Beauty Tips

அக்குள் கருமையை போக்க சுலபமான வழிகள் இதோ..

அக்குள்களை வெண்மையாக்கவும், அழகாக வைத்துக் கொள்ளவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படி என்பதை அறியலாம்..

கோடைக்காலம் வந்துவிட்டாலே உடம்பு வியர்வையில் நனையும். குறிப்பாக அக்குளின் கீழ், கீழ் கழுத்து, இடுப்பு மூட்டுகள் வியர்வை காரணமாக மிகவும் எரிச்சலடையும். வியர்வை படர்ந்த இடத்தை சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அது இன்னும் கருமையாகி சருமத்தின் அழகைக் கெடுக்கும்.




அக்குள் வியர்வையால் கருமையாக இருந்தால், அதை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தினால், அந்த பகுதியின் தோல் பளபளக்கும். அப்படிப்பட்ட வீட்டு வைத்தியம் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

எலுமிச்சை: கோடையில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதற்கு மட்டுமல்ல, அழகுசாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். ஏனெனில், எலுமிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அரை எலுமிச்சம்பழத்தை எடுத்து அக்குள் கருமை உள்ள இடத்தில் 2-3 நிமிடம் தேய்த்தால் கண்டிப்பாக வித்தியாசம் தெரியும்.




ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது. இது அக்குள் பகுதியின் கருமையையும் போக்கும் தெரியுமா.. இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பிரவுன் சுகர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஒன்றாக கலந்து, அக்குளின் கருமையான இடத்தில் தடவி 2 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்து, 5 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு தண்ணீர் கழுவவும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் கருமையான அக்குள்களை வெண்மையாக்க பெரிதும் உதவுகிறது. இது இறந்த சரும செல்களை நீக்குகிறது மற்றும் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. இதை பயன்படுத்த 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகருடன் சம அளவு பேக்கிங் சோடாவுடன் கலந்து அக்குள்களில் தடவவும். 5 நிமிடம் கழித்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ, அக்குள்களுக்கு இயற்கையான பொலிவைத் தருகிறது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு அக்குள் பகுதியை மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கும். இது அக்குளை வெண்மையாக்கும். இதற்கு தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கி, அதை அக்குள்களில் தடவி ஸ்கரப் செய்யவும். ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, நன்கு கழுவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்யுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!