Entertainment lifestyles News

மைக்ரோசாப்ட் வேலையை ராஜினாமா செய்த நபர் .. யார் அவர் ?

மைக்ரோசாப்ட் ஊழியரான ருசித் கார்க், தனது தொழில் முனைவோர் கனவுகளைத் தொடர ஆண்டுக்கு ரூ.1 கோடி வேலையை ராஜினாமா செய்துவிட்டார். மைக்ரோசாப்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று ஏங்கும் டெக்கிகள் ஒருபக்கம் மலைபோல் குவிந்துக் கிடந்தாலும், கனவுகளை தொடர இந்த கார்ப்ரேட் வலையை கடித்து துப்பிவிட்டு சில சிங்கங்கள் தப்பிக்கத்தான் செய்கிறது.




ஆறு ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ருசித் கார்க், 2011 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தரவரிசையில் முன்னணியில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

எனக்கு சலிப்பாக இருந்தது. அங்கு நான் ஒரு தவறான நபராக உணர்ந்தேன். நான் ஒரு தொழிலை நடத்த விரும்பினேன் என்று ருசித் கார்க் கூறினார். ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விருப்பத்தால் கார்க், அமெரிக்காவிலிருந்த இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் ஒரு ஸ்டார்ட்அப் ஹார்வெஸ்டிங் (Harvesting) என்ற தளத்தை ருசித் கார்க் நிறுவினார்.

உத்தரபிரதேசத்தில் ஒரு விவசாயியாக இருந்த தனது தாத்தாவிடமிருந்து உத்வேகத்தைப் பெற்ற கார்க், சிறு விவசாயிகளை நுகர்வோருடன் நேரடியாக இணைத்து, இடைத்தரகர்களை ஒழிப்பதன் மூலம் அவர்கள் கூடுதல் வருமானம் பெற உதவும் ஒரு தளத்தை உருவாக்க முயன்றார். ஹார்வெஸ்டிங் (Harvesting) சிறு விவசாயிகளுக்கு அதிக பணம் சம்பாதிக்க உதவுகிறது.




இதை அடுத்த தலைமுறை அமுல் போல் நீங்கள் இதை நினைக்கலாம். விவசாயிகள் தங்கள் பயிர்களை வளர்க்கத் தேவையான அனைத்திற்கும் நாங்கள் உதவுகிறோம், மேலும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்க உதவுகிறோம் என்கிறார் ருசித் கார்க். கார்ப்பரேட் எக்ஸிகியூட்டிவ் பணியில் இருந்கு விவசாயத்துறை தொழிலதிபராகும் வரை கார்க்கின் பயணம் நெகிழ்ச்சி மற்றும் உறுதி நிறைந்ததாகும். சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிறகு சாதாரண சூழ்நிலையில் வளர்ந்த அவர், புத்தகங்களில், குறிப்பாக ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூவ் புத்தகத்தில் உத்வேகத்தையும் கண்டார்.

லக்னோவில் உள்ள இந்திய ரயில்வே நூலகத்தில் அவரது தாயார் எழுத்தராகப் பணிபுரிந்த காலத்தில் தான் கார்க் தொழில்முனைவோர் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். புத்தகம் வாங்குவதற்கு அதிகப் பணம் செலவழிக்க முடியாததால், தான் அந்த நூலகத்தில் பல புத்தகங்களைப் படிப்பதாக கார்க் கூறினார். கார்க் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூவில் நிறைய கேஸ் ஸ்டடிகளைப் படிப்பதாக கூறினார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் பார்வை கவனிக்கப்படாமல் போகவில்லை.

2018 ஆம் ஆண்டில், கார்க் சிறு விவசாயிகளுக்கான நிதிச் சேர்க்கை பற்றி பேச ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டதாகக் கூறினார், இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று தனது பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார். அவர் ஒரு காலத்தில் படிக்க வேண்டும் என்று கனவு கண்ட பல்கலைக்கழகத்தில் ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூவின் நகலை வாங்கியது மிகப் பெருமையாக இருந்தது என்கிறார் கார்க்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!