Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 27

27

தலைமயிர்கால்களும் குளிரும்
நாளொன்றில்
சூரியக்கதிர்களை கடிதத்தில்
எழுதி அனுப்பியிருந்தாய்
படிக்க படிக்க கொதிக்க
தொடங்கியது உடல்
ஒவ்வொரு ரத்த நாளமும்
ஒரு சூரியனை உணரத் தொடங்கிய
கணத்தில்
மெல்ல கருகத் தொடங்கியது
காகிதம்
உள்ளிருந்து குதித்த உன் சொற்கள்
என் முந்தானைக்குள் ஒளிந்தன
முந்தியை இழுத்து சொருகிய
போது
எரியும் காகிதம் உன்
பேரிரைச்சலை உணர்த்தியது .




மனம் முழுவதும் நிரம்பி வழிந்த உற்சாகத்துடன் அன்று ஆபிஸிற்கு கிளம்பினாள் சாம்பவி .முதல் நாள் இரவு  அவளை விட்ட இடத்திலேயே காலையில் காருடன் காத்திருந்தான் ரிஷிதரன் .அவனது காரை கண்டவுடன் விழிகள் மகிழ்ச்சியில் விரிய , தனது ஸ்கூட்டியுடன் அவனை நெருங்கினாள் .தன்னருகில் அவள் வரும் வரை அவள் ஸ்கூட்டியில் வரும் அழகை ரசித்தபடி காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் ரிஷிதரன் .

அவள் அருகில் வந்த்தும் அவளுக்கு ஸ்டைலாக ஒரு சல்யூட் வைத்தவன் ” குட்மார்னிங் மேடம் .ஸ்கூட்டி ஓட்டிட்டு வரும் போது ரொம்ப அழகாவே இருக்கீங்க .ஆனாலும் இதை அப்படியே கொண்டு போய்  வீட்டில் நிறுத்தி விட்டு , என்னுடன் காரில் வந்தீர்களானால் எனக்கு வசதியாக இருக்கும் ….” என்றான் .

” எதற்கு வசதியாக இருக்குமோ …? ” என கேட்டபடி பார்த்தவள் , அவன் விழி சொன்ன சேதியில் நாக்கை கடித்துக் கொண்டாள் .தெரியாமல் இப்படியா எதையாவது கேட்டு வைப்பேன் .போச்சு இதை வைத்தே இன்று முழுவதும் என்னை ஓட்ட போகிறான் …முகத்தில்  சிணுக்கத்தோடு நிமிர்ந்தவளின் அருகே குனிந்தவன் ….

” வாடி சொல்றேன் …” என்றான் சன்னமான குரலில் .

” என்னது ” டி” யா …? ” செல்லமாக முறைத்தாள் .

” ஆமான்டி …” என்ற அவனது அடுத்த வார்த்தையில் புன்னகைக்க ஆரம்பித்தாள் .

” அமெரிக்காவில் படித்தவர் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாதீர்கள் …நம்பமாட்டார்கள் “என்றுவிட்டு தனது ஸ்கூட்டியை மீண்டும் வீட்டிலேயே போய் நிறுத்தி விட்டு திரும்ப வந்து காரில் ஏறினாள் .

” பாப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாமில்லையா …? ” எதிர்பார்ப்போடு கேட்டான் .

” அவளை ஆபிஸிற்கு கூட்டி வந்துவிட்டு நான் எப்படி அங்கே வேலை பார்க்க முடியும் …? “

” எல்லாம் முடியும் .நாம் நாலு பேர் இருக்கிறோமே .பார்த்துக் கொள்ள மாட்டோமா …போய் கூட்டி வருகிறாயா ..? ” காரை கிளப்பாமல் நின்றபடி  கேட்டான் .

” ம் …சஹானா …” என இழுத்தவள் …

” வேண்டாங்க .இன்னும் கொஞ்சநாள் போகட்டும் …” என்றாள் .

” சரிதான் …” என காரை கிளப்பியவன் ” பாப்பாவை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது .என்னை திரும்ப தேடினாளா …? ” ஆவலோடு கேட்டான் .

” அதை ஏன் கேட்கிறீங்க ..? காலையில் எழுந்த்திலிருந்து ஒரே அப்பா புராணம்தான் .அம்மா கூட இவள இனிமேல் உன்னை விட்டுட்டு கூட இருந்திடுவாள் போல…அவள் அப்பாவை விட்டுட்டு இருக்க மாட்டாள் போலயேன்னு அலுத்துக்கொண்டார்கள் ….”

” ஓ…உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டதா …? “

” நேற்று முழுவதும் நாங்கள் இருவரும் உங்களுடன் ஊர் சுற்றியிருக்கிறோம் .பிறகு தெரியாமல் இருக்குமா …?நேற்று  உங்களுடன வெளியே கிளம்பிய போதே அம்மாவிற்கு போனில் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினேன் …”

” ம் …என்ன சொன்னார்கள் எல்லோரும் …? “

” சந்தோசப்பட்டார்கள் ….அதிலும் அண்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ….” என்றவள் குரலை குழைத்து




” என்னங்க …” என்றாள் கொஞ்சலாக .

” என்ன ..குரல் குழையுது .எதற்கோ அடி போடுவது போல் தெரிகிறதே …” கிண்டலாக கேட்டான் .

” ஒன்றும்! பெரிய விசயமெல்லாம் இல்லை .அண்ணனிடம் என்ன பேசினீர்கள் ..?? “

” ஏன் ..உன் அண்ணன் சொல்லவில்லை …? “

” நான் கேட்கவில்லை .உங்களை மிகவும் உயர்வாக பேசிக்கொண்டிருந்தாரா …அதைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன் ்இது மறந்துவிட்டது …”

மௌனமாக காரை ஓட்டினான் ரிஷிதரன் .

” சொல்லமாட்டீங்களா ..?? போங்க உங்க கூட டூ .பேசமாட்டேன் …” சன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள் .
அவளது சிறுபிள்ளை கோபத்தில் புன்னகைத்தவன் ” ஏன்டி இந்த குழைவான பேச்செல்லாம் நம்ம கல்யாணம் முடிந்த புதிதில் எங்கே ஒளித்து வைத்திருந்தாய் ..? இது போல் ஒரு வார்த்தை பேசியிருப்பாயா ..? ஒரு பார்வையாவது பார்த்திருப்பாயா …? “

” அப்போது நீங்கள் என்னை எங்கே பேசவிட்டீர்கள் …? எப்போது பார்த்தாலும் ….” என ஆரம்பித்தவள் , அவனது மோக பார்வையில் வயமிழந்து பேச்சின்றி விழித்தாள் .

” ம் ..கம்மான் பேபி …ஸ்பீக் இட் அவுட் …” என்றான் .அவனது இந்த பேச்சு சாம்பவியினுள் வேறொரு கேள்வியை விதைக்க ,

” எதைப் பேச …? கேட்கிற கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்றது கிடையாது …” முணுமுணுத்தாள் .

” என்ன கேள்வி …? என்ன பதில் …? கம்மான் டெல் மீ ….” ரிஷிதரன் இப்போது காரை நிறுத்திவிட்டு அவளருகே வந்திருந்தான் .

” இப்போ சொல்லு …ஏன் அப்போதெல்லாம் என்னை பார்த்தாலே பயந்து கொண்டிருந்தாய் …? “

” அ…அப்போ …உ…உங்களுக்கு என்னை பிடிக்காதோன்னு நினைத்தேன் ….”

” ஜோக் ஆப் தி இயர் .ஏய் அப்போது என்னைப் பார்த்தால் உன்னை பிடிக்காத்து மாதிரியா இருந்த்து …?

ரிஷிதரன் சொல்லாமல் சொன்ன அன்றைய அண்மைகள் நினைவிற்கு வர, முகம் சிவந்தபடி இதழ்களை கடித்தாள் .

பற்களுக்கிடையே சிக்கியிருந்த அவளது இதழ்களை விடுவத்தவன மெல்ல அவற்றை வருடியபடி ” சொல்லுடி ஏன் அப்படி நினைத்தாய் …? என்றான் .

” அப்போதெல்லாம் நிறைய இங்கிலீஸ் பேசுவீர்களே .இப்போது …அப்படி தெரியவில்லையே …ஏன் ….?

” ம் …அதுதான்  உனக்கு பிடிக்கவில்லையே .அதனால் மாற்றிக்கொண்டேன் ….” இலகுவாக சொன்னான்.

மனம் நெகிழ நிமிர்ந்து பார்த்தவளை ” நீ உன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கொண்டு  என்னை கொஞ்சம் தள்ளியே நிறுத்தினாய் .அதன் காரணம் இதுவாக இருக்கலாம் என ஊகித்து என்னை நானே சிறிது  மாற்றிக் கொண்டேன் …என்ன என் ஊகம் சரிதானா …? .” என்றான் .

” ம் …சரிதான் .உங்கள் நுனி நாக்கு ஆங்கிலமும் , ஹை சொசைட்டி நடவடிக்கைகளும் என்னை கொஞ்சம் அந்நியமாக உணர வைத்தது . இது போன்ற உயர்ந்த இடத்தில் இருப்பவருக்கு என்னை பிடிக்குமா …?என்ற பயம் எந்நேரமும் மனதை அரித்துக் கொண்டிருந்த்து .நீங்கள் சஹானாவின் வற்புறுத்தலுக்காகத்தான் என்னை திருமணம் செய்ய சம்மதித்தீர்களோ …என்று நினைத்தேன் .”

” ஹா …யாருக்காகவும் …நான் என் விருப்பங்களை விட்டு கொடுக்க மாட்டேன் .உன்னை முதன் முதலில் என் தோழி என்று சஹானா எனக்கு அறிமுகம் செய்து வைத்தாளே ….அன்றிலிருந்து உன் மீது எனக்கு ஏதோ ஈர்ப்பு ….”

” என்ன …அப்போதிருந்தா …? அன்று …வேகமாக படிகளில் ஏறிக்கொண்டிருந்தவரை நிறுத்தி என்னை அறிமுகம் செய்தாளே… .நீங்கள் மடமடவென்று கீழிறங்கி வந்து கை குலுக்க கை நீட்டினீர்களே….”

” நீ திரு திருவென விழித்துக் கொண்டு , கைகளை பார்த்து பயந்து போய் கை குவித்து வணக்கம் சொன்னாயே …அன்றிலிருந்துதான் ….” அவளோடு சேர்ந்து அதே நிகழ்வை தானும் பேசினான் .

சாம்பவி முகத்தில் செல்ல சிணுக்கத்துடன் அவன் மார்பில் குத்தினாள்.




” எனக்கு அப்போது அந்த ஈர்ப்பின் அர்த்தம் தெரியவில்லை பவி .ஆனால் சஹானா உன்னை திருமணம் செய்து கொள்கிறாயா …? என என்னை கேட்டபோது …என் மனம் அவசரமாக செய்து கொள்ளலாமே என கூறியபோது , நானே ஆச்சரியப்பட்டு போனேன் ….உடனே சம்மதித்தேன் .சஹானா உட்பட எல்லோருக்கும் ஆச்சரியம் . ஆனால் அவள் மனதில் உன் அண்ணனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருப்பதை அறிந்த போது எனக்கு கொஞ்சம் கவலை வந்த்து .இது ஒத்து வராத திருமணம் என்பதில் சந்தேகம் இல்லை .”

” ஏனோ …? எதை வைத்து ஒத்து வராது என்றீர்கள் .அப்போது நமது திருமணம் மட்டும் ரொம்ப ஒத்து வந்த்தா …? அவர்களுடையதை போலத்தானே நமது திருமணமும் .அதனால்தானே …இதோ நாம் இப்போது குழந்தை பிறந்தும் இப்படி பிரிந்து …,” முடிக்கும் முன் குரல் தடுமாறியது சாம்பவிக்கு .

” உளறக்கூடாது சாம்பவி .நாம் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டிருந்தோம் .ஆனால் சந்திரனுக்கும் ,சஹானாவிற்கும் இடையில் இருந்த்து வெறும் அன்பு மட்டும்தான் .அதனை காதலாக வளர்க்க இருவருமே தயாராக இல்லை ….”

” எப்படி சொல்கிறீர்கள் …? “

” நம்மை வைத்துத்தான் .எப்போது நமக்கு திருமணம் என்று பேச ஆரம்பித்தார்களோ ..அந்த நிமிடத்திலிருந்தே ..இதோ …உடனேயே திருமணம் நடந்து விடாதா …என்ற தவிப்பு எனக்குள் இருந்து கொண்டே இருந்த்து .தாமதமாக …ஆக …திருமணத்தில் எதுவும் தடங்கல் வந்து விடுமோ …என்ற காரணமறியாத பயம் இருந்து கொண்டேயிருந்த்து …,” இயல்பாக தன் மனதினை பகிர்ந்து கொண்டவனை விழி விரித்து பார்த்தாள் .

” எனக்கும் அப்படித்தான் ….” என்றாள் தனை மறந்து .

” யா …ஐ. நோ ..தட்ஸ் குட் …ஆனால் சஹானாவிடம் இந்த எண்ணங்கள் எதுவும் இல்லை .நடக்க கூடிய சாத்தியமுள்ள திருமணத்தையும் அவள் தள்ளி போட்டாள் .இதைத்தான் நான் எனக்கான பாயின்டாக எடுத்துக் கொண்டேன் .நம் திருமணம் முதலில் நடக்கட்டும் ்பிறகு உன் அண்ணனிடமும் , சஹானாவிடமும் உட்கார்ந்து நம் இருவருமாக பேசி அவர்களையே அவர்களை உணர வைப்போம் என்றிருந்தேன் ….ஆனால் அதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது ….”

” பிறகு ஏன் அண்ணன் மாலினியை திருமணம் முடித்ததற்கு அவ்வளவு கோப்பட்டீர்கள் ..? “

” எனது கோபம் அதற்காக இல்லை பவி .சொல்லப்போனால் அந்த திருமணம் எனக்கு மிகுந்த சந்தோசத்தையே கொடுத்தது.என் கோபம் இந்த விசயம் முன்பே தெரிந்திருந்தும் நீ என்னிடம் சொல்லவில்லையே என்பதற்காகத்தான் ….”

” எனக்கே அப்போதுதான் தெரியும்பா .அன்று சஹானாவின் அறையில் வைத்து அம்மா போன் போட்டார்களே …அப்போது …”

” ம் …ஆனால் நான் அப்போது உனக்கு அவர்கள்  இருவரின் காதல் விவகாரம் முன்பே  தெரியுமென்று நினைத்தேன் .அப்போதுதான் நாம் இருவரும் கோவாவில் தனியாக இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்திருக்கிறோம் .இதை பற்றி என்னிடம் நீ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்ற வருத்தம் எனக்கு ….”

” இல்லைங்க …சொல்ல வேண்டுமென்றுதான் நினைப்பேன் .ஆனால் பயமாக இருக்கும் …”

” என்ன பயம் பவி …? அப்படி பயமுறுத்துகிற அளவு ராட்ச்சன் போலவா நான் இருந்தேன் .நீ அன்று மட்டும் இவர்கள் திருமண விசயத்தை முதலில் என்னிடம் சொல்லியிருந்தால் , நானே இதனை பக்குவமாக எல்லோரிடமும் சொல்லியிருப்பேன் ….”

” தப்புதான் சொல்லியிருக்க வேண்டும் ….” ஒத்துக்கொண்டாள் .

” ஆனால் நீங்கள் என் நிலையிலிருந்தும்  கொஞ்சம் யோசித்து பாருங்கள் . புதிதாக திருமணம் முடித்த எனக்கு பொருத்தமில்லாத அல்ட்ரா மாடர்ன் கணவன் நீங்கள் . உங்கள் தங்கைக்கும் என் அண்ணணுக்கும் திருமணம் என்ற மறைமுக எண்ணத்தோடு நம் திருமணம் நடத்த பட்டிருக்கிறது .இந்த நிலையில் என் அண்ணன் வேறொரு பெண்ணை திருமணம் முடித்துவிட்ட விசயத்தை எப்படி உங்களிடம் சொல்லுவேன் …? எனது முதல் பயம் நீங்கள் என்னை வெறுத்து விடுவீர்களோ …என்பதாகத்தான் இருந்த்து ….”

” ம் …புரிகிறது பவி .நான் இன்னும் கொஞ்சம் என்னை உனக்கு புரிய வைக்க முயற்சித்திருக்கவேண்டும் ….நிதானமாக உட்கார்ந்து பேசியிருக்க வேண்டும் .ஆனால் எனக்கென்னவோ …அப்போதெல்லாம் உன்னை பார்த்தால் சும்மா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணம் வருவதேயில்லை ….” கண்களை சிமிட்டினான் .

” ம்க்கும் …செய்வதையும் செய்துவிட்டு பேச்சை பார் …” முகம் சிவக்க தலைகுனிந்தாள் .

” அப்போது மட்டுமல்ல பவி …இதோ இப்போதும் அப்படித்தான் .பதுமை போல் உன்னை இப்படி அருகே அமர வைத்துக்கொண்டு …வெறுமனே முகத்தை பார்த்து பேசிக்கொண்டிரு ..என்றால் ….நோ …இட்ஸ் எ பிக்கஸ்ட் பனிஷ்மென்ட் பார் மீ …யூ நோ ….? என முடித்தபோது ரிஷியின் இதழ்கள் சாம்பவியின் கழுத்து வளைவில் பதிந்திருந்தன.




” இப்படியா அன்பை  நிரூபிப்பார்கள் ..? ,செல்லமாய் முறைத்தபடி அவனை தள்ள முயன்றாள் .

” எனது அன்பை ..காதலை உனக்கு சொல்ல எனக்கு வேறு வழி தெரியவில்லை பவி .அப்போதும் …இப்போதும் ….”

அப்போதெல்லாம் ரிஷியின் ஆவேச அணைப்பு நினைவு வந்த்து .அவனது அன்பின் வேகம் அதுவென்றால் , நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் …என எண்ணியபடி சிரித்தவளின் இதழ்களை தன் இதழ்களால் மூடினான் .

விலகிய பின் ” ம்ஹூம் …சரியில்லை பவி …இது எப்படியென்றால் …” என தொடர்ந்து அவன் முத்தத்திற்கான டியூசனில் இறங்க …

” சை ..என்ன இது நடுரோட்டில் காரை நிறுத்தி வைத்துக் கொண்டு …சொல்லித் தரும் இடமா இது …? “

” அது எந்த இடம் என்றுதான் தெரியவில்லை …? ” முணுமுணுத்தபடி காரை எடுத்தான் .

” கொஞ்சநாள் பொறுத்திருங்கள் சார் ….” சாம்பவி சிரித்தபடி கூற …

” அது உன் அண்ணன் பாணி .அதெல்லாம் எனக்கு ஒத்துவராது .ஆனால் பவி ..ஒரு விசயத்தில் உன் அண்ணனை பாராட்டியே ஆகவேண்டும் .மனதிற்கு பிடித்த பொண்டாட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு தொடாமலேயே மூன்று வருடங்கள் இருந்திருக்கிறானே ….ஹீ இஸ் க்ரேட் …அது எவ்வளவு கடினமான காரியம் தெரியுமா …? நானும் இப்போது இரண்டு மாதங்களாக அந்த வேதனையை அனுபவித்து வருகிறேன் ….எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது தெரியுமா …? என்றவனின! பார்வை அவளது உடல் மீது தாகத்துடன் படிந்த்து .

” போச்சு திரும்ப ஆரம்பித்துவிட்டீர்களா …? அண்ணனிடம் என்ன பேசினீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு இன்னமும் பதில் வரவில்லை …” அலுத்தாள் சாம்பவி .

” என் பெண்டாட்டியை நான் பார்த்துக் கொள்வேன் .நீ முதலில் உன் பொண்டாட்டியை ஒழுங்காக கவனி ..என்று சொன்னேன் …” இப்போது ரிஷிதரனின் குரல் இறுக்கமாக இருந்த்து .

அந்த குரலில் கவலையுற்று ” இரண்டு பேரும் சண்டை போட்டீர்களா …? ” என்றால் சாம்பவி .

” சண்டையா …? உன் அண்ணனை நன்றாக நாலு அறையாவது அறைய வேண்டுமென்று என் கைகள் துடித்துக் கொண்டிருந்த்து .உன் முகததிற்காகத்தான் அவனை வெறும் பேச்சோடு விட்டேன் ….”

சாம்பவி திடுக்கிட்டாள் . ” என்னங்க …? என்ன ஆச்சு …? அண்ணன் மேல் ஏன் இவ்வளவு கோபம் …? “

” அவனை ….” பற்களை கடித்தவன் …” உனக்கு மாப்பிள்ளை பார்க்க அவன் யாருடி …? எவ்வளவு கொழுப்பிருந்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறாயா … என வேறு ஒருவனிடம் கேட்டிருப்பான் …? “

ஓ…அப்போது ரிஷிக்கு சந்திரனின் மேலான கோபத்தின் காரணம் சஹானா இல்லை .அவள் …சாம்பவிதான் .சாம்பவியின் இரண்டாவது திருமணத்திற்கான சந்திரனின் ஏற்பாடுகள்தான் ரிஷியின் கோபத்திற்கு காரணமா …? சாம்பவியின் இதயத்தில் இப்போது ரிஷியின் கோபம் தென்றலாக வீசியது .வாடா மச்சான் வா …உன்னை வச்சுக்கிறேன் என நினைத்தவளுக்கு  அவனை சிறிது சீண்ட வேண்டும் போல் தோன்றியது.




What’s your Reaction?
+1
48
+1
34
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!