gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (14.03.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.41 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று இரவு 09.46 வரை கிருத்திகை. பிறகு ரோகினி. உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று எந்தச் செயலிலும் துணிச்சலாக இறங்குவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். காலத்திற்கு ஏற்றார்போல் வியாபாரத்தை மாற்றுவீர்கள். வெளிநாட்டுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வீர்கள். அப்பளம், ஊறுகாய், வத்தல் போன்ற குடிசைத் தொழில்களில் நாட்டம் கொள்வீர்கள். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள்.
இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தாராளமாக செலவு செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள்.விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

வேலையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திப்பீர்கள். சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். காதலியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தாராளமாக செலவு செய்து மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அசையாச் சொத்து வாங்குவீர்கள்.துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.

கடக ராசி அன்பர்களே!

நிலையான வருமானத்தை உருவாக்க பாடுபடுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களை சிறப்பாக நடத்துவீர்கள். அரசாங்க காண்ட்ராக்டுகள் பெற்று தொழில் துறை போட்டியாளர்களை கிறுகிறுக்க வைப்பீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட தடை கள் விலகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரவகையில் ஆதாயம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

“உனக்கும் எனக்கும் தான் பொருத்தம். அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்” என்று காதலியிடம் வசனம் பேசுவீர்கள். தோட்டத் தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். சேமிப்பில் இருந்த புளியை நல்ல விலைக்குப் விற்பீர்கள். வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனையை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள்.
வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

“கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா” என்று இளம் வயதினர் காதல் தூது விடுவீர்கள். வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் நடத்துவீர்கள். தந்தையார் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள். சிறிய வியாபாரத்தில் பெரிய வருமானம் பெறுவீர்கள். சேமிப்பில் இருந்த பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். புதிய ஆர்டர்களை வெளியூர்ப் பயணங்களில் அடைவீர்கள்.இன்று நீங்கள் சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு, சிந்தித்து முடிவு எடுக்கவும். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.இன்று மகாலட்சுமியை வழிபட பல வகைகளிலும் அனு கூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

சோம்பலை கைவிட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சமூகப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பார்கள். சகோதரர்கள் உள்ளன உறவில் விரிசல் நீங்கும். இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டாம்.முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட புதிய முயற்சிகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

 இன்று வியாபார ரீதியாக உங்களுக்கு நற்பலன் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும். உங்கள் உடல்நிலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். வேறு யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். வேலைகளை மும்முரமாகச் செய்வீர்கள்.அம்பிகையை வழிபட அல்லல்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

கும்பராசி அன்பர்களே!

இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். என்று உங்கள் உடல் நலன் மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். சட்ட விஷயங்களில் பொறுமையாக கையாளவும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

இன்று வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய லாபத்தை பெறுவதற்காக, தவற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் இடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். என்று குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.விநாயகரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!