mayanginen mannan inke Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே – 19

19

சஷ்டியால் கண்களை திறக்க முடியவில்லை . கண்கள் எரிந்தன . தலை பாரமாக இருந்தது .உடல் கொதித்துக் கொண்டிருப்பது தெரிந்த்து .அவள் தந்தையை அறியாதவள் .பிறந்த்திலிருந்து பார்த்திராதவள் .இதுதான் தந்தையென அம்மா காட்டிய  ஓரம் நைந்த மங்கிய கறுப்பு – வெள்ளை புகைப்படத்தில் மட்டுமே அறிந்தவள் . ஆனாலும் தந்தையின் இறப்பு அவளை மிகவும் பாதித்தது .உடல் நலிந்து படுக்கையில் விழும் அளவு அந்த பாதிப்பு இருந்த்து .

” திடீரென்று இப்படி காய்ச்சல் ஏன் வந்த்தென்று தெரியவில்லையே …” புலம்பலுடன் துணியை ஈரத்தில் நனைத்து நெற்றியில் போட்ட அம்மாவின் கை ஸ்பரிசத்தை உணர்ந்து கொள்ள முடிந்த்து .ஆனால் விழி திறக்க முடியவில்லை .

அம்மா …அப்பா நம்மை விட்டு போய்விட்டாரம்மா …கதற நினைத்தது மனம்.ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை அதறகு .அத்தோடு இதனை அம்மாவிடம் சொல்லத்தான் வேண்டுமா …?




கஞ்சி , கசாயம் , மாத்திரை என காய்ச்சலுக்கான உபசரணைகளை அரை விழி சொக்கலிலேயே இரண்டு நாட்களாக பெற்றுக் கொண்டிருந்தாள் .அம்மா , அத்தை , சித்தி , பாட்டி , தோழி என ஒருவர் மாற்றி ஒருவர் தன்னருகில் அமர்ந்து தன்னை கவனிப்பதை உணர்ந்திருந்தாள் .முழுதாக விழி திறந்து யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை அவளுக்கு .எல்லோரும் இருக்கன்றனர் ஆனால் அவன் …அவள் அருகிலேயே வரவில்லை போலும் .அவ்வளவு கோபமா அவள் மேல் …?சஷ்டிக்கு தந்தையின் மறைவுக்கு கதறி அழ ஒரு தோள் தேவைப்பட்டது .அதனை அவள் யாரிடம் கேட்பாள் …?

மூன்றாவது நாள் காலை கண் விழித்த போது உடல் கொஞ்சம் சீராகத் தெரிந்த்து .கண்களை நன்றாக திறந்து பார்த்தவள் திகைத்தாள் .அவள் திருமலைராயன் அறையில் இருந்தாள் .மூன்று நாட்களாக இங்கேயா இருக்கிறேன் ..? அது எப்படி ..?.மனைவியை கணவன் அறையில் படுக்க வைத்திருக்கின்றனர் என உறைக்க , மௌனமானாள் .அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு கோமதி வர அம்மாவை பார்த்ததும் சஷ்டியின் மனம் விம்மியது .

” அம்மா …” என்ற கதறலுடன் கோமதியை நோக்கி கை நீட்ட….

” என்னம்மா எழுந்து கொண்டாயா …? ” வேக கேள்வியுடன் அவசரமாக பின்னிருந்து  அவளருகே வந்து அமர்ந்தான் திருமலைராயன் .இவன் இவ்வளவு நேரமாக இங்கேயா இருந்தான் …?

” சஷ்டி உடம்பு எப்படிடா இருக்கிறது …? ” ஆதரவுடன் கை பற்றிய அன்னையை பார்த்ததும் அழுகை வர , ” அம்மா ” என்றபடி அவள் தோள் சாய இருந்தவளை பின்னிருந்து இழுத்து தன் மீது சாய்த்துக் கொண்டான் திருமலைராயன் .

” இப்போது உடம்பில் சூடே இல்லை அத்தை . காய்ச்சல் சுத்தமாக விட்டு விட்டது …” என்றான் .கண்ணீர் வடியும் அவள் முகத்தை திருப்பி தன் மார்பில் அழுத்திக் கொண்டான் .

” சஷ்டி என்னடாம்மா அழுகிறாயா …? ” கோமதி கொஞ்சம் பதட்டமாக மகள் தலை வருட முயல …

” அதெல்லாம் இல்லை .இரண்டு நாட்களாக படுக்கையிலேயே இருந்த்தால் தலை கனத்து கண்கள் கலங்கும. நீங்கள் போய் சுடுதண்ணீரும் , டவலும் எடுத்து வாருங்கள் அத்தை .சஷ்டிக்கு உடம்பு துடைத்து விடலாம் .அவளுக்கு இந்த சோர்வு போகும் ” திருமலைராயன் சஷ்டியை தன்னோடு இறுக்கிக் கொண்டு கோமதியை வெளியேற்றினான்  .

கோமதியின் தலை மறைந்த்தும் தன் மேலிருந்த சஷ்டியை விலக்கி உலுக்கினான் .




” ஏய் என்னடி செய்ய போகிறாய் ..? இருபது வருடங்களுக்கு முன் செத்துப் போன உன் அப்பாவை பற்றி இப்போது சொல்லி , உன் அம்மாவை அழ வைக்கப் போகிறாயா …? இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர்கள் பூ இல்லாமல் பொட்டில்லாமல் இருக்க வேண்டுமா …? “

சற்றும் இரக்கமில்லாமல் வந்த அவனது கேள்வி சஷ்டியின் மனதை நோகடிக்க அவள் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள் .

” இது போல் அறிவில்லாமல் நீ ஏதாவது செய்வாயென்று தெரிந்துதான் இரண்டு நாட்களாக வேலைகளை எல்லாம் விட்டு விட்டு உன் பக்கத்திலேயே பழியாய் கிடக்கிறேன் ….”

என்னை இப்படி கொத்தி குதறத்தான் இரண்டு நாட்களாக என் பக்கத்திலேயே இருந்தாயா …? சஷ்டியின் இழப்பின் வேதனையை மேலும் அதிகரிக்க வைத்தது திருமலைராயனின் கண்டிப்பு .அவள் சோர்ந்து தலையணையில் சரிந்தாள் .

” கண்ணீரை துடை .ஒரு விக்கல் , விசும்பல் இருக்கக் கூடாது .அமைதியாக கொடுப்பதை சாப்பிட்டு உடம்பை தேற்றிக் கொண்டு சீக்கிரம் எழுந்து எப்போதும் போல் நடமாட ஆரம்பி .உன் அப்பாவை பற்றிய பேச்சு ஏதாவது உன் வாயிலிருந்து வந்த்தோ …தாலி கட்டிய பொண்டாட்டின்னு பார்க்க மாட்டேன் .கழுத்தை நெரிச்சுடுவேன் …” மிரட்டினான் .

அறையின் வெளியே நடமாடும் சத்தம் கேட்க அவசரமாக அவள் கண்ணீர் முகத்தை துடைத்தான் .” உடம்பு துடைத்து டிரஸ் மாற்றி விடுங்க அத்தை ” உள்ளே வந்த கோமதியிடம் சொல்லிவிட்டு வெளியே நடய்தான் .அறைக்கதவை திறக்கும் போது திரும்பி இவளை பார்த்து ஒற்றை விரலாட்டி எச்சரித்து விட்டு போய்விட்டான் .

குமுறும் எரிமலையை உள்ளே  அடக்கிக் கொண்டு திணறலுடன் இருந்தாள் சஷ்டி . பேச்சியம்மா கொண்டு வந்து கொடுத்த கஞ்சிக்கு வாய் திறந்தால் அழுகை வந்து விடுமோ எனப் பயந்து இதழ்களை இறுக மூடியபடி இருந்தவளை பேச்சியம்மா யோசனையோடு பார்த்தாள் .

” ஏம்மா …வாந்தி வருவது போல் இருக்கிறதா …? “

” ம்ஹூம் …” பதட்டமாக தலையசைத்தவளின் பின் தலையில் தட்டி வாயை திறக்க வைத்த திருமலைராயன் , கஞ்சி தம்ளரையும் அவள் வாயில் வைத்து அழுத்தினான் .

” குடித்தால் சரியாயிடும் ,” இனிய குரலில் கூறி விட்டு அவளுக்கு மட்டும்  கண்களை உருட்டி மிரட்டினான் .சஷ்டி வாய் திறந்து கஞ்சியை வேகமாக விழுங்கினாள் .மாத்திரைகளை போட்டுக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டவள் தூங்கிப் போனாள் .

மாலை கண் விழித்ததும் முதலில் அவள் நினைவுக்கு வந்த்து தந்தையின் மரணம் பற்றிய செய்திதான் .அப்போது   பேச்சிம்மாவும் , கோமதியும் அவளருகே  இருக்க , வரத் துடித்த அழுகையை அடக்கியபடி வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருந்தாள் .அப்போதுதான் அறைக்குள் நுழைந்த திருமலைராயன் அவளை சந்தேகமாக பார்க்க சொல்லவில்லையென அவனுக்கு தலையசைத்தாள் .

” சஷ்டியோட அப்பா வர்றப்ப வரட்டும் அண்ணி .நான் நம் ஊர் காளிக்கு நேர்ந்துக்கிட்ட நேர்த்திக் கடனை தீர்த்துடலாம்னு நினைக்கறேன். என்னன்னு தெரியலை என் பிள்ளை காய்ச்சல் வந்து வாடிக் கிடக்கு .அவர் மட்டும் இப்போது இருந்தார்னா என்னடி நீ பிள்ளையை பார்த்துக்குற லட்சணம்னு என்னைத் திட்டி தீர்த்துடுவாரு …” இதுதான் கோமதியின் பழக்கம் . சின்ன சின்ன விசயங்களுக்கும் அவள் தன் கணவரை சேர்த்தே பேசுவாள் .இருபது வருடங்களாக அவள் மனமார கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் .




அம்மாவின் பேச்சில் வெடித்து வர துடித்த அழுகையை அடக்கியதால் இதழ்கள் துடிக்க , மூக்கு விடைக்க பரிதவிப்புடன் இருந்த சஷ்டியை பார்த்த திருமலைராயன் தன் உதட்டில் ஆட்காட்டி விரல் வைத்து அமைதி சைகை காட்டினான் .

” அடுத்த வாரம் நம் ஊர் ஆயிரம்காளி கோவில் திருவிழா வருகிறது அத்தை .அப்போது உங்கள் சார்பாக ஆயிரம் பேருக்கு பொட்டிசோறு செய்து கொடுத்து விடுவோம் .நீங்கள் போய் அதற்கான ஏற்பாடுகளை பாட்டியுடன் சேர்ந்து பேசி வையுங்கள் .நீங்களும் அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்கம்மா ” பவ்யமாய் பேசி இருவரையும் அனுப்பினான் .அவர்கள் போனதும் அறைக் கதவை மூடியவன் , திரும்பி சஷ்டியை பார்த்து இரு கைகளையும் அகல விரித்தான் .

அப்படியே அருகே வந்து தன் தோளை தட்டிக் காண்பித்து ” வா சஷ்டி ” என்றான் ஆதரவாக .அவ்வளவுதான் மூன்று நாட்களாக முழுதாக அழக் கூட முடியாமல் சஷ்டியினுள் தேங்கிக் கிடந்த துக்கம் கரை உடைந்த காட்டாறாக வெளி வந்த்து .சத்தமான அழுகையோடு அவள் கணவனின் தோளில் சாய்ந்தாள் . விக்கி விக்கி அழத் துவங்கினாள்.

திருமலைராயன் அவள் தலையை வருடியபடி மௌனமாக அமர்ந்திருந்தான் .அவளது அழுகை கொஞ்சம் குறையவும் அவளை எழுப்பி , குளியலறைக்கு கூட்டிப் போய் வெந்நீரொடு ஷவரை திறந்து விட்டு அதனடியில் அவளை நிறுத்தினான் .

” சஷ்டி .இதோ பார் உன் அப்பாவின் இறப்பிற்கான உனது குளியல் இது .இது உன் மன ஆறுதலுக்காக மட்டுமே.உன் அம்மாவிற்கு இதில் இந்த துக்கத்தில் பங்கு கிடையாது..இந்த விசயத்தை உன் அம்மாவின் காலம் வரை அவர்களிடம் நீ சொல்லக் கூடாது .எனக்கு உறுதி கொடு “

உச்சி வீழ்ந்து வழிந்து கொண்டிருந்த தண்ணீருக்கிடையே நீண்ட அவன் கையை பற்றி உறுதி சொன்னாள் .

” குட் ” அவள் கன்னம் தட்டியவன் வெளியே போய் அவளது மாற்று உடைகளை எடுத்து வந்து பாத்ரூம் ஹேங்கரில் வைத்தான் .

” காய்ச்சல் வந்த உடம்பு சஷ்டி .ரொம்ப நேரம் தண்ணீரில் நிற்க வேண்டாம் .சீக்கிரம் உடம்பு துடைத்து டிரஸ் மாற்றி விட்டு வந்து விடு …” பாதரூம் கதவை மூடிவிட்டு போனான் .

குளித்து முடித்து வெளி வந்து  ,தனது சோகத்தை மறைத்து காட்ட ஆரஞ்சு கலரில் ஒரு சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு , ஈரத் தலையை தளர்வாக பின்னி  காய்ச்சலின் சுவடு தெரியாமலிருக்க கொஞ்சம் மேக்அப் போட்டுக் கொண்டு கீழிறங்கி வந்தாள் .




திருமலைராயனை காணவில்லை .வேலையாக போய்விட்டான் போலும் .வீட்டுப் பெண்கள் எல்லோருமே தெளிவான அவள் தோற்றத்தை திருப்தியாக பார்க்க , சஷ்டியின் பார்வை பாட்டியின் மேல் படிந்த்து .சஷ்டி பார்த்ததும் பாட்டி நகர்ந்து அவர் அறைக்குள் போய்விட்டார்.

” மன்னிச்சுடுங்க பாட்டி ” பாட்டியின் அறைக்குள்ளேயே போய் நின்றாள் .

” என் அப்பா , அம்மா மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை புரிந்து கொள்ளாமல் நான் உங்களை தப்பாக நினைத்துவிட்டேன் .என்னை மன்னித்து விடுங்கள் பாட டி “

பாட்டி கடுமையான பார்வையோடு அவளை பார்த்தார் .

”  உன்னை விட எனக்கு கோமதி முக்கியம் .அவளை வருத்தப்பட நான் விடமாட்டேன் .கடைசி வரை அவளை நான்என் மகளைப் போல் தாங்குவேன்.   ,”

இப்படிப்பட்ட பாசத்தை …வேலைக்காரியாக வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேனே …?சஷ்டியின் மனது குறுகியது .

” உன் அம்மா , அப்பா பிரச்சனையை விடு. அன்று  கோபத்தில் ஏதோ சொன்னாயே …? அது உண்மையா …? “

” என்ன சொன்னேன் பாட்டி …? “

” திருமலைராயனும் , சந்திராம்பிகையும் காதலித்தனரா …? அது உனக்கு தெரியுமா …? “

சஷ்டி விழித்தாள் .இதறகு என்ன பதில் சொல்வது …?

” ஏய் உன்னைத்தானடி கேட்கிறேன் . சொல்லு ” பாட்டி அவள் தோள் தொட்டு உலுக்க  , சிரம்ப்பட்டு நா அசைத்தாள்




” ம் …ஆமாம் பாட்டி ,”

” ஓ …இது எனக்கு தெரியாமல் போயிற்றே .என் பேரனுக்கு நான் அநியாயம் செய்து விட்டேனா …? இதனை நான் சரி செய்ய வேண்டுமே …?

  பாட்டியின் யோசனையில் அமில மழை தலை மேல் பொழிவது போல் உணர்ந்தாள் சஷ்டி .

What’s your Reaction?
+1
15
+1
16
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!