gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (16.03.24)

சந்திரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் உள்ள அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் செய்த பழைய முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பெறுவீர்கள். உங்கள் குடும்பம் மூத்த உறுப்பினர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். முக்கிய வேலைகளை சரியான நேரத்தில் முடித்து மகிழ்ச்சி அடைகிறீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.இன்று நீங்கள் பைரவரை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

 அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் மதிப்பு மரியாதை சமூகத்தில் உயரும். இன்று மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செய்யுங்கள். பணியிடத்தில் உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கவும். உங்கள் பொறுப்புகளை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்ப வாய்ப்புள்ளது. மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கப்  பெறலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரோகிணி  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராதபடி பணிச்சுமை அதிகரிக்கக்கூடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்களுடன் உறவு மேம்படும். சகோதரத்துவம் அதிகரிக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும்.இன்று நண்பர்களுடன் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் புதிய முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.நடராஜப்பெருமானை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உங்களின் தைரியம் அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றும் நடத்தையால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் வேலைகளை முடிப்பதற்காக அவசரப்பட வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைக்காக அதிகம் செலவிட வேண்டிய நிலை இருக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தேடிய பொருள் கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

இன்று நீங்கள் பிறருக்கு கொடுத்த கடன் தொகையை திரும்ப பெற முயற்சிக்க சாதகமான நாள். வியாபாரம் தொடர்பான விஷயங்களை புதிய ஒப்பந்தங்களை மிகவும் கவனமாக செய்யவும். உங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் மரியாதை அதிகரிக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உங்களின் நிதிநிலை மேம்படும். இன்று  முருகப்பெருமானை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். புதிய வேலை முயற்சிகளில் நல்ல தகவல் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு தொடர்பான விஷயங்களில் வல்லுநர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவு மன ஆறுதலை தரும். இன்று மகாலட்சுமியை வழிபட நன்மைகள் கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

இன்று முக்கிய வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் முடிக்க அதிக நேரம் செலவிட வேண்டியது இருக்கும். உங்களின் ஆரோக்கியம் மேம்படக்கூடிய நாள். உங்களின் இலக்குகளை அடைய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களின் உயர்கல்விக்கான முயற்சிகள் சாதக பலனைத் தரும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அம்மன்  வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று உங்களின் வசதிகள் அதிகரிக்கும். இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவுகள் மேம்படும். அனுபவம் உள்ள ஒருவரின் ஆலோசனை பெற்ற பின்னர் முதலீடுகளை மேற்கொள்ளவும். சட்டம் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்களின் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த வேலைகள் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களின் மனப்பிரச்சனைகளை பெற்றோர்களின் உதவியுடன் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.இன்று மகா விஷ்ணு வழிபாடு சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வழக்கமான வேலைகளை முடிப்பதில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இருந்து கருத்து வேறுபாடுகள் தீரும். குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள்.சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகளை சிறப்பாக கையாளுவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்கவும். புதிய வருமான ஆதாயங்களை பெறுவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் செலவுகளை குறைத்து, சேமிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

இன்று முதலீடு செய்ய நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கும், செலவிற்கும் இடையே சமநிலையை பராமரிக்கவும். இன்று யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மும்முரம் காட்டுவீர்கள். பணியிடத்தில் உங்களின் எதிரிகளின் ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டியது இருக்கும். தொண்டுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!