Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே – 22 (நிறைவு )

22

” எனக்கு பசியில்லை .தூங்க போகிறேன் . வந்து எழுப்ப வேண்டாமென அத்தையிடம் சொல்லவிடு ….” திருமலைராயன் காரை செட்டில் விடப் போன நேரத்தில் வீட்டிற்குள் நுழைந!ததும் எதிர்பட்ட வேலையாளிடம் தகவல் சொல்லிவிட்டு வேகமாக மாடியேறி தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் சஷ்டி .

திருமலைராயன் மேல் நூறு சதவிகிதம் சந்தேகமில்லை என முடிவான பின்பு , அவனை உடனே நேரடியாக எதிர் கொள்ள அவள் தயங்கினாள் .அதிலும் இன்று அவன் மிகவும் கோபமாக இருப்பதையும் அறிவாள் .தாண்டவராயர் மேல் , சந்திராம்பிகை மேல் …கடைசியாக அவள் மேல் என அவன் கோபம் இருப்பதை உணர்ந்தாள் , அவனது கோப கணங்களை சற்று முன்தான் சந்திராம்பிகையிடம் அறிந்திருந்த பின் இதே நேரத்தில் அவனிடம் பேசி தன் நிலையை இழக்க அவள் விரும்பவில்லை .




இரண்டு நாட்கள் போகட்டும் . அவன் கோபம் கொஞ்சம் குறைந்த்தும் பேசலாம் …என நினைத்தாள் .எனவே யார் கண்ணிலும் படாமல் மேலே வந்து தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

திருமலைராயன் மாடியேறி வர ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது .எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்திருப்பான் போலும் .அவன் படுக்க போகும் வரை எனக்கு தூக்கம் வராதே …சஷ்டி படபடக்கும் நெஞ்சுடன் அறைக்குள் அங்குமிங்கும் நடந்தபடியே இருந்தாள் .

ஒரு வழியாக அவன் மேலேறி வந்து அவள் அறையை தாண்டி அவன் அறைக்கு போகும் காலடி சத்தத்தை கேட்டபடி அமர்ந்திருந்தவள் , கொஞ்ச நேரம் கழித்து அறைக்கதவை திறந்து வெளியே எட்டிப் பார்க்க , அவன் அறை விளக்கணைக்கப்பட்டு இருளில் இருக் க , தூங்கிவிட்டான் என நினைத்தபடி தானும் படுத்தாள் .ஆனால் அரை மணி நேரத்திற்கு பிறகும் உருண்டு புரண்டு படுத்த பிறகும் தூக்கம் வருவது போல் தெரியவில்லை .

மெல்ல எழுந்து வெளியே வந்து மாடியின் ஓரம் வெளிப்புறமாக இருந்த பால்கனியில் வந்து நின்றாள் .வெளியே இருளில் அசையும் மரங்களை பார்த்தபடி நின்றாள் .

” உனக்கு தூக்கம் வராதுன்னு எனக்கு தெரியும் ” பின்னால் கேட்ட திருமலைராயனின் குரலில் உடல் விரைத்தாள் .

இவனென்ன சத்தமில்லாமல் வந்து நிற்கிறான் .கோபம் அதிகமாகி அடிப்பானோ …? அவள் நினைப்பை ஒத்தாற் போல் திரும்பி நின்றவளின் பின் கூந்தலை கொத்தாக பற்றி ஆட்டினான் அவன் .

” உன் மனசில் என்னவெல்லாம் தப்பு தப்பாக நினைத்து வைத்திருக்கிறாயடி நீ …? என்னைப் பார்த்தால் ஒருத்தியை காதலித்து விட்டு , அவளை கை விட்டு விட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்பவன் போன்றா தெரிகிறது …ம் …? “




பயம் தருவதற்கு மாறாக இனிமையாய் சஷ்டியினுள் இறங்கியது அவளது ராயரின் கோபம் .பயமற்றதாகி விட்ட கோபத்தினால் இந்த தலை உலுக்கல் கூட மிக இதமான அதிர்வலைகளை அவள் உடல் முழுவதும் பரப்ப , அவள் கண் மூடி நின்று அவனது உலுக்கலை தனக்குள் அனுபவித்தாள் .

” அவளையே கல்யாணம் பண்ணனும்னு நினைத்திருந்தால் இந்த ஊரையும் காப்பாற்றி அவள் அப்பாவையும் அடக்க எனக்கு தெரியாதா …? நான் ஏன் அதை செய்யவில்லை …? “

” ஏன் செய்யவில்லை …? ” சஷ்டி தலையை அண்ணாந்து அவன் முகம் பார்த்து கேட்க , இருளில் ஒளிர்ந்த்து அவள் மூக்கின் வைரம் .

” ஹேய் மூக்கு குத்திக் கொண்டாயா …? ” தலை முடியை விட்டு இப்போது அவன் கை அவள் முகத்தை ஏந்திக் கொண்டது .சற்று முன்னிருந்த அவனது கோபம் போன இடம் 
தெரியவில்லை .

” ம் …” தலையசைத்தவளின் பார்வை அவன் முகத்தை விட்டு நகரவில்லை .

” எனக்காகவா …? ” திருமலைராயனின் ஒரு விரல் நீண்டு அவள் மூக்குத்தியை வருட , அசைந்த மூக்குத்தி சிறு வலியை அவளுக்குள் பரப்ப ,வேதனையின் அலைகள் சஷ்டியிடம் .

” வலிக்குதாடா …? ” பதறினான் .

” ம் ..லேசாக .”

” வலிக்க …வலிக்க ஏன் இப்படி அவசரமாக குத்திக் கொண்டாய் …? இப்போதுதான் வலிக்காமல் மூக்கு குத்த எத்தனையோ வலிகள் வந்து விட்டனவே .நாம் இருவருமாக  பாண்டிச்சேரி போய் மெல்ல குத்திக் கொண்டிருக்கலாமே …”

” நான் இது போல் வலியோடுதான் குத்திக் கொள்ள வேண்டுமென நினைத்தேன் …”

” ஏய் …அது ஏன் அப்படி நினைத்தாய் ..? “

” உங்கள் அன்பை புரிந்து கொள்ளாத்தற்குஎனக்கு நானே கொடுத்துக் கொள்ளும் சிறு  தண்டனையாக இதனை நினைத்தேன் ” அவள் சொல்லி முடித்ததும் அவளை இறுக அணைத்திருந்தான் திருமலைராயன் .

” பைத்தியம் .மூக்கு குத்த ஆசைப்படுகிறேன் என ஒரு வார்த்தை நீ சொல்லியிருந்தால் போதுமே , அந்த வார்த்தைக்கும் மேலாகவா …எனக்கு வேண்டும் …? ” இறுகிக் கொண்டே போன அணைப்பு அவனது அன்பின் அளவை வெளிப்படுத்த , சஷ்டி அவனுள் சுகமாக நசுங்கினாள் .

கணவனின் அணைப்பை அனுபவித்த அந்த கணத்தில் , சஷ்டியின் மனதினுள் உறுத்தியபடி இருந்த மற்றொரு சந்தேகமும் காற்றாய் கரைந்து போனது .இது …இதுதானே உண்மையான காதல் அணைப்பு .அன்று சந்திராம்பிகையுடனான அணைப்பு இப்படி இல்லையே …அது வேறு மாதிரி …கடமைக்காகவோ …கடன் தீர்ப்பதற்காகவோ செய்த மாதிரி …நினைத்த மறுகணமே அதனை தெளிவு படுத்திக் கொள்ளும் வேகம் சஷ்டிக்கு உண்டானது .




” அன்று சந்திராம்பிகையை ஏன் அணைத்துக் கொண்டீர்கள் …? ” தயங்காமல் கேட்டேவிட்டாள் .

திருமலைராயன் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் முகம் பார்த்தான் .” ஓ …அன்று நீ எங்களை பார்த்தாயா சஷ்டி .அதனால்தான் என் மேல் உனக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்த்தா …? “

” ஆமாம் .அன்று நானும் சொப்னாவும் வெளியே தோட்டத்தில் நின்று கொண்டிருந்தோம் .சன்னல் வழியாக உங்களை பார்த்தேன் “

” ம் …அன்று என்னை பெரிய தர்ம சங்கடத்தில் இருக்க வைத்திருந்தார் தாண்டவராயர் .உடனேயே அக்ரிமென்டில் கையெழுத்து போட வேண்டுமென கட்டாயப்படுத்தியபடி இருந்தார. நல்ல வேளை அவருக்கு அப்போது போன் வந்த்தால் தப்பித்தார் இல்லையென்றால் அவர் அன்று என்னை படுத்திய படுத்தலுக்கு இரண்டு அறையாவது என்னிடம் வாங்கியிருப்பார் .அவர் வெளியே போனதும் நான் கிளம்பி விட நினைத்த போது , சந்திராம்பிகை உள்ளே வந்தாள் .இவள் படித்த பெண் .இவளிடம் இந்த தொழிலின் தீமைகளை விளக்லாமென நினைத்தால் , அவள் அதனை காதில் கேட்டுக் கொள்ளும் நிலையிலேயே இல்லை ….”

” அப்பாவிற்கும் , உஙகளுக்கும் எந்நேரமும் தொழில் பேச்சுதானா …? கொஞ்ச நேரம் நம்மை பற்றியும் நினையுங்கள் …என்று என்னை திடீரென அணைத்நுக் கொண்டாள் .எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை .அப்பாவும் , மகளும் இப்படியா ஒன்று போல் லூசாக இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக நின்றேன். பின் அவளை விலக்கி விட்டு வெளியே வந்தேன் .நீ அந்நேரம் என் கண்ணில் பட்டாய் .அப்போது எனக்கு உன்னை பார்த்தால் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கும் என்னை கை கொடுத்து தூக்க வந்த தேவதை போல் தெரிந்த்து ….”

திருமலைராயனின் விவரிப்பு சஷ்டியின் உடலை புளகாங்கிதமடைய வைக்க , சட்டென எம்பி அவன் கன்னத்தில் அழுந்த தன் இதழ்களை பதித்தாள் . அந்த முத்தத்தில் திருமலைராயனின் எஞ்சியிருந்த கோபமும் ஆவியாகி போக , அவன் முரட்டுத்தனமாக அவள் இதழ்களை சிறை செய்தான் .

” உங்கள் கல்யாணத்தை நிறுத்த வந்தவள் , உங்களுக்கு தேவதை போல் தெரிந்தேனாக்கும் …” சிவந்த போய்விட்ட தன் இதழ்களை தேய்த்தபடி கேட்டாள் .

” என் கல்யாணத்தை நிறுத்த வந்தாயா …? ஹா…ஹா …சொப்னா இங்கே வந்த இரண்டாவது நாளே உன் மேல் சந்தேகம் சொல்லிவிட்டாள் . அன்றிலிருந்தே என் பார்வை முழுக்க உன் மேல்தான் .பாட்டிக்கு முதல் நாளே உன் மேல் சந்தேகம் .உன் முக ஜாடையை வைத்து நீ கோமதியின் மகளென அடித்து சொன்னார்கள் .கல்யாணத்தை நிறுத்த நீ செய்து கொண்டிருந்த முயறசிகளை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் நான் .சந்திராம்பிகையை இதோ இந்த பால்கனியில் உட்கார வைத்து விட்டு , அவள் பார்க்க வேண்டுமென  தோட்டத்திற்குள் அதோ அங்கே என்னிடம் வந்து பேசி என் கைகளுக்குள் தடுமாறி விழுந்தாயே …அப்போதே யார் பார்த்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையென உன்னை இழுத்து அணைத்து கிஸ் பண்ணி விடலாமா என்று நினைத்தேன்.ஆனாலும் அப்போது வெளி இடத்தில் வைத்து வேண்டாமென்றுதான் …” ரசித்துப் பேசிக் கொண்டிருந்தவனை கிள்ளினாள் .

” ச்சீய் …” அழகாக வெட்கப்பட்டவளை தன்னருகே இழுத்துக் கொண்டவன் …




” இதையெல்லாம் நம் முதலிரவின் போது உன்னிடம் சொல்லி உன்னை சீண்ட வேண்டுமென நினைத்துக் காத்திருந்தால் , நீ தனியாக போய் கதவை பூட்டிக் கொண்டாய் .ஏனடி அப்படி செய்தாய் …? “

” நான் உங்கள் அறைக்குள் வந்த போது நீங்கள் சந்திராம்பிகையிடம் போனில் பேசிக் கொண்டருந்தீர்கள் . அவள் சீர் தட்டு வைக்க முடியாத அளவு இல்லாத வீட்டு பெண்தான் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள் …” சொல்லும் போதே சஷ்டிக்கு தொண்டை அடைத்தது .

” சந்திராம்பிகையுடனா …? நான் அவளுடன் கடந்த நான்கு நாட்களாகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் . அதுவும் அவளை அந்த ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொள்ள செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தினால் மட்டுமே …அதறகு முன்பு அவள் போனிலோ ,நேரிலோ என்னிடம் பேச முயன்ற போது அவளை தவிர்த்து விட்டேன் .அன்று நான் பேசிக் கொண்டிருந்த்து தாண்டவராயரிடம் . உன் தகுதிக்கு குறைந்த பெண்ணை மணம் முடித்துக் கொண்டாயே …என்று போன் செய்து  பேசி என்னை வருந!த வைக்க நினைத்தார் அவர் .நீ இல்லாத வீட்டு பெண் என்பது எனக்கு குறைபாடாகவே தெரியவில்லையே சஷ்டி .நல் மனமும் , உயர் குணமும் இல்லாதவர்கள்தான்  இல்லாதவர்கள் .குணமிருந்து பணமில்லாதவர்கள் தாராளமாக தங்களை இல்லாதவர்களென சொல்லிக் கொள்ளலாமே .அதைத்தான் நான் அன்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன் .உங்கள் கணக்குப்படி என் மனைவி இல்லாதவள்தான் .ஆனால் என் கவனத்தில் அப்போது இருந்த்தெல்லாம் அவளது நல்ல குணங்கள்தான் .அதில் அவள் கோடீஸ்வரி .அந்த  செல்வம்தான் எனக்கு வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் “

” நான் அன்று உங்கள் பேச்சை முழுதாக கேட்கவில்லை .என் ஏழ்மையை குறைத்து நினைக்கிறீர்களென …”

” பாதிப் பேச்சிலேயே ஓடிப் போய் பக்கத்து அறைக்குள் புகுந்து  கொண்டாயாக்கும் ..? அதுதான் என் அப்பாவின் கடனை அடைக்க போகிறேனென அலைந்தாயாக்கும் ? “

” அன்று கொஞ்ச நேரம் முன்புதான் சந்திராம்பிகை என்னிடம் பேசினாள் .இந்த திருமணம் உனக்கு தகுதியானதா …பொருத்தமானதா …?என நியாயம் கேட்டாள் .அத்தோடு எங்கள் காதலை பிரித்து விட்டாயே …என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தாள் .அதில் நான் குழம்பி விட்டேன் “




” காதலா …அவள் மேலா …சான்ஸ்லெஸ் .தாண்டவராயன் ஒரு சிறந்த வியாபாரி .இந்த தொழில் விசயத்தில் நான் தவறினால் இவனென ரவிச்சந்திரனை முடிவு செய்து விட்டுத்தான் இந்தக் கல.யாணம் வரை வந்தார. .இதனை நான் முன்பே அறிந்து கொண்டுதான் சந்திராம்பிகையின் பின் வாழ்வு பற்றிய கவலையின்றி இந்த திருமணத்தையே நிறுத்தினேன் .அவளுக்காக நான் இவ்வளவு யோசித்து செயல்பட்டால் அவள் என் வாழ்க்கையையே கெடுக்க நினைத்தாளா …?அவளை …?” திருமலைராயன் பல்லைக் கடிக்க சஷ்டி அவசரமாக அவனை சமாதானப்படுத்தினாள் .

‘” விடுங்கள் .அதுதான் எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டதே. இன்னமும் ஏன் அந்த பேச்சையே பேசக் கொண்டு …”

” நல்லபடியாக எங்கே …எது முடிந்த்து …? சும்மா உதட்டை கன்னத்தில் லேசாக உரசி எடுத்ததோடு நிற்கிறது .ஊர் கதை …உலகு கதையெல்லாம் பேசிக் கொண்டு தள்ளி நின்று கொண்டு …சே ..சே என்ன வாழ்க்கை இது …? பச் என்று ஒரு முத்தம் . கிச் என்று அணைப்பு …அப்புறம் …,” பேசிக் கொண்டே போன்னின் வாயை அவசரமாக பொத்தினாள் .

” ச்சீ …மோசமான ஆள் நீங்க .உங்களை  போய் எங்கள் ராசா …மன்னன் என்று இந்த ஊரில் கொண்டாடுகிறார்களே …”

” நான் இந்த ஊருக்கு மன்னன்தான் சஷ்டி .ஆனால் இந்த மன்னன் உன்னை பார்த்ததும் மயங்கி விட்டேன் தெரியுமா …?”

உன்னிடம் மயங்குகிறேனென வெளிப்படையாக சொன்ன தன் மன்னவனை மயக்கத்தோடு  பார்த்தாள் சஷ்டி .அவர்களின் காதல் மயக்கம் கரை உடைத்து வெள்ளமாக பாய்ந்து அந்த இரவை புது மணத் தம்பதிகளுக்குரியதாக்கியது .

————

அடுத்த வாரம் நடைபெற்ற ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஆயிரம் தாமரை மலர்களை தட்டில் வைத்து தன் மன்னவனை தன்னிடம் மயங்க வைத்ததற்கு  அந்தக் காளிக்கு நன்றி சொல்லி அர்ச்சித்தாள் சஷ்டி மலர் .




கோமதி சம்பாதித்து திரும்பி வரப் போகும் தன் கணவனுக்காக ஆயிரம் பேருக்கு பொட்டிசோறு தயாரித்து அளித்தபடி இருந்தாள் .

விதம் விதமான தன் பக்தர்களை பார்த்தபடி தனக்குள் புன்னகைத்தபடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தன்    திருவிழாவை ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்  அந்த ஆயிரம் காளி .

                                                                – நிறைவு –

What’s your Reaction?
+1
25
+1
12
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!