Serial Stories

கடல் காற்று-43

  43

” எனக்கு கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் ஏதாவது மாலில் நிறுத்துங்கள் “யோகனின் முகம் பார்க்காமல் கூறினாள் .இருவரும்  ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர் .

” என்னடா வாங்கனும் ..? ” முன்தின மனைவியின் நெகிழ்வினை மனதில் கொண்டு அவளை உரச முயன்றபடி கேட்டான் யோகன் .

வேகமாக தள்ளி நின்றபடி ” அங்கே மகளிர் குழுவுக்கு களிமண்ணால் செய்யும் நகைக்கு டிரெயினிங் கொடுக்கலாமென்று நினைக்கிறேன் .அதற்காக அங்கே வந்து ஒரு வாரம் தங்கியிருந்து டிரெயினிங் கொடுக்க ஒரு பெண் ஒத்துக்கொண்டிருக்கிறார் .அதற்காக கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் ” என்றாள் .

” ஓ..்ரொம்ப நல்ல முயற்சி சமுத்ரா .எப்படியோ எல்லா பெண்களையும் ஒரே இடத்தில் கூட்டி அவர்களை உழைக்கவும் வைத்துவிட்டாய் .நான் ரொம்ப நாட்களாக முயற்சித்து நடக்காத்தை நீ ஐந்து மாதத்தில் சாதித்து விட்டாய் .பாராட்டுக்கள் ” மனமார பாராட்டினான் .

இதில் தன் பங்கு எதுவும் இருப்பதாய் சமுத்ராவிற்கு தோன்றவில்லை .சோம்பலாய் வீட்டினுள் படுத்திருந்த பெண்களை தொழில்கூடமென்று ஒன்றை உருவாக்கி மிரட்டியும் , விரட்டியும் அங்கே வந்து அமரச் செய்தவன் யோகன்தான் .அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை சொல்லிக் கொடுத்தது வேண்டுமானால் சமுத்ராவாக இருக்கலாம் .ஆனால் அதற்கு முதலில் அவர்கள் வர வேண டுமே …

” உங்களை நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்களா ..? ” எரிச்சலுடன் கேட்டபடி ரூம் வாசலுக்கு நடந்தாள் .

” என்னையா ..நான் உன்னைத்தாம்மா பாராட்டிக் கொண்டிருந்தேன் .நாமிருவரும் அதற்குள்ளாகவா ..இந்த அளவு ஒருமித்து விட்டோம் .” மனைவியின் ஒதுக்கம் புரிந்தும் அதனை பெரிதாக்க விரும்பாமல் கேலி போலவே பேசினான் யோகன் .

அந்த கேலியை காதிலேயே வாங்காமல் ரூம் கதவினை திறந்தவளை தடுத்து கதவை மூடியவன்  பின்னிருந்து இடையோடு அவளை அணைத்து மெல்ல அவள் வயிற்றை வருடினான் .” நாம் செக்கப்பிற்கு போகலாமா முத்ரா ..? ” சிறு கெஞ்சல் கலந்து ஒலித்தது அவன் குரல் .

பட்டென அவன் கைகளை தட்டியவள் ” எதை எப்போது செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும் ” என்றுவிட்டு வெளியே போய் நின்றுகொண்டு ” உங்களுக்கு சாதகமான முடிவு எதனையும் நான் இன்னமும் எடுத்து விடவில்லை ” என்றுவிட்டு வருமாறு அவனிடம் கையசைத்துவிட்டு லிப்ட்டை நோக்கி நடந்தாள் .




எங்கே இன்னும் சிறிது நேரம் உள்ளேயிருந்தால் யோகனிற்கு தலையாட்டிவிடுவோமோ ..? என்ற பயம் அவளுக்கு வந்திருந்த்து .அதனால்தான் அப்படி ஓடி வந்துவிட்டாள் .

மால் பரபரப்பாக இருந்த்து ்தனக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடையினுள் நுழைந்து தனது தேவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் .வண்ணச்சேர்க்கைக்காக வண்ணங்களை பார்வையிட்டவள் , ” இந்த பிங்க்கிலேயே இன்னும் கொஞ்சம் லைட்டான கலர் கிடைக்குமா ..? ” என்றபடி நிமிர்ந்தாள் .குப்பென உடல் முழுவதும் எரிவது போலிருந்த்து .

எதிரே நின்று கொண்டிருந்த விற்பனை பிரிவு பெண்ணின் கைகள்தான் சமுத்ராவிற்கு பொருட்களை காட்டிக் கொண்டிருந்தன .கண்கள் அவளுக்கு பின்னிருந்து அவள் எடுக்கும் சாமான்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யோகேஷ்வரன் மேல் இருந்த்து .

” இங்கேயே நின்று கொண்டு என்ன செய்கிறீர்கள் ..? போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்த்துவிட்டு வாருங்கள் .எனக்கு ஒரு மணி நேரம் ஆகும் ” எரிந்து விழுந்தாள் .

மனைவியின் திடீர் எரிச்சலின் காரணம் புரியாமல் அவளை விநோதமாக பார்த்தபடி ” நான் காபி ஷாப்பில் இருக்கிறேன் ” என்றபடி வெளியேறினான் .

” ஏன் மேடம் சாரை அனுப்பி விட்டீர்கள் ..? அவர் அழகாக கலர் செலக்ட் செய்து கொண்டிருந்தாரே …” என்ற அந்த பெண்ணின் பார்வை சென்று கொண்டிருந்த யோகனின் மேல் இருந்த்து .

” உன்னிடம் நான் எதுவும் வாங்குவதாக இல்லை ” முன்பே செலக்ட் செய்து வைத்திருந்த பொருட்களையும் அவள்புறமே தள்ளிவிட்டு வேகமாக வெளியேற இவளுக்கு கொஞ்சம் மனநிலை பாதிப்பு இருக்குமோ ..? என சந்தேகப்பட தொடங்கினாள் அந்த விற்பனைப் பெண் .

வேறொரு கடையினுள் நுழைந்து தனது பொருட்களை வாங்கிக் கொண்டாள் .வெளியே வந்த  போது எதிரேயிருந்த நகைக்கடை கண்ணில் பட உள்ளே நுழைந்தாள் .தனது கால்களில் மெட்டி விரலுக்கு அடுத்த விரலுக்கு துணை மெட்டி ஒன்று வாங்கிப் போட வேண டுமென்று நினைத்துக் கொண்டிருந்தாள் .வெள்ளிசாமான்கள் பகுதிக்கு வந்தாள் .

” ஹாய் நீ சமுத்ராதானே ..? ” என்று பின்னால் கேட்ட பெண்குரல் மனதை திக்கிட வைத்தது .இது ..இந்த குரல் …இல்லை அவளாக இருக்க கூடாது …வேண்டியபடி திரும்பியவளின் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றவில்லை .அது ..அவளேதான் ஸ்வேதா .அந்த கால்கேர்ள் .அன்று யோகனுடன் ஹோட்டலில் பார்த்தவள் .தெரியாத்து போல் நடித்து விடுவோமா..? என சமுத்ரா யோசித்துக் கொண்டிருக்கையில் …

அவள் விரைந்து வந்து சமுத்ராவின் ் கைகளை பிடித்துக் கொண்டாள் .” உன்னை என்னால் மறக்க முடியாது .அன்று உன்னால்தான் அந்த ஈஸ்வரிடமிருந்து என் உயிர் தப்பியது .” என்றாள் .




தனது நடிப்பு பாவனையை கைவிட்டு விட்டு ” என்ன சொல்றீங்க ஸ்வேதா ..? ” என்றாள் .

” ஆமாம் அன்னைக்கு என்னை கொல்கிற அளவு ஆத்திரத்தில் இருந்தான் அந்த ஈஸ்வர் .உன்னைப் பார்த்ததும்தான் கோபம் குறைந்து என் போனை பிடுங்கியதோடு விட்டான் “

” என்ன ..? அது உங்க போனா ..?

” ஆமாம் வீடியோ எடுக்க செட் பண்ணி வச்சது  நான்தானே .அப்போது அது என் போனாகத்தானே இருக்கனும் …? ” ஏதோ பெரிய ஜோக் போல் சொன்னவள் ” சமுத்ரா எனக்கு சிம்ப்பிளாக ஒரு கொலுசு வாங்கிக்கட்டுமா ..? ம் ..ப்ளீஸபா ” என்றதோடு தனக்காக கொலுசு செலக்ட் பண்ண துவங்கினாள் .

சமுத்ராவிற்கு தலை சுற்றுவது போலிருந்த்து ” இங்கே பாருங்க சொல்லுவதை தெளிவாக சொல்லுங்க .உங்களை நீங்களே வீடியோ எடுத்தீங்களா ..? அன்று வேறு மாதிரி சென்னீங்களே ? ” நம்ப முடியாமல் கேட்டாள் .

” ஆமாம் அன்று நீ பத்திரிக்கையில் எழுதுகிறேன் அது இதுன்னு சொல்லிக்கொண்டு இருந்தாய் .அதுதான் அப்படி சொன்னேன் ” தோள்களை குலுக்கியபடி எளிதாக சொன்னாள் .அன்று இந்த ஸ்வேதாவின் பேட்டியை எடுத்துக் கொண்டு ரங்கநாயகியிடம் போன போது ” இவளெல்லாம் ஒரு மனுசின்னு இவள் சொல்வதையெல்லாம் தூக்கிட்டு வராதே சமுத்ரா ” என்றுவிட்டாள் .

” எ..எதற்காக அ..அதையெல்லாம் வீடியோ எடுத்தீரகள் ..? ” குரல் நடுங்க கேட்டாள் .

” நான் ஈஸ்வரை அடிக்கடி பார்த்து ரசித்துக் கொள்வதற்காக ..அப்படி செய்தேன் ..” கண்ணடித்தாள்.பின் குரலை குறைத்து கிசுகிசுப்பாக்கி  .” அவனைப் போல் ஒரு ஆம்பளையை நான் பார்த்ததில்லை தெரியுமா ..? அடிக்கடி வரமாட்டான் .எப்போதாவதுதான் வருவான் ்அதுவும் என்னிடந்தான் வருவானென்ற நிச்சயமும் கிடையாது . அதுதான் இப்படி வீடியோ எடுத்து வைத்து நானாக பார்த்துக்கலாம்னு நினைத்தேன் .அதை கண டுபிடித்து விட்டான் .சீச்சி என்ன பொண்ணு நீ ன்னு என்னை கழுத்தையே நெரிக்க வந்துட்டான் .நீயே சொல்லு சமுத்ரா பொண்ணா இருந்தால் அவளுக்குன்னு ஆசை இருக்காதா என்ன ..? ..ஏய் இந்த கொலுசு எடுத்திருக்கிறேன் .நான்காயிரம்தான் வருகிறது .பணம் கொடுத்து விடு ்பிறகு தந்து விடுகிறேன் என்ன ..? என்றபடி வெளியேறினாள் .

அதற்கு முன் ” மெட்டி செலக்ட் பண்ணுகிறாயே ..உனக்கு திருமணமாகிவிட்டதா ..? ” என்ற கேள்வியோடு ” ஏனோ ஈஸ்வர் இப்போதெல்லாம் வருவதேயில்லை தெரியுமா ? என ற ஏக்க பெருமூச்சை வேறு வீசிவிட்டு போனாள் .

சிறிது நேரம் அப்படியே வேரூன்றியது போல் நின்றவள் ” மேடம் பில் போடலாமா ..? ” எனற கடை சிப்பந்தியின் குரலில் நினைவிற்கு வந்தாள் .ஐயோ யோகன் காபி ஷாப்பில் இருக்கிறானே .இவள் அங்கே போய்விடக்கூடாதே என்ற பரபரப்பு வந்துவிட , அவளது பில்லிற்கும் சேர்த்து பணம் செலுத்திவிட்டு வேகமாக காபி ஷாப் போய் பார்த்தால் , அங்கே யோகனை காணோம் .

அவசரமாக அவனது எண்ணை போனில் அழுத்தியபடி திரும்பியவள் ” யாருக்கு சமுத்ரா போன் ..? என்னையா தேடுகிறாய் ..? ” என்ற கேள்வியோடு வந்த யோகனை பார்த்ததும் நிம்மதியானாள் .

” ஆமாம் வாங்க சீக்கிரம் போகலாம் ..” வேகமாக காருக்கு நடந்த சமுத்ராவை புரியாமல் பின் தொடர்ந்தான் யோகன் .கார் மாலை விட டு வெளியேறி போக்குவரத்தில் நுழைந்த்தும்தான் நிம்மதி மூச்சுவிட்டாள் .

” என்னாச்சு சமுத்ரா ..? ஏதோ பயந்த்து போல் தெரிகிறாய் ்.? ” யோகன் கவலையாய் கேட்டான் .

” அன்று அங்கே …அ..அந்த ஹோட்டலில் நாம் பார்த்தோமே ..அந்த ..அவளுடன் ..அங்கே என்ன நடந்த்து ..? ” நெஞ்சம் படபடக்க விசாரித்தாள் .

” அது எதற்கு இப்போ ..? ” சாலையை பார்த்தபடி கேட்டான் .

” எ..எனக்கு தெரியவேண டும் சொல்லுங்க “

” முட்டாள்தனமாக கண்டதையும் வீடியோ எடுத்து வைத்திருந்தாள் .அதனால் போனை பிடுங்க முயற்சித்தேன் .”

” வீடியோ நீங்கள் எடுத்ததாக அவள் என னிடம கூறினாள் …”

” பின்னே அவளைக் கேட்டால் அப்படித்தான் சொல்லுவாள் .எதனையும் நம்புபவர்கள் இருந்தால் அவள் எதையும் சொல்லிக் கொண்டுதான் செல்வாள் .”

சமுத்ரா மௌனமாக இருந்தாள் .” என்னை நானே வீடியோ எடுத்து க்கொண்டு அதை இன்டர்நெட டில் வேறு போடுவேனா ..? இந்த அடிப்படை அறிவு கூடவா இல்லாமல் போகும் ..? ” மறைமுகமாக அவளைக் குத்தினான் .




இது ஏன் தனக்கு உறைக்கவில்லை ..தன்னையே நொந்து கொண்டாள் சமுத்ரா .” ஆனால் இந்த வீடியோவை வைத்து அவள் என்ன செய்வாளென்றுதான் எனக்கு புரியவில்லை .நெட்டில் போட மாட்டேன் கொடு கொடு என றுதான் போனை பிடுங்கினாள் ..” யோகன் இப்படி யோசிக்க தொடங்க ..

” என்ன கண்றாவியும் செய்துவிட டு போகிறாள் ..நமக்கு என ன ..? என று அந்த பேச்சிற்கு அவசரமாக முற்றுப்புள ளி வைத்தாள் சமுத்ரா .

சிறிதுநேரம் சாலையை பார்த்தபடி கார் ஓட டிக்கொண்டிருந்தவன் ” யாரையும் சுலபமாக கணித்து விடுவேனென்று என னை ராஜபாண்டி சார் அடிக்கடி சொல்வார் சமுத்ரா.நான் கூட என்னை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் உன் விசயத்தில் எனக்கு முழு தோல்விதான் ” என்றான் .

கேள்வியாய் அவனை நோக்கினாள் .” உனக்கு என் மேல் காதல் இல்லாவிட்டாலும் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று நினைத்தேன் .திருமணம் முடிந்துவிட்டால் அது காதலாக மாறிவிடும் என்று எண்ணினேன் .அதனால்தான் கட்டாயப்படுத்தி உன்னை திருமணம் செய்தேன் .ஆனால் என் யூகம் தவறாக போய்விட்டது .இப்போதும் குழந்தையை கலைக்கும் அளவு நீ உறுதியாக இருக்கிறாய் .இப்போது என்ன செய்வது …? ” பெருமூச்சு விட்டான் .

அநிச்சையாக கைகள்  வயிற்றை சுற்றி படர்ந்து கொள்ள சீட்டில் நன்றாக சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் சமுத்ரா .யோகன் சொன்னது போல் அந்த ஈர்ப்பு காதலாக மாறிவிட்டதோ ..? என்ற
சந்தேகம் சமுத்ராவினுள் அலையடிக்க ஆரம்பித்தது

திரும்பி அவளைப் பார்த்த யோகன் காரின் ஏசியை அணைத்துவிட்டு சன்னல்களை திறந்தான் . சிகரெட்டை பற்ற வைத்தான் .வேகமாக எழுந்த சமுத்ரா அவன் வாயிலிருந்த சிகரெட்டை பிடுங்கி வெளியே எறிந்தாள் .

” எப்போது  பார்த்தாலும் என்ன சிகரெட் ..? இதனால் உடம்புக்கு எவ்வளவு கெடுதி ..” எரிந்து விழுந்தாள் .

” இல்லைடா ..நான் நிறைய பிடிக்க மாட்டேன் .சும்மா மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் நேரங்களில் மட்டும்தான் “

” இந்த ஆம்பளைக்களுக்கு இது ஒரு சாக்கு .மனதிற்கு கஷ்டமாயிருந்தால் என்னமும் பண்ணலாம் போல …” முணுமுணுத்தபடி வெளியே திரும்பிக் கொண்டாள் .

” இனி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்கிறேன் முத்ரா ..” யோகன் மெல்ல சொன்னான் .

சமுத்ரா தீவிரமாக வெளியே வேடிக்கை பார்த்தாள் .




What’s your Reaction?
+1
17
+1
13
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!