gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/பீமன் புதல்வன் கடோற்கசன்

கடோற்கசன்

🌸 பீமனுக்கும் ஹிடிம்பிக்கும் பிறந்தவன் தான் கடோற்கசன்

🌸 தந்தை அதிபராக்ரமசாலி தாயோ மனிதர்களை கொன்று சாப்பிடும் அரக்கி இதனால் பலத்தில் சிறந்த கடோற்கசன் மாயைகளிலும் வல்லவனாகிறான்

🌸 ஆனால் ஹிடிம்பி தன்னை அரக்கி இல்லையென்றும் சாலக்கடங்கடி என்னும் ஈசுவரி என்றும் கூறுகிறாள் அவ்வாறே ஹிடும்பியை துர்கா தேவியுன் அம்சமாக கருதி அவளுக்கு நேபாளத்தில் ஒரு கோவில் உள்ளது




மகாபாரதம் பகுதி-28 | Dinamalar

🌸 ஹிடும்பி பீமனை தன் மணாளனாக வேண்டினாலும் தனக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களை விட்டு விலகுவதாக வாக்களிக்கிறார் அதே போல் பீமனுடன் பகல் முழுதும் நீ சுற்றலாம் ஆனால் இரவு எங்களுடன் தான் பீமன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு பாண்டவர்கள் சம்மதிக்கின்றனர்

🌸 சாலிஹோத்ர மகரிஷியின் தவத்தினால் உண்டுபண்ணப்பட்டதும், அந்த நீரை பருகினாலே பசி தாகம் என அனைத்தும் போக்குவதுமான தடாகம் இருந்தது அங்கே பாண்டவர்களை தங்க வைத்தால் ஹிடிம்பி

🌸 இவ்வாறாக 7 மாதங்கள் சென்ற பின் கருவுற்றாள் ஹிடிம்பி. அசுரர்களை பொறுத்தவரையில் குழந்தை பிறந்தவுடனே தாயின் வயதை எட்டி விடும் அவ்வாறு பிறந்த குழந்தையின் தலை சட்டி போல் இருந்ததால் கடோற்கசன் என்ற நாமம் சூட்டினர்

🌸 குந்தி மற்றும் பாண்டவர்கள் தன்னை நினைத்து அழைத்தால் அவர்களுக்கு சேவை செய்ய உடனே தான் அங்கு வருவதை ஹிடும்பி மற்றும் கடோற்கசன் சொல்லிவிட்டு செல்கின்றனர் உண்மையில் கடோற்கசனே வம்சத்தில் மூத்தவன் அவனே அரியணைக்கு வரவேண்டியவன் ஆனால் அப்படி எதையும் கேட்கவில்லை

🌸 கிருஷ்ணரிடம் இந்த உலகத்தில் மாயத்தில் உன்னை மிஞ்ச எவரும் இல்லை என்ற வரத்தை பெற்றவர் கடோற்கசன் இக்காரணத்தால் மாயத்தில் மேகநாதனுக்கு இணையான ஒருவராக மாறினார்

🌸 நாக கன்னிகையான அகிலாவதியை வாதத்தில் வென்று திருமணம் செய்தார் இவர் ஈசனின் கழுத்தில் இருக்கும் நாகமான வாசுகியின் பெண் எனவும் சாபத்தின் காரணமாக கடோற்கசனை மணக்க வேண்டியது வந்ததாகவும் கூறுவர்

🌸 இராஜசூய யாகத்தின் போது தென்பக்கம் எல்லை வரை செல்லும் சகாதேவன் அதன்பிறகு கடோற்கசனை அழைத்து விபிஷணருக்கு தூது அனுப்புகிறான் அவரும் யாகம் நடத்த கூறியது கிருஷ்ணன் என்பதால் சம்மதிக்கிறார்

🌸 வனவாசத்தின்போது மலை உச்சியில் இருந்த நாராயணாஸ்ரமம் செல்லும்போது பாஞ்சாலி நடக்கமுடியாமல் மயங்கி விழுகிறாள் இதனால் வருத்தமடைந்த பாண்டவர்கள் கடோற்கசனை அழைக்கின்றனர் கடோற்கசனுடன் நூற்றுக்கணக்கான அசுரர்கள் தோன்றி பாண்டவர்கள், தௌமியர் மற்றும் அவர்களுடன் இருந்த பிராமணர்களை எல்லாம் தூக்கி செல்கின்றனர்




🌸 கடோற்கசனைப்பற்றி அறிந்து வைத்திருந்த பீஷ்மர் எக்காரணத்தை கொண்டும் அஸ்தமனத்திற்கு பின்னர் யுத்தம் போக கூடாது என்று உறுதியாய் இருந்தார் போரில் கடோற்கசனின் தேரைப்பற்றி குறிப்பிடும்போது கரடியின் தோலால் போர்த்தப்பட்ட அந்த தேரின் உள் நீளம் மட்டுமே 400 முழம் அதில் இல்லாத ஆயுதம் இல்லை அதை இழுக்கும் உயிரினம் குதிரை இல்லை அது யானையின் அளவை ஒத்ததாகவும், சிறகுகள் கொண்டதாகவும் இருந்த விசித்திர உயிரினம்

🌸 யுத்தத்தில் நான்காம் நாளில் பீமனை பகதத்தன் அம்புகளால் மூடுவான் பலர் சென்றும் அவனை தடுக்கமுடியாது அப்போது கடோற்கசன் அரை நிமிடத்தில் மாயையினால் ஐராவதத்தை உண்டுபண்ணி அதில் பகதத்தனை கொல்லும் முடிவோடு ஏறுகிறான் அந்த யானை கூடவே அஷ்டதிக்கஜங்களான அஞ்சனம், வாமனம், மகாபத்மம் என்றழைக்கப்பட்ட மூன்று யானைகளில் அசுரர்கள் ஏறி பகதத்தனை நாற்பக்கமும் முற்றுகையிடுகின்றனர் சூரியனும் அஸ்தமணமாகிறது இதை கண்ட பீஷ்மர் இனிமேல் யுத்தம் நடக்க கூடாது அது பெரிய அழிவை ஏற்படுத்தும் என முடிக்கிறார்




🌸 துரியன் யுத்தத்தில் கடோற்கசனால் தோற்கடிக்கப்பட்டான் அப்போது பீஷ்மர் கடோற்கசன் அவன் தந்தையின் பலத்தை பெற்றவன் மேலும் மாயங்களில் வல்லவன் ஆவனை பகதத்தனால் மட்டுமே வெல்ல முடியும் என்கிறார். பகதத்தனும் அதே போல வெல்கிறார் ஆனால் கடோற்கசன் தற்போது மாயத்தை பிரயோகிக்கவில்லை

🌸 ஜயத்ரதனை வதைத்த நாளில் யுத்தம் இரவிலும் நடக்கிறது அன்று அஸ்வதாமனிற்கும் கடோற்கசனிற்கும் பெரும்யுத்தம் நடக்கிறது இதில் கடோற்கசனின் மகனான அஞ்சனபர்வாவை அஸ்வதாமன் கொல்கிறான் தொடரும் யுத்தத்தில் அஸ்வதாமன் மூர்ச்சையடைந்ததால் அவ்விடம் விட்டு செல்கிறார்

🌸 கடோற்கசனை அழைக்கும் கிருஷ்ணன் கர்ணனை எதிர்க்கும் திறன் பெற்றவர்கள் ஒன்று அர்ஜுனன் மற்றொன்று கடோற்கசன் ஆதலால் கர்ணனை எதிர்ப்பாய் என்கிறார் இதனால் கர்ணனை எதிர்க்கும் கடோற்கசனின் உடலில் இரண்டு அங்குலம் கூட இடைவெளி இல்லாத அளவிற்கு அம்புகளால் அடிக்கிறான் கர்ணன் இதனால் கடோற்கசன் முள்ளம்பன்றி போலிருந்தார்




🌸 இதுவரை மாய யுத்தத்தை செய்யாத கடோற்கசன் மாயயுத்தத்தில் இறங்குகிறார் பர்வதத்தின் அளவில் பற்பல முகங்கள் கொண்ட ரூபத்திலிருந்து கட்டை விரல் அளவேயான ருபம் வரை அனைத்து மாயங்களையும் புரிகிறார்

🌸 பீமன் வனவாசத்தில் கொன்றவனான ஜடாசுரனின் புத்திரனான அலம்பலன் பீமன் மீது கொண்ட பகையால் கடோற்கசனை கொல்ல வருகிறான் அவன் தலையை கொய்யும் கடோற்கசன் துரியனிடம் சென்று “பெண்கள், அந்தணர்கள் மற்றும் அரசர்களை பார்க்க போகும்போது வெறும் கையோடு போககூடாது ஆதலால் இந்த தலையை கொண்டு வந்தேன் என்று கூறி அலம்பலனின் தலையை தருகிறார்”

🌸 மீண்டும் கர்ணனுடன் யுத்தம் இப்போது அஞ்சாலிகா அஸ்திரம் மூலம் கர்ணனின் வில்லை உடைக்கிறார்.




🌸 பிறகு பகாசுரனின் தம்பியான அலாயுதன் பீமனை எதிர்க்கிறான் பீமனே அவனின் மாயையால் திண்டாடுகிறான் இதையறிந்த கடோற்கசன் அலாயுதனையும் கொல்கிறான்

🌸 பிறகு கடோற்கசனை சார்ந்த அசுரர்கள் பற்பல ஆயுதங்களையும் கற்களையும் மழையாக பொழிகின்றனர். இதைக்கண்ட கௌரவ சேனை பாண்டவர்களுக்கு ஆதாரவாக தேவர்களே யுத்தத்தில் வந்துவிட்டதாக கூறி சிதறுகின்றனர் பிறகு துரியன் கர்ணனிடம் இவன் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் வேலை இல்லாமல் செய்துவிடுவான் அதனால் இந்திரனின் சக்தியாயுதத்தை பிரயோகி என்கிறார்

🌸 இதனால் வைஜயந்தி எனப்பட்ட சக்தியாயுதத்தை கடோற்கசன் மீது எவுகிறார் கர்ணன் இதையறிந்த கடோற்கசன் பெரிய உருவமெடுத்து ஒடுகிறார் சக்தியாயுதம் கடோற்கசனை வீழ்த்தி நட்சத்திரத்தில் சேருகிறது கடோற்கசன் சரியாக கௌரவ சேனை மீது விழுகிறார்

🌸 அவர் சாகும்போது கூட லட்சக்கணக்கில் வீரர்களை சாய்த்தே வீழ்ந்தார் கடோற்கசனுக்காக பாண்டவ சேனையில் அனைவருமே வருந்தும்போது கிருஷ்ணர் மட்டும் ஆனந்த கூத்தாடுகிறார் காரணம் கர்ணனின் சக்தியாஸ்திரத்தை பறித்தாயிற்று இனி அர்ஜுனனுக்கு ஆபத்து இல்லை என்று

🌸 ஆனால் மாவீரனும் பாண்டவ குமாரர்களில் மூத்தவனுமான கடோற்கசன் வீழ்த்தப்பட்டதற்கு காரணம் என்ன? ?




💐 ஒன்று அசுரர்களை அழிக்க குரு சேத்திர யுத்தம் ஒன்றே வழி

💐 இரண்டு கடோற்கசன் ஒரு முறை வேதத்தையே அவமதித்து இருந்தார் மேலும் வேள்விகளை நடத்தவிடாமல் அந்தணர்களை துன்புறுத்தி வந்தார் அதற்கான தண்டனையும் வேண்டும் (கிருஷ்ணரே கடோற்கசனை கர்ணன் கொல்லாமல் இருந்து இருந்தால் நானே கொன்று இருப்பேன் என உரைப்பார்)

💐 மூன்று ஒரு வேளை யுத்தத்திற்கு பிறகு கடோற்கசன் இருந்தால் கலியின் கொடுமை மேலும் அதிகரிக்கும் காரணம் அசுரர்கள் பல்கி பெறுகுவர்

💐 நான்கு கர்ணனின் சக்தியாஸ்திரத்தை பறிக்க வேண்டும்




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!