kadak katru Serial Stories

Kadal Kaatru – 39

                                                  39

வேகமாக போனை தானே கைப்பற்ற எண்ணி கைகளை இழுத்தாள் சமுத்ரா .போனுக்காக தானும் முயன்றான் யோகன் .கைகளை தன்தலைக்கு மேல் உயர்த்தி போனை காக்க சமுத்ரா முயல , அவள் மேல் படிந்தபடி அந்த போனை கைப்பற்ற யோகன் முனைய இருவரின் போராட்டத்தையும் தள்ளியிருந்து பார்த்த புவனா , புன்னகையுடன் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் .

ஒரு கட்டத்தில் சமுத்ராவின்  கைகள் யோகனின் பிடிக்குள் சிக்க , அதிலிருந்த தன் கைகளோடு போனையும் சேர்த்து உருவ முயன்ற சமுத்ரா தன் கன்னத்தில் அழுத்தமான , இளஞ்சூடான ஈரத்தை உணர்ந்து தன் கைகளை தளர்த்திக் கொண்டாள் .தன் போனை எடுத்துக் கொண்ட யோகன் சமுத்ராவை நோக்கி கண் சிமிட்ட அவனை முறைத்தாள் .

” பட்ட பகல்ல நடு வீட்டிற்குள் …வைத்து ..இதென்ன கலாட்டா …? ” கோபமாய் கேட்டபடி ஈர கன்னங்களை துடைத்தாள் .துடைபட்ட ஈரமிருந்த இடம் இப்போது கனலாய் தகித்தது .

” அதனால்தானே போன் என்னிடம் வந்த்து .” போனை காட்டியபடி யோகன் புன்னகத்தான் .போன் மணி எப்போதோ நின்றிருந்த்து .அது சரி …நீதான் நினைத்தது நடக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வாயே ..? வெறுப்புடன் நினைத்தபடி எழுந்து போக எண்ணினாள் .போன் மீண்டும் ஒலித்தது .லாவண்யாதான் .சமுத்ரா மீண்டும் அங்கேயே அமர்ந்து விட்டாள் .

இப்போது தானே போனை அவளிடம் நீட்டினான் .அவள் வாங்க கையை நீட்டும் போது கரங்களை பின்னே இழுத்தான் .எரிச்சலுடன் எழப் போன சமுத்ராவை பற்றி இழுத்தான் .வேகத்துடன் கூடிய அந்த இழுப்பில் அவன் மார்பில் வந்து விழுந்தாள் சமுத்ரா .ஆனால் அதனை உணராது , தன் முன் நீட்டப்பட்ட போனை ஆவலாக வாங்கிக் கொண்டாள் .

எங்கே நின்றுவிடுமோ என்ற அவசரத்தில் அப்படியே ஆன் செய்து காதில் வைத்தாள் .தன் மார்பில் சரிந்தபடி போன் பேசிக் கொண்டிருக்கும் மனைவியை தாகமாய் பார்த்தபடியிருந்தான் யோகன் .

” ஹலோ …” ஆவலும் வேகமுமான சமுத்ராவின் முதல் பேச்சுக்கு எதிர்முனை அமைதி காத்தது .சமுத்ராவின் மற்றொரு ஹலோவில் போன் கட்டானது .

” என்ன இது கட்டாயிடுச்சு ..? ” போனை உற்று பார்த்தபடியிருந்தவள் தன் கன்னம் வருடும் மென் தடவலில் விழித்தாள் .என்ன இவன் இப்படி என் அருகே உரசிக் கொண்டிருக்கிறான் .

” எதற்கு இப்போது இப்படி மேலே சரிந்திருக்கிறீர்கள் .தள்ளுங்கள் …” அவனை கடித்து குதறி விடுகிறாற் போல் முறைத்தாள் .

தன் இரு கைகளையும் விரித்தவன் காட்டிய ஜாடையில் தனையுணர்ந்து அவசரமாக அவன் மேலிருந்து எழுந்தாள் .சை ..இவன் மேலேயேவா இவ்வளவு நேரமாக சரிந்திருந்தேன் .எப்படி அதனை உணராமலே இருந்தேன் .கைகளை மடக்கி தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் .

” எந்த நேரம் எப்படி நடந்து கொள்ள வேண டுமென்ற இங்கிதம் தெரியாதா உங்களுக்கு …?தன் தவறுக்கும் அவன் மேலேயே கோபம் காட்டினாள் .

” ரிலாக்ஸ் முத்ரா …எதற்கு இவ்வளவு டென்சன் …ம் …? ” என்றபடி கொட்டுப்பட்ட அவளது தலையை இதமாக தடவினான் அவன் .

” முன்பே பேசி வைத்திருப்பீர்கள் போல , என் குரல் கேட்கவும் கட் பண்ணிவிட டாள் .” போனை அவனிடமே தூக்கி எறிந்தாள் .




” ஐய்யோ நான் என்ன செய்தேன் கண்ணம்மா ,நான்தான் உன்னிடம் பேசக் கொடுத்துவிட டேனே  அவளேதானே கட் பண ணினாள் .வேண டுமானால் நீயே திரும்பவும் அழைத்து பேசு ” போனை நீட்டினான் .

அவன் கைகளை தள்ளினாள் .” வேண்டாம் உங்கள் ரகசியங்களை மூட் டை  கட்டி நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ” விடுவிடுவென மாடியேறினாள் .தன் குரலை கேட்கவும் போனை கட் பண்ணிய லாவண்யாவின் செயல் அவளுக்கு மிகுந்த ஆத்திரத்தை வரவைத்திருந்த்து .

அத்தோடு சில நாட்களுக்கு பிறகு கேட்ட யோகனின் கண்ணம்மா என்ற அழைப்பு..ஏதோ ஒருவித்த்தில் அவளை தொல்லை செய்த்து .கூடவே சற்று முன் அநுபவித்த அவனது அருகாமையினால் இன்னமும் உடல் முழுவதும் பரவியிருந்த குறுகுறுப்பிற்கான காரணமும் அவளுக்கு தெரிய வேண்டியிருந்த்து .இதற்கெல்லாம் அவளுக்கு தனிமை அவசியப்பட்டது .மாடியில் கட டிலில் படுத்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் .

மனமும் உடலும் கொதித்துக் கொண்டிருக்க , நேர்விரோதமாக தன்னை சுற்றி குளுமை சேர்ந்திருந்த்தை நம்ப முடியாத ஆச்சரியத்துடன் உணர்ந்தபடி இன்னமும் ஈரம் உணர்ந்த தன் கன்னங்களை தடவியபடி தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள் சமுத்ரா .

—-

” யோகனை முழு மனதுடன் வெறுக்கிறாயா …? நிச்சயமாக அவனிடமிருந்து விலகி விடத்தான் எண் ணுகிறாயா ..? ” ஆரஞ்சுகளை கவனமாக பிழிந்து சாறெடுத்து கொண்டுவந்து சமுத்ராவிடம் கொடுத்தபடி கேட்டாள் புவனா .

எரிச்சலாய் அவளைப் பார்த்தாள் சமுத்ரா .நானே எனக்குள் போராடிக் கொண்டிருக்கிறேன் ,இதில் இவர்கள் வேறு …புவனாவுக்கு பதிலே சொல்லாமல் பழரசத்தில் கவனம் செலுத்தலானாள் .உன்னை விட்டேனா பார் ..? என்று கூறுவது போல் அவள் முன்பே அமர்ந்து கைகளை கன்னத்தில் தாங்கியபடி அவளைக் குறுகுறுவென்று பார்க்க தொடங்கினாள் புவனா .

” உங்களுக்கு கீழே வேலையில்லையா ..? என் மூஞ்சியில என்ன இருக்குதுன்னு இப்படி முன்னால் உட்கார்ந்து நோட்டம் விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் ? ” எரிந்து விழுந்தாள் .

” இல்லை ..என் பையன் இப்படி உலகத்தை மறந்து உன் பின்னாலேயே சுற்றுகிறானே …? அப்படி இந்த முகத்தில் என்ன இருக்கிறதென்று பார்த்தேன் ” புவனாவின் குரலில் பரிகாசம் .

” ஆஹா ..உலகம் மறக்கிறவரா ..உங்கள் மகன் …அதுவும் என்னைப் பார்த்து …? தினமும் இரவு தோப்பு வீடுதான் அவரது உலகமாகி விடுகிறது .இது தெரியாத்து போல் இப்படி உங்கள் பையன் பக்கம் பரிந்து பேச வேண்டுமா …? ” தனது நடுநெஞ்சில் தைத்துக் கொண்டிருந்த முள்ளின் வாதையை , சொற்களாக்கி புவனாவின் மேல் எறிந்தாள் .

குறும்பு வழிந்த புவனாவின் முகம் அமைதியானது .

” அது சரி ..எனக்கு ஒரு சந்தேகம் எங்கள் குடும்ப வாரிசு ..வாரிசு என்று இந்த வீட்டில் ஆளாளுக்கு என் வயிற்று பிள்ளையை கொண்டாடி காக்க முயல்கிறீர்களே ..அங்கே தோப்பு வீட்டுக்குள் உங்கள் குடும்ப வாரிசொன்று வளர்ந்து கொண்டிருக்கிறதே …அது ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை …? ” சமுத்ரா இந்தக் கேள்வியைக் கேட்டு வாயை மூடவில்லை .அதற்குள் ” இல்லை ..” உறுதியான குரலில் பதிலளித்தாள் புவனா .

” என்ன …என்ன இல்லை ..என் பிள்ளை ராமனுக்கு அடுத்த வாரிசென்று சொல்லப் போகிறீர்களா ..? சொல்லிக் கொள்ளுங்கள் .ஆனால் நான் அதனை நம்ப போவதில்லை .”

” அந்தக் குழந்தை என் பிள்ளையின் பிள்ளை கிடையாது .அது எனக்கு தெரியும் .எப்படித் தெரியுமென்று கேட்காதே .என் மனதிற்கு தெரியும் .நான் அந்த பிள்ளையை பார்த்திருக்கிறேன் .அது நிச்சயம் நம் குடும்பத்து பிள்ளையாக இருக்க வாய்ப்பே இல்லை …” ஆணித்தரமான அழுத்தம் புவனாவின் குரலில் .

” தினமும் இரவு அங்கே எதற்காக உங்கள் மகன் போகிறார் ..?ஏதாவது யாகம் செய்கிறாரோ ..? ” நக்கல் சமுத்ராவின் குரலில் .

” என்ன வேணடுமானாலும் பகடி பேசிக்கொள் .ஆனால் அது எங்கள் வீட்டு குழந்தை இல்லை .கண்ட இடங்களிலும் வீட்டு விதையை விதைக்கும் அளவு ஈனமானவன் என் மகனில்லை .எங்கள் வீட்டு வாரிசு அவன் விரும்பி மணந்த உன் வயிற்றில்தான் வளர்கிறது .அதனை அழிக்க நாங்கள் யாரும் விடமாட்டோம் ” மாமியாராக குரலுயர்த்தி பேசிவிட்டு பழரச டம்ளரை எடுத்துக் கொண்டு கீழே போனாள் புவனா .

ஏனோ திடீரென்று மிக லேசாகி மேலே….மேலே பறப்பது போல் உணர்ந்தாள் சமுத்ரா .அதன் காரணம் எங்கள் வீட்டு குழந்தையில்லை அது என்ற புவனாவின் வார்த்தையாலா ..? அல்லது விரும்பி மணந்த உன் …என்ற வார்த்தையாலா …? தெரியவில்லை .ஆனால் திடீரென்று தன் விலாப்புறம் சிறகுகள் முளைத்தது போல் உணர்ந்தாள் .




என்னை விரும்பி மணந்தானா யோகன் …? வெளியே விடாமல் கட்டுக்குள் வைக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் இல்லையா …? இந்த யோசனையில் அன்றொரு நாள் ஹோட்டல் அறையில் வைத்து ” நான் ஏன் உன்னை முன்பே சந்திக்கவில்லை முத்ரா ..? நீயில்லாத என் வாழ்க்கையின் முன் பொழுதுகள் இப்போது வீணாக தெரிகிறதே … ” எனக்கேட்டபடி தீராத தாகத்துடன் தன்னை இணைந்த யோகனின் அணைப்புகள் நினைவு வர சூடேறி சிவந்த முகத்தை கைகளுக்குள் புதைத்தபடி யோசிக்க தொடங்கினாள் சமுத்ரா .

முன்தின நிகழ்வொன்று நெஞ்சினுள் வந்த்து அவளுக்கு .சற்றே நெகிழ்ந்திருந்த சேலையின் முன் கொசுவங்களை எடுத்து விட்டு மீண்டும் மடிப்பு வைத்துக் கொண்டிருந்தாள் அவள் .சாத்தியிருந்த கதவை திறந்து கொண்டு திடீரென்று உள்ளே நுழைந்தான் யோகன் .பார்வை அவள் மேல் படிந்து அவளை விழுங்கியது .

திடீரென்று உள்ளே நுழைந்த்தற்காக அவனை முறைத்தபடி உடை மாற்றுவதற்காக ஓரமாய் போடப்பட டிருந்த மரத்தடுப்பின் பின்புறம் சென்று நின்றபடி புடவையை சரி செய்ய தொடங்கினாள் .ஆனால் அந்த தடுப்பின் பின்புறமும் வந்து நின்றான் யோகன் .

நன்றாக அவனை திட்ட எண்ணி வாயைத் திறந்த போது அவனது கை சமுத்ராவின் வயிற்றில் படிந்த்து .மென்மையாக வருடியது .காதல் வருடலில்லை அது …அளவில்லா ஏக்கம் தெரிந்த்து அந்த மென்மையான வருடலில் .யோகனின் மனம் உணர்ந்து அந்தக் கரங்களை தள்ள முடியாது அப்படியே பார்த்தபடி நின்றாள் சமுத்ரா .

” குழந்தைக்கு முதலில் இதயம்தான் உருவாகுமாமே ..அப்படியா சமுத்ரா …? ” யோகனின் குரலில் நெகிழ்ச்சி இருந்த்து .இதற்கு பதில் சொல்ல போய் தன் குரலின் நெகிழ்வை அவன் அறிந்து கொள்வானோ …என பயந்து கோபம் போல் அவன் கையை தள்ளி விட்டு விட்டு கீழே இறங்கிவிட்டாள் சமுத்ரா .

முன்தினம் கணவனின் கை ஊறிய வயிற்றை இப்போது மென்மையாக தடவிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள் .அவனது குழந்தை ஏக்கம் நன்கு புரிந்த போதும் மற்றவர்களைப் போல குழந்தையை கலைக்க கூடாது ..என்று கொஞ்சியோ , கெஞ்சியோ , விஞ்சியோ ஏன் கேட்கவில்லை யோகன் .

உன் விருப்பம் அதுவென்றால் சரிதான் என்பது போலத்தானே இருக்கிறான் .மீண்டும் குழம்ப தொடங்கினாள் சமுத்ரா .இல்லையில்லை ..குழந்தையை கலைப்பதற்காக சென்னை செல்ல வேண்டுமென்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு தானே போகிறான் ..தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டாள் .அப்போது …

அவசரமாக அறைக்கதவு திறக்கப் பட்டு வேகமாக வந்நு நின்றான் யோகன் .முகம் வியர்த்து கருத்திருந்த்து .” சமுத்ரா கிளம்பு ..” என்றவன் ஒரு பேக்கை எடுத்து அதனுள் அவனுடைய , அவளுடைய உடைகளை எடுத்து வைக்க தொடங்கினான் .

” எங்கே …? ” சமுத்ராவின் நெஞ்சில் பயப்பந்து உருண்டது .

” சென்னைக்கு …சீக்கிரம் கிளம்பு .ஆறு மணிக்கு மேலென்றால் அந்த ஆஸ்பத்திரிக்குள் விட மாட்டார்கள் ” என்றபடி பேக்கை மூடினான் .

நகர முடியாமல் சிலையாய் நின்றாள் சமுத்ரா .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!