karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 26

26

என் சின கத்திகளை முனை முறிக்கும் 
உன் ப்ரியங்களுக்கு 
என்ன செய்வேன் ..????
அதன் முன் மண்டியிடுவதை தவிர ….

தந்த நிறத்தில் மின்னியபடி இருந்த அந்த சோபா கைபிடியை வருடியபடி , எதிரில் சட்டத்திற்குள் நீரில் தன் வெட்கம் பார்த்து வெட்கப்பட்டபடி  அடைபட்டிருந்த அந்த பெண்ணின் ஓவியத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் சாத்விகா .சரியான இனிப்பும் , சூடுமாக இதமான காபி அவள் நாக்கில் .அதை ரசித்து துளித்துளியாய் அருந்தியபடி இருந்தாள் .

” என்ன ரொம்ப திருப்தியாக இருக்கிறாற் போல் தெரிகிறது ….” அருகிலமர்ந்திருந்த வீரேந்தர் அவள் தோள்களை தன் தோள்களால் இடித்தபடி கேட்டான் .

” ம் ….ரொம்ப .இந்த வீடு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது வீரா .இங்கே பாஸிடிவ் வேவ்ஸ் நிறைந்திருக்கிறது . இங்கே நுழைந்தவுடனேயே மனதில் ஒரு அமைதி வந்துவிட்டது .எதையும் சமாளக்கலாமென்ற தெம்பு வந்துவிட்டது …”

” அப்படியா சொல்கிறாய் …? எனக்கென்னவோ நாம் பார்க்கிற எத்தனையோ சாதாரண வீடுகளில் இதுவும் ஒன்றெனத்தான் தோன்றுகிறது ….”

சோபாவில் அருகருகே அமர்ந்திருந்தாலும் , அந்த வீட்டினரை பற்றிய பேச்சென்பதால் அருகிலிருக்கும் அவர்களுக்கு கேட்காமல் பேச எண்ணி இருவரும் நொருங்கி தலையை சாய்த்தபடி மெல்லிய குரலில் பேசியபடி இருக்க …இருவரது முகத்தின் முன்பும் படபடவென ஆடியது  அகன்ற ஒரு கை .

” ஹலோ வீரா …வாட்ஸ் திஸ் மேன் …? எங்களுக்கு அறிமுகப்படுத்துவதாய் இந்த பிரிட்டி கேர்ள்ளை கூட்டி வந்துவிட்டு , இப்போது அந்த எண்ணமேயின்றி நீ மட்டுமே அவளை ரசித்து கொண்டிருக்கிறாய் .கொஞ்சம் தள்ளியாவது உட்கார் மேன் .நான் இன்னமும் இந்த ஏன்ஜெலின் முகத்தை கூட சரியாக பார்க்கவில்லை …” கிண்டல் செய்து சிரித்தபடி இருந்தவர் கேப்டன் முகுந்த் .

” உங்களுக்கு ஏன் பொறாமை முகு …? அவர்கள் வயதுக்கேற்றபடி அவர்கள் இருக்கிறார்கள் .நீங்கள் கொஞ்சம் உங்கள் வயதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் நன்றாகயிருக்கும் ” கிண்டல் செய்த கேப்டனை கிண்டல் செய்தவள் அவரது மனைவி  நிரஞ்சனா .




அந்த ஆரஞ்சு நிற மைசூர் சில்கும் , தலையில் சூடியிருந்த மல்லிகையும் , வகிட்டில் அப்பாமல் தொட்டு இட்டிருந்த குங்கும்மும் , காது ஜிமிக்கியும் அவளை தமிழச்சி …என பறையடித்தது .கூடவே பிசிறாத தெளிவான தமிழ் உச்சரிப்பும் இனிய நாதமாக காதிறங்க ..மெஸ்மரிசமானவளை போல் நிரஞ்சனாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாத்விகா .

” கேப்டன் இது ரொம்ப ஓவர் .நாங்கள் ஜஸ்ட் பேசிக்கொண்டிருந்தோம் .கொஞ்சம் குறைந்த குரலென்பதாலேயே எங்கள் சாதாரண பேச்சு உங்கள் கேலிக்குள்ளாகிவிட்டது ” வீரேந்தர் மென்னகையோடு முகுந்தின் கேலியை மறுத்தான் .

” ஜஸ்ட் …சும்மா ….என்கிறாய் .ஆனால் இன்னமும் இம்மி கூட விலகவில்லையே ….” இன்னமும் லேசாக உரசியபடியிருந்த அவர்கள் தோள்பட்டையை அவர் நேரிடையாக விரல் நீட்டி சுட்டியதும்தான் உணர்வு வந்து இருவரும் அவசரமாக விலகி அமர்ந்தனர் .

” கேப்டன் …இது யதேச்சையாக …” வீரேந்தர் முகுந்தை சமாளித்து கொண்டிருந்த போது …

” காபி  ரொம்ப சுவையாக இருந்த்து மேடம் .கொஞ்சநாட்கள் கழித்து என் அம்மா கையால் போட்ட காபி போலவே இருந்த்து .இங்கே வந்த நாளிலிருந்து இந்த வடநாட்டு  …டீ தான் குடித்து கொண்டிருந்தேன் .இன்றுதான் மணமும் , சுவையுமாக நம் தமிழ்நாட்டு காபி .இன்னமும் என் நாக்கிலேயே தித்தித்துக் கொண்டிருக்கிறது ….” மெல்ல தன் நாக்கை சுவைத்தபடி சொன்ன சாத்விகாவை பாசமாய் பார்த்தாள் நிரஞ்சனா .

” எனக்கு எப்போதுமே நம்ம தமிழ்நாட்டு காபிதான்மா. .மேஜர் சார்தான் அடிக்கடி சாயா வேணும்பார் .அவருக்காக மட்டும் டீ .நீங்கள் தமிழரென்பதால் உங்களுக்கும் காபியே கலந்தேன் ….” புன்சிரிப்புடன் கூறியவளின் பார்வை சாத்விகாவை அன்பாக வருடியது .

” ஐய்யோ .நிரஞ் உனது காபிக்கு ஒரு ரசிகை வந்து விட்டாளென எனது டீயை மறந்துவிடாதே டியர் .நான் பாவம் .எனக்கு டீயில்லாமல் வேலை ஓடாது .சாத்வி கண்ணா கொஞ்சம் புருசனையும் கவனிக்க சொல்லி உன் மேடமிடம் சொல்லி வையும்மா …” கேப்டன் மனைவியை கிண்டல் செய்தார் .

” என்ன முகு இது புது விருந்தாளி வந்துவிட்டால் நான் உங்களை மறப்பேனா …? இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு உடனேயே ஒரு கப் டீ கொண்டு வரட்டுமா …? ” உடனடியாக கணவனருகில் அமர்ந்தபடி கொஞ்சு குரலில் கேட்டாள் நிரஞ்சனா .

” அட விடும்மா …நான் சும்மா சொன்னேன் .உன்னை தெரியாதா எனக்கு …” ஆதரவுடன் மனைவியின் கையை மேஜர் பற்றிக்கொள்ள , எதிரேயிருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்த வீரேந்தர் , மீண்டும் தனது தோள்களால் சாத்விகாவை இடித்து அவர்களை கிண்டலாய் காட்டிவிட்டு தொண்டையை லேசாக செருமினான் .

” கேப்டன் சார் உங்கள் மனைவியை இன்னமும் நீங்கள் சாத்விகாவிற்கு அறிமுகப் படுத்தவேயில்லை .கணவனும் , மனைவியுமாக உங்களுக்குள்ளேயே மூழ்கியிருக்கிறீர்களே …நாங்கள் வேண்டுமானால் இன்னும் கொஞ்சநேரம் கழித்து வரவா …? “

திரும்பி அவனை பாரத்த கேப்டன் சரண்டர் என கைகளை உயர்த்த , வெட்கத்தில் சிவந்த நிரஞ்சனாவை ரசித்து கொண்டிருந்தாள் சாத்விகா .

” நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் மேடம் ….” என்றாள் .

எழுந்து போக திரும்பிய நிரஞ்சனா நின்று சாத்விகா பக்கம் தன் கைகளை நீட்டினாள் .ஆவலோடு அவள் கைகளை பற்றிக்கொண்டாள் சாத்விகா .

” உன்னை விட நான் அழகா …? ” சாத்விகாவின் கன்னங்களை வருடினாள் .

” கேப்டன் சார் உலகில் பூகம்பம்  எதுவும் வர போகறதா …? இரண்டு பெண்கள் ஒருவரையொருவர் அழகொன்று ஒத்துக்கொள்கன்றனரே …”

” ஆமாம் வீரேந்தர் .எதற்கும் நாம் தாழ்வான பகுதி நோக்கி ஓடலாமா …? ” வீரேந்தரின் கிண்டலை முகுந்த் தொடர , இரண்டு பெண்களும் அவர்களை முறைக்க ….

” ஐய்யோ …கேப்டன் கால்சிலம்பை எங்கேயாவது ஒளித்து வைத்திருந்தால் கொடுத்துவிடுங்கள் ்கண்ணகிகள் நம்மை எரித்துவிடுவார்கள் ….” என்ற வீரேந்தர் மேல் கனமாக வந்து விழுந்த்து ஷோபா குஷன் .

ஜாக்கிரதை என அவனுக்கு விரலாட்டிவிட்டு , ” நீங்க வாங்க ஆன்ட்டி நாம் உள்ளே போகலாம் …” என நிரஞ்சனாவின் கைகளை பிடித்துக்கொண்டு இரண்டு எட்டு எடுத்து வைத்த சாத்விகா நின்று  ” உங்களை அப்படி கூப்பிடலாம்தானே …” என்றாள் .

” உனக்கு தோணுகிறபடி கூப்பிடம்மா .இப்போது உள்ளே வா .இட்லியும் சாம்பாரும் வைத்திருக்கிறேனாக்கும் ” என்றாள் நிரஞ்சனா .

” ஆஹா …பசிக்குதே …இட்லி சாப்பிட்டு எவ்வளவு நாட்களாகி விட்டது .வாங்க …சீக்கரம் போடுங்க ” நிரஞ்சனாவின் கையை பிடித்து இழுத்தபடி உள்ளே போன சாத்விகாவை புன்னகைநோடு பார்த்தபடியிருந்த வீரேந்தரை கேள்வியோடு நோக்கனார் முகுந்த் .

” சாத்விகா கொஞ்ச நாட்கள் உங்கள் வீட்டில் இருக்கட்டுமா கேப்டன் …? “

” அவளுக்கு என்ன பிரச்சினை வீரேந்தர் …?  கூர்மையை கண்களில் தேக்கி கேட்டார் முகுந்த் .




” அவளுக்கு ஒன்றும் பிரச்சனையில்லை கேப்டன் .ஆனால் புது புது பிரச்சினைகளாக அவளாகவே இழுத்து விட்டு கொள்கிறாள் …”

” அவளது பாதுகாப்பிற்காக என்றால் …என் வீட்டை விட உன் வீடு பெட்டர் இல்லையா …? “

” இல்லை .அவளை என் வீட்டிற்கு நான் கூட்டி செல்ல முடியாது கேப்டன் .”

” ஏன் …? ” வீரேந்தர் மௌனமானான் .

” அவள் உனக்கு மிக முக்கியமானவளென்று எனக்கு தெளிவாக நீ சொல்லாமலேயே தெரகிறது வீரேந்தர் .பின் ் அவளை உன் வீட்டிற்கு கூட்டிப்போகாமல்  இங்கே தங்க வைக்கும் காரணம் என்ன …? “

” காரணம் என் அம்மா …”

” எனக்கு புரியவில்லை .”

வீரேந்தர் பெருமூச்சுடன் முகுந்திடம் சில விபரங்கள் சொல்ல ஆரம்பித்தான் .

” டேபிளில் எடுத்து வைத்தாயிற்று .சாப்பிட வாருங்கள் ” என்ற அழைப்போடு ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி நிரஞ்சனாவும் , சாத்விகாவும் வந்த போது , முகுந்திடம் ” சாத்விகா இங்கே தங்குவதில் உங்களுக்கேதும் இடைஞ்சல் இல்லையே கேப்டன் …? ” என வீரேந்தர் கேட்டுக் கொண்டருந்தேன் .

” இந்த குட்டி ஏஞ்சலை இங்கே தங்க வைத்துக் கொள்வதில் எனக்கென்ன இடைஞ்சல் இருக்கப்போகறது வீரேந்தர் …? பிள்ளைகள் இல்லாமல் வறண்டிருக்கும் எங்கள் வாழ்க்கையில் ஜீவந்தி போல் இவள் வந்திருக்கறாள் .எங்களுக்கு ரொம்ப சந்தோசம் .நீ தைரியமாக போய்விட்டு வா .இவளை நாங்கள் பார்த்துக் கொளகிறோம் ” வாஞ்சையாய் சாத்விகாவின் தலையை வருடினார் .

அவள் திடுக்கிட்டு நிரஞ்சனாவை பார்த்தாள் .இவர்களுக்கு குழந்தையில்லையா …? அவள் கையை வலுவாக பற்றி வாசல்புறம் அழுத்தம் வீரேந்தர் .பின்னால் வந்தவளிடம் …

” எதற்காக அவர்களை அப்படி பரிதாபமாக பார்த்து வைக்கிறாய் ..? ” என்றான் .

” அவர்களுக்கு குழந்தையில்லை என்றார்கள் .அதுதான் ….”

” அது என்ன அவ்வளவு பெரிய குறையா …நீ இப்படி பாவம் வழிய வழிய பார்ப்பதற்கு …? உன் பார்வையவ பார்த்திருந்தால்தான் அவர்கள் வருத்தப்பட்டிருப்பார்கள் ….”

” உங்கள் லட்சியம் நிறைவேறிவிட்டதா …? “

” என்ன லட்சியம் …? “

” அதுதான் என்னை குறை கூறுவது …? இப்போதைக்கு அது ஒன்றை மட்டும்தானே உங்கள் லட்சியமாக எண்ணி செயல்பட்டு கொண்டருக்கிறீர்கள் “

” ம் …அந்த நெரிசலான இடம் பிடிக்கவில்லையென்றாயென இந்த அருமையான இடத்தில் கொண்டு வந்து விட்டேன் பார் .எனக்கு இது தேவைதான் ….”

இப்போது சாத்விகாவிற்கு சுகிர்தாவின் நினைவு வந்த்து .எவ்வளவு பாசமான பெண் .இனி அவளை பார்க்க முடியாதா …?

” சுகிர்தா அம்மாவிடம் அவர்களை ஒருநாள் வந்து சந்திக்கிறேனென சொல்லிவிடுகறீர்களா …? “




” சுகிர்தா அம்மாவா …? “

” ம் …அவர்கள் என்னை அப்படித்தான் அழைக்க சொன்னார்கள் …”

” சரிதான் .உனக்கு நடுத்தர வயது பெண் யாரை பார்த்தாலும் உன் அம்மாவாக தோன்றுகறதா …? ” முறைத்தவளின் பார்வையை சந்திக்காமல் ஜீப்பில் ஏறி அமர்ந்தான் .

” கவனமாக இரு .நான் வருகிறேன் …”

” எப்போது வருவீர்கள் …? ” என்றவளுக்கு இரண்டு நாட்கள் கழித்து என விரலாட்டி சைகை செய்தான் .

” இங்கே தங்க வைத்ததற்கு நன்றி ” கிளம்பிவிட்ட ஜீப்பின் பாதையிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு சொன்னவளின் கன்னத்தை ஜீப் அவளை கடக்கும் போது வெளியே கைநீட்டி மெல்ல வருடிவிட்டு போனான் .

ஒரு திருப்தியான மனநிலையுடன் உள்ளே நுழைந்த சாத்விகாவின் கைகளை பற்றிக்கொண்ட நிரஞ்சனா ” என்னை அம்மா என்று அழைக்கிறாயா … ? ” என ஆசையாக கேட்டாள் .

What’s your Reaction?
+1
15
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!