gowri panchangam lifestyles Sprituality

கைலாய மலையின் வியக்க வைக்கும் ரகசியங்களும் மர்மங்களும் பற்றி தெரியுமா?

இப்புவியில் உள்ள இயற்கையின் படைப்புகளில் உயரமாக இருக்கும் “மலைகள்” நம் அனைவரின் மனத்தைக் கவர்வதாகும். கிரேக்கர்கள் “ஒலிம்பஸ்” மலையையும் யூதர்கள் “சினாய்” மலையையும் இந்து, ஜைன, பௌவுத்த மதத்தினர்கள் “கயிலாய” மலையையும் தெய்வீக தன்மை கொண்டவையாக கருதுகின்றனர். அதிலும் நம் நாட்டின் “இமய மலைத்தொடர்களில்” இருக்கும் கயிலாய மலை உலகைக் காக்கும் கடவுளான “சிவபெருமான்” மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக இந்து மத பக்தர்கள் கருதுகிறார்கள்.




மர்மம் அறிந்தால் காவு வாங்கும் கயிலாய மலை !! உண்மையா? | Lets go to mind boggling Kailash - Tamil Nativeplanet

ஆனால் ரஷ்ய நாட்டு கண் மருத்துவரும், மலையேற்ற வீரருமான டாக்டர் “எர்ன்ஸ்ட் முல்டஷேவ்” கயிலாய மலை உண்மையில் இயற்கையாக தோன்றிய மலையே இல்லை, என்றும் பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன் நம்மை விட அனைத்து வகையிலும் முன்னேறிய நாகரிகத்தை சார்ந்த மனிதர்களோ அல்லது வேற்றுலக வாசிகளோ கட்டிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த “பிரமிடுகளாக” அவை இருக்கலாம் என்று கூறுகிறார்.




இதே கருத்தை நம் நாட்டு சமஸ்க்ரித பண்டிதர் ஒருவரும் ஆமோதிக்கிறார். மேலும் ராமாயண இதிகாசத்திலேயே இந்த கயிலாய மலை “பிரபஞ்ச சக்தி” மிகுந்த அளவில் குவியும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார். இம்மலையைப் பற்றி மேலும் ஆராய்ந்த போது பல ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்ததாக கூறுகிறார் அந்த ரஷ்ய நாட்டு மருத்துவர். அதாவது பௌத்தர்களின் மத நம்பிக்கைப் படி இம்மலை “ஷம்பாலா” என்றும் ஹிந்துக்கள் இதை “கபாபா”என்றும் அழைக்கின்றனர். அங்கு “தேவலோக மனிதர்கள்”மற்றும் “கந்தர்வர்கள்” வாழ்வதாகவும் இவ்விருமதத்தினருமே நம்புவதாக கூறுகிறார்.

பல அமானுஷ்ய ஆற்றலைக் கொண்ட இம்மலையில் ரகசியங்களை அறிய இம்மலையில் ஏறிய பல மலையேற்ற வீரர்கள், மீண்டும் உயிருடன் திரும்பவில்லை என இம்மலையின் ஆற்றலைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.வேறு சில மலையேற்ற வீரர்கள் இம்மலையின் ஒரு மர்மமான பகுதியை அடைந்த போது, பல ஆண்டுகள் முதுமையடைந்தவர்களாக மாறியதாகவும், அதற்கு பின் ஓராண்டு காலத்திலேயே அவர்கள் ஒவ்வொருவராக இறந்துவிட்டதாக கூறுகிறார், அச்சம்பவத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர்.

1999 ஆம் ஆண்டு இக்கயிலாய மலையின் அடிவாரத்தில் தாம் தங்கியிருந்த போது, ஒரு இரவு நேரத்தில் இம்மலைக்குள் இருந்து மனித நடமாட்டத்தை காட்டும் வகையிலான சத்தங்களை தான்  கேட்டதாக கூறுகிறார் ரஷ்ய மருத்துவர் மெல்டஷேவ்.




Russian doctor

இவ்வளவு அமானுஷ்ய சக்தி வாய்ந்த இக்கயிலாய மலை மீது, மலையேறுபவர்களால் ஹிந்து, பௌத்த, ஜைன மதத்தினரின் மத உணர்வுகள் புண்படுவதாக கருதி இம்மலை இருக்கும் திபெத் பகுதியை  ஆளும் சீன அரசு, இம்மலை மீது இனி யாரும் மலையேற்றம் செய்யாத வாறு தடை விதித்துவிட்டது. இம்முடிவை தாம் வரவேற்பதாக கூறியுள்ளார் மெல்டஷேவ்.




What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!