Kodiyile Malligai poo Serial Stories கொடியிலே மல்லிகை பூ

கொடியிலே மல்லிகை பூ – 19

19

 

அச்சங்களை அன்னியப்படுத்தி

அவசரங்களை சாதித்துகொள்கிறாய்

 

சர்ரென சீறியபடி டபடபத்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்காமல் ஒரு மாதிரி உறைந்து அமர்ந்திருந்த திலகவதியின் முழங்கையை தனது கை முட்டியால் இடித்தாள் வேதிகா .

” நம்ம வீடு வந்துடுச்சு இறங்குங்க சித்தி …”

பொம்மையாய் இறங்கியவளின் பர்ஸிலிருந்த வீட்டு சாவியை தானாகவே எடுத்துக்கொண்டு இறங்கிப் போய் முதல் ஆளாக கதவை திறந்தாள் .அங்கிருந்தே திரும்பி நின்று ஆட்டோவிலிருந்து இறங்கிய மங்கையர்கரசியிடம் எப்படி …எனக் கண்ணால் கேட்டாள் .மங்கையர்கரசி …போடி …பெரிய விசயம்தான் ..என உதட்டை சுளித்தாள் .இவர்களின் இந்த செல்ல பரிமாற்றங்களில் முகம் கடுத்தாள் திலகவதி .




வேதிகா திடுமென முடிவெடுத்து தனது புகுந்த வீட்டிற்கு வந்துவிட்டிருந்தாள் .மங்கையர்கரசியையும் , திலகவதியையும் கையோடு இழுத்து வந்திருந்தாள் .மௌனிகா கல்லூரிக்கு போயிருந்தாள் .விசாலாட்சியிடம் சொன்னதும் வாயெல்லாம் பல்லாக வேதிகாவின் பெட்டியை அடுக்க ஆரம்பித்தாள. சாமிநாதன் சிறிது யோசனையுடன் பார்த்தபடி ” மாப்பிள்ளையிடம் ….” என இழுத்த போது …

” நீங்கள் அவரிடம்  ஒன்றும் சொல்லாதீர்கள் அப்பா .அவருக்கு இது ஒரு சர்பிரைஸாக இருக்கட்டும் .ப்ளீஸ்பா ….” கெஞ்சி தந்தையிடம் சாதித்துவிட்டு கணவனுக்கு அறிவிக்காமலேயே அவனது வீட்டிற்கு வந்து …ஒரு வித  செல்ல வஞ்சத்தோடு அவனுக்காக காத்திருந்தாள் .அத்தோடு திடுமென இங்கே தன்னை பார்க்கும் கணவனின் கண்களில் தெரியும் இன்ப அதிர்ச்சியை  தரிசிக்கும் ஆவலிலும் இருந்தாள் .எப்போதும் போல் அவர்களின் முந்தைய சந்திப்பும் சிறு நெருடலுடனேயே முடிந்திருந்த்து .

மனைவியின் இடுப்பில் சொருகியிருந்த அவளின்  முந்தானை முனையை உருவி கன்னத்தை துடைத்துக் கொண்டவன் , அதை அப்படியே முகத்தில் போட்டுக் கொண்டான் .” அம்மாவின் முந்தானை வாசத்தை விட மனைவியின் முந்தானை வாசத்தில் ஒரு போதை இருக்கிறது வேதா ….” அமரேசனின் குரலில்தான் போதை இருந்த்து .

” போதும் எழுந்திருங்கள் …” தள்ள முயன்றவளிடம் …” ம்ஹூம் ….” சிறு பிள்ளையாக சிணுங்கினான் .

” அன்று உன் ப்ரெண்ட் ஏதோ சொன்னார்களே …அமர் , மங்கையென்று …அது யாரை வேதா …? யார் சொன்னது ….? “.  வேதிகா  நாக்கை கடித்துக் கொண்டாள்.  இவன்  அதை கவனிக்கவில்லை என்று நினைத்தாளே ….எமகாதகன் எல்லாவற்றையும் கவனித்து வைத்திருக்கிறான் …

” இல்லையே ….அப்படி ஒன்றும் …யாரையும் …சொல்லவில்லையே ….”

” அமர்னா யாரு வேதா …? “

” யாரோ …எனக்கென்ன தெரியும் ….? ” என்றவளின் கூந்தலுக்குள் கை நுழைத்து தன் முகம் நோக்கி இழுத்தான் .




” ஏய் ….தெரியாதாடி உனக்கு …ம் …”

கணவனின் வேக இழுப்பிற்கு பதிலாக வேகமாக தெரியாது என பதில் சொல்லும் அனுமதியை வேதிகாவின் இதழ்களுக்கு அவன் தரவில்லை .மூச்சு வாங்க நிமிர்ந்தவளின் இதழ்களை வருடியவன் ” எத்தனை தடவை வேணும்னாலும் பெயர் சொல்லிக்கோ …ஆனால் உடனடியாக அதற்குரிய தண்டனையையும் வாங்கிக் கொள்ள வேண்டும் ….” கொஞ்சினான் .

கணவனின் அத்து மீற ஆரம்பித்து விட்ட கொஞ்சல்களை தடுப்பதற்கான ஒவ்வோரு விசயமாக தேடி யோசித்தவள் , இறுதியாக தாங்கள் பேசிக் கொண்டிருந்த மௌனிகாவிடமே வந்து நின்றாள் .

” மௌனிகா …மேற்படிப்பிற்காக சென்னை போக ஆசைப்படுகிறாள் …” ஆவலுடன் மனைவியை தீண்டிக் கொண்டிருந்த அமரேசனின் கரங்கள் நின்றன .

” எதற்கு ….? “

” எதற்கென்றால் …சென்னையென்றால் பெரிய காலேஜ் ..நல்ல .யுனிவர்சிடி ….ஆசைப்பட்ட படிப்பு ….”

” போதும் …அதெல்லாம் தேவையில்லை ….இங்கே என்ன இருக்கிறதோ , அதை அவள் படித்தால் போதும்…”

” ஏன் அப்படி சொல்கிறீர்கள் …? ” வேதிகாவின் குரலிலும் கோபம் வரத் துவங்கியிருந்த்து .

” வெளியூரெல்லாம் போய் படித்தால் அவளும் …உன்னை மாதிரித்தான் பெரியவர்களை மதிக்க மாட்டாள் .எதிரத்து பேசுவாள் .அதனால் வேண்டாம் ….” அமரேசன் மடியிலிருந்து எழுந்து அமர்ந்துவிட்டான் .

என்ன ஒரு ஆதாரமற்ற அடிமைத்தன பேச்சு .வேதகாவின் பொறுமை பறந்த்து .

” ஓஹோ…. அப்போது வெளியூரில் போய் படித்ததால் எனக்கு திமிர் அப்படித்தானே …? நீங்கள் பெண்களை என்ன நினைத்தீர்கள் …? காலம் பூராவும் உங்களிக்காக அடுப்படியிலேயே கிடக்க வேண்டுமென்றா …? “

” நான் உன்னை இதுவரை அப்படி நடத்தயிருக்கிறேனா வேதா …? ” ஆழமான அவனது கேள்வியில் தடுமாறியவள் …
”  நீங்கள் என்னை பலி வாங்குவதற்காக மௌனிகாவின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கிறீர்கள் …” குற்றஞ்சாட்டினாள் .
” அப்போது நீ மௌனிகாவின் எதிர்காலத்தை நினைத்து மட்டும்தான் இந்த யோசனையை சொல்கிறாயா …? இல்லை அவளை கொஞ்ச காலம் என்னிடமிருந்து பிரித்து வைக்க எண்ணம் கொண்டிருக்கிறாயா …? “

சற்று முன் வரை மடி சாய்ந்து கொஞ்சலில் இருந்த கணவனின் இந்த  ஆராய்ச்சி கேள்வியில் …வேதிகா கோபத்துடன. எழுந்து அறைக்கதவை அவன் மூஞ்சியில் அடிப்பது போல் அறைந்து சாத்திக் கொண்டாள் .அன்று இரவு முழுவதும் யோசித்துவிட்டுத்தான் , இன்று கணவன் வீட்டிற்கு வரும் முடிவை எடுத்து செயல்படுத்தியிருந்தாள் .

எப்போது அமரேசனுக்கும் , மௌனிகாவற்குமடையேயான நெருடல் அவளுக்கு தெளிவானதோ ….மங்கயர்கரசிக்கும் , திலகவதிக்குமடையேயான நெருடல் அவளுக்கு மேலும் குழம்பியதோ …அப்போதே அவள் முடிவெடுத்துவட்டாள் .இனி கணவன் வீட்டில் இருந்துதான் பிரச்சினைகள சமாளிக்க வேண்டுமென .இதோ ….திருமணம் முடிந்து  சில மணிநேரங்களே இருந்த கணவன் வீட்டிற்கு தானாக திரும்ப வந்துவிட்டாள் .




” சூடாக காபி கொடுங்கள் அத்தை .தலைவலிக்கிறது …” உள்ளே நுழைந்த்தும் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு டிவி முன் அமரப் போன மங்கையர்கரசியை ஏவியபடி அவள் கையலிருந்த சேரை தான் பிடித்திழுத்து அதில் அமர்ந்து டிவி போட்டு ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டாள் வேதிகா.

” நானா …? ” முறைத்தவளை …” நீங்கள்தான் …” வலியுறுத்தியபடி சேனல்களை மாற்ற ஆரம்பித்தாள் .

” போய் போட்டு குடிடி ….ரிமோட்டை கொடு ….” மங்கையர்கரசி பிடுங்க முயல , வேதிகா கை மாற்றி …மாற்றி ரிமோட்டை தர மறுக்க …ஓடிக் கொண்டிருந்த டிவியின் கவனமின்றி …ஒரு அழகான சிறுபிள்ளை விளையாட்டில் ஆழ்ந்திருந்து விட்டனர் மாமியாரும் , மருமகளும் .மகிழ்ச்சியும் , குறும்பும் நிரம்பி வழியும் முகத்தோடு இருந்தவர்களின் முன்னால் டொக்கென்ற சத்தத்தோடு காபி டம்ளர் வைக்கப்பட்டது .

” சின்னதுக்குத்தான் புத்தி வேலை செய்யலை .பெருசுக்குமா …? ” திலகவதியின் முணுமுணுப்பில் குறும்பை தொலைத்து மங்கையர்கரசி அமைதியாகி விட , ” யாரை சொல்கறீர்கள் சித்தி ..? ” கத்தி கேட்டாள் வேதிகா .

” உன்னைத்தான் …புருசன் வீட்டிற்குள் நுழைந்த ஒரு மணிநேரத்தில் …யாரும் எப்படியும் போங்கள் …என போட்டுவிட்டு ஓடிப் போனவள்தானே நீ …? ” திலகவதியின் நேரடி குற்றச்சாட்டில் அயர்ந்து பின் தனக்கு ஆதரவிற்காக மாமியாரை பார்த்தாள் வேதிகா .மங்கையர்கரசியோ டிவி பார்க்க ஆரம்பித்திருந்தாள் .நொட்டென மாமியாரின் தலையில் கொட்டும் ஆவலை அடக்கிக் கொண்டு காபி தம்ளரை கையலெடுத்துக் கொண்டு மங்கையர்கரசி அருகிலேயே அமர்ந்து குடிக்க தொடங்கனாள்.

வேதிகாவின் எதிர்ப்பற்ற தன்மையை விட அவளது அலட்சியம் பாதிக்க திலகவதி ” உன்னைத்தான் சொல்கிறேன் வே..தி ..கா …” என நக்கலாக பேசினாள் .

” டிவி பார்க்கறோமில்லையா …டிஸ்டர்ப் பண்ணாதீர்கள் சித்தி .போய் சமையலை பாருங்கள் …” அதிகாரமாக வேதிகா சொன்னது திலகவதியை  வீட்டு சமையல்காரி ஆக்கியது .அவள் குழம்பிய மனத்துடன் அடுப்படிக்குள் சென்றாள் .

” இந்தா மங்கை …ஒழுங்கா என் கூட ஒத்துழைச்சா உங்க குழப்பமெல்லாம் தீர்த்து வைப்பேன் .எப்போதும் போல் இப்படி ஊமை கோட்டானா இருந்தா …நான் திரும்ப உங்க பையனை தனியாக விட்டுட்டு என் அம்மா வீட்டிறகு ஓடிப்போயடுவேன் …” டிவி சத்தத்தை கூட்டி வைத்துவிட்டு , மங்கையர்கரசியன் காதில் முணுமுணுத்தாள் .அவள் திகைத்து விழித்தாள் .

” சொல்லுங்க …அந்த அம்மையாரிடம் எதற்கு பயப்படுறீங்க …? ” திலகவதி பக்கம் கண்காட்டி கேட்டாள் .

” இது வரை என் மகனே கேட்டதில்லை .நீ என்னடி நாட்டாமை …? “

” உங்க மகனுக்கே நான்தான் நாட்டாமை .சொல்லுங்க “

” என் மகனையே நீ புரிஞ்சுக்கலை .என்னை புரிந்து கொள்வாயா …? “

” முதலில் உங்கள் மகனை நீங்கள் புரிந்து கொண்டீர்களா ….? இயற்கையான தாய்பாசத்தை கூட அவருக்கு கொடுக்காமல் அத்தையிடம் விரட்டி அடித்தவர்தானே நீங்கள் …?அவர் அப்பா இறந்ததும் , சிறுபிள்ளை என்ன செய்யுமோ என்ற கவலையின்றி தொழில் , முதல் வீடு வரை அவர் தலையில் பொறுப்புகளை அள்ளி வைத்தவர்தானே நீங்கள் …? “

” அதனால்தான் இப்போது என் பையன் எல்லாவற்றிலும் முன்னேறி நிற்கிறான் .இந்த வீட்டு நிர்வாகத்தை நான் கைகளில்  வைத்திருந்தால் கூட இந்த அளவு அற்புதமாக இருந்தருக்காது .யார் யாரை எங்கே எப்படி வைக்க வேண்டிமென்று தட்டமிட்டு அழகாக குடும்பத்தை கொண்டு செல்கிறான் என் மகன் ….”

” ஓ… உங்கள் மகனை உங்கள் நாத்தனாரால் ஏமாற்ற முடியாதென்ற தைரியத்தில்தான் இப்படி டிவியோடு 




உட்கார்ந்து விட்டீர்களா அத்தை …? “

இந்த நேரடி கேள்வியில் தடுமாறிய மங்கையர்கரசி ” என் மகன் என்னை விட புத்திசாலி …” முணுமுணுத்தாள் .

” நீங்களும் புத்திசாலிதான் அத்தை .உங்களை உங்களுக்கே தெரியவில்லை .கொஞ்சம் என் பேச்சை கேளுங்கள் ….”

” என் கணவரை தவிர நான் வேறு யார் பேச்சையும் கேட்கமாட்டேன் .கட்டுப்பட மாட்டேன் .புரிஞ்சிக்கோ .இப்போ தூக்கம் வருது .தூங்க போகறேன் …” சொன்னதோடு அறைக்குள் எழுந்து போய் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

வேதிகா ஒரு நிமிடம் வெறுத்து போனாள் .சை இவர்களுக்காகத்தானே …எல்லாம் செய்கிறேன் …இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்களே …எழுந்து அடுப்படிக்குள் போனவள் திலகவதி நறுக்கிக் கொண்டருந்த காய்கறகளை பார்த்து விட்டு ” புளிக்குழம்பு வேண்டாம் .சாம்பார் வையுங்கள் .முட்டைகோஸ் எனக்கு பிடிக்காது .அதற்கு பதிலாக பட்டர் பீன்ஸும் , வெண்டைக்காயும் வதக்கி விடுங்கள் .சாப்பிடும் போது அப்பளம் பொரித்து ஆளுக்கொரு கரண்டி ஆம்லெட் போட்டு டுங்க ….” உத்தரவாய் மெனுவை சொல்லிவிட்டு அவள் முறைக்க …முறைக்க கண்டுகொள்ளாமல் அமரேசனின் அறைக்குள் வந்தாள் .

அங்கே இருந்த பீரோக்களில் மௌனிகாவின் பீரோவை திறந்து அவளது உடைகளை அள்ளி வெளியே போட்டவள் , தனது உடைகளை அங்கே அடுக்க ஆரம்பித்தாள். வீடு முழுவதும் ஒரு சுற்று வந்தவள் ஸ்டோர் ரூம் வந்த்தும் முகம் சிவந்தாள் .

அன்று மௌனிகாவை பற்றி கணவனடம் புகார் சொல்ல முடிவு செய்து அவனை பார்க்க , சூழ்ந்திருந்த உறவினர்களிக்கு நடுவிலிருந்து அவன் எழுந்துவிட்டான் .இங்கே யாரும் வர மாட்டார்கள் என அவன் கண் காட்டி அவளை அழைத்து வந்த இடம் இந்த ஸ்டோர் ரூம்தான் .ஆனால் உள்ளே நுழைந்த்தும் அவனுக்கு மனைவியிடம் பேசும் எண்ணம் எதுவுமில்லை .

” இரண்டு நாட்களாக பட்டு சேலையிலேயே உன்னை பார்த்துவிட்டு …இன்று இந்த சாதாரண சேலையிலும் மிக அழகாக இருக்கிறாய் வேதா .அதிலும் இந்த இலைப்பச்சை சேலையில் அப்படியே வனதேவதைதான் …” புகழுரைத்தபடி வேகமாக அவளை ஆலிங்கனம் செய்ய முயன்றான் .

இதற்காகவா …இவனை இங்கே வரச்சொன்னேன் …வேகத்திடன் கணவனை தள்ளினாள் .” தொடாதீங்க .உங்க வீட்டாளுங்க செய்கின்ற அராஜகங்கள் போதாதா …? நீங்கள் வேறா …? எனக்கு உடம்பெல்லாம் எரிகிறது ….” வேகத்தில் வார்த்தைகளை விட்டாள் .

சிவு சிவு என அமரேசனின் முகம் கோபத்தில் சிவந்த்து .” ஏய் என்னடி உன் பிரச்சனை ….? “




” இங்கே எல்லாமே …எல்லாருமே எனக்கு பிரச்சனைதான் .எல்லோரையும் உங்கள் , அம்மா , அத்தை , மௌனிகா எல்லோரையும் வீட்டை விட்டு அனுப்புங்க .பிறகு என்னை தொடுங்கள் ….” அவள் கன்னம் அதிர்ந்து சிவந்து எரியத் தொடங்கியதும் தான் அவன் தன்னை அறைந்து விட்டதை உணர்ந்தாள. .

” வாயை திறக்காதடி ….” ருத்ர மூர்த்தியாய் நின்றான் .

” வேதா ….” வெளியில் அமரேசனின் குரல் .அன்று கண்ட அதே கோபத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அங்கே நின்றிருந்தான் அமரேசன..

நான் சொல்லாமல் நீ ஏன் இங்கு கிளம்பி வந்தாய் …? ”  கணவனின் கேள்வியில் நொந்த வேதிகா மீண்டும் தனது தாய்வீட்டிற்கு வெளியேறினாள் .

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!