Samayalarai

வெயிலுக்கு இப்படி இதமான மிக்ஸ் ஃப்ரூட் கஸ்டர்ட் செய்யது சாப்பிடுங்க!

எப்ப பாத்தாலும் குழந்தைங்க ஸ்நாக்ஸ் கேட்டா அவங்களுக்கு வடை போண்டா கட்டில் பிரெஞ்ச் ப்ரைஸ்ன்னு இதையே செஞ்சு கொடுக்காம கொஞ்சம் டிஃபரண்டா ஆரோக்கியமா ஒரு தடவ ஃப்ரூட் கஸ்டர்ட் செஞ்சு கொடுங்க. ஒரு சில பசங்களுக்கு பழங்கள அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சிலருக்கு ஜூஸ் போட்டு கொடுத்தா பிடிக்கும். ஆனா ஒரு சிலருக்கு சுத்தமா ஃப்ரூட்ஸ் சாப்பிடவே பிடிக்காது.




அந்த மாதிரி உங்க குழந்தைங்க ஃப்ரூட்ஸ் சாப்பிட அடம் பிடிச்சா அவங்களுக்கு ஒரு தடவை இந்த ஃப்ரூட் கஸ்டட் செஞ்சு கொடுங்க அதுக்கு அப்புறமா அவங்க எப்பவுமே  இந்த ஃப்ரூட் காஸ்ட்டர் கேட்டு அடம் பிடிப்பாங்க அந்த அளவுக்கு இந்த ஃப்ரூட் கஸ்டர்டோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இப்போ வெயில் காலம் வேற வரப்போகுது இந்த டயத்துல குழந்தைகளுக்கு ரொம்பவே சூடு பிடிக்கும் அந்த மாதிரி சூடு பிடிக்காமல் இருக்க அவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது செஞ்சு கொடுத்தா ரொம்பவும் நல்லது.
வீட்டிலிருக்கும் பழங்களில் சுவையான பழ custard😋| Healthy Fruit Custard in Tamil |fruit custard recipe - YouTube

 

தேவையான பொருட்கள் :

பால் அரை லிட்டர்

கஸ்டர்ட் பவுடர் 2 ஸ்பூன்

சர்க்கரை 2 ஸ்பூன்

தேவையான பழங்கள்




செய்முறை விளக்கம்:

  •  ஆப்பிள், வாழைப்பழம், மாதுளம் பழம், சப்போட்டா  (அவரவர் விருப்பத்திற்கு தகுந்தவாறு பழங்களை சேர்க்கலாம்) பாதாம், முந்திரி பருப்புகள் 1 கைப்பிடி

  • பாலில் தண்ணீர் சேர்க்காமல் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். 2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரை பச்சை பாலில் கட்டிகள் இல்லாமல் கரைத்து கொதிக்கும் பாலில் விட்டு கிளறவும்.

  • இரண்டு நிமிடங்களில் கொதித்து கெட்டியாகும் போது சர்க்கரை 2 ஸ்பூன் சேர்த்து கலந்து இறக்கவும்.

  • ஆறியதும் அதனை ஒரு கண்ணாடி பவுலில் விட்டு நறுக்கிய பழங்களையும்,  உலர் பழங்களையும் (பாதாம், முந்திரி) சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ந்ததும் பரிமாற மிகவும் ருசியான வெயிலுக்கு இதமான மிக்ஸட் ப்ரூட்ஸ் கஸ்டர்ட் ரெடி

வீட்டுக்கு குறிப்பு:

  • பூரிக்கு மாவு பிசையும் போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்த்து பூரி செய்தால் மொறுமொறுவென இருக்கும்.

  •  மாவு சற்று புளித்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு போட்டு தாளித்து ஊத்தாப்பமாக ஊற்றி எடுக்கலாம், ருசியாக இருக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!