண்டிய விசயத்தை சுட்டிக் காட்டிவிட்டு வந்து ஆவலுடன் அடுத்த நிகழவுக்காக காத்திருக்க தொடங்கினாள் . கையில் ஒரு பைலுடன் தாண்டவராயர் திருமலைராயனின் அறையை நோக்கி போவதை பார்த்தவளுக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்த்து .

வீட்டிற்குள் கூட்டம் கூட்டமாக நின்று …பேசிக்கொண்டு ..உட்கார்ந்து கொண்டு இருந்தவர்களிடையே இரண்டு பேராக ஒரு பெரிய தூணின் பினபுறம் சற்று மறைவாக நின்று கொண்டிருந்தவர்களின் அருகே போனாள் .அந்த தூணின் மேல் சாய்ந்தாற் போல் நின்று கொண்டு மெல்லிய குரலில் மறுபுறம் நின்றிருந்தவர்களிடம் பேசினாள் .

” நிச்சயம் இந்தக் கலயாணம் இன்னும் சிறிது நேரத்தில் நிற்க போகிறது .இந்த டி.ஆர் பட்டணம்  மட்டுமல்ல காரைக்காலே அதிர போகிறது .நீங்கள் இரண்டு பேரும் இப்படியே மறைந்து நின்று பார்த்து ரசியுங்கள் .கல்யாணம் நின்றதும் நடக்கும் கலாட்டாக்களையெல்லாம் இன்று இரவு முழுவதும் இங்கேயே இருந்து பார்த்து அனுபவித்து மகிழ்ந்து விட்டு , அதிகாலை டிரெயினில் நாம் சென்னை போய்விடப் போகிறோம் .டிரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்து விட்டேன் .தயாராக இருங்கள் …”




அந்தப் பெரிய தூணில் மேலிருந்து கீழாக அருவியாக வழிந்த மலர் சர அலங்காரங்களை சரி பார்ப்பது போல் பேசி முடித்தவள் , சற்றுத் தொலைவில் சொப்னா வருவதை பார்த்ததும் தூணை விட்டு நகர்ந்து வேகமாக அவளிடம் சென்றாள்

” ஏய் மலர் எங்கேடி போய்விட்டாய் …? அங்கே அண்ணா உன்னை தேடிக் கொண்டிருக்கிறார. வா …” சஷ்டியின் கையை பிடித்து இழுத்துப் போனாள் .

காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் தாண்டவராயரை எதிர்பார்த்து திருமலைராயனின் அறைக்குள் போனாள் சஷ்டி .இருவரின வாக்கவாதங்களை தனக்கு சாதகமாக எப்படி மாத்துவதென யோசித்தபடி அறைக்குள் நுழைந்தவள் திகைத்தாள் .

What’s your Reaction?
+1
15
+1
16
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!