karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 27

27

சாக்லேட்டே தித்திப்பாய் வந்த உன்

குறுஞ்செய்தி ஒன்று

என் ஆட்காட்டி விரலை

உதட்டால் சுவைக்க சொன்னது ….

” எங்கே அந்த லெட்டரை கொடு பார்ப்போம் …? ” நிரஞ்சனா கைகளை நீட்டினாள் .

” அது என்னிடம் இல்லையம்மா .வீராவிடம்தான் இருக்கிறது .அவர் அதை வாசித்துவட்டு அதில் பெரிதான விசயமெதுவும் இல்லைநென்றதால் நான் அந்த லெட்டரில் அதிக அக்கறை காட்டவில்லை .”

” முக்கிய விசயமில்லையென்றால் அதனை உன் அப்பா ஏன் லாக்கரில் வைத்திருந்தாராம் …? “

” இதைத்தான் நானும் வீராவிடம் கேட்டேன் .அவர் ஏதேதோ சொல்கிறார்  …? “

” சரி .வீரேந்தர்  வரும்போது அந்த லெட்டர்களை கொண்டு வரச் சொல்லு .எனக்கு கொஞ்சம் சிந்தி படிக்க தெரியும் .நானும் படித்து பார்க்கிறேன் “

” ரொம்ப நன்றிம்மா …” சாகித்யா நிரஞ்சனாவின் கைகளை பிடித்துக் கொண்டாள் .

” அம்மாவிற்கு நன்றியெல்லாம் சொல்வாயா …? ” சாத்விகாவின் கன்னத்தை தட்டினாள் .

இருவரும் மாடி பால்கனியில் நின்று கொண்டிருந்தனர் .அருகிலிருந்த கிரௌன்டில் நெட் கட்டி கிரிக்கெட் கோச்சிங் நடந்து கொண்டிருந்த்து . அதை பைனாகுலர் வழியாக வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர் .

” அந்த ஹாஸ்பிடலில் என்ன விசாரித்தீர்கள் சாகித்யா …? “

” அந்த ரேணுகாதேவி பார்த்த பிரசவங்கள் பற்றி கேட்டேன்மா .அவர்கள் முப்பது வருடமாக அங்கே வேலை பார்க்கிறார்களாம் .அத்தனை பிரசவ விபரங்களை கொடுப்பதென்றால் கஷ்டம்தானே …? இன்னும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால் அந்த ஆஸ்பத்திரி ப்யூன் என் மேல் பினாயிலை தூக்கி ஊத்தியிருப்பான் .அப்படி ஒரு பார்வைதான் பார்த்துக்கொண்டிருந்தான் .சும்மாவே அங்கே பினாயில் நாற்றல் குடலை பிடுங்கிக் கொண்டிருந்த்து .இதில் என் மேலேயே ஊற்றினானென்றால் …எதற்கு வம்பென்று வாயை மூடிக்கொண்டு வந்துவிட்டேன் …”




சாத்விகாவின் விவரிப்பில் நிரஞ்சனா குலுங்கி சிரித்தாள் .பாசமாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள் .” தோல்வியான உன் நிலைமையை கூட என்ன அழகாக என்ஜாய் பண்ணி பேசுகிறாயடா செல்லம் ….!!” நெற்றியில் முத்தமிட்டாள் .

” ஏன் சாத்விகா நீ ஏன் ரேணுகாதேவியின் முழு பிரசவ வேலைகளையும் கேட்கவேண்டும் …? நீ பிறந்த வருடம் நடந்த பிரசவங்களின் விபரம் மட்டும் நமக்கு போதும்தானே …? “

சாத்விகா விழிகளை அகல விரித்தாள் .ஓங்கி தன் தலையில் தானே கொட்டிக்கொண்டாள் .மக்கு என தன்னை தானே வைது கொண்டு ” சூப்பர்மா …இது என் மரமண்டைக்கு தெரியலை பாருங்க .என் கூட ஒண்ணு வந்த்தே அந்த மரமண்டைக்கும் தெரியலை .இதை வைத்தே அவரை கலாய்க்கிறேன் பாருங்க .பெரிய மிலிட்டிரி மேன் …மேஜர் வேறு …மண்டையில் களிமண்தான் .என்னைப் போலவே ….” உடனே வீரேந்தரின் எண்ணை தன் போனில் அழுத்தியவளை புன்னகையோடு பார்த்தபடியிருந்தாள் நிரஞ்சனா .

ஏதோ ஓர் காரணத்தை வைத்து அவனோடு வாயாடுவதில் அவ்வளவு ஆனந்தம் அவளுக்கு .ஆனால் வீரேந்தரின் போன்  தொடர்பு எல்லைக்கு வெளியே என்றது .திரும்ப …திரும்ப முயற்சித்துவிட்டு ” சை ” என போனை தூக்கி போட்டாள் .

” எனக்கு தேவையான நேரமெல்லாம் எங்கேயாவது போய் தொலைந்து விடுவார் .இப்படித்தான்மா அங்கே எங்கள் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஆள் காணாமல் போய்விட்டார் .ஒரு வார்த்தை சொல்லலை …பேசலை .சரியான முசுடு .வரட்டும் வச்சிக்கிறேன் ….”

புன்னகை விரிந்து இப்போது வாய் விட்டே சிரித்தாள் நிரஞ்சனா .” ஆமாம்மா இப்போதிருந்தே நன்றாக இழுத்து பிடித்து வைத்துக்கொள் .கல்யாணத்திற்கு பிறகென்றால் கொஞ்சம் கஷ்டம் …”

சாத்விகாவின் இதயதுடிப்பு அதிகமானது .கல்யாணமா …?யாருக்கு …?  அவள் இங்கே வந்து நான்கு நாட்களாகிறது .இந்த நான்கு நாட்களாக முகுந்தும் சரி ….நிரச்சனாவும் சரி …அவளை வீரேந்தரின் காதலியாகவே பார்த்தனர் .ஜாடை மாடையாக அப்படியே பேசினர் .அந்த நேரத்திலெல்லாம் ரேஸ் குதிரையாகும் மனதை முகத்தில் காட்டாதிருக்க தலையை குனிந்து கொள்வாள் சாத்விகா .

இன்றோ ஒரு படி மேலே போய் நிரஞ்சனா திருமணமென்ற பேச்சை எடுக்க ,அவளுக்கு மயக்கமே வரும் போலிருந்த்து .எதை வைத்து இவர்கள் எங்களை பற்றி இப்படி கணித்து வைத்திருக்கின்றனர் …? நாங்கள் நடந்து கொள்ளும் முறை காதலர்கள் போலவா இருக்கிறது ….? யோசித்து பார்த்துவிட்டு இல்லையென்ற முடிவை எடுத்துக்கொண்டாள் .

ஒருவேளை வீரேந்தர் இது போல் சொல்லியிருப்பானோ …என நினைத்துவிட்டு …அந்த சாமியாருக்கு இது போல் நினைப்பெல்லாம் சுட்டு போட்டாலும் வராது .எப்போது பார்த்தாலும் கற்பாறை மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு உர்ரென்று பார்ப்பான் .அவனாவது …இதையெல்லாம் சொல்லுவதாவது …பலவாறு யோசித்துவிட்டு இறுதியாக இது இவர்களாக எடுத்துக்கொண்ட முடிவு என நினைத்து அந்த எண்ணங்களை தள்ளியவளுக்கு …ஏனோ தான் பொய்யென நினைக்கும் அவர்கள் எண்ணங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென தோன்றவில்லை .

எனக்கென்ன என்னவும் நினைத்துக்கொள்ளுங்கள் …பேசுங்கள் .விீட்டேத்தியான மனோபாவத்துடன் பைனாகுலரை கையிலெடுத்து வேடிக்கையை தொடர்ந்மாள் .

“இங்கு பழகுபவர்களிலிருந்துதான் நம் இந்தியன் டீமிற்கு ஆள் தேர்ந்தெடுப்பார்கள் தெரியுமா …? ” நிரஞ்சனா சொன்னாள் .

” அப்படியா …? நீங்க நம்ம இந்தியன் டீம் கிரிக்கெட்டர்ஸ் யாரையாவது பார்த்து பேசியிருக்கீர்களா அம்மா …? ” சாத்விகா ஆவலாக கேட்டாள் .

” ஓ…தோனி , காம்பீர் , யுவராஜ் ….”

” எனக்கு கோஹ்லி யை ரொம்ப பிடிக்கும் .அவரை மீட் பண்ண முடியுமா அம்மா …? “

” அதற்கு நான் ஏற்பாடு பண்ணுகிறேன் டாலி .நீ பதிலுக்கு எனக்கு என்ன தருவாய் …? ” கேட்டபடி வந்தார் முகுந்த் .

சாத்விகா பார்ப்பதற்கு டால் மாதிரி தெரிவதாகவும் அதனால் அவளை டாலி என அழைக்க போவதாகவும் வந்த முதல் நாளே சொல்லவிட்டார் .

” நிஜம்மாகவா கேப்டன் …? உங்களுக்கு கோஹ்லியை தெரியுமா …? ” சாத்விகா ஆவலாக கேட்டாள் .

” ஒருநாள் மாலை அவர் வீட்டிலேயே நாம் அவருடன் சாய் சாப்பிடலாம் .அது வரை என்னால் முடியும் .நீ எனக்கு என்ன தருவாய் …? அதை முதலில் சொல்லு …”

” என்ன வேண்டுமானாலும் .கோஹ்லி என் ட்ரீம் ஹீரோ .நீங்கள் மட்டும் அவரோடு எனக்கு ஒரு டீ சந்திப்பற்கு ஏற்பாடு செய்துவிட்டால் நீங்கள் கேட்பதெல்லாம் தருவேன் கேப்டன் “

” ம் …கேப்டன் ….இந்த இடம்தான் கொஞ்சம் இடிக்கிறது .என் மனைவி உனக்கு அம்மா .நான் மட்டும் கேப்டனா …? என்னையும் அப்பா என்று கூப்பிடு .இன்று மாலையே நாம் கோஹ்லியை சந்திக்க போகிறோம் …”




” ம்க்கும் .ஒன்றும் வேண்டாம் .இந்த கன்டிசன் எனக்கு பிடிக்கலை …” முகத்தை சுளித்துக் கொண்டாள் சாத்விகா .

எப்போது நிரஞ்சனாவை அம்மாவென்று அழைக்க தொடங்கினாளோ …அப்போதிருந்தே முகுந்த் தன்னையும் அப்பா என அழைக்குமாறு கூறிக்கொண்டேயிருந்தார் .அதென்னவோ சாத்விகாவிற்கு  நிரஞ்சனாவை உடனே அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடிந்த்து போல் முகுந்தை அப்பாவாக்க முடியவில்லை .அப்பா என்றதும் உடனடியாக அவள் மனம் உணரும் உருவம் சண்முகபாண்டியன்தான் .அவருடைய இடத்தில் அப்பாவாக இன்னொருவரை வைக்க முடியுமென அவளால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை . அந்த அளவு தனது பாசத்தினால் சாத்விகாவின் மனதினுள் வேரூன்றியிருந்தார் சண்முகபாண்டியன் .

” ஓ…டாலி கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாட்டேனென்கிறாயே டியர் …? ” சோகம் போல் முகுந்த் தலையை குனிந்து குலுக்க சாத்விகாவும் , நிரஞ்சனாவும் சிரித்தனர் .

தொடர்ந்து நிரஞ்சனாவும் , முகுந்தும் மறுநாள் தாங்கள் கலந்து கொள்ள போகும் ஒரு திருமணம் பற்றி பேச ஆரம்பிக்க , சாத்விகா போனில் மீண்டும் வீரேந்தரை முயன்றாள் ்இப்போது ரிங் போனது .ஆனால் முழுமையாக ஒரு ரிங் போகும் முன்பே கட் செய்யப்பட்டது . இனி எத்தனை முறை போட்டாலும் எடுக்கமாட்டான் .தொடர்ந்து போட்டால் ஸ்விட்ச் ஆப் பண்ணிவிடுவான் .கேட்டால் முக்கியமான மீட்டிங் என்பான் ….

“போடா …டேய் …பெரிய இவன் …”என தமிழில் டைப் செய்து ஹைக்கில் மெசேஜ் அனுப்பினாள் .உஷ் என்ற சைகை ஸ்டிக்கரை அவன் பதிலுக்கு அனுப்ப , உற்சாகமானவள் விதம் விதமான வேடிக்கையான ஸ்டிக்கர்களை அனுப்ப துவங்கினாள் .அவைகளை அவன் உடனடியாக பார்த்துவிட்ட தகவல் வந்தாலும் பதில் அனுப்பவில்லை .

பேச வேண்டும் .கால் பண்ணவா …? என மெசெஜ் அனுப்ப …அவன் நோ என பதில் அனுப்பினான் .பிறகு ” முக்குயமான விசயம் …ப்ளீஸ் …ஐந்தே நிமிடம் “என கெஞ்சுதலாக மாறி மாறி அனுப்பிய மெசேஜ்கள் எதற்கும் அவன் பார்த்துவிட்டாலும் பதிலில்லை.நாயே …பேயே என்றெல்லாம் வைய துடித்த நாவை அடக்கியபடி ” ஐ ஹேட் யூ ” என அனுப்பினாள் .அவன் உடனே ” தேங்க் யூ ” என அனுப்ப பொங்கி வந்த கோபத்தில் போனை ஆப் செய்து தூக்கி எறிந்தாள் .

” என்னம்மா உன் வீரா போனை எடுக்கலையா …? ” முகுந்த் கிண்டலாக கேட்டார் .

” அவன் ஒண்ணும் என் வீரா கிடையாது .அவன் யாருன்னே எனக்கு தெரியாது .அவனுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது …” கோபத்தில் பொரிந்தாள் .

” என்னம்மா சாத்வி அவருக்கு முக்கியமான வேலை இருக்கும்மா …” நிரஞ்சனா அவளை சமாதானப்படுத்த முயல …

” ஆமாம்மா …இன்று நம் ராணுவ அமைச்சருடன் வீரேந்தருக்கு மீட்டிங் .நமது எல்லைப்பகுதியில் இப்போது கொஞ்சம் பதட்டமான சூழ்நிலை நிரவுகிறது .எப்போதும் போல் பாகிஸ்தான் நம்மிடம் வாலாட்டிக் கொண்டிருக்கிறது .எல்லைப்பகுதி கிராம மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் .அது சம்பந்தமாகத்தான் நம் அமைச்சருடன் வீரேந்தருக்கு பேச்சுவார்த்தை …”

” ஆமாம் …ஒரு சின்ன விசயம் யோசித்து அந்த  ஆஸ்பத்திரியில் கேட்க தெரியவில்லை .இந்த புத்திசாலிதான் கிராமத்தை காப்பாற்ற போகுதாக்கும் .சும்மா காமெடி பண்ணாதீங்க கேப்டன் ” சலித்தபடி உள்ளே எழுந்து போனாள் சாத்விகா .

” வீரேந்தரின் பவர் இந்த பெண்ணிற்கு தெரியவில்லை ” முகுந்த் சொல்ல …” விடுங்க சின்ன பொண்ணுதானே .போக போக புரிந்து கொள்வாள் ” என்றாள் நிரஞ்சனா .

———————

மீண்டும் அந்த சாக்கடை வழியாக நுனிக்காலை மட்டும் ஊன்றி …ஊன்றி கவனமாக   நடந்து கொண்டிருந்தாள் சாத்விகா .நான்கு நாட்களாக வீரேந்தருடன் போனிலேயே போராடி பார்த்துவிட்டாள் .அவன் இவள் இருக்கும் பக்கமே திரும்பி பார்க்கவும் மறுத்தான் .ஒரு வாரம் பொறுக்க சொன்னான் .இவனை நம்பி பயனில்லையென இன்று சாத்விகா தான் மட்டுமே கிளம்பி அந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள் .

அன்று நிரஞ்சனாவும் , முகுந்தும் ஒரு பார்ட்டிக்கு கிளம்பினார்கள் .சாத்விகாவையும் மிகவும் வருந்தி அழைக்க …அவள் அங்கே யாரையும் எனக்கு தெரியாது எனக் காரணம் கூறி பிடிவாதமாக அவர்களை அனுப்பிவிட்டு , அவர்கள் அந்த பக்கம் போகவும் இந்த பக்கம் ஆட்டோவில் கிளம்பி வந்நிருந்தாள் .

ஓடை …ஓடையாய் வழிந்து கொண்டிருந்த ஒவ்வொரு சாக்கடையை தாண்டும் போதும் …”சாத்விகா இது உனக்கு தேவையாடி …” என தன்னை தானே கேட்டுக்கொண்டு ….ஆமாம் தேவைதான் …என் அம்மாவை தெரிந்து கொள்ளவேண்டும் என பதிலும் சொல்லிக்கொண்டு மூக்கை பிடித்து கொண்டு நடந்தாள் .உள்ளே அந்த ஆஸ்பத்திரி ப்யூன் இன்று நிஜம்மாகவே கையில் பினாயில் பாட்டிலோடு நின்று கொண்டிருக்க இவளுக்கு திக்கென்றது .

” என்னம்மா வேண்டும்…? ” என அவன் இந்தியில் கேட்டபடி கையிலிருந்த பினாயிலை பாத்ரூம் கழுவ வந்தவர்களிடம் கொடுத்து விட்டு விட , நிம்மதி மூச்சு விட்டவள் ,மனதிற்குள்ளேயே யோசித்து இந்தி வார்த்தைகளை அமைத்துக் கொண்டு  அவனிடம் பேச துவங்கினாள் .முதலில் இவளை அடையாளம் தெரியாதவன் பேச ஆரம்பிக்கவும் அடையாளம் தெரிந்து முறைத்தான் .

” அன்றே அத்தனை  விபரங்கள் எடுக்க முடியாது என்று சொன்னேனே …” இந்தியில் கத்தினான் . அவனை சமாதானப்படுத்தி அரை குறை இந்தியில் அவனிடம் மன்றாடி தனது பிறந்த வருட குழந்தைகளின் விபரம் மட்டும் கேட்டவள் சோர்ந்தாள் அந்த வருடம் மட்டுமே அங்கே இருநூற்றி ஒன்பது குழந்தைகள் பிறந்திருந்தன. இத்தனை குழந்தைகளில் எப்படி தேட ..? அதுவும் என்ன தேட எனத் தெரியாமலேயே …எதை தேட …சோர்ந்தாலும் மனம் விடாமல் குழந்தைகளின் பெற்றோர் விபரங்கள் , முகவரிகளை வாங்கி பார்த்தவள் மேலும் சோர்ந்தாள் .




எல்லாம் இந்தியில் இருந்தன. எழுத்து கூட்டி இதனை எந்த காலம் வாசித்து முடிக்க …? ஆனாலும் அந்த விபர காகிதங்களை ஜெராக்ஸ் எடுத்துவிட்டு தருவதாக அந்த ப்யூனுக்கு பணம் கொடுத்து சரிகட்டி வாங்கி வந்து ஜெராக்ஸ் கடையை தேடி ஜெராக்ஸ் எடுத்து விட்டு யோசனையுடன் அந்த பேப்பர்களில் பெண் குழந்தைகளின் தாயின் பெயரை மட்டும் எழுத்து கூட்டி படித்தபடி நடந்தவள் திடுக்கிட்டாள். ஓரிடத்தில் மீண்டும் நிறுத்தி திரும்ப சரியாக எழுத்து கூட்டி அவள் வாசித்த பெயர் ” ரேணுகா தேவி “

அலையலையாக உடம்பில் அதிர்ச்சி பரவ ,ஒழுங்கற்ற அந்த பாதையில் கவனமின்றி நடந்த்தால் பாதம் பிறழ்ந்து அங்கே ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் விழத் துவங்கினாள் .அவளை முந்தி அவள் கையிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்து ஆவலோடு சாக்கடை நீரை உறிஞ்ச தொடங்கின .

What’s your Reaction?
+1
12
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!