Cinema Entertainment

சினிமாவே வேண்டாம் என போய்விட நினைத்த சில்க் ஸ்மிதா…

 80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. ஆனால், கதாநாயகியாக என்றால் இல்லை. கவர்ச்சி கன்னியாக, கனவு கன்னியாக அவர் முன்னிலையில் இருந்தார். ஆந்திராவை சேர்ந்த சில்க் ஸ்மிதா வண்டிச்சக்கரம் என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் பல படங்களிலும் நடித்தார். ரசிகர்கள் அவரை சிலுக்கு என்றே அழைத்தனர்.




சிலுக்கின் முகம் போஸ்டரில் இருந்தால் போதும். ரசிகர்களின் கூட்டம் தியேட்டரில் அலைபாயும். எனவே, ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ் என 80களில் பலரின் படங்களின் வெற்றிக்கும் சில்க் ஸ்மிதா தேவைப்பட்டார். ஓரிரு காட்சிகளில் நடித்துவிட்டு ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிவிட்டு செல்வார்.

கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமைய வேண்டும் என சிலுக்கு ஆசைப்பட்டார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அப்படி ஒரு வேடத்தை அவருக்கு பாரதிராஜா கொடுத்தார். இப்படத்தை பார்த்த எம்.ஜி.ஆர் முதல் பலரும், சிலுக்கு இதுபோன்ற வேடங்களில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அவருக்கும் அந்த ஆசை இருந்தது.




ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை கவர்ச்சி கன்னியாக மட்டுமே பார்த்தது. கிராமப்புற வேடங்களிலும், கவர்ச்சி நடனமாடும் பெண்ணாகவும் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அவருக்கு வித்தியாசமான வேடங்களை கொடுத்தவர் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா. அவரின் படங்களில் நகரத்து பெண்ணாகவும், பணக்கார பெண்ணாகவும் நடித்திருக்கிறார்.

பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்திலும் கமல் மீது ஆசைப்படும் பணக்கார பெண்ணாக வருவார். பொன்மேனி உருகுதே என்கிற பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பார். ஒருமுறை இந்த பாடலில் நடித்தது பற்றி பேசிய சிலுக்கு ‘பெரிதாக உடை எதுமில்லமால், காலில் செருப்பு கூட இல்லாமல், ஊட்டி குளிரில் அந்த பாடலில் கமலுடன் நான் நடனமாடியபோது கதறி அழுவேன். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு போய்விடலாம்’ என்று கூட நினைத்திருக்கிறேன்.

ஆனால், அப்பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு அற்புதமாக இருந்தது. தியேட்டரில் அந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தபோது நான் பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோனது. அந்த படத்திற்கு பின் அதுபோல எனக்கு நிறைய நல்ல வேடங்களும் கிடைத்தது’ என சில்க் ஸ்மிதா கூறியிருக்கிறார்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!