karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 43

   43

அள்ளி அணைத்து ஆர்ப்பரிக்க

அஞ்சவில்லை நான்

சொல்லிவைத்து சேர்த்தணைக்க

தயங்கவில்லை நீ

சாகரங்களை நெஞ்சிலடக்கி

சாதாரணமாய் ஜாகிங் செய்கிறோம் …

” நான் முஸ்லீம் .சாந்தினி இந்து .இதுதான் எங்கள காதலுக்கு தடையாக இருக்கிறது …” வஹீப் சொல்லக் கொண்டிருந்தான் .

அவர்கள் ஒரு ரெஸ்டாரென்டில் இருந்தனர் .சாந்தினியுடன் ஷாப்பிங் செல்வதாக சொல்லக்கொண்டு அவளுடன் இங்கே வந்து வஹீப்பை சந்தித்தாள் சாத்விகா .

” ஆறு மாதமாக காதலித்து கொண்டிருக்கிறோம் .இவளை பார்ப்பதற்காகத்தான் நான் ஏதாவது வேலையை உண்டாக்கிக் கொண்டு அடிக்கடி ஆபிஸிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கறேன் …”

” உங்கள் காதல் …எங்கள் வீட்டில் …”

” இப்போதுதான் கொஞ்சம் தெரிய ஆரம்பித்திருக்கிறது ஆனால் அது சந்தேகமாகத்தான் இருந்த்து ..அவர்களுக்கு தெரிந்தால் எதிர்ப்பார்கள் என்று தெரியும் .அதனால்தான் மகவும் ஜாக்கிரதையாகவே இருந்தோம் .இப்போதுதான் நீங்கள் …”

நீதான் போட்டு உடைத்துவிட்டாய் என சொல்லாமல் சொல்லி நிறுத்தினான் வஹீப் .

” ம்ஹூம் ..நீங்கள் நினைப்பது தவறு வஹீப் .உங்கள் காதலை வெளியே சொல்லாமல் நீங்கள் எப்படி வாழ்வில் இணைய முடியும் …? “

” அந்த அதிர்ஷ்டம் எங்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை மேடம் .நாங்கள் இருவரும் மதத்தை பார்க்கவில்லை .மனதை மட்டுமே பார்க்கிறோம் .ஆனால் எங்களை சுற்றியிருப்பவர்களிம் அப்படி நினைக்க வேண்டுமே …”

” வீரேந்தர் உங்களிடம் என்ன சொன்னார் ..? “




” இந்த காதல் வேண்டாமென்றார் .இது நடக்காதென்றார் .அவர் மட்டுமல்ல சக்கரவர்த்தி சாரும் . முழு மூச்சாக எங்கள் காதலை எதிர்க்கிறார்கள் …”

” இல்லை .அவர்கள் இருவரும் அப்படி பட்டவர்களில்லை .நீங்கள்  தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்களென நினைக்கிறேன் ….”

” இல்லை திதீ .இனி அவனுடன் பேசினால் நீ இந்த வீட்டிலேயே இருக்க முடியாதென்று சாப் என்னை மிரட்டியது…நான் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்மவள் .என்னை வீட்டை விட்டு போக சொன்னால் நான் எங்கே போகட்டும் …? ” சாந்தினி அழத் துவங்கினாள் .

” ஏன் அவளுக்கு வாழ்க்கை கொடுக்க என்றே ஒரு வள்ளல் காத்திருக்கிறானே .அவனிடமே போக வேண்டியதுதானே….” சப்பாத்தியை நிதானமாக பிய்த்து வாயில் அடைத்தபடி எள்ளலாக கேட்டான் வீரேந்தர் .

” குட் ஐடியா .நீ சாந்தினியிடம் அதையே சொல்லு பாப்பா .சந்திரா சமையலுக்கு வேறு ஆள் பார்க்க ஆரம்பிம்மா …” சக்கரவர்த்தி மகனை பின்மொழிந்து விட்டு தட்டில் குருமா ஊற்றிக் கொள்ள துவங்கினார் .

அன்று இரவு உணவின் போதே தன் குடும்பத்தனரிடம் சாந்தினி – வஹீப் பேச்சை ஆரம்பித்திருத்தாள் சாத்விகா . எப்படியும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக வாக்களித்து விட்டு , அது விசயம் பேச வந்தவளுக்கு , வந்த பதிலை கண்டதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்த்து .

” அவள் மூன்று வருடமாக உங்கள் வீட்டில் வேலை செய்யும் அநாதை பெண் .அவளுக்கு ஒரு நல்ல காரியம் செய்து வைக்க வேண்டுமென்றால் இப்படித்தான் எனக்கென்ன என்று கை கழுவி விடுவீர்களா …? “

” யார் கை கழுவியது …? அவளை சரியென்று சொல்ல சொல் .நானே நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் .” சக்கரவர்த்தி .

” இவனேதான் வேண்டுமென்றால் உடனடியாக அவளை வீட்டை விட்டு வெளியேற சொல் …”சொல்லிவிட்டு  எழுந்து கை கழுவிய வீரேந்தரை இவனெல்லாம் மனிதனா என வெறித்தாள் சாத்விகா .

” ஏய் …சாந்தினி சொன்னது கேட்டதா …உனக்கு இரண்டு வழி சொல்லியிருக்கிறோம் .ஒன்று நாங்கள் சொல்லும் ஆளுடன் திருமணம் .அல்லது இந்த வீட்டை விட்டு உடனடியாக …” தலையை சாய்த்து அடுப்படியின் உள்ளே பார்த்து சத்தத்தை உயர்த்தி சந்திரிகா பேசிய பேச்சின்  பாதியிலே , உள்ளிருந்து வேகமாக வந்த சாந்தினி , சந்திரிகாவின் காலடியில் சரிந்தாள் .

” வேண்டாம் மேம் சாப் .எனக்கு இரண்டுமே வேண்டாம் .திருமணமே வேண்டாம் .நான் காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்து கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் …”

இவளென்ன நாங்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுக் கொண்டா இருந்தாள் …அதிருப்தியில் சுருங்கிய சாத்விகாவின் மனது தொடர்ந்த அவளது உளறல்களில் அதிர்ந்த்து . இதென்ன இந்த பெண் இப்படி பேசுகிறாள் .  இவளுக்காக நான் என் குடும்பத்தவர்கள் அனைவரையும் எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறேனே .மற்ற மூவரின் கேலி பார்வையில் குன்றியவள் முகத்தை திருப்பிக்கொண்டு மாடியேறி விட்டாள் .

” எனக்கு வேறு வழியில்லை திதீ .என்னை வீட்டை விட்டு வெளியேற்றினால் நான் எங்கே போவேன் …? “

” உன் வஹீப்பிடம் போ ….”

” நான் தயாராகத்தான் இருக்கிறேன் மேடம் .ஆனால் அவ்வளவு எளிதாக எங்களை உங்கள் வீட்டினர் விட்டுவிட மாட்டார்கள் .இது முன்னே விட்டு பின்னே வெட்டும் கலை .வெளியேறி நாங்கள் திருமணம் செய்து கொண்ட மறுநிமிடமே எங்கள் உயிர் எங்களிடம் இருக்காது “

அவர்கள் மூவரும் மீண்டும் ஒரு பூங்காவில் கூட்டம் போட்டிருந்தனர் .

” இது ரொம்ப ஓவர் .எங்கள் வீட்டினரை பக்கா வில்லன்களாக சித்தரிக்கின்றீர்களே …” சாத்விகா முகம் சுளித்தாள் .

வஹீப் பெருமூச்சுறிந்தான் .” அதுதான் உண்மை மேடம் .சக்கரவர்த்தி சாரை பற்றி உங்களுக்கு தெரியாது . அவர் ஒரு சர்வாதிகாரி போன்றவர் .காஷ்மீர் பகுதியில் பணியில் இருந்த போது அவர் செய்த அராஜகங்களுக்கு அளவே இல்லை .இப்போது வீரேந்தர் சாரும் அப்பாவுக்கு தப்பாமல் ….”

சாத்விகா சட்டென எழுந்துவிட்டாள் .தன் மேலிருந்த மணலை தட்டி விட்டபடி நடக்க தொடங்கினாள் .சாந்தினி சட்டென அவள் கால்களை பற்றிக்கொண்டாள் .

” திதீ …நான் என் வாழ்க்கைக்கு உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் திதீ .தயவுசெய்து என்னை கைவிட்டு விடாதீர்கள் ….”

” உனக்காகத்தான் சாந்தினி …உன் அப்பாவி முகத்திற்காகத்தான் நான் எங்கள் வீட்டினரை எதிர்த்து பேசிக் கொண்டிருக்கிறேன் .ஆனால் …உன் வஹீப் எல்லை மீற பார்க்கிறார் .  என் மாமனார் , மாமியார் ,கணவரை எனக்கு தெரியும் .இனி உங்கள் இருவரின் வாழ்க்கையையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் ….” நகர போன சாத்விகாவின் கால்களை சாந்தினி விடுவதாக இல்லை ்கெட்டியாக பிடித்து கொண்டாள் .

” இல்லை திதீ .இனி அவர் இப்படி பேச மாட்டார் . வஹீப் திதீயிடம் மன்னிப்பு கேளுங்கள் …” சாந்தினியின் பேச்சுக்கள் சாத்விகாவை சிறிதும் இளக்கவில்லை .அவள் கால்களுக்கும் நிற்கும் எண்ணமில்லை .

” ரேணுகாதேவியை மறந்து விட்டீர்களே மேடம் ….” வஹீப்பின் குரல் ஓடத் துடித்து கொண்டிருந்த சாத்விகாவின் காலுக்கு விலங்கு போட்டது .

” ரே..ரேணுகா …அ…அவரை உங்களுக்கு எப்படி …? “

” அன்று உங்களுடன் ரேணுகாதேவியை பார்க்க நான்தானே வந்தேன் மேடம் .மறந்துவிட்டீர்களே …”




சாத்விகாவிற்கு நினைவு வந்துவிட்டது .இந்தி சரியாக பேச வராத்தால் துணையென அன்று வஹீப்பை அழைத்து போயிருந்தாள் .அன்றுதான் வீரேந்தர் திடீரென வந்து அவளை அழைத்து வந்துவிட்டான் .அவளும் வஹீப்பும் கஷ்டப்பட்டு பேசி சேகரித்த அட்ரஸையும் பிடுங்கி கொண்டுவிட்டான் .

சாத்விகா மீண்டும் கடற்கரை மணலில் தளர்ந்து அமர்ந்துவட்டாள் .

” இங்கே பாருங்கள் மேடம் …” தன் ஷூக்களை கழட்டிவிட்டு பாதங்களை காட்டினான் .பாதங்கள் முழுவதும் வரி வரியாக கன்றி சிவந்திருந்தன.

” இது அன்று உங்களிடம் காஷ்மீர ராணுவம்  பற்றி பேசினேனே அதற்காக கேப்டன் வீரேந்தர் கொடுத்த தண்டனை .கிரௌண்டை நூறு முறை சுற்றி வரவிட்டார் …இங்கே பாருங்கள் …” முழுக்கை சட்டையை சுருட்டி முழங்கையை காட்டினான் .

” இது ஆறிவிட்டது .இது அன்று ரேணுகாதேவி இருந்த வீட்டிற்கு உங்களை கூட்டி போனதற்கு எனக்கு கொடுத்த தண்டனை .நூறு மணல் மூட்டைகளை கையில் சுமந்து இடம் மாற்ற வைத்தார் ….”

” எ…என்னால் நம்ப முடியவில்லை …” சாத்விகாவிற்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை .

” யாராலும் நம்ப முடியாது மேடம் .இதனை  இதெற்குரிய தண்டனை என சொல்லி செய்ய மாட்டார் .ஆனால் நமது தவறுதலுக்குரிய தண்டனையை எந்த காரணம் கொண்டாவது உருவாக்கிவிடுவார் .அதனை நாம் மட்டுமே அறிவோம் ” வஹீப்பின் இந்தி வார்த்தைகளை துளித்துளியாய் உள் வாங்கிய சாத்விகாவின் கண்கள் அதன் பொருளுணர்ந்த்தும் பொங்கியது .

வஹீப்பின் கூற்றை முற்றிலும் மறுதலிக்கும் தைரியமும் அவளுக்கில்லை .ஏனெனில் ரேணுகாதேவியை தேடும் விசயத்தில் வீரேந்தர் குடும்பம் காட்டும் தீவிர மறுப்பு அவள் மிக அறிந்த்தே .இது போல் தீவிரம் கொண்டவர்களென அவர்களை வஹீப் சொன்ன போது , அவளே அனுபவித்திருந்த சூழ்நிலைகளென்பதால் அவளால் மறுப்பு சொல்ல முடியாது போயிற்று .

எனவே …

” நான் என்ன செய்ய வேண்டும் …? ” உலர்ந்த குரலில் கேட்டாள் .

” எனக்கு சக்கரவர்த்தி சாரின் லேப்டாப் வேண்டும் ….”

” எதற்கு …? “

” அதில் அவர் ராணுவத்தில் வேலை  செய்த போது செய்த பலதில்லுமுல்லுகளுக்கான ஆதாரங்கள் இருக்குமென எதிர்பார்க்கிறேன் .”

” அப்படி அவர் என்ன தவறுகள் செய்திருப்பதாக சொல்லுகிறீர்கள் …? “

” நிறைய .தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக தனது மேல் அதிகாரிகளை கூட தந்திரமாக கொன்றிருக்கிறார் . “

” நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு சேற்றை வாறி இறைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் வஹீப் …”

” உங்களை நான் நம்ப வைக்கிறேன் . எனக்கு அந்த லேப்டாப்பை மட்டும் கொண்டு வந்து தாருங்கள் …”

” அந்த லேப்டாப் எந்த வகையில் உங்கள் திருமண வாழ்விக்கு உதவ போகிறது …? “

” சக்கரவர்த்தி – வீரேந்தர் சாரின் உயர்ந்த நிலையை , நம்நா நாட்டு ராணுவ அதிகாரிகளையே தங்கள் கைகளுக்குள் வைத்திருக்கும் சாதுர்ய நிலையை  உடைக்க வேண்டும் . அவர்களது சுயரூபத்தை நமது  அதிகாரிகளுக்கும் , அரசியல்வாதிகளுக்கும்  காட்டவேண்டும். அவர்கள் தங்கள் நிலையை விட்டு இறங்கி விட்டார்களானால் நாங்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் பிரச்சனை இருக்காது ்அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை எங்கள் திருமண வாழ்வு சாத்தியம் கிடையாது …”

” இந்த அளவு அவர்கள் ஏன் உங்கள் திருமணத்தை எதிர்க்க வேண்டும் …?! “

” இதனை நீங்கள் அவர்களிடமே கேட்கலாமா …”

சாத்விகா கேட்டாள்தான் .சரியான பதில்தான் கிடைக்கவில்லை .ஒரு இந்துவும் , முஸ்லீமும் திருமணம் செய்வதால் நிறைய மத சம்பந்தமான பிரச்சிறைகள் ஏற்பட்டு கலவரம் பெரிதாக வரலாம் என்று அனுமானமாக சந்திரிகா கூறிய பதிலில் அவளுக்கு திருப்தியில்லை .எப்போதும் போல் அவர்கள் எதையோ மறைப்பது போலவே தோன்றியது .

கேட்டேன் …”

” தெளிவான பதில் வந்திருக்காது …”

சாத்விகாவால் பேச முடியவில்லை .அவள் குடும்பத்தற்கு எதிராக சிந்திக்க கூட அவளுக்கு பிடிக்கவில்லைதான் .ஆனால் அவளை அந்த நிலையில்தான் அவள் குடும்பம் நிறுத்தியிருந்த்து .

” காஷ்மீர் பகுதியில் கேப்டனாக இருந்த போது அங்கிருந்த மக்களிடையே மத பிரச்சனையை தூண்டிவிட்டு அவர்களை சிந்திக்க விடாமல் செய்த்தில் பெரும்பங்கு சக்கரவர்த்தி சாருக்கும் , சந்திரிகா மேடமிற்கும. உண்டு . அப்படி செய்யாவிட்டால் அந்த மாநில மக்கள் பாகிஸ்தானுடன் போய் சேர்ந்து கொள்வார்கள் என்று அதற்கு தாங்களாகவே ஒரு காரணமும் சொல்லிக் கொண்டார்கள் .”

சாத்விகாவிற்கு இருக்கலாமோ …என  தோன்ற ஆரம்பித்துவிட்டது .காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் பக்கம் சாயாமல் இருக்க …நம் இந்திய ராணுவம் இந்த வழியை மேற்கொண்டதோ …? அதற்கு சக்கரவர்த்தி துணை போனாரோ …?  .ஆனால் அரசாங்கமே அந்த முடிவில் இருந்திருந்தால் அதிகாரியான சக்கரவர்த்தி அதற்கு துணை போகத்தானே வேண்டியதிருக்கும் .வஹீப் சொன்னதையே அவர் செய்திருந்தாலும் அரசாங்க ஆணைப்படி அது சரியாகத்தானே இருந்திருக்கும் …? அல்லது தவறா …சாத்விகா குழம்ப தொடங்கினாள் .

” தன் பதவிக்காலம் முடியும் முன்பே கேப்டன் சக்கரவர்த்தி  விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வந்துவிட்டார் .அது ஏன் …? இப்போது கேப்டன் வீரேந்தரும் அதே போலத்தான் விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டிருக்கிறார் .இருவருமாக ப்ரைவேட் செக்யூரிட்டி ஏஜென்ஸி ஆரம்பித்தது ஏன் …? அதை பயன்படுத்தி பிரதமர் வரை கைக்குள் போட்டுக்கொண்டு முடிசூடா ராஜாக்கள் போல் அப்பாவும் , மகனும் இந்த டில்லியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்களே ….இதற்காகத்தானா …? “




சாத்விகா அறியாத புதுப்புது தகவல்கள் .பதில் சொல்ல முடியா கேள்விகள் .கடற்கரையின் குளிர் காற்று உடலை குத்த தொடங்க ,குளிரை சாக்கிட்டு எழுந்து கொண்டாள் சாத்விகா .

” இந்த குளிர் எனக்கு ஒத்துக்கொள்ளாது .நாம் மீதியை நாளை பேசலாமா …? “

” நான் கேட்ட கேள்வகளுக்கு எனக்கும் விடை தெரியாது மேடம் .ஆனால் நாம் விடை தெரிந்து கொள்ளலாம் .அதற்காகத்தான் அந்த லேப்டாப்பை கேட்கிறூன் .”

” நான் யோசிக்க வேண்டும் …” சொல்லிவிட்டு ” நன்றாக யோசித்தே முடிவெடுங்கள் ” என்ற வஹீப்பின் பதிலை கேட்காமலேயே விரைந்து நடந்தாள் .

மறுநாள் காலை ஜாக்கிங்கின் போது தன்னோடு இணைந்து கொண்ட சாத்விகாவை ஆச்சரியமாக பார்த்தான் வீரேந்தர் .

What’s your Reaction?
+1
13
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

2 Comments
Inline Feedbacks
View all comments
uma
uma
4 years ago

delhila beacha???

S.UMA
S.UMA
4 years ago

KASHMIR PAGUDHIYIL KADARKARAI EPPADI MADAM???

2
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!