gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/ தலைச் சிறந்த வீரர்கள்

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் காலமுள்ளவரை இப்பூமியில் நிலைத்திருக்கும். மகாபாரதம் பெரும்பாலும் போரை மையமாக கொண்டிருந்தாலும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடங்களும், தத்துவங்களும் ஏராளம் உள்ளது.அப்படிப்பட்ட இந்த இதிகாசத்தில் தலைசிறந்த வீரர்கள் யார் என்று இந்த பதில் பார்க்கலாம்..

1.அர்ஜூனன்

அர்ஜூனனின் காண்டீபத்துக்கு உலகே அஞ்சி நடுங்கும் என்பர்.

தலைசிறந்த வில்வித்தையாளர் துரோணரின் தலையாய சீடன்.

துரோணருக்கு சமமானவன்

சொல்லப்போனால் துரோணரை விடவும் சிறந்தவன்.

அர்ஜூனனிடம் துரோணரை விடவும் பல வலிமையான அஸ்திரங்கள் இருந்தும் அதை அவன் போரில் முழுமையாக பயன்படுத்தவில்லை. (இதை பிரம்ம தேவரே கூறியிருப்பார்)




WIN: மகாபாரதம்-சரித்திரக் குறிப்பு

2.துரோணாச்சாரியார்

துரோணர் கையில் தனுர் உள்ள வரை ஒருவராலும் அவரை நெருங்க முடியாது.

அவர் இறப்பின் போதும் பொய் கூறி அவர் தனுரை கீழே போடவைத்து அவராக பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஓதித்தான் உயிர் விடுவாரே ஒழிய இறுதிவரை யாராலும் அவரை வீழ்த்த முடியாது.

3. பீஷ்மர்

1000 போர்களில் பங்கேற்றவர்.

பீஷ்மர் உள்ள வரை அத்தினாபுரத்தின் படையை ஒருவராலும் அசைக்க முடியாது.

சூறாவளியாக சுழன்று சுழன்று போரிடுபவர்.




4. பீமன்

10000 யானைகளின் பலம் உடையவன்.

கௌரவர் 100 பேரையும் தனிஒருவனாக வீழ்த்தியவன்.

5. துரியோதனன்

கோபக்காரன் ஆனால் சிறந்த போர் வீரன்.

மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை! | Role Of Lord Hanuman In Mahabharata - Tamil BoldSky

6. சல்லியன்

இராமாயணத்தில் எப்படி வாலியோ மகாபாரதத்துக்கு சல்லியன்.

சல்லியன் முன் ஒருவர் நின்றால் எதிராளியின் பாதி பலம் சல்லியருக்கு சென்று விடும்.




7. அபிமன்யு

இவன் அர்ஜூனனின் மகன்.

போரின் முதல் நாளிலேயே பீஷ்மருடன் போரிட்டு அவரையே ஆச்சரியப்பட வைத்தவன்.

சக்கர வியூகத்தில் இவனது போரிடும் வீரத்தை கண்டு தலைசிறந்த வீரர்களான துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் என அனைவரும் மெய்சிலிர்த்து நிற்பர்.

8. அஸ்வத்தாமன்

இறவா வரம் பெற்றவன்.

கிருஷ்ணரின் சாபத்தால் இன்றும் உயிர் வாழ்பவனாக நம்பப்படுபவன்.

9. கிருஷ்ணன்

கௌரவப் படைக்கு முன் பாண்டவப்படை சிறு துரும்பு.

அப்படிப்பட்ட பாண்டவர் படையில் இருந்து கொண்டு கௌரவர் படையையே வீழ்த்தினார் இவர்.

சுருக்கமாக கூறினால் எப்படி விராட் கோலி சதமடித்தால் அந்த அணி வெல்லுமோ அது போல் போர் என்று ஒன்று வந்தால் கிருஷ்ணர் உள்ள படையே வெல்லும்.

10. கர்ணன்

மாவீரன்.

இவனுக்கு ஒரே எதிரி அர்ஜூனன்.

கர்ணனை வீழ்த்துவது என்பது மற்றவர்களைப் போல் அவ்வளவு சுலபமல்ல.

கர்ணனை வீழ்த்த இயற்கையாகவே பல நிகழ்வுகள் அமைந்தன.

அவை யாவும் ஒன்று சேர்ந்தே அவனை கொன்றன.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!