Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 20 ( Final )

20

 

உன் தேடல்களின் நிறைவில்

என் தேவைகளின் நிறைவு

அன்று போன்ற முழுநிலவு இன்றில்லை .சிறு கீற்றான பிறை நிலாதான் .அந்த கீற்றும் பார்க்கும் போதெல்லாம் முந்தையமுழு நிலாக்கால பொழுதுகளை நினைவுறுத்தியபடி இருக்க , வேதிகாவின் உள்ளத்தில் விம்மல் எழுந்த்து .அவள் அங்கு …அவளது மல்லிகை பந்தலின் அடியில் இருந்தாள் . வெறுமையான மனதுடன் வானை வெறித்தபடி இருந்தாள் .




இது போல் தன்னை கணவன் வெளியேற்றுவானென அவள் எதிர்பார்க்கவில்லை .அன்றும் அப்படித்தான் …அறைந்த்தோடு , அடி வாங்கிய கோபத்திலும் , சுற்றிலும் வேடிக்கை பார்க்க சூழ்ந்து விட்ட சொந்தங்களின் பார்வையிலும் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தவளை , நீயே போனால் நீயாகவேதான் வர வேண்டும் .நானாக உன்னை தேடி வரமாட்டேன் என சொல்லியே அனுப்பினான் .

அதனால்தான் அவன் சொல்லாமலேயே அவளாகவே கிளம்பி வந்தாள் .ஆனால் …இப்போதும் ….

” இதென்ன சிறுபிள்ளைத்தனம் வேதா …? ” பீரோவின் வெளியே அவள் இறைத்து வைத்திருந்த மௌனிகாவின் துணிகளை காட்டி கேட்டான் .

” என்னை சமையல் செய்யென்று …உத்தரவு போட்டிருக்கிறாள் அமரன் …” திலகவதி கண்களை கசக்கினாள் .

” பெரியவர்கள் வேதா …நீ செய்வது தவறு …”

இதற்கெல்லாம் கணவனுக்கு விளக்கம் கொடுக்க கூட வேதிகாவிற்கு பிடிக்கவில்லை .” எப்போதுமே என்னையே குற்றம் சொல்வீர்களா …? ” கணவன் முகத்தில் பார்வை பதித்து கேட்டாள. .

” அதற்கான சூழ்நிலைகளை நீயேதான் உருவாக்கிக் கொள்கிறாய் . நான் சொல்லாமல் நீ ஏன் இங்கு கிளம்பி வந்தாய் …? “

வேதிகா காயப்பட்டாள் .அப்போது இது அவள் வீடில்லையா …?

வேகமான குரலில் ஏதோ சொல்ல வந்த திலகவதியை கையை உயர்த்தி தடுத்தவன் ” நீ அம்மா வீட்டிற்கு போ ….நான் உன்னிடம் பிறகு பேசுகிறேன் …” என்றான் .அதன்பிறகு ஒரு நொடி கூட அந்த வீட்டில் வேதிகா நிற்கவில்லை .

இப்படி ஒரு வெறுப்பை அவளிடம் கணவன் காண்பிப்பானென அவள் நினைக்கவேயில்லை .இனி அவனாக வந்து அழைத்தாலும் போக்க்கூடாது …உறுதியோடு நினைத்தபடி அப்படியே ஙெறுந்தரையில் படுத்து கண்களை மூடக்கொண்டாள் .காதில் காலடி ஓசை கேட்க பிரமை என முதலில் அலட்சியப்படுத்தியவள் பிறகு உண்மையென உணர்ந்த போது காலடிகள் மாடிப்படி  ஏறிக்கொண்டிருந்தன.இது ….அவன்தான் …உள்ளம் உரைக்க விழிகளை இறுக்கமூடிக்கொண்டாள.




சத்தமின்றி அவளருகே அமர்ந்த அருகாமை தரையில் கிடந்த அவளது தலையை அள்ளி தனது மடியில் வைத்துக்கொண்டது .” என்ன வேதா இது வெறுந்தரையில் ….ம் ….? ” அன்பாய் அதட்டியது .

” தொடாதீர்கள் ….” சீறியபடி எழ முயன்றவளை இழுத்து இருத்தினான் .” ம்ஹூம் ….உன்னைத் தொட எனக்கு முழு உரிமையும் இருக்கிறது …” என்றான் .

” ஆமாம் …வீட்டை விட்டு வெளியேற்றக் கூட உரிமை இருக்கிறது “

” அது உன் வீடு வேதா …நான் எப்படி உன்னை வெளியேற்றமுடியும் ….? “

” ஆஹா …அங்கே போ என்று விரட்டிவிட்டு ,இங்கே ஏன் வந்தாய் என்று கேட்டுவிட்டு     இப்போது இப்படி சர்க்கரையாய் பேசி என்னை மாற்ற முயலாதீர்கள் …”

” நான் …அங்கே உனக்காக நமது வீட்டை சரி செய்து கொண்டிருந்தேன் வேதா .அதன்பிறகே நீ அங்கே வரவேண்டுமென விரும்பனேன் .அதனால்தான் அப்படி பேசினேன் …அத்தோடு அம்மாவையும் பேச வைக்க நினைத்தேன் .உன்னை வெளியேற்றினால் அம்மா நிச்சயம் நமக்கிடையே வருவார்களென கணித்தேன் .என் கணிப்பு தப்பாமல் அம்மா என்னை ஒரு வழி பண்ணிவிட்டார்கள் ….”

” என்ன அத்தை எனக்காக பேசினார்களா …? ” வேதிகாவிற்கு ஆச்சரியம் .

” இத்தனை வருடங்கள் பேசாத்தற்கும் சேர்த்து வைத்து பேசிவிட்டார்கள் …இனி வீட்டற்குள் வருவதானால் என் மருமகளோடு வா .இல்லையென்றால் வராதே என என்னை வீட்டை விட்டே விரட்டிவிட்டார்கள் .இப்போது நானும் உன்னை போல்தான் வேதா …வீடற்ற அகதி போலிருக்கறேன் .உனக்காவது உன் அம்மா வீடு இருக்கறது .எனக்கு அதுவும் கிடையாது …நீயாக மனது வைத்து என்னிடன் வந்தால்தான் நானே வீடு போக முடியும் “

” ஜோக்கடிக்கும் நேரமா இது …? என்ன நடந்த்தென சொல்லிங்கள் ….”

” நான் மௌனிகாவை சென்னையில் கல்லூரயில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளில் இருந்தேன் …” என்றவன் வேதிகாவின் பார்வையில் தலையசைத்தான் .” இப்போதும் எனக்கு பிடிக்கவில்லைதான் .ஆனால் நீ சொன்னதற்காகத்தான் . மௌனிகாவிடமும் பேசினேன் .அவளும் சென்னை படிப்பில் மிக ஆர்வமாக இருந்தாள் .அதனால் ஏற்பாடுகளை செய்தேன் ஆனால் .அத்தை முழு மூச்சாக எதிர்த்தார்கள் …”

” ஏன் …அவர்கள் மகள் நல்ல படிப்பு பெறுவதில் அவர்களுக்கென்ன பிரச்சினை …? “

” நான் மௌனிகாவை சென்னையில் ஹாஸ்டலில் தங்க சொல்லவில்லை .என் நண்பர் ஒருவர் மூலம் பாதுகாப்பான இடத்தில் வீடு ஒன்று ஏற்பாடு செய்து அத்தையையும் அவளோடு போய் தங்க சொன்னேன் …”

” ஓ…அப்படி போய்விட்டால் இத்தனை ஆண்டுகளாக தான் பிடித்து வைத்திருந்த அண்ணன் வீட்டு அதிகாரம் போய்விடுமென உங்கள் அத்தை மறுத்திருக்கிறார்கள் .ஆனால் …நீங்கள் …ஏன் ..எப்படி இதை நினைத்தீர்கள் …? ” ஆச்சரியம் தாங்கவில்லை வேதிகாவிற்கு .




” அங்கேதான் நல்ல படிப்பு கிடைக்கும் .நல்ல எதிர்காலம் கிடைக்கும் …என்றெல்லாம் நான் நினைக்கவில்லை .நான் இந்த முடிவிற்கு வர முழு காரணமும் நீதான் வேதா .உனக்கு மௌனிகாவை பிடிக்கவில்லை .அத்தையுடன் ஒத்து போகவில்லை .அதனால் அவர்களை கொஞ்சம் தூரத்தில் வைக்க நினைத்தேன் .சில நேரங்களில் தள்ளி நிற்கும் அன்புதானே நிலைக்கிறது .அதனால்தான் ….”

வேதிகா நெகிழ்வுடன் அவன் மடியில் மீண்டும் தலை வைத்துக்கொண்டாள் .” நீங்கள் சொன்னதே போதும் .அவர்கள் நம் சொந்தங்கள் .அவர்களை நம்மை விட்டு பிரிக்க வேண்டாம் …” அமரேசன் அவளை வாரி இறுக அணைத்துக் கொண்டான் .

” நன்றி வேதா …என்னை புரிந்து கொண்டதற்கு .அத்தை எனக்கு அம்மாவை போல் .மௌனிகா தங்கையை போல் ….”

” அவள் உங்களை அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள் .அப்போது உங்களுக்கு நிறைய வயதிருக்கும் போலவே …? ” சீண்டினாள் .

” ஏய் …யாருக்கடி …வயது அதிகம் .எனக்கா …” என்றவன் அவள் மீது பாரமாய் விழுந்து அழுத்தி …அணைத்து …தனது வயதின் வேகத்தை காட்ட , திணறிய வேதிகா இறுதியில் ” சரி …சரி …ஒத்துக்கொள்கிறேன் .நீங்கள் மிக …மிக இளைஞர்தான் …” என சரண்டைந்தாள் .

” ம் …அது …அத்தையும் , மோனிகாவும் இன்னும் ஒரு வாரத்தில் சென்னை களம்புகறார்கள் வேதிகா .நாம் மூவரும் சென்று அவர்களை அங்கே குடியமர்த்தி விட்டு வருவோம் “

” ஐயோ …வேண்டாங்க .குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம் …” வேதிகா பதறினாள் .

” இல்லை வேதா .இது இப்போது உனக்காக அல்ல .என் அம்மாவிற்காக .இத்தனை வரிடங்களாக என்னையும் , தன் வீட்டையும் அத்தையிடம் தூக்கி கொடுத்துவிட்டு ஒரு துறவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்களே ..அவர்களிக்காக …”

” அதனை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களா …? எப்படி …?அத்தையே சொன்னார்களா …நான் எவ்வளவோ கேட்டும் வாயே திறக்கவில்லையே …”

” அம்மா சொல்லவில்லை .அத்தை சொன்னார்கள் …”

” என்ன …? “

” அம்மா இறுதிவரை தனது நிலைப்பாடிலிருந்து மாறவில்லை வேதா .உன்னை வெளியேற்றி விட்டு நான் அத்தையை உட்கார வைத்து பேசனேன் .அவர்கள் மனநிலையை அறிந்து கொள்ள முயன்றேன் .கணவன்ற்ற ஒரு அநாதரவான பெண்ணின் நிலைதான் அத்தையுடையதே தவிர …வேறெந்த வஞ்சமும் அவர்கள் மனதில் கிடையாது…அம்மாவை அடக்கி வைக்க , என்னை , எங்கள் வீட்டு அதிகாரத்தை கைபற்றிக் கொள்ள தன் அண்ணனின் உதவியை நாடியிருக்கிறார்கள் .என் அப்பாவும் அப்போதுதான் கணவனை இழந்து நின்ற தனது சிறு வயது தங்கை மேல் பரிதாப்ப்பட்டு என் அம்மாவிடம் இனி நீ எல்லாவற்றிலும் ஒதுங்கி இருக்க வேண்டுமென வாக்குறுதி போல் வாங்கக் கொண்டு  அத்தையிடம் எல்லா பொறுப்பையிம் கொடுத்துவிட்டார் …”

” கணவன் பேச்சிற்காக குழந்தையை கூட விட்டுக் கொடுப்பார்களா உங்கள் அம்மா …? ” ஆதங்கமாய் கேட்டாள் வேதிகா .

” இந்த இடத்தில்தான் நான் தவறு செய்திருக்கிறேன் வேதிகா .உன் கணிப்புபடி நான் அவசரக்காரன் , அதிகாரக்காரன்தான் .என்னதான் கணவரின் சொல்லுக்காக பெற்ற குழந்தையை ஒதுக்கி வைத்தாலும் அம்மா மகனுக்கடையேயான இயற்கை பாசம் இருவரையும் அப்படி முழுதாக பிரித்து விடாது என அம்மா நினைத்திருந்திருக்கிறார்கள் .அவர்களாக என்னை ஒதுக்கனாலும் நானாக அவர்களை நாடி வருவேனென எதிர்பார்த்திருந்திருந்திருக்கறார்கள் .ஆனால் நான் …அம்மா …என்னை தள்ளியதில் ரோசப்பட்டு சுலபமாக அத்தையிடம் தஞ்சமடைந்துவிட்டேன் .சில நேரங்களில் அத்தையின் சொற்களின் வழியே அம்மாவை கடிந்தும் இருக்கிறேன் .நாளாக ஆக இதனால் வெறுத்து அம்மா நடைபிணமாகி விட்டார்கள் ..”

” எவ்ஙளவு மோசமான மகன் நீங்கள் …? ” முகம் சுளித்தாள் .

” உண்மைதான. சமீபம் வரை என்னை நானே உயர்ந்தவனாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் .நீ சாதாரண பிறவிதான்டா …என எனக்கு நடு மண்டையிலடித்து உணர்த்தியவள் நீதான் வேதா .உன்னால் எனக்கு என் அம்மாமீண்டும் கிடைத்தார்கள் .அவர்களுக்கு பாசமான மகனாக நான் கிடைத்து விட்டேன. இனி நாம் மூவருமாக ஒரு கலகலப்பான புதிய வாழ்வை தொடங்குவோம் .வா வேதா …” உணர்ச்சியுடன் அழைத்தான் .

” உங்கள் அத்தை ….”




” அவர்களுக்கு பேசி புரிய வைத்துவிட்டேன் .தான் பறித்து கொண்டிருந்த தன் அண்ணியின் வாழ்வின் அளவை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் .நான் எவ்வளவோ கேட்டும் …அப்பாவிற்கு கொடுத்த வாக்குறுதிக்காகத்தான் தான் இப்படி இருந்த்தாக அம்மா ணொல்லவேயில்லை .ஏனென்றால் அப்பாவும் , அத்தையும் சேர்ந்து அதனை அம்மாவாக யாரிடமும் ணொல்லக்கூடாது எனக் கேட்டிருந்திருக்கிறார்கள் .எனக்கு பதில் சொல்லாவிட்டால் உங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என நான் மிரட்டிய போது கூட அம்மா அட …போடா என அலட்சியமாக அமர்ந்திருந்தார்பள் .இதனை காண சகிக்காத அத்தை தானாகவே முன்வந்து எல்லா விசயத்தையு
ம் ஒத்துக் கொண்டார்கள் ….இவையெல்லாம் உன் முன்னால் வேண்டாமென்றுதான் …எப்படியானாலும் அவர்களுக்கு நீ சிறு பெண் .இப்போதுதான் எங்கள் குடும்பத்திற்குள் வந்திருக்கிறாய் .உன் முன்னால் தங்களை ஒப்புக் கொடுப்பதென்பது இருவருக்குமே கடினம்தானே .அதனால்தான் உன்னை வெளியேற்றினேன் “

” பெற்ற அம்மாவை இப்படியா மிரட்டுவது …கட்டிய மனைவியை இப்படியா விரட்டுவது? ” அவன் கைகளில் அடித்தாள் .

” இனி உன்னிடம் விரட்டலெல்லாம் கிடையாது .மிரட்டல் மட்டும்தான் . இந்த இரவு நாம் இங்கேயே தங்கிவிடலாம் வேதா .விடிந்த்தும் நம் வீட்டிற்கு போகலாம் …” என்றவனின் வார்த்தைகளில் வழிந்த தாபம் அவனது இந்த ராத்தங்கலுக்கான காரணத்தை சொன்னது .

” ம் …எல்லாவற்றிற்கும் மிரட்டலா …? இப்படித்தான் நம் கல்யாணத்தை கூட மிரட்டியே முடித்தீர்கள் .” சிணுங்கினாள் .

” எனக்கு வேறு வழியில்லை வேதா .பத்து வருடங்களாக ஒரே ஊரில் இருந்து கொண்டு உன்னை போகும் போதும் , வரும் போதும் பார்த்து , ரசித்து காதலித்து கொண்டிருக்கறேன் .சரியான நேரத்தில் உன்னை திருமணம் செய்ய கேட்டு வந்தால் நீ மறுத்தால் …நான் என்ன செய்ய …? “

” என்ன பத்து வருடங்களாகவா …? “

” ஆமாம் …நீ ஒன்பதாவது படித்து கொண்டிருக்கும் போது …சிறு பிள்ளையாக சைக்கிள் ஓட்டி பழகிக் கொண்டிருந்தாயே , அப்போது ஒரு நாள் உன் சைக்கள் மீது ஒரு பையன் தனது பைக்கை கொண்டு வந்து மோதிவிட்டு விழித்து கொண்டு நன்றானே …அந்த பையன் அப்போதிருந்து உன்னை காதலித்துக் கொண்டிருக்கிறான் ….”

” என்ன ….? ” விழி விரித்த வேதிகாவிற்கு நிச்சயம் அந்த சம்பவம் நினைவில் இல்லை .

” நானும் அப்போதுதான் பைக் ஓட்ட பழகிக்கொண்டிருந்தேன் வேதா .அன்றுதான் நானே தனியாக பைக்கை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தேன் .பக்க தெருவலிருந்து அலைய , குலைய சைக்கிளில் வந்த நீ அலறியபடி என் பைக்கில் மோதி கீழே விழுந்தாய் .உன் கை , கால்களில் சிராய்ப்புகள் .உடனே உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாய் .அது கொஞ்சம் ஒதுக்குப்புறமான தெரு என்பதால் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லை .ஆனாலும் யாராவது பார்த்தால் ஆண்பிள்ளை , மூத்தவன் என்ற காரணங்களால் என்னைத்தானே திட்டுவார்கள் ..என பயந்து உன் கை பிடித்து அவசரமாக எழுப்பி உட்கார வைத்து என்னிடமிருந்த தண்ணீரால் உன் முகம் கழுவி , குடிக்கவும் கொடுத்து கீழே கிடந்த சைக்கிளை சரிபடுத்தி உன்னை வேகமாக அனுப்பி வைத்தேன. சைக்கிளை உருட்டியபடி தெரு முனை வரை சென்ற நீ நின்று திரும்பி மூக்குறுஞ்சிக் கொண்டே ” தேங்க்ஸ் அண்ணா ” என்றாய் பார் அப்போதே என் மனதிற்குள் வந்துவிட்டாய் …”

” எவ்வளவு துல்லியமாக கூறுகிறீர்கள் .என் நினைவில் இந்த சம்பவம் சுத்தமாக இல்லை …” உடல் சிலிர்க்க கணவன் மார்பில் புதைந்து கொண்டாள் வேதிகா .

” அதன்பிறகு உன்னை கவனித்தபடியே இருந்தேன் . நீ உனது கல்லூரி படிப்பை முடித்ததும் உன்னை பெண் கேட்டு வர எண்ணியிருந்த போது , நீ மீண்டும் படிப்பிற்கென இரண்டு வருடம் ஹைதராபாத் போய்விட்டாய் .எனது ஆவல்களை உள்ளே அமுக்கி கொண்டு திரும்பவும் உனக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன. படிப்பு முடித்து வந்த்தும் உன் அப்பாவிடம் உன்னை திருமணம் செய்யும் எண்ணத்தை தெரிவித்தேன் .அவர் சம்மதித்தார் .நம் திருமணம் நடந்த்து ….”




எவ்வளவு பொறுமையான காத்திருப்பு ….? எவ்வளவு நேசம் …? இந்த காத்திருப்புதான் …அன்று திருமணத்தை நிறுத்துங்கள் என அவள் கேட்டதும் எல்லை மீறி அவள் மீது வன்மையாய் பாய்ந்து விட்டது போலும் .வேதிகாவின் விரல்கள் தன்னிச்சையாய் இதழ்களை தடவின.

” இத்தனை வருடங்களில் என்னிடம் ஒரு சிறு ஜாடை காட்டியிருக்கலாமே …”

” எனக்கு அது அவசியமாக தோன்றவில்லை வேதா .நீ போவதை , வருவதை பார்க்க பிடிக்கறது .உன் உடைகள் , அலங்காரங்கள் பிடிக்கிறது .மற்றபடி அப்போதே உன் எதிரே வந்து காதல் வசனம் பேச தோன்றவில்லை .அத்தொடு அப்பா என் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் எனக்கு என் தொழிலில் நிறைய குழப்பங்கள் .நானே தனியாக சமாளிக்க வேண்டியவை நிறைய இருந்த்து. நிறைய பிரச்சனைகளுடன் ரோட்டில் போய் கொண்டிருப்பேன் .எதிரில் உன்னை பார்த்து விட்டால் அன்றைய பிரச்சனைகள் சரியாகி விடுமென நினைப்பேன் . அப்படியே நடக்கும் .மறுநாள் உன்னை பார்ப்பதற்காகவே அங்கே காத்திருப்பேன் .இப்படியே நாளாக ஆக என் மனதினுள் நீ வலுவாக வேரூன்றி விட்டாய் வேதா …”

தெறிக்கும் விம்மலுடன் கணவனை அணைத்துக் கொண்டவள் தனது நேசத்தை இதழ்கள் வழியாக அவன் முகம் முழுவதும் காட்டினாள் .சிறிது நேரம் மனைவியின் வேகத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து கிறக்காமாக கிடந.தவன் ” இப்போது மிக திருப்தியாக இருக்கிறது வேதா .அன்று உன் அப்பாவிற்கு முத்தமிட்டாயே …எவ்வளவு பொறாமையாக இருந்த்து தெரியுமா …? “

” சை இதற்கெல்லாமா பொறாமை படுவார்கள் …? “

” அன்று எனக்கு வந்த பொறாமைதான் நீ மௌனிகாவை வெறுப்பதற்கான காரணத்தை எனக்கு சொன்னது .என்னை போலவேதானே …உனக்கும் பொறாமை இருந்திருக்கும் …? “

” ம் …இதையெல்லாம் நம் திருமணம் முடிந்த இரவே சொல்லியிருக்கலாமே …? ” கணவனின் மூக்கோடு மூக்குரசியபடி கேட்டாள் .

” அன்று உன்னிடம் நிறைய பேச வேண்டும் , எனது பத்து வருட காதலை கூற வேண்டுமென்றுதான்  வந்தேன் வேதா .ஆனால் அந்த நிலவொளியில் , மணமகள் அலங்காரத்தில் வெள்ளி சிலையாய் அமர்ந்திருந்த உன்னை பார்த்ததும் ,எனக்கு நீ என் மனைவி , நான் உன் கணவன் …அது நம் முதலிரவு என்பதை தவிர மற்ற எல்லாம் மறந்து போனதே வேதா .நான் என்ன செய்யட்டும் …?அதனால் இயற்கையான ஒரு முதலிரவாய் மட்டுமே அந்த இரவு மாறி போனது …”

” ச்சீ …பிறகாவது சொல்லியிருக்கலாமே …”




” மறுநாள்தான் நீ கோபித்து கொண்டு வந்துவிட்டாயே .ஆனால் அப்படி நீ உடனே வீட்டை விட்டு வெளியேறவும் நான் எங்கோ தவறு செய்கிறேனென யோசிக்க தொடங்கினேன்வேதா .கொஞ்சநாட்கள் நாம் பிரிந்திருக்கலாம் …அது இருவரையுமே பக்கவப. படுத்துமென எண்ணித்தான் உன் அப்பாவிடமும் பேசி ..முடிவெடுத்தேன் .”

” ம் …என் அப்பா .எவ்வளவு அருமையான மனிதர் .எனது குழந்தை பிடிவாதங்களை கண்டுகொள்ளாமல் நமது திருமணத்தை முடித்து வைத்தாரே .இல்லையென்றால் நான் உங்களை இழந்திருப்பேனே …” உடல் நடுங்க கணவனை அணைத்துக் கொண்டாள் .

” அப்பாவின் மேல் காட்டும் நன்றியுணர்வை கொஞ்சம் கணவன் மேலும் காட்டினால் நன்றாக இருக்கும் …” அமரேசனின. கைகள் கணவனுக்குரியதாக மாறியிருக்க , மற்ற அனைத்தையும் மறந்து வேதிகாவும் அவனது மனைவியாக மட்டும் மாறலானாள் .

– நிறைவு – .

What’s your Reaction?
+1
11
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!