Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-18

18 

அடைத்த தொண்டையை செருமியபடி திரும்பி நின்று கொண்டாள் கவிதா .

” உங்க அக்காவை பற்றி சொல்லுங்க ” 

” அக்காவுக்கு நிச்சயம் செஞ்ச கல்யாணம் நின்னுட்டுது ்உனக்கு தெரியுமில்ல ? ” 

” ம் .தெரியும் .இப்போ சமீபத்தில்தான் தெரிந்து கொண டேன் ” 

” ஓ …அப்போ மொதல்ல இந்த விபரமெல்லாம் உனக்கு தெரியாதா …? ” 

” ம்ஹூம் .யாரும் எனக்கு சொல்லலை ” 

” ஏன்டி …கல்யாணம் பண ணப் போற வீட்டப் பத்தி உங்க வீட்ல கேட்டுத் தெரிஞ்சிக்க மாட்டியா ..? ” 

” ஆமாம் ..்எனக்கு எல்லாம் விபரமும் சொல்லி என் சம்மத்த்தை கேட்டுத்தான் இந்த கலயாணம் நடந்துச்சு பாருங்க ” 

கவிதா விரக்தியோடு சொல்லிவிட்டு களத்தை விட்டு வெளியேறி போய் திண்ணையில் அமர்ந்து கொண டாள் .

அய்யனார் இன்னமும் அங்கேயே நின்று கொண்மிருப்பதை பார்த்தாள்.அவன் இரண்டு முழு நிமிடங்கள் எடுத்துக் கொண்டான் .பிறகு மெல்ல தன் னை சமாளித்துக் கொண்டு நடந்து வந்தான் .

” நம்ம கல்யாணம் புடிக்காமத்தான் அன்னைக்கு அவங் கூட காரில போனியா …? ,” 

அன்றைய தனது நிலைமையை சொல்லி விட வாய் திறந்தவளுக்கு திடுமென ஓர் வீம்பு வந்த்து ்அதை எதற்கு இவனிடம் சொல்லவேண்டும் ..? 

” எனக்கு அதையெல்லாம் பேசப் பிடிக்கவில்லை . எப்படியோ கல்யாணம்தான் நடந்து முடிஞ்சிடுச்சே .இப்போவாவது உங்க வீட்டு விபரங்களை சொல்வீர்களா …மாட்டீர்களா …? ,” 

பெருமூச்சுடன் அவளருகே திண்ணையில் அமர்ந்தான் .

” ம் சொல்லு உனக்கு என்ன விபரம் வேணும் ? ” 

” ஒரு தடவை நிச்சயம் செய்து நின்றுவிட்டால் திரும்ப வேறு திருமணம் செய்ய முயற்சி செய்ய மாட டீர்களா ..? எதறகாக உங்க அக்காவை இன்னமும் இப்படியே வைத்நிருக்கிறீர்கள் ? ” 

” நாங்கள் எம்புட்டு தூரம் முயற்சி எடுத்தோம்னு உனக்கு தெரியாது. அக்கா ஒரேடியா மாட்டேனுட்டா .” 




” ஏன் …? ” 

” தெரியலைம்மா . அது நடந்து பதினெட டு வருசம் ஆச்சு ்அக்காவுக்கு அப்போ இருபது வயசு .எனக்கு பத்து வயசு .அம்மா எங்கள் சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க .அப்புறம் அக காதான் என்னையும் அப்பாவையும் வீட்டையும் அம்மா இடத்திலஇருந்து பார்த்துக்கிட டா .அக்காஙோட சம்மதம. கேட டுத்தான் அப்பா கல்யாண ஏற்பாடு பண்ணுனார் .அக்காவும ஞந்தோசமாத்தான் இருந்தா.என்ன நடந்த்துன னு தெரியலை .திடீர்னு கலயாணம் நின னுடுச்சு ்அக்கா அப்படியே முடங்கிட்டா .வேற கலயாணத்துக்கும் ஒத்துக்கலை .அப்பாவும் கொஞ்ச நாளுல போய்சேரந்துட டார் .நாங்க இப்லடியே வாழ பழகிட்டோம் .”

” அக்கா இங்கேயே உங்களுக்கு சமைத்து போட டுக. கொண்மி இருப பது  உங்களுக்கு வசதியாக இருக்கறதுன னு பேசாமல் இருந்துட்டீங்களோ …? “

” எப்பவுமே என்னை குத்தம் பேசுறது உன் வேலைன்னா …அப்படியே நினெச்சுக்கோ .நான் அக்காவோட மனசுப படி நடந்தேன் . இன்னொரு ஆளுக்கு , குடும்லத தற கு கட்டுப பட டு இருப்பது தன னால் முடியாதுன னு அக்கா சொ்லிம்டா .எனக்கு தெரிஞ்சு அக்கா அப்படி ஒருத்தருக்கு கட்டுப்பட்டு இருக்குற ஆளும் கெடையாது .ஒரு வேளை இந்த வாழ்க்கைதான் அவளுக்கு புடிச்சிருக்கு போலன்னு நெனச்சு  அப்படியே விட டுட டேன் .” 

கஙிதா எழுந்துவிட்டாள் .வீட்டினுள் போகும் வாசல்படியில் ஏறியபடி அய்யனாரவ பாரத்தவள் …

” ஊருக்கெல்லாம் நீதி சொல்ற பெரிய மனுசன் நீங்க .இப்போது சொன்னதல் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று நீங்களே யோசியுங்கள் …”  போய்விட டாள் .

அய்யனார் யோசித்தபடி திண்ணையிலேயே அமர்ந்திருந்தமான் .

——————

” நிச்சயம் பண்ணுன அந்த மாப்பிள்ளை மேல் உங்களக்கு அவ்வளவு ஆசையா அண்ணி …? ” 

கண்ணாத்தாள் விருக்கென திரும்பி கவிதாவை பார்த்த பார்வையில் அனல் இருந்த்து .

” எதுக்கு இப படி பாக்குறீங்க ? பதினெட டு வருசம் போயிடுச்சு ்உங்களுக்கு நிச்சயம் பண்ணுன ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சு பிள்ளை குட்டியோட சந்தோசமாக வாழந்துட்டிருக்கிறாரு .அவர் முன்னாடியே நீங்க இப்படி கண்ணனை தேடுற மீரா மாதிரி  ஏக்காமாக  இருந்தால் அவர் வாழ்க்கை என்னாவது …? அவர் மனைவி குழந்தைங்கள்லாம் என ன நினைப்பாங்க ? ” 

” ஏய் உனக்கு இப்போ என்னடி பிரச்சனை …? நான் இப்படி இருக்கறது பிரச்சனையா ….இல்லை என்னால உன் சித்தப்பன் வாழ்க்கை பாழாகுதுன்னு பிரச்சனையா ..? ” 

” சித்தப்பா வாழ்க்கையா …? ஓ …அப்போ உங்களுக்கு நிச்சயம் பண்ணியது என் சித்தப்பா தங்கபாண்டியனையா …?எனக்கு தெரியாதே அண்ணி ” அறியாப் பெண் போல் கண் இமை சிமிட்டி தலை சாய்த்து கேட்டவள. மேல் கண்ணாத்தாளுக்கு கொலை வெறி வந்த்து .




தனது வெறியை அவள் மறைத்துக் கொள்ளவில்லை .இரவு நேரம் நிலா கதிர் குளுமையாய் வீசிக் கொண்திருக்க , இருவருமாக முற்றத்து திண்ணையல் அமர்ந்திருந்தனர் .அமைதயான அந்த சூழல் கொடுத்த ஏகாந்த மனநிலையை கெடுத்த தம்பி மனைவியை மன்னிக்க கண்ணதாத்தாள் தயாராக இல்லை .

சட்டென எழுந்து நின்றவள் உட்கார்ந்திருந்த கவிதாவின் தலையை அழுத்தி குனிய வைத்து  நொட் நொட்டென கொட்டத் துவங்கினாள் .

” உனக்கு தெரியாதாடி …? ஏன்டி இப்புடி என் உயிரை வாங்குற …? உனக்கு என்னதான்டி வேணும் …? ” 

” ஆ …அண்ணி வலிக்குது . ஐய்யோ விடுங்க …யாராவது வந்து காப்பாத்துங்களேன் .இங்கே பெரிய கொடுமை நடக்குதே ” குனிந்து குட்டுக்களை வாங்கியபடி கவிதா கத்த , வீட்டனுள. டிவி முன் ஐக்கியமாகி இருந்த உறவுக் கும்பல் வேகமாக எட்டப் பார்த்தது .

மதினி  – நாத்தனார் சண்டையில் நாமென்ன செய்ய முடியுமென வசதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது . அவர்களுக்கு இப்போது உள்ளே ஓடிக. கொண்டிருந்த சீரியல் சண்டைகளை விட இது சுவாரஸ்யமாகத் தெரிந்த்து .

கண்ணாத்தாள் இந்த கத்தல்களுக்கு அடங்காது தனது வேகத்தை குறைக்காது , தலை கொட்டிலிருந்து முதுகு மொத்தலுக்கு மாறியிருந்தாள் .

” இப்புடி வாய்க்கு வந்தபடி பேசுவியா சொல்லுடி …இனி வாயடக்கமா இருப்பியா …? ” 

” ஐயோ நான் ஒண்ணுமே பேசலையே .என்னை இப்படி பாடா படுத்துறாங்களே …” கவிதா பரிதாபமாய் கத்த …

” என்ன நடக்குது இங்கே …? ” எதிரில் கேட்ட அதிர்வு குரலுக்கு இரு பெண்களும் நிமிர்ந்தனர் .

அன்னாசிலிங்கமும்  , அய்யனாரும் எதிரே நின்றிருந்தனர் .அன்னாசிலிங்கம் இடுப்பில் கை வைத்தபடி கண்களை உருட்டி பார்த்திருக்க , அய்யனார் ம் ..விடாதீங்க , அப்படித்தான் அடிச்சுக்கோங்க என இருவரையும் உறசாகப்படுத்தும் மனோபாவத்ழுடன் கை கட்டி நின்றிருந்தான் .

அவனது அந்த பாவம் கவிதாவிறகுள் கோபத்தை கொடுக்க ” அப்பா …பாருங்கப்பா , என்னை எப்படி அடிக்கிறாங்கன்னு …? ” நர்சரி மழலைக் குரலில் சிணுங்கினாள் . ஓரக் கண்ணால் கணவனை முறைத்தாள் .

” என்னங்கம்மா என்ன பண்ணுறீக …என் பொண்ணை பொத்தி பொத்தி வளர்த்து உங்க வீட்டுக்கு அனுப்பிச்சா இப்படித்தான் அடிச்சு கொடுமைப்படுத்துவீகளா ?” 

” பொண்ணா வளர்த்து வச்சிருக்கீக ? எங்கே எப்போ வம்பு கிடைக்குதுன்னு அலையுறா ….யார் தலையை எப்படி உருட்டலாம்னு கணக்கு போட்டுட்டு இருக்கா ….” கண்ணாத்தாள் நொடித்தபடி வர, 

” யார் மனசை எப்படி நோகடிக்கலாம்னு திட்டம் போடுறா …” அய்யனார் இடை புகுந்து எடுத்துக் கொடுத்தான் .

அடப்பாவி …நீயுமா …? கஙிதா அவனை முறைக்க …அன்னாசிலிங்கம் மகளின் தோளை ஆதரவாக அணைத்தார் .

” நீ கவலைப்படாத கவிம்மா .இப்படி உன்னை அடிச்சு கொடிமை படுத்துற வீட்டுல நீ இருக்கனும்னு கட்ணாயம் கிடையாது …” 

என ஆரம்பிக்க கவிதாவிற்கு திக்கென்றது .இப்போது இவர் என்ன சொல்ல வருகறார் …?

” மாமா …என்ன சொல்ல வர்றீக …? ,” கஙிதாவின் மனக்குரல் அய்யனாரின் வாயிலிருந்து தெறித்து வார்த்தைகளாக வந்த்து .

” என் செல்லமகளை உங்க வீட்டுல இப்படி கொடுமைப்படுத்துறீகளே …நான் எப படி அவளை இங்கே விட்டுப் போக முடியும் …? ” 

கவிதா மின்னல் வெட்டும் நேரத்தில் அய்யனாரை பார்க்க  , அஒனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்மான் .

” ம் …” என்ற அவனது புருவ உயர்தலுக்கு , ” ம்ஹூம் ” என்ற தலையசைத்தல் தந்தாள் அவள் .

” அப்பா ” ….” மாமா ” இருவரும் ஏக நேரத்தில் ஒன்று போல் குரல் கொடுத்தனர் .

” அப்பா அது சும்மாப்பா .நாங்க பொழுது போகாமல் விளையாண்டுட டு இருந்தோம் .” 

” பொரஞழுது போகலைன்னா அடிச்சுத்தான் விளெயாடுவீகளோ …? ” 

” யாருப்பா .. யாரைப்பா …எப்போ  அடிச்சாங்க ? ” மகளின் கேள்வியில் அன்னாசிலிங்கத்திற கு தன் கண் பார்வை மேல் சந்தேகம் வந்த்து .

கண்ணாத்தாள் சட்டென வாயை பொத்தியும் பீறிட்டு சிரிக்க , அய்யனார் திருப்தி புன்னகையுடன் கவிதாஙை விழுங்கியபடி நின்றிருந்தான் .

” என்னம்மா சொல்லுத …இதோ இப்போ கண்ணெதுக்க நான் பாத்தேனே , இந்த புள ளை உன்னை போட்டு அடி அடின்னு அடிச்சதே …” 

” ப்ச் , போதும்பா  சரியாக கவனிக்காமல் எதையாவது சொல்லக்கிட்டு ….இப்போது இங்கே எதற்கு வந்தீர்கள் …? ” 




” ம் ..அம்மாடி கண்ணாத்தா நல்லா பழக்கி வச்சுருக்க தாயி .என் மகளை . என்னையே பார்த்து எங்கே வந்தேன்னு கேட்கறா …? ” 

” ஐயே அது விளையாட்டு புள்ளைங்கய்யா , அதுக்கென்ன தெரியும் ….? நீங்க உள்ள வாங்க , ஏய் இலையை போடுங்கடி ” வாசலில் நின்ற உறவுப் பெண்களை அதட்டி அனுப்பியபடி உள்ளே போனாள் கண்ணாத்தாள் .

கண்ணாத்தாளின் வரவேற்பின் பின்தான் அவளோடு தன் தந்தையின் பாவனைக் கோபத்தை ஆச்நரியமாக உணர்ந்தாள் கவிதா .இருவருமாக அந்நியோன்ய அன்புடன்  வீட்டினுள் போக கவிதா அவர்களை சிறு நெருடலோடு பார்த்தபடி நின்றாள் .

” ஏய.  உன் அப்பா கூப்பிட்டதும் போயிருக்க வேண்டியதுதானடி …எதுக்கு என் மூஞ்சியை பார்த்த அப்ப …? ” கிசுகிசுப்பாய் கேட்டபடி அவளருகில் நெருங்கி நின்றான் அய்யனார் .

” இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கிற உங்க மூஞ்சை பாக்கத்தான …” சொன்னபடி திரும்பிய கவிதாவிற்கு மூச்சு முட்டியது .

அந்த ஏகாந்த இரவில் , மயக்கும் நிலவொலியில் செதுக்கிய சிலை போல் ஆஜானுபாகுவாய்  கறுத்த தேகத்தில் வெள்ளிக்கதிர் படிய நின்றிருந!தவன் அந்த நிலவோலி அப்போதுதான் கொண்டு வந்து பூமியில் இறக்கி விட்ட தேவதூதன் போல் தெரிந்தான் .

” குரங்கு மாதிரியா தெரிகிறேன் …? ” தன னை தானே சுட்டிக்காட்டி அவன் கேட்க ,

இவன் இன்றெதறகு இவ்வளஙு வசிகரமாக இருக்கிறான. …எவ்வளவோ முயன்றும் கணவன் மீது படிந்து விட்ட பார்வையெ அகற்ற முடியாமல் தவித்தவளை மிக நெருங்கி வந்தான் அவள் கணவன் .




What’s your Reaction?
+1
23
+1
15
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!