gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/கங்காதேவி எப்படி மானுடரரான சாந்தனு மகாராஜாவை மணந்தார்?

குரு வம்சத்தின் மன்னன் இக்ஷ்வாகு வின் மகன் மகாபிஷக்.இவர் பல அஸ்வமேத யாகங்களை செய்ததால் இந்திரனுக்கு இனையான பதவியுடன் இருந்தார்.

ஒருமுறை பிரம்ம லோகம் சென்றபோது அங்கு இருந்த கங்காதேவியின் மேலாடை விலகியதை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்ததை கங்காவும் பார்த்தார்கள்.இருவரும் காமவயப்பட்டதை பார்த்து பிரம்மன் சாபமிட்டார்.பிரம்மலோகத்தில் காமத்திற்கு இடமில்லை நீங்கள் இருவரும் காமவயப்பட்டதால் பூலோகம் சென்று மானுடனாக பிறந்து உலக இச்சைகளை அனுபவித்து மீண்டும் இங்கு வருவீர்கள்.




அதன்படி மகாபிஷக் பிரதீபன் சுனந்தா தம்பதிகளுக்கு மகனாய் பிறக்கிறார்.பிரதீபன் மகனுக்கு சந்தனு என்று பெயரிட்டார்.

கங்கா தேவியும் கங்கை கரையில் மானுடபிறவி எடுக்கிறார்.

அஷடவசுக்கள் அனலன், அனிலன், ஆபன், சோமன்,தரன்,துருவன்,பிரத்தியுடன், பிரபாசன்.

அஷ்டவசுக்களும் கங்கை கரைக்கு வந்து தங்களின் சாபத்தை சொல்லியது.அஷ்டவசுக்கள் ஒருமுறை காட்டிற்கு சென்றபோது வசிஷ்டரின் குடிலில் இருந்த அழகான பசு(நந்தினி)வை திருடியதற்காக வஷிடஷ்டர் சாபமிடுகிறார்.(நீங்கள் எட்டு பேரும் மானுடபிறவி எடுத்து கங்கா தேவியினால் சாபவிமோசனம் பெறுவீர்கள்.)

பிரம்மாவி ன்சாபத்தினால் ,கங்கா மானுடபிறவியில் கங்கா மகாபிஷக்கின் பேச்சிற்கு ஏறுமாறாய் இருந்தாள்.

பிரதீபன் காட்டில் தவம் செய்யும் போது கங்கா தேவி பிரதீபனின் வலது தொடையில் அமர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார்கள்.அதற்கு பிரதீபன் மனைவி ஏன்றால் இடது தொடையில் அமரவேண்டும் நீயோ வலது தொடையில் அமர்ந்ததால் மருமகளாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்.

பிரதீபன் அரண்மனை வந்து தன் மகன் சந்ததனுவிடம் கங்கை கரையில் அழகானா யுவதியை பார்த்தால் திருமணம் செய்துகொள் என்கிறார்.

அதன்படி சந்தனு கங்காதேவியை சந்திக்கிறார்.திருமணம் செய்துகொள்ள விருப்பம் எனும்போது கங்கா தான் எது செய்தாலும் ஏன் என்று கேட்காமலிருந்தால் சம்மதிக்கிறேன் என்று கூறுகிறார்.அதன்படி திருமணம்நடக்கிறது.

அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை கங்கையில் முழ்க அடித்து விடுவாள்.குழந்தைகள் இறந்து(சாபவிமோசனம்) விடும்.அதில் எட்டாவதான அஷடவசு பிரபாசன் பிறக்கிறான்.குழந்தையை கங்கா தேவி கங்கையில் முக்கிடும் சமயம் சந்தனு ஏன்இப்படிசெய்கிறாய் என்றுவினவ குழந்தையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள்.




அந்த குழந்தைக்கு தேவவிரதன் என்று பெயரிட்டு வளர்த்தார். அந்த தேவவிரதன் தான் பீஷ்மர் .

சந்தனு கங்காதேவி பிரிந்த பின்பு சத்தியவதியை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.சத்தியவதியின் தந்தை இவளுக்கு பிறக்கும் மகனே பட்டத்திற்கு வரவேண்டும் சம்மதம் என்றால் திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றார்.

அப்போது தேவவிரதன் தான் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்றும் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காப்பாளராக இருப்பேன் என்கிறார்.அப்போது அசரிரீயாக பீஷ்ம, பீஷ்ம ஒலிக்கிறது.ஆகவே தேவவிரதன் பீஷ்மர் என்று அழைக்கப்பட்டார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!