Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-16

16

” நான் ஏதாவது உதவி பண்ணவா அண்ணி …?” கேட்டபடி வந்து நின்ற கவிதாவை ஆச்சரியமாக பார்த்தாள் கண்ணாத்தாள் .

கவிதா குளித்து முடித்து ஈரக்கூந்தலுடன்  அதிகாலை மலர் போல் இருந்தாள் .ஆனால் அவளது முகமும் , உடலும் சோரவு அப்பிக் கிடந்த்து .தூக்கமில்லாத்தாலோ என்னவோ அவள் விழிகள் சிவந்து இருந்தன .அழகாய் ஒரு ஓவியத்தை வரைந்து முடித்துவிட்டு  அதனை பாதுகாக்காமல் தூசியடைய விட்டது போல் பார்க்க தோணினாள் .

” உனக்கு என்ன வேலை தெரியும் புள்ள …? ” புன னகையோடு தம்பி மனைவிக்கு ஹார்லிக்ஸ் கரைத்து நீட்டினாள் .

” ம் …இனித்தான் ஒண்ணொண்ணா கத்துக்கனும் . எனக்கு சொல்லித் தர்றீங்களா அண்ணி …” சிறு முக்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டு அண்ணாந்து பார்த்து கேட்டவள் குழந்தையாய் தெரிய கண்ணாத்தாள் தனை மறந்து கை நீட்டி அவள் தலையை வருடினாள் .

” கத்துக்கலாம் புள்ள .மெல்ல ஒண்ணொன்னா கத்துக்கலாம் .ஒண்ணும் அவசரமில்ல .நீ இன னைக்கு ரொம்ப அசந்து தெரியிற , ஓய்வெடு புள்ள ” 

” பரவாயில்லைங்க  அண்ணி நீங்கள் ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் .நான் சும்மா ஒய்வெடுத்துக் கொண்டே இருப்பதா …? நீங்கள் சொல்லிக் கொடுங்கள் .நான் செய்கிறேன் …” 

” பரவாயில்லை அய்யா ்உன் பொண்டாட்டியை நல்லாவே மாத்திட்ட ..நேற்று வரை இந!தப் பக்கம் வரவே பயந்துட்டு கிடந்தா . இன்னதைஐக்கு தைரியமாக எனக்கு வேலை வேலைன்னு பறந்துட்டு இருக்காளே … .” கண்ணாத்தாள் சொல்லவும்தான் தனக்கு பின்னால் அய்யனார் வந்து நிற்பதை அறிந்தாள் .தலையை திருப்பாமல் குனிந்து ஹார்லிக்ஸ் குடிப்பதில் கவனமானாள் .

” அதெல்லாம் ஒண்ணும் வேணாங்கா. .அன்னமுக்கா , நம்ம மரிக்கொழுந்து மதினியை ந்ம்ம வீட டு சமையல் வேலைக்கு வரச் சொல்லியிருக்கேன் .இப்ப வந்திடுவாக . அவுக கூட சேர்ந்து நீங்க இனிமேல் சமையக்கட டை பாத்துக்கோங்க .அக்காவுக்கு ஓய்வு கொடுத்துடுங்க …” 

” அப்படியே உன் பொண்டாட்டிக்கும் இந்த வேலையிலிருந்து விடுதலை கொடுக்கியாக்கும் .அவளோடு சேர்த்து போனாப் போகுதுன்னு எனக்குமா …? ” 

” இது என்ன பேச்சுக்கா …? நான் உன்ன எப்போ இந்த வேலையெல்லாம் பாக்க சொன்னேன் …? நம்மலாள ஒரு சமையல் ஆள் வச்சிக்க முடியாதா …? நீதான் வீம்புக்கின்னே இந்த வேலையெல்லாம் இழுத்து போட்டு செஞ்சிட்டிருந்த ்இப்போ தோதான ஆள் வேற நம்ம சொந்த்துலயே கடைச்சிருக்கு .இன்னமும் ஏன நீ கஷ்டப்படனும் …? அவளும்தான் ஏன் கஷ்டப்படனும் …? ” 

” ம் …வுவரமானவன்டா தம்பி நீ .அக்காவ வச்சு பொண்டாட்டிய காக்கா புடிக்கிறியாக்கும் ? ” 

நெஞ்சில் குறுவாளை சொருகி நிறுத்திவிட்டு அதற்கு பேன்ட்எய்ட் போட டு ஒட்டுவானா இவன் …கசப்புடன் நினைத்தாள் கவிதா .

” ஆளெல்லாம் வேண்டாம் அண்ணி .இந்த வேலையெல்லாம் உங்களை மாதிரி நானே பழகிக்கிறேன் ”  மெல்லிய குரலில் சொன்னாள் .

” அதுதான் எதுக்குன னேன் …? அக்காவையே நான் இத்தனை நாளா இந்த வேலை வேணாமின னு திட்டிட டுத்தான் இருந்தேன் .இப்ப நீ வேறயா ..? பேசாமக் கிடக்க மாட்ட …? ” 




உனக்கு எப்பவும் பேசாமல்தானே கிடக்கனும் …குத்துக்கல்லு மாதிரி …உதட டை மடித்து கடித்து தன் கோபத்தை அடக்கியவள் …உறுதியாய் நிமிர்ந்தாள் .

” வேண்டாம் அண்ணி ்இந்த வேலையெல்லாம் நானேதான் செய்ய போகிறேன் ” 

” அடி ஆத்தி என்ன அடம் …? இங்க பாரு புள்ள , இப்படி அடுப்படிக்குள் உன்னை வேக விட்டா .்உன. புருசனோட சேர்த்து உங்க அப்பாருக்கும்ல நான் பதில் சொல்லனும் . ? ” 

கவிதாவிற்கு இப்போது புரிந்த்து ்மனம் நெகிழ்ந்த்து .நேற்று அப்பாவிடம் இந்த வேலைகளை பற்றி சொன்ன போது அலட்சியம் போல் காட்டிக் கொண்டாலும் , ஆசை மகள் உடல் நோகாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளையும் சேர்த்தே பார்த்திருக்கிறார் …

அப்பா ….பாசமாக முணுமுணுத்துக் கொண்டாள் .சரியென தலையாட்டினாள் .

” பார்த்தியா அய்யா .நீயும் நானும் இம்புட டு நேரம் சொன்னோமே ..இவள் காதில் ஏறுச்சு . அப்பாவை சொன்னதும் பூம் பூம் மாடு மிதாரி தலையாட்டுறா …” 

கண்ணாத்தாளின் விவரணையில் கவிதாவிற்கு சலித்து வந்த்து ்இவர்கள் என் பக்கம் பேசுகிறார்களா …எதிர் பேசுகறார்களா ..? இவர்களை எப்படி புரிந்து கொள்வது …? ஆயாசமாக இருந்த்து அவளுக்கு .

” நான் கொஞ்சம் வெளியே நிற்கிறேன் ” எழுந்தவளெ தடுத்தாள் கண்ணாத்தாள் .

” தம்பிக்கு சாப்பாடு போடலை ? ” 

அந்த வேலை கவிதாவிற்கு பிடிக்கவில்லை .ஏனெனில் கூடப் பறந்த அக்காவிலிருந்து , அதோ அந்த கதவுக்கு பன்னிருந்து எட டிப் பார்க்கும் அத்தை , மாமன் மகள்கள் வரை அஒனுக்கு பரிமாற காத்திருக்கும் போது …நான் எதற்கு …? 

” இல்லை …” தெளிவாக சொல்லிஅஙட்டு பின்வாசலுக்கு போய் அங்கிருந்த திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள் .ஓரமாக நகர்ந்து திண்ணை மேலிருந்த பருத்த மரத்தூணை இரு கைகளாலும் அணைத்து பிடித்து சாய்ந்தபடி வெளியே வேடிக்கை பார்க்கரானாள் .

” அக்கா ….” குழந்தைமை கலந்து ஒரு குரல் கேட்க , திரும்பப் பார!த்தாள் .

வயலட் கலர் கவுன் அணிந்த சிறு பெண் குழந்தை ஒன்று , திண்ணையின் அடுத்த நூண் மறைவிலிருந்து எட்டப் பார்த்துக். கொண்மருந்த்து .தடாக தாமரை ஒன்று இலைகளுக்குள்ளிழுந்து தலையை யீட டுவது போல் இருந்த்து அந்த காட்சி .

என்ன அழகான குழந்தை …ரசித்தபடி இங்கே வா எனக் கையாட்டினாள் .தயங்கி தயங்கி அருகில் வந்தாள் அந்தக் குழந்தை .ஏழு , எட்டு வயதிருக்கலாம்  நல்ல கறுப்பு நிறம்தான் .ஆனாலும் .குண்டு கன்னங்களும் இரட்டை பின்னலுமாக மிக வசீகரமாக இருந்தாள் .

” உன் பெயர் என்ன பாப்பா ? என ன படிக்கிற ..? ” 

” வெண்ணிலா .அஞ்சாப்பு படிக்கிறேன் .” வெட்கம் வெட்கமாக வந்த்து அந்த குழந்தைக்கு .

” குட் கேர்ள் .உன் அம்மா , அப்பா யாரு? நீங்க எங்கே இருக்கிறீங்க ? ” 

”  .எங்க அப்பா பெரியவீட்ல பால் கறப்பாரு .அம்மா மாட்டுக்கு தீவனம் வப்பாங்க . அதோ அதுதான் எங்க வீடு ” அந்த குழந்தை சுட்டிக்காட்டிய வீடு அவர்கள் வீடிருந்த காம்பவுண்டுக்குள ளேயே ஓரமாக இருந்த்து .

கவிதாவிற்கு புரிந்த்து .இந்த குழந்தையின் குடும்பம் அவள் கணவன் வீட்டில் மாடுகளை பார்ப்பதற்காக நிய
மிக்கப்பட்டிருப்பவர்கள் .

” இங்கே வா வெண்ணிலா ” தன் முன் நீண்ட கரங்களை ஆசைநோடு பற றக் கொண்டு …

” நீங்கதான் எங்க அய்யாவுக்கு வந்த புது அக்காவா ..? ” எனக் கேட்டாள் குழந்தை .

அய்யாவோட அக்காவாம் …குழந்தையின் வெள்ளந்தி கேள்வியில் புன னகை மலர்ந்து வெடிக்க ” ஆமாம் உங்க அய்யாவோட அக்கா நான் …” என்றாள் .

” அட்டா உறவு முறையை மாத்துறியே வெண்ணிலா …” சொன னபடி பின்னால் வந்து நின்றான் அய்யனார் .

கவிதாவின் மலர்ந்த முகம் கூம்பியது .சட்டென எழுந்து நின்று கொண்டாள் .

” இவுங்க எனக்கு அக்கா இல்லை .என் வீட்டுக்கு அக்கா ” 

அவனது விளக்கத்தில் குழம்பிய குழந்தை ” அப்படின்னா ..? ” என றாள் .

” ம் …அப்படின்னா எனக்கு எல்லாமும் இவுங்கதான் அர்த்தம் ” 




வெண்ணலா புரிந்தாற் போல் தலையசைத்துக. கொள்ள கவிதா உதட்டை மடித்து கடித்துக் கொண்டாள் . அய்யனாரின் கூர் அம்பு பார்வையை தாளாமல் உடல் தளர அருகிருந்த தூணை பிடித்து சாய்ந்து கொண்டாள் .

அந்த தளர்வில் கனிந்த பார்வையுடன் அய்யனார் ” கவி …” என்ற மென் அழைப்புடன் அவளை மெல்ல யெருங்க ,நீட்டிய அவன் கைகளில் படாமலிருக்க கவிதா இன்னமும் தூணோடு ஒடுங்கினாள் .

அவளுக கு வெகு அருகில் பின் நெருங்கி நின றான் அவன் .

” ப்ச் குழந்தை இருக்கிறாள் ..” அவனை எரிச்சலாக மறுத்தபோது …

” கவி அங்கே பாரேன் …” அவளது தோளை உரசியபடி தன் கையை அவள் முன் நீட்டினான் .அங்கே பார்க்க சொல்ல எதற்கு என் தோளை உரச வேண்டும் …எரி்சல்பட டபடி அவன் காட்டிய திசையில் பார்த்த கவிதா வியப்பல் விழிகளை விரித்தாள் .

” அது  யாரு …? ” 

அங்கே அப்படியே வெண்ணலாவின் அச்சான தோற்றத்துடன்  இன்னொரு குழந்தை சிரட்டையில் ஈர மணல் அள்ளி தரையில்  அச்சு  வைத்து விளையாடிக் கொண்மிருந்த்து .

” அது பொன்னிலா .வெண்ணிலாவும் , பொன்னிலாவும் இரட்டைகள் ” 

” ஓ …” ஆச்நரியம் குவித்த உதடுகளில் கணவனின் பார்வை பதிவதை பார!த்தவள் ஙேஊகமாக முகத்தை மீண்டும் தூணுக்கே திருப்பிக் கொண்டாள்.

” வெண்ணிலா , பொன்னிலாவையும் கூப்பிடு .நான் உங்களுக்கு சாக்லேட் தர்றேன் …” 

” ஐ …சாக்லேட் .ஏய் பொன னு இங்க வாயேன் .அக்கா நமக்கு சாக்லேட் தர்றாங்களாம் ” கத்தியபடி ஓடினாள் .

” எனக்கு கிடையாதா …? ” தாபம் சுமந்திருந்த்து அய்யனாரின் குரல் .

” வழக்கமாக நீங்கதானே எனக்கு திணற திணற வகையா கொடுப்பீங்க .நான் எப்படி உங்களுக்கு தரறது ..? ” 

குத்தலான மனைவியின் பதிலில் மௌனமானவன் பெருமூச்சுடன் பின்வாசல் பக்கம் நடந்தான் .அங்கே அவனுக்காக காத்திருந்த கூட்டத்தினருடன் ஙேப்பமரத்தடியில் அமர!ந்தபடி பேசத் தொடங்கனான் .

கவிதா அந்த குழந்தைகளுடன் பேச ஆசை கொண்டு இறங்கி அவர்களுருகே போனாள் . அவர்க்கு சரியாக வாய் கொடுத்தபடி குழந்தைநோடு குழந்தையாக சிறிது நேரம் விளையாடியவள் எந்நேரமும் தன் முதுகை மொய்த்த பார்வையை உணர்ந்தாள் .அங்பே பேசக் கொண்டு இங்கே என்ன பார்வை …கடுத்தாள் .

கொஞ்ச நேரம் கழித்து , அய்யனார் தனது பஞ்சாயத்துகளை முடித்துக் கொண்டு எழுந்து விட்டான் என்பதை ஓரக்கண் பார்வையில் தெரிந்து கொண்டு வீட்டிற்குள் படியேறிக் கொண்மிருந்தவனின் முதுகை பார்த்து திரும்பியவள் திகைத்தாள் .

அய்யனார் வாசல் படி  ஏறும் முன் கொஞ்சம்  நிதானித்து நின்று சற று முன் கவிதா சாய்ந்து அமர!ந்திருந்த அந்த மரத்தூணை பார்த்தான் .தனது வலது கையை நீட டி மெல்ல அந்த தூணை வருடினான் . 

அங்கே …அந்த வருடலில் , இங்கே இவள் தேகம் கொதிக்க , படபடத்த நெஞ்சோடு மாடுகளுக்கு போட அடுக்கி வைத்ழிருந்த வைக்கோல் போர் படப்பின் பின்புறம் பதுங்கி தன்னை ஆசுவாசப்படுத்தானாள் .




What’s your Reaction?
+1
21
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!