தோட்டக் கலை

உங்கள் மாமரத்தில் பூ வர வில்லையா?.. அப்போ இதை மட்டும் மாமரத்திற்கு போடுங்கள்..!

மாமரம் பல வகைகளை உடையது. மேலும், இது 35 மீ முதல் 45 மீ வரை வளரக்கூடியது. ஆனால் சில மாமரங்கள் முறையான பராமரிப்பு இல்லாததாலும் பூச்சு தாக்குதல் காரணத்தினாலும் காய்கள் காய்க்காமல் இருக்கும். அந்த வகையான மரங்களுக்கான ஒரு தீர்வினை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். அனைவரது வீட்டிலும் மாமரம் வளர்த்து வருவோம். ஆனால் ஒரு சில வீடுகளில் வைத்த மரம் மட்டும் பூக்கள் பூக்காமல் இருந்துகொண்டே இருக்கும். காரணம் என்னெவென்றால் மாமரத்திற்கு முறையான சத்து கிடைக்காமல் இருப்பதே ஆகும். எனவே, பூ வைக்காத மாமரத்திற்கு நாம் சில உரங்களை இட வேண்டும். எனவே,அவற்றை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மா மரம் வளர்ப்பு மற்றும் நடவு முறை|Mango farming - YouTube

மாமரம் பூ வைப்பதற்கு வெப்பம் மிகவும் முக்கியம். எனவே, மாமரம் பூ வைப்பதற்கு முன் தண்ணீர் இட கூடாது. மாமரத்திற்கு வெப்பத்தை அளிக்க கூடிய மருந்தினை மரத்திற்கு இடுவதன் மூலம் மாமரம் நன்றாக பூ வைத்து காய்கள் காய்க்க தொடங்கும்.




மாமரம் பூ வைப்பதற்கு தனி சல்பர் 80% மற்றும் போரான் போன்ற உரங்களை இட வேண்டும். இதில் சல்பர் உரமானது மாமரத்திற்கு வெப்பத்தினை அளித்து பூ வைக்க உதவுகிறது. மேலும், இந்த போரான் உரமானது வைத்த மா பூக்களை வெம்பல் இல்லாமல் வைத்து காய்கள் காய்க்க உதவுகிறது.

எனவே, ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் தனி சல்பேட் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் போரான் என்ற அளவில் உரங்களை கலந்து மாமரத்திற்கு இட வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது மாமரங்கள் நன்றாக காய்க்க தொடங்கும். அதுமட்டுமில்லாமல், மாமரம் அதிக மகசூல் தர மகரந்தசேர்க்கை மிகவும் முக்கியம்.  நீங்கள் மாமரம் தோப்பு வைத்திருக்கிறீர்கள் அந்த இடங்களில் தேனீ பெட்டிகளை வாங்கி வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால் மகரந்த சேர்க்கை இயற்கையாக நடந்தால் மாமரத்தின் பூக்கள் கொட்டாமல் அதிக காய்கள் காய்க்க உதவும்.

நாம் என்னதான் செயற்கை வழிகளை பின்பற்றினாலும் இயற்கை வழிகளில் தான் நிரந்தர தீர்வு என்பது கிடைக்கும். எனவே, மேற்கூறிய மருந்துகளை மாமரத்திற்கு இடுவதோடு இதுபோன்ற இயற்கை முறைகளையும் பின்பற்றுவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!