Entertainment

100 ரூபாயுடன் கிராமத்தை விட்டு வந்தவர் இப்போது ரூ.200 கோடிக்கு அதிபர்..!

வெற்றியடைந்த பல தொழிலதிபர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் அதில் பல சுயம்புகள் தெரிவார்கள். அந்த சுயம்புகள் எல்லாருமே யாருடைய உதவியோ அல்லது செல்வப் பின்னணியோ இல்லாமல் தாமாக உழைத்துப் போராடி வாழ்க்கையில் ஜெயித்து இருப்பார்கள். கூலித்தொழிலாளியாக இருந்து குபேரர்கள் ஆகியிருப்பர்.




அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மலாய் தேவ்நாத். மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதியில் கூச் பிஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அரசியல் மோதல் காரணமாக தேவ்நாத்தின் நிறுவனம் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் அவரது குடும்பம் சிரமங்களால் சின்னாபின்னமாகியது.

இந்தக் கொடிய சம்பவம் நடந்தபோது அவருக்கு 6 வயது. தங்களது நிறுவனத்தை அவரது குடும்பத்தினர் மீண்டும் தொடங்கியபோதும் தொழில் நல்லபடியாக இல்லை. 1980களில் அவர்களது நிலைமை மிகவும் மோசமடைந்தது தேவ்நாத், அவரது சகோதரி, இரண்டு தம்பிகள் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். குடும்பம் மிகச் சிரமத்தில் இருந்தபோது நிலைமையை சமாளிப்பதற்காக தேவ்நாத்தின் தந்தை ஏதாவது வேலை இருக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார்.




தேவ்நாத் தனது கிராமத்தில் இருந்த தங்களது குடும்பத்துக்குச் சொந்தமான டீ வியாபாரத்தைக் கவனித்து வந்தார். அத்துடன் பள்ளிக்கும் சென்று படித்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர் 12 ஆம் வகுப்பை முடித்தார். அந்த நிலையில் படிப்பை நிறுத்திவிட்டு தனது அம்மா தந்த 100 ரூபாயுடன் தில்லிக்கு போய் சேர்ந்தார். ஒரு கேட்டரிங் கம்பெனியில் பாத்திரம், மேஜைகளை சுத்தம் செய்யும் வேலையைச் செய்தார்.

அவருடன் வேலை பார்த்த நிறைய பேர் வேலையை விட்டு விலகிச் சென்றபோதும் தேவ்நாத் தொடர்ந்து அந்த வேலையைச் செய்து வந்தார். இது அவரது முதலாளியின் கவனத்தை ஈர்த்தது. ஒரு ஆண்டு போனதும் அவரது மாதச் சம்பளமான ரூ.500, ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டது. தினமும் 18 மணிநேரம் உழைத்த தேவ்நாத் தனது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை குடும்பத்துக்கு அனுப்பினார்.

பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு டெல்லியில் இருந்த ஒரு ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலைக்குச் சேர்ந்தார். இதனிடையே இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் ஐடிடிசி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தார். இதில் அவருக்குப் பலரது தொடர்புகள் கிடைத்தன. இதன் மூலம் சில கான்ட்ராக்ட்கள் கிடைத்து முதன் முறையாக அவரே ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து தேவ்நாத் சொந்தமாக ஒரு கேட்டரிங் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் அவருக்கு லாபத்தைத் தர ஆரம்பித்தது.

இப்போது அவர் டெல்லி, புனே, ஜெய்ப்பூர், ஆஜ்மீர், குவாலியரில் உள்ள 35 ராணுவ மெஸ்களை கவனித்து வருகிறார். அவரது வெற்றிகரமான தொழில் முயற்சி காரணமாக இன்றைக்கு வடக்கு வங்காளத்தில் தேயிலை தோட்டங்களையும் ரூ.200 கோடியையும் சம்பாதித்துள்ளார். அவரது வாழ்க்கை எனும் வட்டமானது தேவ்நாத்தின் அயராத உழைப்பினால் வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!