mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 31

  31

” இதுதான் மெயின் பால்ஸ் மேகா ….” கண் முன்னால் பிரம்மாண்டமாக விரிந்து விழுந்த அருவியை விழி அகற்றி பார்த்து ” வாவ் ….” என்றாள் மணிமேகலை .

” ஒரு அருவிக்கு எதற்கு இத்தனை அலட்டல் …” யமுனாவிறகு அவளது இந்த பாவத்தில் வெறுப்பு .

முன்தினம் அவள் குற்றாலம் போகவேண்டும் என்றதும் அனைவரின் முகமும் கறுத்தது .

” அங்கே வேண்டாம் மேகா …வேறு எங்காவது போகலாம் …அகத்தியர் மலை போகலாமா …? “

” ம்ஹூம் …எனக்கு குற்றாலம்தான் போகனும் .நான் பார்த்ததே இல்லை .ப்ளீஸ் பார்த்தா ….”

பார்த்தசாரதி தர்மசங்கடத்தில் இருக்க …மாதவி அவன் உதவிக்கு வந்தாள் .

” சரி இவளை மட்டும் கூட்டிட்டு போய்விட்டு வா …” பேச்சு முடிந்த்தென மாதவி எழ ,

” இருங்க …அது என்ன நாங்க இரண்டு பேர் மட்டும் .வீட்டில் எல்லோரையும் ஒதுக்கி வைத்து விட்டு என் புருசன் கூட நான் மட்டும் போகிறேன்னு ஊருக்குள் பேசுவதற்காகவா …எல்லோரும் வரத்தான் வேண்டும் ….”

” நாங்கள் வர மாட்டோம்னு சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்கும் …” யமுனா எரிச்சலாக சொன்னாள் .

” இது சீசன் நேரம் யமுனா .இந்த நேரம் அருவிக் குளியல் எவ்வளவு நன்றாக இருக்கும் .இது வரை அருவியில் குளித்தே இராத எனக்கே அது புரிகிறது .சிறு வயதிலிருந்து குளித்த உனக்கு தெரியாதா …? “

இந்த விவரிப்பில் காவேரியின் முகத்தில் அருவிக் குளியல் ஆசை வெளிவந்த்து .யமுனாவிற்குமே வரும் எண்ணம்தான் .அதன் காரணம் அண்ணனையும் , அண்ணியையும் மட்டும் தனியாக அனுப்ப அவளுக்கு விருப்பமில்லை .இருவருக்குள்ளும் நெருக்கம் உண்டாவதை அவள் விரும்பவில்லை .

பார்த்தசாரதி இதழை மட்டும் அசைத்து ” வேண்டாம் …” என்க மாதவி அதையே விழி செய்தியாய் சொன னாள் .இருவரையுமே அலட்சியம் செய்தாள் மணிமேகலை .

” எல்லோரும் கண்டிப்பாக நாளை குற்றாலம் போகிறோம் …” உத்தரவு போல் அறிவித்து விட்டு எழுந்தாள்.

குற்றாலம் வந்தாலும் கங்கா அருவிப் பக்கம் வர மறுத்து விட , மாதவியும் அவளுடன் காரிலேயே தங்கி விட மற்றவர்கள் அருவி அருகே வந்தனர் .

யமுனாவும் , காவேரியும் குளிக்க தயாராக தங்கள் தலைமுடியை அவிழ்க்க தொடங்க , மணிமேகலை நகம் கடித்தபடி சோவென விழும் அருவியை அண்ணாந்து பார்த்தாள் .

” ஏய் பயம்தானே …வீட்டில் எல்லோரையும் அதிகாரம் செய்து கூட்டி வந்தாய் …இப்போது உள்ளே போக பயந்முதானே நிற்கிறாய் …? ” பார்த்தசாரதி அவளை சீண்டினான் .

உடனே அருவியினுள் நுழைய இருந்த லேசான தயக்கத்தை மறைத்துக்கொண்டு ” எவ்வளவு கூட்டம் பாருங்க பார்த்தா …வரிசையில் நின்னு குளிக்க வேண்டியதிருக்கு …அதுவும் டைம் வைத்து வெளியேத்திடுறாங்க …குளித்த மாதிரியே இருக்காதுப்பா …” என்றாள் .

அதென்ன இவளுக்கு அண்ணனோடு பேசும் போது மட்டும் குரல் இப்படி கொஞ்ச ஆரம்பித்து விடுகிறது ….மணிமேகலையின் கொஞ்சலை வெறுத்து போய் பார்த்தாள் யமுனா .

” அண்ணா நம்பாதீங்க .அண்ணிக்கு பயமதான் …” காவேரி குதித்தாள் .

” ம் …இப்போ தெரிஞ்சுடும் .மேகா உனக்கு கூட்டம்தானே பிரச்சினை .வா கூட்டமில்லாத அருவி ஒன்றுக்கு நான் உன்னை கூட்டிப் போகிறேன் …”

இப்படி சொல்லி அவன் கூட்டிப் போன அருவிப்பாதை அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் வளைந்து நெளிந்து காட்டிற்குள் கூட்டிப் போனது .மலை மேல் இருந்த்து .ஐந்து பிரிவுகளாக பிரிந்து வெண் நுரைகளாக நுரைத்து விழுந்து கொண்டிருந்த ஐந்தருவிக்கு மேலிருந்த மலைப்பாதைக்குள் கார் சென்றது . பெரிய கேட் இவர்களுக்காக திறந்து விடப்பட்டது .

அந்த கேட்டை தாண்டியதுமே அதிக ஆள் நடமாட்டமற்ற காட்டுப் பூச்சிகளின் ரீங்காரத்தோடு , காட்டு மரங்களின் வாசனையோடு வேறு ஏதோ தனி உலகத்திற்குள் நுழைந்த உணர்வு எழுந்த்து .மூலிகை கலந்த காற்று ஈரப்பத்தை சுமந்தபடி வந்து நாசியில் மோதியது .

மணிமேகலை ஆழ்ந்து மூச்சிழுத்து அந்த சுத்தமான காற்றை நுரையீரல்களில் நிரப்பி தன் உடலை புதுப்பித்துக் கொண்டாள் .




ஆவலுடன் விழிகளை சுழற்றி அடங்கா தாகத்தோடு சுற்றுப்புறத்தை விழுங்கினாள் .

” பென்டாஸ்டிக் …” குதூகலித்தாள் .

யமுனாவிற்கு அவள் தலையில் கொட்ட வேண்டும் போலிருந்த்து .எப்போது பார்த்தாலும் என்ன இந்த பச்சை பிள்ளை வேடம் …

” நீங்கெல்லாம் அடிக்கடி இங்கே வந்திருப்பீங்க யமுனா ்உங்களுக்கு இது சாதாரணமாக இருக்கும் . ஆனால் நான் இப்போதுதான் வந்திருக்கிறேன் .எனக்கு இதெல்லாம் சொர்க்கம் போல் தெரகிறது …ஆனால் இந்த இயற்கை சூழலிலும் சிலர் எப்படித்தான் இப்படி களிமண் மாதிரி உட்கார்ந்திருக்கிறார்களோ …? ” கார் சன்னல் வழியே வெளியே வெறித்தபடி அமர்ந்திருந்த கங்காவை பார த்து சொன்னாள் .

கங்கா பார்வையை அகற்றாமல் இருக்க மாதவியும் , யமுனாவும் அவளை முறைத்தனர.

” பார்த்தா திடீர்னு இங்கே பின்னால் ஒரே அனலாக இருக்கிறது .நான் அங்கே உங்கள் பக்கத்தில் வந்து விடுகிறேனே ….” சொன்ப்படி எழுந்து அவளுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த கங்கா , யமுனாவின் கால்களை நினைவாக மிதித்து …

” இரு காரை நிறுத்துகிறேன் ….” என்ற பார்த்தசாரதியையும் அலட்சியம் செய்து முன்சீட்டை தாண்டி அவனது தோள்களை பற்றியபடி முன்னால் வந்தாள் .

” சொன்னதை கேட்கவே மாட்டாயா …இப்போது எதற்கு அவ்வளவு அவசரமாக தவ்வி குதித்து வந்தாய் …? “

” பின்னால் இருக்க முடியவில்லைப்பா ….ஆளை எரிக்கிற மாதிரி அப்படி ஒரு பார்வை …அப்பா ….” வெளிப்படையாகவே பின்னால் கையை வீசிக் காட்டி அலுத்துக் கொண்டவளை என்ன செயவதென பார்த்தனுக்கே தெரியவில்லை .

” அருவிக்கு கூட்டிப் போகனும் .அதை மட்டும்தான் செய்யனும் ….”  அவன் பார்வைக்கு   முணுமுணுத்தாள் .

பார்த்தசாரதி புன்னகைத்தபடி ” கவனித்து கேள் …” என்றான் .

காதை சாய்த்து கேட்டவள் ” அருவி சத்தம் ….வந்துவிட்டோமா ….”

காரை நிறுத்திவிட்டு நடக்கும்வரை சத்தம்தான் கேட்டதே தவிர அருவி கண்ணுக்கு தெரியவில்லை .

அண்ணாந்து பார்த்து மற்ற அருவிகளை போல் மலையை தேடி அலுத்தவள் ” அருவி எங்கே பார்த்தா…? ” சிணங்கினாள்

அடர்ந்து புதர் போல் மண்டியிருந்த சிறு புதர்களை தாண்டியதும் அந்த அருவி கண்ணிற்கு கிடைத்தது .பெரிய மலை மேலிருந்து பயமுறுத்துவது போல் விழவில்லை .சிறு பாறைகளுக்கிடையே மிக சாதுவாக ஓடி வந்து கொண்டிருந்த்து .விழும் இடத்தில் சிறு குளம் போல் கொட்டி சேர்ந்து பின் கற்பாறைகளிடையே பிரிந்து ஓடியது .

” என்ன அருவி பார்த்தா இது …? ” மணிமேகலை பிரமிப்பில் விழி விரித்தாள் .

” இது பழத்தோட்ட அருவி மேகா .இதோ சுற றி இருப்பவை எல்லாம் பழத்தோட்டங்கள் .ஐந்தருவிக்கு மேல் இருக்கிறது .இந்த தண்ணீர்தான் விழுந்து ஓடி ஐந்தருவக்கு போகிறது . இந்த அருவி நம் தமிழ்நாடு கவர்ன்மெனட் பொறுப்பில் இருக்கிறது .இது பொது மக்களுக்கான அருவி இல்லை .ஸ்பெசல் பர்மிசன் வாங்கியவர்கள் மட்டும்தான் இங்கே வர முடியும் ….”

அவன் சொல்வது சரியென்பது போல் மற்ற அருவிகளில் இருந்த வரிசை இங்கே இல்லை . அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகச் சிலரே குளித்துக் கொண்டிருந்தனர் .

” கூட்டமில்லை .குளிக்கலாம்தானே ….”

” ஓ ….” என திரும்பி பார்த்தவள் ஆச்சரியமானாள் .காவேரியும் , யமுனாவும் அதற்குள் அருவியினுள் புகுந்திருந்தனர் .

” ம் …நீயும் போ  மேகா….” அவள் தோள் பிடித்து மெல்ல தள்ள , மணிமேகலைக்கு முதல் அருவிக் குளியல் லேசான தயக்கத்தை தந்த்து .

” வா ..நானும் வருகிறேன் ….” அவள் கை பிடித்து அருவி வரை கூட்டிப் போனவன் , நொங்கும் ..்நுரையுமாக குழிழிட்டுக் கொண்டிருந்த அருவி முன்னிருந்த அந்த சிறு குளத்தினருகே  வந்த்தும் அவளை மென்மையாக உள ளே தள ளி விட்டு விட டான் .

ஜில்லென்ற நீர் முதலில் சுளீரென்று உடலை தாக்க முதலில் தடுமிறியவள் இரண்டே நிமிடங்களில் இடுப்பு வரை மட்டுமே இருந்த அந்த தண்ணீரின் குளிர்ச்சிக்கு பழகிவிட்டாள் .ஆவலுடன் நீரை கைகளால் அடித்து மேலே அள்ளி ஊற்றிக் கொண்டாள் .

” அருவி முன்னால் நின்று கொண்டு கையால் தண்ணீரை மேலே ஊற்றிக் கொள்பவள் நீயாகத்தான் இருக்கும் .அருவிக்குள் போ மேகா …” மேலே நின று அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டே சொன னான் பார்த்தசாரதி .

மணிமேகலை திரும் பி பார்க்க ஆக்ரோசமாக அடித்து விழுந்து கொண்டிருந்த அருவி நீருக்குள்   காவேரி , யமுனாவின் உடைகள் மட்டுமே அங்குமிங்கும் அல்லாடியபடி தெரிய இருவரும் அருவி நீருக்குள் புகுந்து மறைந்து போயிருந!தனர. .

” பயமா இருக்கு பார்த்தா .நீங்களும் வாங்களேன் ….” அண்ணாந்து அவனை பார்த்து சொன்னாள் .




” ம் …இப்போதான் உண்மை வெளியே வருது .ஏய் உண்மையை சொல்லு அப்போதிருந்து உனக்கு பயம்தானே …? “

” ப்ளீஸ் பார்த்தா …” தலை சாய்த்து சிணுங்கியவளின் அருகே சிரித்தபடி  குதித்தான் பார்த்தசாரதி .அவள் தோள்களை வளைத்து அணைத்தபடி அருவியை நோக்கி அழைத்து போனான் .

அருவியை நெருங்க நெருங்க ஓவென்ற இரைச்சல் அதிகரிக்க நீர்த்துளிகள் மேலே தெறிக்க உடல் குளிரில் நடுங்கியது .மணிமேகலை அவன் மார்பில் ஒன்றினாள் .

” அருவிக்குள் போகும் வரை அப்படித்தான் இருக்கும் .உள்ளே போய்விட்டால் சரியாகி விடும் மேகா ….” ஆதரவாய் அவள் தோள்களை தடவியபடி அருவி நீருக்குள் அவளை இழுத்தான் .

தட்தட்டென மேலே விழுந்த அருவி நீரில் முதலில் தடுமாறி பின் கால்களை அழுந்த ஊன்றி நின்று , அருகிலிருந்த பார்த்தசாரதி தோள்களை பற்றிக் கொண்டு ஒரு வழியாக சமாளித்தாள் .

முதலில் சிறு கற்கள் எறிந்த்து போல் மேனியை நோக வைத்த அருவி நீர் , அந்த வேகத்தை உடல் பழகியதும் அழுத்தமான மசாஜ் போல் சுக அணைப்பாக உடலில் இறங்கியது .உச்சந்தலையில் ஊறி உடலில் வழிந்த அந்த சுத்தமான நீரில் உடலோடு , மனமும் லேசாக கண்களை மூடியபடி அருவிக் குளியலை அனுபவிக்க ஆரம்பித்தாள் மணிமேகலை .

” இப்போது ஓ.கேதானே மேகா …? ” அருவிச் சத்தத்தை தாண்ட அவளோடு ஒட்டி அவள் காது மடல்களை உரசின பார்த்தசாரதியின் இதழ்கள் .

குளிர்ந்த அருவி நீரில் காதோரம் மட்டும் வெப்பமேறி தகிக்க , விழுந்து கொண்டிருக்கும் அருவி நீருக்குள் அவன் முகம் பார்க்க முடியாமல் தலையை மட்டும் அசைத்தாள் .அவள் முகத்தை பற்றி அருவிக்கு வெளியே இழுத்தவன் …

” சரி இனி நீயாக குளித்து கொள்வாயா ….நான் அங்கே போகிறேன் .அதுதான் ஆண்கள் குளிக்கும் பகுதி .கூட்டம் இல்லாததால் நான் இங்கே இறங்கியது யாருக்கும் தவறாக படவில்லை …. ” கொஞ்சம் தள்ளியிருந்த ஆண்கள் பகுதியை காட்டினான் .

” ம்ஹூம் …இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன் …” அவன் கைகளுடன் கை கோர்த்தாள் .

அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு பின்னால் ஒரு பாறை மீது விழுந்து கொண்டிருந!தது அருவி நீர் .காவிரியும் , யமுனாவும் வசதியாக பாறை மீது அமர்ந்து குளித்துக் கொண்டிருக்க அவர்களை தட்டி நகர்ந்து உட்காருமாக சொல்லிவிட்டு , மணிமேகலையின் இடையை பற்றி தூக்கி அவர்கள் இருவருக்குமிடையே அமர்த்தினான் .

” சரியா …பார்த்துக் கொள்ளுங்கம்மா ….” தங்கைகளிடம் சொல்லிவிட்டு வெளியேறி தனது குளியல் இடத்தை நோக்கி போனான் .

தங்கள் தோள்களை உரசியபடி உட்கார்ந்திருந்த மணிமேகலையின் தோளை ஆதரவாக காவேரி பிடித்துக் கொள்ள , யமுனா அவளை அப்படியே இந்த குளத்தினுள் தள்ளி விட்டாலென்ன என யோசிக்க ஆரம்பித்தாள் .

” யமுனா …வேண்டாம் நம்ம இரண்டு பேருக்குள்ள என்ன பிரச்சினை இருந்தாலும் அதை பேசி தீர்த்துப்போம் .அராஜகமாக கொலை முயற்சிநிலெல்லாம் இறங்காதே ….” அருவி சத்தத்தை தாண்டி அவள் காதில் படும்படி பதட்டமாக கத்தினாள் மணிமேகலை .

” லட்டு மாதிரி கையில் கிடைத்த சான்சை மிஸ் பண்ணுவேனா ….” சொன்னபடி மணிமேகலையை உந்தி கீழே தள்ளுவது போல் யமுனா செய்ய , அவள் கத்தினாள் .

சட்டென அவளை மீண்டும் நீருக்குள் இழுத்துக் கொண்டவள் ” ஏன் கத்தி தொலையுற ….உன் புருசன் அங்கேயிருந்து ஓடி வந்துட போறாரு …” என்றாள் .

” யாரை சொல்ற யமுனா …? ” மணிமேகலை மலர்ந்த முகத்துடன் சுவாரசியமாக  கேட்க …காவேரி சிரித்தாள் .யமுனா கடுத்தாள் .

என் அண்ணனென்று சொல்லாமல் யமுனா உன் புருசனென்று சொன்னது மணிமேகலைக்கு மிகுந்த உவகையை கொடுத்தது .என் புருசன் …பார்த்தசாரதியை மனதில் நினைத்தபடி தனக்குள் சொல்லிப் பார்த்தபடி அருவி குளியலில் ஆழ்ந்தாள் .

திடுமென உட்கார்ந்திருந்த பாறையிலிருந்து நீருக்குள் குதித்தவள் , கரையை நோக்கி போனாள் .

” அண்ணி எங்கே போறீங்க …? ” காவேரி கத்த ….

” போகட்டும் விடுடி …அப்படியே தண்ணியோட போக்குலேயே ஐந்தருவ வரை போகிற ஐடியா வைத்திருப்பாளாய் இருக்கும் ….” யமுனா நொடித்தாள் .

அருவியை விட்டு வெளியே போன மணிமேகலை கைபிடியாய் கங்காவை இழுத்து வந்து கொண்டிருந்தாள் …

” இங்கே பாருங்களேன் ….” நீருக்குள் எதையோ காட்ட கங்கா குனிந்து பார்த்த போது அவளை பிடித்து நீருக்குள் தள்ளினாள் .

” ஏய் என்ன செய்ற …? ” கங்கா கத்த ….

” இனித்தான் செய்ய போறேன் .உங்களை நல்லா வச்சி செய்ய போறேன் …” சொன்னபடி தானும் குதித்து அவளை நீருக்குள் அழுத்தினாள் .உதவிக்கு ஜாடையாக காவேரி , யமுனாவை அழைக்க அவர்களும் குதூகலத்துடன் இணைந்து கொண்டு கங்காவை இழுத்து போய் அருவிக்குள் நனைத்தனர் .

முதலில் மறுத்த கங்கா …பிறகு மெல்ல அருவிக்குளியலில் ஒன்றி போனாள் .தலையை அண்ணாந்து அருவி நீரை முகத்தில் வாங்கினாள் கங்கா . அருவி நீரோடு அவள் கண் நீரும் கலந்து வழிந்த்து .

” குளிக்கும் போது அழக்கூடாதண்ணி …” நீருக்குள் கை நுழைத்து அனுமானமாய் அவள் கண்களை துடைத்த மணிமேகலை அந்நேரம் கங்காவின் கண்ணிற்கு வானிறங்கி நீராட  புவி வந்த தேவ கன்னிகையாய் தோன்றினாள் .

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!