Entertainment கோகுலம் காலனி

கோகுலம் காலனி-9

9

மாலை சூரிய ஒளி அந்த கட்டிடத்தின் இளம் மஞ்சள் நிற பெயின்ட்டை ஒளிரச் செய்து கொண்டிருந்த்து .” கருணா மெஸ் ” என்ற பெயர் கட்டிடத்தின் முகப்பில் ப்ளோரசன்டாய் மின்னியது .வாசலருகே வரும் போதே உணவுப் பொருடகளின் கலவையான மணம் நாசியை தீண்டி நாவை சுரக்க வைத்து பசியை தூண்டியது .

இந்த மணம்தானே சமையலின் வெற்றி .ஒரு கப் காபி போதுமென்ற எண்ணத்துடன் உள்ளே வருபவர்களை முழு சாப்பாடும் உண்டு திருப்தியோடு வெளியேற்றுவதுதானே இத் தொழிலின் மேன்மை .இதோ இங்கே நந்தகுமாரனின் கீழ் இயங்கும் இச் சிறு உணவகத்தில் நிறைவும் , தொழிலும் பிணைந்து  வெகு ஜோராக நடப்பதை ராகவி உணர்ந்தாள் .

எல்லா தொழிலிலும் மன நிறைவு கிடைத்து விடலாம் .ஆனால் நிரம்பிய வயிற்றுடனான தன்னிறைவு .அது இந்த உணவகத் தொழில்தானே கிடைக்கும் …? நந்தகுமாரின் உணவு வழங்கும் இந்த தொழில் முன் எப்போதுமில்லாமல் ராகவியை மிக வசீகரித்தது .

” இப்போது அவனை ஏன் போய் பார்க்க வேண்டுமென்கிறாய் …? ” முரளிக்கு தங்கையின் ஐடியாவில் பிடித்தமில்லை .

” அண்ணா பாவம்ணா .அவர் உனக்காக வேலைக்கு கூட ஏற்பாடு செய்தார்தானே …? அவருக்காக இதை நாம் செய்யக்கூடாதா …? ” 

” ஆமாம் பெரிய வேலை … ” முரளியின் முணுமுணுப்பு காதில் விழுந்தாலும் மனதில் பதியாமல் அண்ணனை அவசரப்படுத்தினாள் ராகவி .

” உன் ப்ரெண்டுக்காக வா அண்ணா .சுகவனம் சார் சொல்ல சொன்னாரே …?நம் காலனியில் ஒருவர் பெரிய த்ரீ ஸ்டார் ஹோட்டல் ஓனரானால் நமக்கும் பெருமைதானே அண்ணா …? ” மனதில் பட்ட எதை எதையோ பேசி முரளியை இழுத்துக் கொண்டு வந்திருந்தாள் .

” ஏய் ராகா நம்ம கருணா மெஸ்ஸா இது …? எப்படி மாறிடுச்சு பாரேன் …” முரளியின் வியப்பே ராகவிக்கும் .

கருணா மெஸ் அவர்கள் காலனியில் ஒருவருக்கு சொந்தமானதுதான் .ஆரம்பத்தில் நன்றாக ஓடிய அந்த கடை கடந்த இரண்டு வருடங்களாக பெரிய சரிவை அடைந்த்து .கடை உரிமையாளரின் மகன் , மகள் நன்றாக படித்து திருமணம் ,வேலையென வெளியூர்களில் செட்டிலாகி விட , தொழிலை தொடர முடியாமல் கடையை மூடி விடும் எண்ணத்தில் இருந்தார் உரிமையாளர. .

ஆறு மாதம் கடையை எனது பொறுப்பில் விடுங்கள் .நான் கடையை  பழைய மாதிரி மாற்றித் தருகிறேனென நந்தகுமார் அவரடம் பேசி ஒப்பந்தம் போட்டு இப்போது கடையை நடத்திக் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர் .இரண்டாவது மாதமே கடை புது பொலிவுடன் விழித்து விட்டது .இப்போது வெகு வேகமாக பழைய வியாபாரத்தையும் தாண்டி உயர்ந்த இடதநிறகு சென்று கொண்டிருக்கிறது. மெஸ் ஓனர் கடையை நந்தகுமாரையே வாங்கிக் கொள்ளும்படி சொல்லிக் கொண்டிருக்கிறர் .

இந்த விபரங்கள் அனைத்துமே காலனி முழுவதும் பொறாமையும் , ஆச்சரியமுமாக பேசப்பட்டுக் கொண்மிருப்பவைதான் . சுந்தராம்பாளை எதிர்கொள்ள பய்ந்து முரளியை இழுத்துக் கொண்டு நந்தகுமாரின் வியாபார இடத்திற்கு வந்திருந்தாள் ராகவி .

” பாரேன் அண்ணா  பட்லர் என்று கிண்டலாக நாம் பேசிய ஆள் .அந்த தொழிலிலேயே எப்படி உயர்ந்திருக்கிறார் ..இந்த கடை போக அந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலையும் வாங்க நினைத்திருக்கிறார் .” 

” ம் …அப்படித்தான் போல …” முரளி அரை மனதாக தலையாட்டினான் .

” எங்கே அண்ணா உன் ப்ரெண்ட் …? ” ராகவியின் கணகள் ஹோட்டலின் கல்லாவை ஆராய , அங்கே ஒரு அரை வழுக்கை ஆள் பில் வாங்கிக் கொண்டு பணம் வாங்கி மீதம் கொடுத்துக் கொண்டிருந்தார் .

” தெரியவில்லையே ” முரளியும் கண்களால் சலிக்க , ” அண்ணன் அடுப்படியில் இருக்காருங்க .போய் பாருங்க …”டேபிள் துடைத்துக் கொண்டிருந்த  தகவல் தந்த சிறுவன் அவர்கள் காலனியை சேர்ந்தவன் .

” டேய் நீ ஸ்கூலுக்கு போகவில்லையா …? ” 

” ஸ்கூல் முடிஞ்சு வந்திருக்கிறேண்ணா. இது எனக்கு பார்ட் டைம் ஜாப் .பாரினிலெல்லாம் இப்படித்தான் படிக்கும் போதே பார்ட் டைம் ஜாப் பார்த்து சம்பாதிப்பாங்களாமே .நந்தன் அண்ணாதான் இந்த விபரமெல்லாம் சொல்லி எனக்கு இங்கே வேலை போட்டுக் கொடுத்தார் …” சாதனை செய்து கொண்டிருக்கும்  பெருமிதம் அந்த சிறுவனிடம் .

அந்த சிறுவனின் அப்பா கொத்தனார் .அம்மா சித்தாள் .அன்றாடம் கூலி வேலை கிடைத்நால்தான் உணவு உனும் நிலையிலுள்ள குடும்பம் அது .அவர்களுக்கு தன்னாலான உதவியை செய்திருக்கிறான் .ராகவியின் மனதில் நந்தகுமார் மேலும் உயர்ந்தான. 




” அண்ணா நந்தகுமார் நாம் நினைத்ததை விட நல்லவர் போலத்தான் தெரிகிறது …” 

” ஆமாம் ராகா .முன்னெல்லாம் அவன் கெட்டவனாகத்தானே இருந்தான் .. எப்போது திடீரென நல்லவனானான் …? ” முரளியின் குழப்பமே ராகவிக்கும் .

எப்போது இந்த நந்தன் அவர்கள்காலனிவாசிகளுக்கு மட்டிமின்றி அவளுக்குமே  கோகுல கண்ணன் ஆனான் என்று அவளுக்கு புரிபடவேயில்லை .இதோ இப்போது இங்கே வரும் முன் காலனி கோவிலுக்குள் நுழைந்து ஒரு அவசர கும்பிடு போடும் போதும் அங்கே கண்ணன் மறைந்து நந்தனே நின்றான் கையில் புல்லாங்குழலிசைத்தபடி . அருகே அவனை உரசி நின்ற ராதை நானாக இருக்க கூடாது …அப்படி இருந்தால் எனக்கும் அந்த கீதாவிற்கும் என்ன வித்தியாசம் …வேண்டலுடன் ராகவி கண்ணன் அருகை பார்க்க அங்கே தலை போர்த்திய முந்தானையை இடது கை நுனி விரலால் இழுத்து பிடித்தபடி , வலது கையால் கண்ணனின் தோள் தொட்டு நின்றவள் சர்வ நிச்சயமக அவளே …

கிருஷ்ணா …முகுந்தா ஏனப்பா என்னை இப்படி சோதிக்கிறாய் ….புரிபடா ஓர் ஏக்கமோ… நிறைவோ பரவிய மனதுடன் தான் அங்கிருந்து இங்கே வந்திருந்தாள் .இதோ …இங்கே இப்போது அந்த கோகுல கண்ணன்…சீ கோகுலம் காலனி நந்தன் அடுப்பின் முன் புகை மூட்டத்திற்கிடையே நின்றிருந்தான் .

மடித்து கட்டிய வேட்டியும் , தலையில் சுற்றிய   தலைப்பாகையுமாக இருந்தானில்லை . மடிப்பு கலையாத முழு வெண்ணிற சட்டை , பேன்டும் , நீள வெண்ணிற பட்லர் தொப்பியுமாக , ஐந்து நட்சத்திர ஹோட்டல் பணியாளர் தோற்றத்தில் இருந்தான் .சட்டியை தூக்கிப் போட்டு அவன் குலுக்கிய ஏதோ ஓர் உணவுப் பண்டத்திலிருந்து எழுந்த மணம் அடுப்படி முழுவதும் பரவ , அடர்த்தியாய் எழுந்த புகையை இழுத்து உறிஞ்சிக் கொண்டிருந்த்து மேலிருந்த சிம்னி . 

இவர்கள் இருவரையும் பார்த்ததும் புருவத்தை உயர்த்தினான் .காத்திருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு தான் தயாரித்துக் கொண்டிருந்த பண்டத்தின் பக்கவத்தை அருகிலிருந்த பணியாளுக்கு தொடர்ந்து விளக்கி முடித்து விட்டு , இன்னமும் அங்கே தயாராகிக் கொண்டிருந்த மற்ற பண்டங்களையும் மேற்பார்வையிட்டு திருத்தங்கள் சொல்லி ருசி சோதித்து முடித்த பின்பே இவர்கள் பக்கம் திரும்பினான் .

இதே மெஸ்ஸின் சமையலறையை ராகவி முன்பு தன் தந்தையுடன் வரும் போது பார்த்திருக்கிறாள் .அழுக்கும் , பிசுக்கும் , புழுக்கமுமாக இருக்கும் .இப்போதோ பளபளப்பும் , மணமும் , காற்றோட்டமுமாக இருந்தது . நந்தகுமார் சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் அந்த இடத்தை மாற்றியிருந்தான் .ராகவிக்கு அவன் செயலை வியக்காமல் இருக்க முடியவில்லை .

” என்ன விசயமாக வந்தீர்கள் …? ” அவர்களை கூட்டிப்போய் தனி அறையில் அமர வைக்கவில்லை .ஹோட்டல் அடுப்படியை ஒட்டி இருந்த சிறிய வராண்டாவிற்கு அழைத்து போய் நின்றபடி பேசினான் .

” நீ என்னடா முதலாளியாக  கல்லாவில் உட்காராமல் கரண்டி பிடித்துக் கொண்டு இருக்கிறாய் …? ” கேள்வி கேட்ட முரளியை கூரந்து பார்த்தான் .ராகவியை முறைப்பாய் பார்த்தான் .

” இதனை கேட்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள் ? ” 

” இ…இல்லை …” அண்ணன் தங்கை இருவருக்குமே பேச்சில்  தடுமாற்றமே ….

” உன் வேலை என்ன ஆயிற்று ? ” முரளியை அதட்டினான் .

” அ…அது …” முரளி தடுமாற ராகவிக்கு நந்தகுமார் பேச்சை மாற்றுவதாக தோன்றியது .

” முதலில் அண்ணனின் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் ” 

கண்களை சுருக்கி ராகவியை பார்த்தவன் உதடசைத்தான் .திமிராக …” முடியாது .போடி …” ராகவி அதிர்ந்தாள் .முரளியை பார்க்க அவன் முகம் தவிப்பு காட்டியது .




நந்தகுமார் வராண்டாவின் பக்க படிகளில் இறங்கினான் .” டேய் வாடா .உன்னிடம் பேசனும் ” ஒற்றை விரலாட்டி முரளியை அவன் பின் அழைத்தான் .

அதெப்படி எனும் ராகவியின் ஆட்சேபனையை தள்ளி முரளி அவன் பின்னால் செக்கு மாடானான் .இருவருமாக கொஞ்சம் தள்ளிப் போய் நின்று பேச துவங்கினர். காதில் விழாத அவர்களின் கார சார கையசைவுகளில் ராகவி நகம் கடித்தாள் .

அப்படி என்ன பேசிக் கொள்கிறார்கள் …? 

நந்தகுமார் எதையோ வலியுறுத்த முரளி முழுமூச்சாக அதனை மறுத்துக் கொண்டிருந்தான் .ராகவி வேக நடையுடன் அவர்களருகே போய் முரளியின் கை பற்றி இழுத்தாள் . ” கண்டவர்களுடன் என்ன பேச்சு ? வா  அண்ணா போகலாம் .” 

அருகே போகும் போது ” இன்னமும் இரண்டே நாட்கள்தான் உனக்கு டைம் .அதற்குள் நீ கிளம்பியாக வேண்டும் ” என்ற நந்தகுமாரின் எச்சரிக்கை அவள் காதுகளில் விழுந்த்து . அந்த மிரட்டல் அவளது வேகத்தை அதிகப்படுத்தி அண்ணனின் கை பற்றி இழுக்க தூண்டியது .

நந்தகுமார் முறைக்க முறைக்க முரளி வேகமாக தங்கையின் கை பிடியில் கிளம்பி விட்டான் . பார்வையிலிருந்து மறையும் வரை அவர்களை முறைத்தபடி நின்றிருந்தான் நந்தகுமார் .

” கண்ணை நோண்டனும் ” அவனை வைதபடி ” என்ன பிரச்சனை அண்ணா ? அவன் ஏன் உன்னை மிரட்டுகிறான் ? ” விசாரித்தாள் .

” விடும்மா அது ஒரு சப்பை மேட்டர் .அடடாஅவனை பார்க்க வந்த விசயத்தை மறந்து விட்டோமே …” முரளி கையை உதற ராகவிக்கும் அந்த கவலையே பிரதானமானது .

அவன் தொழில் என்னாவது …? ஐயோ பொறுமையாக சொல்லி விட்டு வந்திருக்கலாமே …கவலை பட துவங்கினாள் .




What’s your Reaction?
+1
27
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!