Serial Stories மந்திரச்சாவி

மந்திரச்சாவி-6

மந்திரம்…6

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்

மாலை படுவதும் வாணாள் கழிவதுஞ்

சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்2

ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.

) ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே எழும் பகலவன் மாலையில் மேற்கே சென்று மறைகின்றனன். அவ்வாறு மறைவதைக் கண்டு பலர் இன்பமுடன் பொழுது போகாநின்றதெனக் களித்து அந்நாளைக் கழிப்பர். ஆனால் உண்மையான் நோக்கினால் அப்பொழுது ஒவ்வொரு நாளும் அவருடைய வாழ்நாளின் ஒவ்வொரு கூறையும் அவர் மகிழும்படியாக அறுத்துக் கொண்டு செல்கின்றது. அங்ஙனம் இறைவன் செய்வதுதான் நடப்பாகிய ஆதியாற்றலின் மறைப்பருள். எல்லா நிறைவும் இயற்கையிலேயே ஒருங்கமைந்த அவ்விறைவன் நினையாதார்மாட்டு நினைப்பிக்கும்படி செய்தருள் முனிவுள்ளவன் போன்று காணப்படினும் தக்கவாறு நினைவார்மாட்டு இடையறா இன்பஞ் செய்யும் தடையிலாக் கனிவுள்ளவனாவன்.

**********

பெரிய தோட்டத்திற்குள் இருந்தது அந்த வீடு.

தென்னை மரங்களும் மிளகுக் கொடிகளும் சூழ்ந்திருக்க துளசி மாடங்களும் விருட்சி பூச்செடிகளுமாய் ரம்யமாய் இருந்தது.

கேரளாவைக் கடவுளின் தேசம் என்று சொல்வது ஓரளவுக்கு உண்மை தான்.

அத்தனை பெரிய இடத்தை பசுமையாய் வைத்திருக்கிறார்கள்.

நம்மூராய் இருந்தால் அந்த இடத்தில் குறைந்தது நான்கைந்து அடுக்ககங்கள் கட்டியிருப்பார்கள்.

வருபவர்கள் உட்கார வசதியாய் பெரிதாய் ஷீட் போட்டிருந்தார்கள்.வினைல் சேர்கள் இடைவெளி விட்டு இருந்தன.

இரண்டு மூன்று பேர் முகக்கவசத்தோடும் கையில் ஜாதக நோட்டோடும் காத்திருந்தார்கள்.

ஒரு இளைஞன் அவன் பெற்றோரோடு வந்திருந்தான்.ஐபிஎஸ் டிரெயினிங்கில் இருப்பதாக அவன் அப்பா கார்த்திக்கிடம் கூறிக் கொண்டிருந்தார்.

தினம் இரவில் பயங்கரமான கனவுகள் வருவதாகவும் அதனால் தூக்கமே போய்விட்டதாம்.விரைவில் போஸ்டிங் வேறு. ஆசை நிறைவேறும் சமயத்திலா இப்படி ஒரு கேடு வரும்?




பணிக்கர் பிரச்சனம் பார்த்து ஏதாவது பரிகாரம் சொல்லமாட்டாரா எனத் தவித்துக் கொண்டிருப்பதாகக் கூற

கார்த்திக் திரும்பி ஸ்வேதாவைப் பார்த்தான்.

என்னை மாதிரி நிறைய பேருக்கு பிரச்சினை இருக்கு போல.

இடதுபக்கம் இவர்களைப் போன்ற ஒரு இளம் தம்பதி.

அஸர்களது ஐந்து வயது மகளைக் காணோமாம்.இரவு பக்கத்தில் படுத்திருந்தவள் மாயமாய் போய்விட்டாளாம்.அந்தப் பெண் புலம்பி கொண்டே இருக்க,அவள் கணவனோ அவள் கைகளை அழுத்தியபடி பணிக்கர் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார் என உறுதியாய்க் கூறிக் கொண்டிருந்தான்.

கார்த்திக்கு நெஞ்சை அடைத்தது.

அதற்குள்

அவர்கள் முறை வர

கையில் பழத்தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

சிவந்த நிறத்துடன் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு சாந்தமாக இருந்தார் பணிக்கர்.அவருக்கு முன்னே பெரிய பலகை இருந்தது.அதில் சோழிகள் இருந்தன.

கொண்டுவந்த தட்டை கீழே வைத்ததும் எதிரே அமர கை காட்டினார்.

தட்டிலிருந்த வெற்றிலையை எடுத்து ஒவ்வொன்றாகப் பார்த்து உதட்டை பிதுக்கினார்.

சகுனம் அத்தனை சரியாயில்லை.ஒரே குழப்பம்.பிரச்சனம் பார்ப்போம்”

என்றவர் போட்ட சோழியிலும் ஒன்றும் விளங்கவில்லை.

ஒருநிமிடம் கண்மூடி தியானித்தவர்

கார்த்திக்கிடம் சில கேள்விகள் கேட்க

அவன் அதற்கெல்லாம் ஆமாம் எனத் தலையாட்டினான்.

ஒரு பொரூளைப் பத்திரப்படுத்தி வச்சிருந்தா அது முக்கியமானதாத்தான் இருக்கணுமா?

அதிலென்ன சந்தேகம்?

உங்க அப்பா உங்களைப் பாதுகாப்பா தானே வச்சிருந்தார்? 

சட்டென அடிபட்ட மாதிரி நிமிர்ந்து பார்த்தான்.

பொருள் ஒன்று தான்.பார்க்கும் கண்கள் வெவ்வேறு.அதனால் தான் வெவ்வேறு மாதிரி புரிந்துகொள்கிறோம். இருக்கும் நொடியை யாரும் வாழ்வதில்லை.போனதை எண்ணி வருந்துவது அல்லது வருவதை எண்ணிக் கவலைப் படுவது..

மனித குணமே இப்படித்தான்.இதில் இறையையோ இயற்கையையோ தவறு சொல்வது தகுமா?

அவர் நிறைய பேசினார்.ஏதேதோ சொன்னார்.

கார்த்திக் தான் திருப்தியடையவில்லை.

உங்களுக்கு மனசு சமாதானமாகலைனா அஷ்டமங்களம் பார்ப்போம்.நாளை மறு நாள் டேட் இருக்கு.எங்கே தங்கியிருக்கீங்க?

கோழிக்கோடு..




கிட்டே தான்.நாளை காலை ஒரு பூஜை வச்சிருக்கேன் கலந்துகுங்க.

பிரச்சினைக்கு காரணமான அந்த பொருளை நான் பார்க்கணும்.

சிறு பேழையிலிருந்து அந்த சாவியை எடுத்துக் கொடுத்தான்.

பளபளவென்று வெள்ளியென மின்னியது அது.அதன் கொண்டை மற்றும் அடிப்பகுதி அபூர்வ வேலைப்பாட்டுடன் இருந்தது.

திருப்பித் திருப்பிப் பார்த்தவர் மெலிதாக சிரித்தார்.

அழகாகவும் விசித்திரமாகவும் இருக்கின்ற எல்லாமே உபயோகமாகவும் இருக்கணுங்ற அவசியமில்லை.may be a child’s toy.

முணுமுணுத்தவர்

போகலாம் என சைகை காட்ட இருவரும் எழுந்து வெளியில் வந்தார்கள்.

பலவித எண்ணங்கள் மனத்தினில் அலைமோத யோசித்தபடியே வந்தவனை அந்தக் குரல் கலைத்தது.

ஹே கார்த்திக்..ஸ்வேதா

வாட் ய சர்ப்ரைஸ்..

ஷைலு நின்றிருந்தாள்.

அதை நாங்க கேட்கணும்.நீ எப்படி இங்கே?

இது என் அங்கிள் வீடு.பத்து நாளைக்கு இங்கே தான் இருப்பேன்.உன்னைக் கூப்பிட்டேனே.நீ தான் எதுவும் பதிலே சொல்லலை.என்னைப் பார்க்கத்தான் வந்தியா? நான் அட்ரஸ் கொடுக்கலையே.

வெயிட்..வேயிட்.

நாங்க பணிக்கரைப் பார்க்க வந்தோம்.

ஓ..பார்த்தாச்சா? எங்கே தங்கியிருக்கீங்க? பக்கத்தில தான் என் வீடு.அங்கே தங்கிக்கலாம் வாங்க.

மூச்சு விடுடி. கோழிக்கோட்டில ரூம் போட்டூருக்கோம்.

அதெப்படி நானிருக்கிறப்ப ரூம் போடறது? இப்பவே காலி பண்ணிட்டு

வந்திடலாம் வா.

நாளைக்கு வரச் சொல்லியிருக்கார் அப்ப வர்றோம்.

நாளைக்கு இங்கே ஒரு பூஜை இருக்கு.வர்றீங்களா?




ஒரு மனோதத்துவ டாக்டருக்கும் பூஜைக்கும் என்ன சம்பந்தம்?

முதல்முறையாக கார்த்திக் வாயைத் திறந்தான்.

இரண்டுமே மனசு சம்பந்தப்பட்டது தானே.

எல்லாமே மனசு சம்பந்தபட்டது தான் கார்த்திக்.

சுருக்கென்றிருந்தது அவனுக்கு.. 




What’s your Reaction?
+1
4
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!