நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-32 (நிறைவு)

32

             வீணா சொன்னது போல முரளி தொப்புள் கொடி உறவு தான்…

“ஆனால் இந்த விஷயத்தை நான் எப்படி மறந்து போனேன்..?”

“எப்பேர்ப்பட்ட செய்தி கோவில் வாசலில் எனக்கு

சொல்லப்பட்டதே…”

வீணா “சரியாகத்தான் கோவிலுக்கு கூட்டி வந்திருக்கிறாள்…”

வீட்டுக்கு வந்தவுடன் மோகனுக்கு பரபரப்பு தொற்றி கொள்கிறது.

” அம்மா…பாட்டி….எனக்கும் முரளிக்கும் அரைஞாண் கயித்தில் கட்டி இருந்த தாயத்து எங்கே….??”

“வீடு மாத்தும் போது நான் எடுத்து வந்துட்டேன்..” என்ற தனம்,

”  அப்போ வசதி இல்லேன்னாலும் ரெண்டு பேருக்கும் தங்கத்தில் தொப்புள் கொடியை வெச்சு தாயத்து பண்ணேன்.

பின் தெரு ஆறுமுக பத்தர் தான் செஞ்சு கொடுத்தார்.”

“அப்போ தங்கம் சவரன் 1500 ரூபா தான்…

இப்போ எங்கேயோ போயிட்டுது..”

“ஏன் அவசரமா முரளியின் வைத்தியத்துக்கு பணம் தேவைப் படுதா..???”

தனம் பேசிக் கொண்டே போக…

” நான் உதவுகிறேன் மோகன்..பணத்துக்கு கவலை படாதீங்க…” என்றார் ரகோத்தமன்.

” இல்லை பாட்டி ஒரு ஆராய்ச்சிக்கு தேவை படுது…”

‘மோகன் ஒரு மாதமாக ஆராய்ச்சியை மறந்து,  முரளியையே கவனித்துக் கொண்டிருக்கிறான்…’ என்று துன்பத்தின் இடையே இன்பம் போல இருந்தது ருக்குவிற்கு.

“இப்போது திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டதோ….”

“இவன் ஆராய்ச்சி பக்கம் போய் விட்டால் இவனுக்கு குடும்பம் ரெண்டாம் பட்சமாக ஆகி விடுமே….”

“ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்த பொண்டாட்டியை இன்னும் கவனிக்கலையே…”

ருக்கு கவலைப் பட ஆரம்பித்தாள்…

அடுத்த நாள் வந்தவுடன்

தாயத்துகளுடன் ஆராய்ச்சி கூடத்துக்கு வந்து ஆராய்ச்சி தொடங்கினான்.

டாக்டர். வில்லியம் டெய்லர் வழி காட்ட,

மருத்துவர்கள் செயல்பட,

முரளிக்கு

” ஸ்டெம் செல் ” செலுத்தப்பட வைக்க மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றான் முரளி.

‘அண்ணா தன்னை முன் போல ஆக்கிவிடுவான்’ என நம்பிக்கை அதிகரித்தது முரளிக்கு.




ஒரு வாரம் கழித்து,

மருத்துவர்கள் பரிந்துரைப்படி வாய்க்கு பலூன் ஊத பயிற்சி, விரல்களுக்கு கணினியில் தட்டச்சு பயிற்சி ஆரம்பிக்க,

விரல்களை மெதுவாக அசைக்க ஆரம்பித்தான் முரளி.

ஓரிரு மாதத்தில்,

“ம்மா…ப்பா…த்தை ” எல்லாம் வர,

” ண்ணா..” என சொல்ல முயற்சித்தான்…நாக்கு இன்னும் சுழலவில்லை..

“ந்னா” என சொல்ல ஆரம்பித்தான்.

” தினம் ஒரு மணி நேரம் உற்சாக மூட்டுவது போல, வீணாதான் ஆர்வமாக அவனுடம் நேரம் கழிக்க ஆரம்பித்தாள்.

மோகன் இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்து அவ்வப்போது மருத்துவர் உதவியுடன் முரளிக்கு உதவ, தன் குழந்தையை வளர்ப்பது போல வீணா

முரளிக்கு எல்லாமும் செய்ய ஆரம்பித்தாள்.

ருக்கு, “நல்லபடி இருந்திருந்தால், இவள் வயிற்றில் ஒரு குழந்தை வளர வேண்டிய காலம்….”

“வீணா இப்படி முரளியை குழந்தை போல பாத்துக்கறாளே” என தனத்திடம் குறை பட்டுக் கொண்டாள்.

ஒரு நாள் மதியம்,

வீணா…முரளியிடம் குழலை எடுத்துக் கொடுத்து

” முரளி…. இதை வாசிக்க ட்ரை பண்ணு…”

‘முடியுமா ‘ என கண்களால் சந்தேகப்பட,

“அந்த கிருஷ்ணனை நினைத்து வாயில் வை..”

“புல்லாங்குழலை முரளிக்கு வாசிக்க முடியாமல் போனால் வேறு யாருக்கு வாசிக்க முடியும்…??”

வீணா வீணையில் ‘ச…ப…ச….’என ஆரம்பிக்க, சில மணித் துளிகளில் அதே ‘ச..ப..ச…’முரளிக்கும் சாத்தியம் ஆகியது.

முரளி இப்போது ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தான்…

“மோ…மோ…மோ…. என…

” மோகா வரச்சே இன்னிக்கு அசத்தறோம்..

நீ ரெடியா இரு..” என்றாள் வீணா…

மோகன் அன்றிறவு வீடு வரும் போது ,

முரளி கையில் புல்லாங்குழல், வீணா பக்கத்தில் வீணை வைத்துக் கொண்டு,

“ச….ப…ச… “என ஒலிக்க,

” என்ன வீணா????முரளியா வாசிக்கறான்.” “கையில் புல்லாங்குழலை பிடிக்க முடிகிறதா…”

“ஆமாம் மோகா…” அவனுக்கு விரல் பயிற்சி, அதே சமயத்தில் வாய்க்கும் பயிற்சி…”

“அவனுக்கும் இது பிடித்திருக்கிறது…பலூன், கணினி, இரண்டுக்கு பதில்

“ஒரே கல்லிலே ரெண்டு மாங்கா…” என பாட ,

” முரளி வீணாவை கூப்பிட்டு , அவள் கைகளில் ஹைஃபை செய்கை செய்ய , வீட்டில் எல்லோரும் சிரிக்க,

மெதுவாக சந்தோஷம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.




“கடனே என ஒரு மணி நேரம் தட்டச்சு செய்து, பலூன் ஊதியவன்….. இப்போது விட்டு விட்டு ஒரு ஐந்து ஆறு மணி நேரம் குழலில் கானம் இசைக்க ஆரம்பித்தான். அதிக அளவில் ஆக்சிஜனும் உள்ளே போக ஆரம்பித்து இரு கைகளிலும் மெதுவாக வாக்கர் வைத்து நடக்க ஆரம்பித்தான்.

” சின்ன வயசுல நட வண்டி வெச்சு நடக்கையிலே…வேகமா வந்து ஊஞ்சலில் மோதப் பார்க்கும்….. இந்த முள்றீ…” என தனம் பழைய நினைப்புக்கு போனாள்.

கையில் ஸ்லேட் ,சாக் பீஸ் வைத்து மெதுவாக எழுத ஆரம்பித்தான்…

முதலில் எழுதியது..

“அண்ணா….அப்புறம் வீணா மன்னி….” அப்புறம் தான் அம்மா , அப்பா..எல்லாம்.

சில மாதத்தில் வெறும் பிடிப்புக்காக ஒரு கைத்தடி, பேனாவில் எழுத்து…

வாய்களில் வார்த்தைகள்…. தெளிவில்லாமல் வர ஆரம்பித்தது..

ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது..

மோகன் மூலம் ஆரம்பித்து, வீணாவின் கடும் முயற்சியால்

முரளி நன்கு தேறி விட்டான்.

இப்போது ,

“ரகுவம்ச சுதா ” ‘குயில் பாட்டு’ எல்லாம் நுணுக்கமாக வாசிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டான்..

“அண்ணா….நல்ல வேளை…எனக்கு கடவுள் இந்த புல்லாங்குழலை வாசிக்க வைத்திருக்கிறார்.

” சின்ன வயசிலேயே எனக்கு குரலில் சுருதி சேரலை நு பாட வரலை..அதனால் கவலை இல்லை…”

நடக்க, பேச , எழுத ஆரம்பித்து விட்டான்..

மோகனிடம் ,

தனம் பாட்டி…அன்றிரவு,

“ஏண்டா…மோகா…முரளி தான் பொழைச்சு நன்னா ஆயிட்டானே ..உனக்கும் வீணாவுக்கும் ஒரு நல்ல நாள் பார்க்கலாமா…??.”

“எதுக்கு பாட்டி…”

“திரும்ப கோவிலுக்கு போகணுமா…”

” நீ பொறப்புலேயே இப்படியா..இல்லை நடுவிலே தானா….” என மோகனை சீண்டியது வீணாவுக்கு நினைவுக்கு வந்தது.

மோகன்,

வீணாவிடம்…

“பாட்டி என்ன சொல்றா….???”

“உனக்கு ஏதாவது தெரியுமா வீணா…”

முரளி புல்லாங்குழலில்,

“இது தான் முதல் ராத்திரி , அன்புக்காதலி என்னை ஆதரி!!!! “என வாசிக்க…”

“நல்லா இருக்கேடா…இந்த ராகம்..”

“இது தான் மோகன ராகமா….”

“அண்ணா…இது தேஷ் ராகத்தின் அடிப்படையில் இருக்கும்..” என முரளி சொல்ல,

“முரளி….உங்க அண்ணாக்கு அந்த வரியை பாடிக் காட்டினாலே புரியாது..”

“நீ வாசிச்சு காட்டினாலாம் புரியாது….”

“அந்த அளவுக்கு மரமண்டைங்கிறயா…”

என மோகன் கண்ணால் செய்கை செய்தான்.

“சீ…நீங்க மோசம் ப்பா..”

“ஒண்ணும் தெரியாதது போலே கேக்கறீங்களே…”

மோகன் கண்களில் தெரிந்த அந்த விஷமப் புன்னகை

‘அவளுக்கு மட்டுமே புரிந்தது….’

‘அவனுக்கு எல்லாம் தெரிந்து, நம் வாயால் சொல்ல வைக்க

ஆசைப் படுகிறான்…’

“நான் இந்த முறை அசடு போல பேச மாட்டேன் மோகா….”

“நானே என் வாயால் சொல்லணுமா…..”

“இப்போ நான் ‘மோகா’ பொண்டாட்டியாக்கும்.”

என மோகனைப் பார்த்துக் கொண்டே சொல்ல,

மோகன்..

” நான் சரண்டர்..”

“நீ எல்லாத்துலயும் என்னை ஜெயிச்சுட்டே…”

” ஓகே. பாட்டி ….நீ நாள் பாரு..”

கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது இதற்குள்.

இரு குடும்பமும் சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருக்க அந்த நாள்…

ஒரு வாரத்தில் வந்தது.




அன்று மதியமே ,  மோகனுக்கு இந்திய அளவில் சிறந்த இளம் விஞ்ஞானிக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தகவலும் வந்து சேர,

“வீணா வின் ராசி தான்..

எல்லாம் நல்லபடி நடக்கிறது…என ருக்கு விஜியிடம் சொல்லிக் கொண்டாள்.”

அப்போது அங்கே வந்த முரளி,

“வீணா மன்னீ…நான் வேணா..வண்டிலே போய் பூ, பழம், எல்லாம் வாங்கி வரவா….” என கண்ணடிக்க…

” படவா….நீ..இன்னிக்கு முழுக்க வண்டியே எடுக்கக் கூடாது..”

மோகன் , வீணா இருவரும் ஒரே குரலில் சொல்ல,

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கிறனர்.

மாலை ,

வீணா…குளித்து உடை மாற்றிக் கொண்டே…

” திருடன் போல் பதுங்கியே திடீரென்று பின்னாலிருந்து என்னை நீ அணப்பாயே …அது கவிதை…”

என பாடிக்கொண்டு

இருக்க,

நிஜமாகவே…

‘அவளின் திருட்டு மோகா’,

அவளை பின்னாலிருந்து அணைக்க,

அவன் விரல்கள், அவளின் ஆடை இல்லா வெறும் வயிற்றில் சிலீரென பட்டு,

கணவனின் முதல் அணைப்பில் குளிர், வெப்பம், கதகதப்பு என அனைத்தும் ஒரு சேர உணர்ந்தாள்.

“நான் பகல் இரவு…

நீ கதிர் நிலவு..

என் வெயில் மழையில் உன் குடை அழகு…”

என அவள் காதில் முணுமுணுக்க..

“அட என் மோகாவுக்கு பாட கூட வருமா…”

“நான் என்ன மேடையிலா பாடப் போகிறேன்…”

“உன் மடியில் தான் பாடப் போகிறேன்…”

“வீணா வீடே சந்தோஷமாக மாறியது உன்னால் தான்…”

“நீ அந்த தொப்புள் கொடி பற்றி சொன்னது தானே…அனைத்துக்கும் காரணம்…”

” இப்போது இவ்வளவு தூரம் என் ஆராய்ச்சிக்கும், முரளி குணமானதற்கும், எனக்கு விருதுக்கு பரிந்துரை வந்ததும்…”

என அவளை அணத்துக்கொண்டே கிசு கிசுக்க..

“இன்னிக்கும் ஆராய்ச்சி பற்றிய பேச்சா…” என்றாள்,

அவனிடமிருந்து விடுபடாமல் ,அவனது கையை தன் கையால் இன்னும் இறுகப் பற்றிக் கொண்டே.

“தொப்புள் கொடி ஆராய்ச்சி முடிஞ்சாச்சு…”

“இனி தொப்புள் ஆராய்ச்சி தான்…”

மனைவியின் தொப்புளில் விரலால் கோலம் போட ஆரம்பித்தான் மோகன் என்னும் கணவன்.




“கூசுதுப்பா..”

“சீ ..நீங்க ரொம்ப மோசமானவர்ப்பா…”

அவன் இன்னும் இறுக அணைக்க….

“அண்ணா….”

வெளியே முரளியின் குரல் கேட்க,

மோகனிடமிருந்து வீணா சட்டென விலக, மோகன் வெளியே வர,

வீணாவும் முந்தானையை சரி செய்து வெளியே வர…

“என்னடா… ஏதும் பிரச்சனையா…” என்றான்.

மோகன் சிறிது பத்ற்றத்துடன்.

” வேற ஒண்ணும் இல்லை…ஒரே ஒரு கேள்வி கேக்கணும்ணா…”

வீணாவும் மோகனும்

முரளியை பார்க்க,

லவ் பண்றதுனா என்னண்னா????” என்றான்.

“என்னது.????”

“மறுபடியும் முதலிலே இருந்தா….”

என்ற மோகன் முரளியின் முதுகில நாலு செல்ல சாத்து சாத்தி அவனை கட்டி கன்னத்தில் முத்தமிட்டான்.

முரளியின் இந்தக் கேள்விக்கு விடை தெரிய…..

# நீ காற்று நான் மரம் #

அத்தியாயம்  1 முதல் 32 வரை படிக்கவும்.

நன்றி.




What’s your Reaction?
+1
10
+1
13
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!