health benefits lifestyles

அடிக்கடி ஜங்க் ஃபுட் சாப்பிடும் உங்கள் குழந்தையை கன்ட்ரோலுக்கு கொண்டு வர 7 டிப்ஸ்..!

குழந்தைகள் ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. வண்ணமயமான பாக்கெட்டுகள், எச்சில் ஊறும் சுவை போன்றவற்றால் இந்த ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் குழந்தைகளின் டயட்டில் தவறாமல் இடம்பெற்று வருகின்றன. எனினும் தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதிலிருந்து அவர்களை மீட்கவும் பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. பொறுப்பு மட்டும் இருந்தால் போதுமா, அதற்கான வழிமுறைகள் வேண்டும் அல்லவா. அதைதான் இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.




பெற்றோர்கள் உதாரணமாக இருக்க வேண்டும்: பெற்றோர்களை பார்த்துதான் பல விஷயங்களில் குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்றால் முதலில் பெற்றோர்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரொட்டீன் நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆரோக்கியமான சமையலறை: உங்கள் வீட்டு சமையலறையில் எப்போதும் பல வகை ஊட்டச்சத்து ஸ்னாக்ஸ்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பழங்கள், பாப்கார்ன், தயிர், நட்ஸ், முழு தானியத்தில் செய்யப்பட்ட பிஸ்கட்டுகள் போன்றவை பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு மாற்றாக இருக்கும்.




நேர்மறையான உணவுச்சூழல்: வீட்டில் இருக்கும் போது சமையலறை அல்லது டைனிங் ரூமில் மட்டும்தான் உணவு அருந்த வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். குறிப்பாக மொபைல் அல்லது தொலைகாட்சி பார்த்தபடியே சாப்பிட்டால் உடனே கண்டியுங்கள். தினமும் சாப்பாடு நேரம், ஸ்னாக்ஸ் நேரம் போன்றவற்றை தனித்தனியாக ஒழுங்குப்படுத்துங்கள். இதன் மூலம் தேவையில்லாமல் சாப்பிடுவது குறையும்.

ஊட்டசத்து குறித்து கற்றுக்கொடுங்கள்: ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும் வெவ்வேறு உணவுகள் எப்படியெல்லாம் நம் உடலை பாதிக்கின்றன என்பதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். சரிவிகித டயட்டை பின்பற்றுவதால் கிடைக்கும் நன்மைகளையும் அதிகப்படியான ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதால் உடலுக்கு நேரும் விளைவுகளையும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.




எல்லைகளை வகுத்திடுங்கள்: அடிக்கடி ஸ்னாக்ஸ் கேட்க கூடாது, ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்க கூடாது எனக் கூறுவதன் மூலம் உங்கள் குழந்தைகள் உண்ணும் ஜங்க் ஃபுட்களின் அளவை குறைக்க முடியும். இதுபோன்ற நீங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளை குழந்தைகள் பின்பற்றி நடந்தால், அதற்கு பாராட்டுகளையும், வெகுமதிகளையும் அளியுங்கள்.

ஆரோக்கியமான பழக்கவழக்கம்: உங்கள் குழந்தையின் தினசரி பணிகளில் ஒன்றாக உடற்பயிற்சியை கற்றுக் கொடுங்கள். ஆனால் அதை ஜாலியான முறையில் சொல்லிக் கொடுங்கள். அப்போதுதான் அவர்கள் முழு ஈடுபாட்டோடு செய்வார்கள். மொபைல் போன் பார்ப்பதை குறைத்து விளையாட்டுகளில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துங்கள். இதனால் குழந்தைகளின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்படும். தினமும் போதுமான அளவு தண்னீர் பருக வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். இல்லாவிட்டால் அவர்கள் சோடா பானங்கள் மீது நாட்டம் கொள்வார்கள்.

நிபுணர்களிடம் ஆலோசனை: எவ்வளவோ முயற்சித்தும் உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தடுக்க முடியவில்லை என்றாலோ அல்லது அவர்களின் சாப்பிடும் பழக்கத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தாலோ எந்தவித தயக்கமும் இன்றி மருத்துவரிடம் அலோசனை பெறுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!