Short Stories sirukathai

“காத்திருப்பேன் கண்ணாளா” (சிறுகதை)

அது பெங்களூர் ரயில் நிலையம்,. ரயிலின் கடைசியாக இணைக்கப்பட்டிருந்த ,ஜெனரல் கோச்சில் அடித்துப் பிடித்து ஏறி ஜன்னலோர இருக்கை லாவகமாக பிடித்து அமர்ந்திருந்தான் முகிலன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வெளியில் நின்று கொண்டிருந்த தாய் மற்றும் தங்கையை பார்த்தான்.

தாயின் கண்களை சுற்றிலும் கருவளையம், நகை எதையும் காணாத காதுகள், புன்னகை எதையும் அறிந்திறாத உதடுகள், கருணையற்ற கடவுளால் மூலியான நெற்றி ,தாயின் கண்கள் முழுவதும் ஏக்கமும் எதையும் சாதிக்க முடியாத பிரயாசையும் நிறைந்து கிடந்தது..

அருகிலேயே தங்கை கீதா, . இவ்வளவு நாளாக திருமணக் கனவுகளை சேர்த்து வைத்திருந்த அந்தக் கண்களில் தன் வாழ்விலும் அது நடக்குமா??!! என்ற ஏக்கம் இருந்த அந்த விழிகளில் !!அது நிறைவேற போகும் ஆர்வம் வழிந்தோடி கொண்டிருந்தது.

“முகில் பார்த்து போயிட்டு வாடா” கிளம்பியதிலிருந்து நூறு முறையாவது அம்மா இதை சொல்லி இருப்பாள். அம்மாவிடம் புன்னகையுடன் தலையாட்டினான்.  தங்கையின் கன்னங்களை தட்டி கிளம்புகிறேன் என்று சொன்னான். . ரயில்  முன்னோக்கிச் செல்ல, முகிலனின் நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தன.




சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்…. அவன் கல்லூரி காலங்களை அவன் நினைவலைகள் வட்டமிட ஆரம்பித்தன.

“டேய் முகிலா” முதலில்

அதட்டலாக “டேய் முகி “

பிறகு கொஞ்சலாக “முகி” ்கிறக்கமான அவளது குரல் அவன் காதுகளை சுற்றிலும் ரீங்காரமிட ஆரம்பித்தது.

” விஜயா..” விஜி”…..” புஜ்ஜி”…….

பதிலுக்கு அவனது குரலும் குழைந்தது.

சென்னை நகரின் ஏதோ ஒரு மூலையில் உள்ள… ஏதோ ஒரு தியேட்டரில்… ஏதோ ஒரு இருட்டு முலையில்… ஏதோ ஒரு  இருக்கையில்… இருவரும் அமர்ந்து தங்கள் காதலை ஒத்திகையை பார்த்துக் கொண்டிருந்தனர்.




எப்படிப்பட்ட காலங்கள் அவை, ஓடாத தியேட்டர்கள். ஆளில்லாத பார்க்குகள். மனித சஞ்சாரம் இல்லாத பீச்சின் மூளைகள்.  “தித்திக்க தித்திக்க” காதல் வளர்த்த நேரங்கள் அவை.

படித்து முடித்துவிட்டு வேலைக்கு என்று ஏறிய பொழுது தான் வாழ்வின் நிதர்சனம் புரிந்தது. “ஏண்டா” அவனவன் இங்க எவ்வளவு பெரிய காலேஜ்ல  படிச்சிட்டு  ஒரு பில்டிங்குக்கு கூட பிளான் போட வாய்ப்பு கிடைக்காம சுத்திக்கிட்டு திரியுறான். ஆனா  நீ படிச்ச ஒன்ரையனா காலேஜுக்கு உடனே நீ இஞ்சினியர் ஆயிருணுமோ.!? ‘போடா ‘ போயி கொத்தனார் என்ன செய்கிறார் என்று பார்.

இந்த வசனங்களை பேசியது பெரிய ஆர்க்கிடெக் ஒன்றும் இல்லை பில்டிங் மேஸ்திரி தான். நொந்து நூலாகிப் போனான்.

வீறு கொண்டு வீடு திரும்பி விடுவதற்கு வீட்டில் ஒன்றும் தங்கமும் வெள்ளியும் கொட்டிக் கிடக்கவில்லை. ஊரின் தெருக்கோடியில் டீக்கடை வைத்து  எச்சில் கிளாஸ்கழுவுவதுதான் தந்தையின் வேலை.

” அவர் அங்கே கழுவட்டும்”…” நாம் இங்கே கழுவுவோம்”. பில்டிங் காண்ட்ராக்டரும் மேஸ்திரியும் குடித்த டீ டம்ளர்கள் ” நலமா முகிலன்” என்று கேட்டது.

” நான் ஒரு கிறுக்கன்” இந்தக் கதையை எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறேன். ஆரம்பிப்பதற்கு இடமா இல்லை

“விஜி” .
” அழகே அழகான என்னுடைய விஜி”..”

எனக்கே எனக்கான என்னுடைய விஜி

என் தாயினும் அதிகமாக அவள் என்னை நேசித்திருந்தாள்  என்பதை நான் அறிந்த தருணம் அது….

அந்த தருணம்…….

‘விஜி ”முகில்’ இருவரும் கைகோர்த்தபடி மெதுவாக நடந்து ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டனர். அப்போது முகிலனின் கால்கள் ரயில் தண்டவாளத்தின் இடையே வசமாக சிக்கிக் கொண்டது.

முகி என்ன ஆச்சு ..




ஏய் கால் மாட்டிகிடுச்சு ‘டி “

“மாட்டிக்கிச்சா” இதுக்கு தான் வாய் அதிகமா பேசக்கூடாதுன்னு சொல்றது. சரிப்பா நீ இங்கே இரு நான் போயிட்டு வரேன். “டாட்டா” …பை…பை

சொன்னதோடு இல்லாமல் உதடு குவித்து அழகு காண்பித்தாள்  விஜி.

‘ஏய்’ விளையாடாதப்பா நெஜமாவே கால் மாட்டிக்கிட்டது எடுக்க வரமாட்டேங்குது.
சரிப்பா அதுக்கு நான் என்ன செய்ய முடியும் உன்னோட கால் நீ தான் எடுக்கணும். என்று நாட்டியம் ஆடும் பெண் போல் அபிநயம் பிடித்து இடுப்பை ஒருபுறமாக சாய்த்து வெவ்வே காட்டினாள் விஜி.       அப்பொழுது தூரத்தில் ரயில் வருவதற்கு உண்டான அறிகுறி தெரிய ஆரம்பித்தது.

‘ ஏய் மாப்ள’ ரயில் வருது பார் இப்போ உன்னோட கால் தன்னால வெளில வரும்.
‘ ஏய் சண்டாளி’ நெஜமாவே கால் வரல டி

முகில் நீ நிஜமாத்தான் சொல்றியா? ஆமாம்பா கால் நல்லா வசமா மாட்டிக்கிச்சு.

இப்பொழுது அவனது காலின் அருகே அமர்ந்த விஜி அதை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஏற்கனவே கடற்கரைக்கு சென்ற பொழுது செருப்பை கடல் அலையில் விட்டு விட்டபடியால் வெறும் காலில் நடந்து வந்த முகிலனின் கால் மிகக் குறுகலான தண்டவாள இடைவெளியின் இடையே ஒரு பக்கமாக சாய்ந்து உள் நுழைந்து திருப்பி எடுக்கவும் மேலே உருவமும் வலி இல்லாமல் சிக்கலாக மாட்டிக்கொண்டிருந்தது. முதலில் காலை எடுப்பதற்கு சாதாரணமாக முயற்சித்த விஜி பிறகு முழுமூச்சில் முயற்சித்தாள். இன்னும் சிறிது  முயற்சித்திருந்தால் நிச்சயம் காலை எடுத்து இருக்கலாம். ஆனால் ரயில் அதற்கு வழி விட தயாராக இல்லை.

அவசரத்தில் அண்டாக்குள் கூட கை நுழையாது என்பார்கள். ரயில் வரும் அவசரத்தில் காலை எப்படி எடுப்பது என்று தெரியாமல் முன்னுக்குப் பின் முரணாக இருவரும் வேறு வேறு திசைகளில் இழுக்க, அது நன்றாக முழுமையாக மாட்டிக்கொண்டது. இப்பொழுது இருவரையும் பயம் தொற்றிக் கொண்டது.




” விஜி”.. ரயில் வருவதற்கு முன்னால் காலை எடுப்பது சாத்தியமாக எனக்குத் தெரியவில்லை.’ நீ போய்விடு’

என்ன சொல்கிறாய் முகில் !!!!

தமிழில் தானே சொல்கிறேன் நீ போ!!!

எங்கே போகச் சொல்கிறாய்..??

கேள்வி கேட்காதே இப்பொழுது என்னை விட்டு விலகிப் போ ..

விலகி நின்று ரயில் உன் மீது ஏறுவதை வேடிக்கை பார்க்க சொல்கிறாயா!!!

பேசாதே விஜி.. நேரம் இல்லை தள்ளிப்போ. அவளை நெட்டி தள்ளினான் முகிலன்.

தரையில் எரிந்த பந்து எவ்வளவு வேகத்தில் மேல் எழுந்துந்து வருமோ, அதேபோல் முகிலனால் தள்ளப்பட்ட விஜி தள்ள பட்ட வேகத்தை விட மும்மடங்கு வேகத்தில் பாய்ந்து வந்து முகிலனை அணைத்துக் கொண்டாள்.

“செத்துருவேன் முகி” இப்போ உன்னை விட்டு என்னைய மட்டும் தனியா போக சொன்னா செத்துருவேன்.

இங்கே நின்னா மட்டும் என்ன செய்யப் போகிறா.?

சந்தோசமா இருப்பேன்..!! அழுத்தமாக வந்தது விஜியின் பதில்  சொன்னதோடு நில்லாமல் ‘இறுக்கமாக’, ..’மேலும் இறுக்கமாக,’.. ‘முகிலனை தன்னுள் புதைத்துக் கொள்ளும் ஆர்வத்துடன்’, .’அவனோடு அவனாய் கலந்து விடும் வெறியுடன்’ தறி கெட்டு ஓடிவரும் ரயில் வந்து மோதினாலும் முகிலனை கட்டி அணைத்து இருக்கும் தன் பிடி தளர்ந்து விடக்கூடாது என்ற வேகத்துடன் முகிலனை இறுக்கி அணைத்தாள்.. .

“இப்பொழுது அவனும்”….

இருவரும் கண்களை இறுக மூடிக் கொள்ள, இதோ இன்னும் சில வினாடிகள் தான். அந்த இரும்பு ராட்சசன் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வந்து தட்டார் என்று நம் மீது ஒரு மோதல்…

“அவ்வளவுதான்” அதன் பிறகு எதுவும் தெரியப் போவதில்லை. அமைதி…. அமைதி …..முழுவதுமான அமைதி…. “இதோ இதோ’.. இந்த நொடி…. அது நடக்கத்தான் போகிறது. என்று  எண்ணி இருந்த பொழுது,.. திடீரென்று அவர்களுடைய காதுகளுக்கு அவர்களை சுற்றி நின்று பெரும் கும்பல் ஒன்று விசில் அடித்து ஆர்ப்பரிப்பது போன்ற ஒரு சத்தம் கேட்டது.

மெதுவாக மிக மெதுவாக இருவரும் கண்களைத் திறந்தனர். அய்யய்யோ நாம இன்னும் சாகலையா..?

இது என்ன..? ரயில்ல வந்தவங்க அத்தனை பேரும் நம்மள சுத்தி நிக்கிறாங்க,.!!..!!

” தல”..” சூப்பர் கிஸ் தல” கலக்கிட்ட.

கூட்டத்தில் ஒருவன் உரக்க கத்த, அப்பொழுதுதான் விஜியின் உதடுகளை தன் உதடுகள் கவ்வியிருப்பதை உணர்ந்தான் முகிலன்.

இருவரையும் அவமானம் பிடுங்கி தின்றது. நல்ல நேரம்பா செயின் பிடிச்சு இழுத்து வண்டிய நிப்பாட்டினேன்.

” ஐயோ இவங்க எல்லாரும் மத்தியிலும் இப்படி நிற்கிறதுக்கு பேசாம ரயில் நம்ம மேல ஏறி இருக்கலாம்” அவமானத்தில் குறுகிய விஜி முகிலனை தள்ளிவிட்டு குதித்து ஓட ஆரம்பித்தால் .

படித்து முடித்ததும் இருவரும் பிரிந்து செல்லும் நேரம் வந்தது.

“முகில்” என்னை மறந்து விடுவாயா??




என் மேல் சந்தேகமா விஜி

‘பயம்: முகில் ‘பயம்’

என்ன பயம்?

சொல்ல தெரியலை பா…!!!?

இங்க பார் ஒரு நிலையான வருமானம் வந்த மறு நொடி உன் முன் தாலி கயிற்றோடு நிற்பேன் இது உறுதி.

அந்த வருமானம் எப்போது வரும் விஜியின் கண்களில் கண்ணீர்

விஜி… விஜி மா ….சின்ன குழந்தை போல் அழாதே. நாம் இருவருமே இஞ்சினேயர் அதை மறக்காதே

இன்றிலிருந்து நம் வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதோ பேசிக் கொள்வதோ இல்லை என்ற முடிவை எடுக்க வேண்டும்.

நம்முடைய இந்த முடிவு நம் வாழ்க்கையில் நாம் விரைந்து நிலை பெற உதவியாக இருக்கும்.

நிச்சயமாய் நான் உன்னை தேடி வருவேன் விஜி….

”  காத்திருப்பேன் கண்ணாளா” அவன் கன்னத்தை தட்டி சிரித்தபடி கூறினால் விஜி .
நேற்றுதான் நடந்தது போல் இருந்த இந்த சம்பவம் நடந்து நாட்கள் உருண்டோடி விட்டது.




அவ்வளவுதான், இருவரும் தங்களுடைய மொபைல் எண் உட்பட அனைத்தையும் மாற்றிக்கொண்டனர். ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதற்கு எந்த ஒரு வழியையும் ஏற்படுத்திக் கொள்வதில்லை என்ற உறுதியை ஏற்படுத்தினார் .

“ஐயோ”…. சென்னை வந்து விட்டதா.!!?? நான் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமா.?? நிச்சயமாக நான் விஜியை பார்த்தாக வேண்டுமா.?? அவளைப் பார்த்து நான் என்ன சொல்ல போகிறேன்?? நான் சொல்லப் போவதை அவள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறாள்.??

எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் செல்லும் பேருந்தில் ஏறினான்.

மீண்டும் மனம் வேகம் பிடித்தது இன்னும் அரை மணி நேரம்தான், விஜய்யின் வீடு இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம்..

என்ன செய்யப் போகிறேன்? .எங்கே ஆரம்பிக்கப் போகிறேன்? .டீக்கடை நடத்திக் கொண்டிருந்த என் தந்தை நெஞ்சு வழியில் இறந்து போனார் என்று ஆரம்பிக்கவா? அல்லது இன்ஜினியரிங் படித்துவிட்டு அதே கடையில் டீ கிளாஸ் கழுவியதில் ஆரம்பிக்கவா?? நான்கு ஆண்டுகளாக இன்னும் நயா பைசா கூட சேமிக்காத கதையை கூறி கதறி அழுது ஆஃம்பிக்கலாமா ??  முதலில் நான் எதை செய்ய வேண்டும்??

ஃபாரினில் வேலை என்று சொல்லி இருந்த நிலத்தையும் விற்று கட்டி ஏமாந்து போன கதையைச் சொல்லவா?? “ஐயோ” விஜி உன்னிடம் நான் எதை முதலில் சொல்லப் போகிறேன். அமெரிக்காவில் இருந்து வந்த என் அத்தை மகன் என் தங்கை கீதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் என்று சொல்லவா?? அதே அத்தை மகன் அமெரிக்காவில் எனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறியிருக்கிறான் என்று சொல்லவா?? அவனுடைய குருட்டுத் தங்கையை என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்கிறான் என்று சொல்லவா?? நான் எதைச் சொல்வேன் விஜி உன்னிடம்..

பேருந்து திருவான்மியூர் நிறுத்தத்தில் நின்றிருந்தது வெறும் கூடாய் பேருந்தில் இருந்து இறங்கினான் முகிலன்.

விஜியின் வீடு இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ஒருவேளை என் விஜியால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நான் அந்த இடத்திலேயே செத்துப் போய் விட வேண்டும் .

எப்படி?

எப்படியோ??

அது என்ன எப்படியோ எப்படி சாகப் போகிறாய் சொல்

விஷத்தை குடிப்பேன். தூக்கில் தொங்குவேன். ரயிலில் போய் விழுவேன். வாழ்வதர்தான் கஷ்டம். சாவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

சரி நீ செத்த பிறகு உன் தங்கை கீதாவின் திருமணம் நடந்து விடுமா?

அம்மாவின் வாழ்க்கை வெறுமை விலகிவிடுமா??

அவர்கள் என்ன ஆவார்கள் ஆயிரம் முறை ஆயிரம் விதமாய் அவனுடைய மனசாட்சி அவனைக் குறுக்கு விசாரணை செய்து கொன்று கொண்டிருந்தது.

இதோ விஜியின் வீடு வந்து விட்டது.  நடுங்கும் விரல்களால் வீட்டின் காலிங் பெல் சுச்சை அழுத்தினான்.

மணி ஒலித்தவுடன் வீட்டிற்குள் சலசலப்பு காலடி சத்தம் கேட்க ஆரம்பித்தது.

இதோ வந்து விட்டாள்.

வரப்போகிறாள்.

கதவைத் திறந்து விட்டாள்.

திறக்கப் போகிறாள். கதவைத் திறந்ததும் வந்து என்னை வாரி அணைத்துக் கொள்ளப் போகிறாள்.

எப்படி உன்னால் இத்தனை ஆண்டுகள் என்னை பார்க்காமல் இருக்க முடிந்தது என்று என் மார்பில் குத்த போகிறாள்.

நான் என்ன செய்ய வேண்டும். முதலில் அவளுடைய அணைப்பில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டுமா?

சட்டென்று கதவு திறந்தது ……அவள் தான் …அவளே தான்.. இதோ கதவை திறந்து விட்டாள்.

இது என்ன இவளுக்கு 60 வயதிற்கு மேலே இருக்கும் போலையே???!! “முட்டாள் முட்டாள்” கதவை திறந்து இருப்பது அவள் அல்ல அவளின் அம்மா.

கண்களை சுருக்கிக் கொண்டு அவனை பார்த்த அந்த பெண்மணி நீ யாருன்னு எனக்கு தெரியலையேப்பா என்று கூறினாள் .

அம்மா என்னைய தெரியலையா நான் முகிலன். நம்ம விஜி கூட காலேஜில் ஒன்றாக படித்தவன். நான் அவள் கூட ஒன்று இரண்டு தடவை வீட்டிற்கு கூட வந்திருக்கிறேன்.

இப்பொழுது அந்தப் பெண்மணி அவனை உணர்ந்து கொண்டு சிறிது புன்னகையுடன் கதவை அகலமாகத் திறந்து அவனை வீட்டிற்குள் வர அனுமதித்தாள்.




“என்னப்பா நீ எப்படி இருக்கிற?”கேள்வியோடு அவன் அமர்வதற்கு நாற்காலியை நகர்த்தினாள்.

இருக்கேன் மா.

“சரி பொறு, உனக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாரேன்”.

இல்லம்மா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்,”விஜி எங்கே”??

அவளுக்கு என்னப்பா அவ ரொம்ப நல்லா இருக்கா .

இல்லை இப்ப விஜி எங்க இருக்கான்னு கேட்டேன்.

நீ உனக்கு கல்யாணம்னு சொல்லி பத்திரிக்கை வைக்க தான வந்திருக்க? முகிலன் லேசான திணறலுடன் ஆம் என்று தலையை மேலும் கீழும் அசைத்தான்.

ஆனால் இந்தக் கழுதை நண்பர்கள் யாருக்கும் எந்த தகவலும் தராமல் இப்பொழுதுதான் இரண்டு மாதத்திற்கு முன்பு தன்னுடைய திருமணத்தை முடித்துக் கொண்டாள். இப்பொழுது கனடாவில் கணவனுடன் இருக்கிறாள்.

முகிலனுக்கு காலுக்கு அடியில் தரை நழுவியது .

படிப்பு முடிந்ததும் அவளுடைய படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு போனாள். பேஸ்புக்கில் கனடாவில் இருந்த ஆர்கிடெக் ஒருவரின் பழக்கம் இவளுக்கு ஏற்பட்டது .அவர் மூலமாக இவளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைத்தன .என்று அந்த அந்தப் பெண்மணி ஏதேதோ கூறிக்கொண்டு செல்ல அது எதுவும் முகிலனின் காதுகளில் விழவில்லை.

திடீரென்று  சிரித்தான். சிறிது நேரத்திலேயே அழுதான் .அவனுடைய இந்த வினோத செய்கையால் அவனை மிரட்சியுடன் பார்தாள் விஜியின் தாய்.

‘காத்திருப்பேன் கண்ணாளா’

விஜி கடைசியாக அவனிடம் பேசிய வார்த்தை.




What’s your Reaction?
+1
4
+1
9
+1
0
+1
3
+1
0
+1
3
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!